Author: Thana

கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தற்போது இன்புளுவன்சா Influenza நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா, குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் இந்நோய் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். காய்ச்சல், உடல்வலி, இருமல் மற்றும் சளி போன்றவை நோய்க்கான அடிப்படை அறிகுறிகளாகும் என டாக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டினார். சிறுவர்கள் மத்தியில் இந்நோய் எளிதில் பரவக்கூடியது.இதனால் சிறுவர்கள மற்றும் பெரியவர்கள் தவறாமல் கைகளை கழுவ வேண்டும் என்றும் குறிப்பாக வகுப்பறைகள், மருத்துவமனைகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் போது முக கவசத்தை அணிவது மிக முக்கியமானது என்றும் டாக்டர் தீபால் பெரேரா கூறினார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அளவு இயற்கை திரவங்கள், பரிந்துரைக்கப்பட்ட பாராசிட்டமால் குளிசை வழங்கலாம் என்று தெரிவித்த அவர் இவ்வாறானவர்களுக்கு ஓய்வும் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

Read More

46வது தேசிய வயதுப் பிரிவு நீச்சல் சம்பியன்ஷிப்- 2022 போட்டியிடும் இலங்கை இராணுவத்தின் வீரர்கள் பல பதக்கங்களைப் பெற்றுள்ளதுடன் ஒரு புதிய தேசிய சாதனையை யும் படைத்துள்ளனர். கொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் இம்மாதம் (ஜூன்) 8 முதல் 11 வரை நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ கஜபா படைப்பிரிவின் 2வது லெப்டினன்ட் எச்.டி.ஏ.பீரிஸ் 50 மீ பேக் ஸ்ட்ரோக் போட்டியை 26.24 வினாடிகளில் முடித்து ஒரு புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். இதேவேளை 5 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களுடன் 2 (V) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியள் படையணியின் பிரைவேட் ஆர். ஜி. ஏ.கருணாநாயக்க சிறந்த ஆண்கள் திறந்த நீச்சல் வீரருக்கான பட்டத்தை வென்றார் என இராணுவ ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவ அணி, ஆண்கள் பிரிவில் 16 தங்கம், 13 வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கங்களையும், இராணுவப் பெண் நீச்சல்…

Read More

பாடசாலைகளுக்கும் விடுமுறை இன்றைய (13) தினம் விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதிகள் மற்றும் மின்சாரத் துண்டிப்புப்போன்ற பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துளளது. இருப்பினும் இந்த விடுமுறை அரச அத்தியாவசிய சேவைகளுக்குப் பொருந்தாது எனவும் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் சகல பாடசாலைகள் மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் இன்று(13) விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஜூன்13ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஜூன் 13ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…

Read More

நாடாளாவிய ரீதியில், இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 700 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க அறிவித்துள்ளார். அதன்படி, கோட்டக்கல்வி அலுவலகம், வலயக்கல்வி அலுவலகம், தேசிய பாடசாலைகள் என்பவற்றில் வெற்றிடங்கள் இதற்கமைவாக பூரணப்படுத்தப்பவுள்ளன. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளதாகவும், இதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் மூன்று வாரங்களில் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Read More

தகுதிபெறும் போட்டி உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்ற கால்பந்தாட்டப்போட்டியில் இலங்கை – தாய்லாந்து அணியை எதிர்கொண்ட போது 2ற்கு பூச்சியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 2023ம் ஆண்டு ஆசிய வெற்றிக் கிண்ண போட்டிக்கு தகுதிபெறும் போட்டியில் 3வது சுற்றில் இலங்கை போட்டியிட்ட இரண்டாவது போட்டி இதுவாகும். முதலாவது போட்டியில் இலங்கை உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டு தோல்வி கண்டது. தோல்வியடைந்த போதிலும் இலங்கை அணியின் ஆற்றல் உயர்மட்டத்தில் பதிவாகியிருந்தது. இலங்கை எதிர்கொள்ளவுள்ள அடுத்த போட்டி நாளை மறுதினம் இரவு 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் மாலைதீவு அணியை இலங்கை அணிஎதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

அனுராதபுரம் ஜயசிறிமகாபோதியில் ஆரம்பம் இம்முறை தேசிய பொசன் தின நிகழ்வு அனுராதபுரம், மிஹிந்தலை, தந்திரிமலை புனித பூமிகளை மையமாகக்கொண்டு இடம்பெறும். தேசிய பொசன் நிகழ்வின் அங்குரார்ப்பண வைபவம் அனுராதபுரம் ஜயசிறிமகாபோதியில் நேற்று ஆரம்பமானது. தேசிய பொசன் நிகழ்வு மிஹிந்தலை, அனுராதபுரம், அட்டமஸ்தான, தந்திரிமல புனித பூமிகளை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பொசொன் நோன்மதி வைபவத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார். அரச பொசொன் வைபவம் மிஹிந்தலை புனிதபூமியில் நடைபெறுகிறது. இன்று தொடக்கம் அனுராதபுரம், மிஹிந்தலை உள்ளிட்ட பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது திருடர்கள், கொள்ளையர்கள் உள்ளிட்டோர் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், புலனாய்வுப் பிரிவினரும் இது குறித்து உஷார் நிலையில் உள்ளனர். இந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பிற்காக சுமார் இரண்டாயிரம் பொலிசாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

Read More

நெதர்லாந்தில் நடந்த “எய்தோவான் -2022” குத்துச்சண்டைபோட்டியில் இலங்கை இராணுவ குத்தகுச்சண்டை வீரர் வீரர் ஸ்டாப் சார்ஜென்ட் M.V.I.R.S பண்டார வெள்ளிப் பதக்கம் வென்றார். இவ்வெற்றிக்கின்ன போட்டி ஜூன் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நெதர்லாந்தில் நடைபெற்றது. 16 இலங்கை பொறியியலாளர் சேவை படையணியை சேர்ந்த ஸ்டாப் சார்ஜென்ட் பண்டார 51 கிலோ எடைப் பிரிவின் கீழ் போட்டியிட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

Read More

எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி திங்கட் கிழமை விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பின்வருமாறு:

Read More