Author: Thana

யுக்ரேனுக்கு ஐரோப்பிய சங்கத்தின் உறுப்புரிமையை பெற்றுக்கொடுக்க தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். யுக்ரெனின் க்யூ நகருக்கு 3 நாடுகளின் தலைவர்களும் விஜயம் செய்துள்ளனர். அவர்கள் போலந்திலிருந்து ரயில் மூலம் யுக்ரேனை சென்றடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. யுக்ரேன் எப்போதும் ஐரோப்பிய குடும்பத்தின் உறுப்பு நாடு என ஜேர்மன் ச்சான்சலர் ஒலெப் சோல்ஸ் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய சங்கத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளும் , ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனின் வெற்றியை எதிர்பார்த்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். இத்தாலி தலைவரும் அவரது கருத்தை ஆமோதித்துள்ளார். யுக்ரேனுக்கு ஐரோப்பிய சங்கத்தின் உறுப்புரிமையை பெற்றுக்கொடுக்க முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக 3 நாடுகளின் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

Read More

நீதிமன்ற நடவடிக்கைகளை வாரத்தில் ஐந்து நாட்களும் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு நீதிச் சேவை ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.சஞ்சீவ சோமரத்ன கடிதம் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை அடிப்படையாகக்கொண்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறைந்தபட்ச எண்ணிக்கையிலான அதிகாரிகள் அல்லது ஊழியர்களைக்கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, 47.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ஓட்டங்களை பெற்றிருந்த போது, மழைக் குறுக்கிட்டது. இதனால் போட்டி இடைநிறுத்தப்பட்டது. குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 34 ஓட்டங்களை பெற்றனர். அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் குனெமன் மற்றும் மெக்ஸ்வேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஸ்வெப்ஸன் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர். டக்வத் லுயிஸ் முறைப்படி அவுஸ்ரேலிய அணிக்கு 43 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு 216 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கை…

Read More

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பின், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். யுக்ரேன் யுத்தம் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தை மூலம் யுத்தத்தை நிறைவுசெய்ய சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென சீன ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார். எனினும் சீன ஜனாதிபதி யுக்ரேன் மீதான தாக்குதலை, ரஷ்யாவின் ஆக்கிமிப்பு எனவோ, அல்லது ரஷ்யா மீது கண்டனம் தெரிவிக்கவோ இல்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தைக்கு சீனா மத்தியஸ்தம் வகிக்க தயாரெனவும் ஜனாதிபதி ஷி ஜிங்பின், ரஷ்ய ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.

Read More

குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு பெரும்போகத்திற்காக 365,000 யூரியா மூட்டைகள் இலவசமாக வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) இணங்கியுள்ளது. விவசாய சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக தேவையான உதவிகளை வழங்கும் வகையில் எதிர்வரும் காலங்களில் பல விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (WFO) இலங்கை முகவர்களுடனான கலந்துரையாடலின்போது 2022/23 பெரும்போக நெல் விளைச்சலுக்காக குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு 365,000 யூரியா உறைகளை இலவசமாக வழங்க இணங்கியுள்ளது. ஒரு குடும்பத்திற்கு ஒரு உறை வீதம் நாடளாவிய ரீதியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் 365,000 விவசாய குடும்பங்களுக்கு இதனை விநியோகிக்க தீர்மானித்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த மாதம் பருவத்திற்குள் 14,000 குறைந்த வருமானம் பெறும்…

Read More

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஜூன்16ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஜூன் 16ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களில் (மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) மழை நிலைமை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில்50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ…

Read More

மேல் மாகாணத்தில் இன்று (15) தொடக்கம் டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகக்கூடுதலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து இந்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டிடங்களை நிர்மாணித்தல், தொழிற்சாலைகள், கழிவுப்பொருட்களை அகற்றுதல், நீரை சேமித்து வைக்கும் பீப்பாய்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள், வாளி, பூச்சாடிகள் மற்றும் அகற்றப்படும் பொருட்கள் முதலானவை டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் என டெங்கு குடம்பி விஞ்ஞான ஆய்வு மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நாட்டின் 16 மாவட்டங்களில் உள்ள 83 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் ஆகக்கூடுதலாக டெங்கு நோய் பரவி வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தின் 18 சுகாதார உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் ஆகக்கூடுதலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். கம்பஹா, கொழும்பு, களுத்துறை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, கண்டி,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவிவருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

கிழக்கு இலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் வெள்ளிக்கிழமை (10) இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. வருடாந்தம் ஆறு கிராம மக்களால் மிகவும் தொன்று தொட்டு கண்ணகை அம்மன் ஆலத்தில் சடங்குகள் இடம்பெற்று வருகின்றன. சிவஸ்ரீ.கு.தேவராசா தலைமையிலான கட்டாடியார்களால் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. சடங்கு காலத்தில் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி கண்ணகை அம்மன் வழங்குரை படித்தல் இடம்பெற்று வருகின்றமை சிறப்பம்சமாகும். கடந்த இரண்டு வருடங்களாக கொவிட் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட மக்களைக் கொண்டு சடங்குகள் இடம்பெற்றன. இம்முறை அது தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பக்கதர்கள் கலந்து கொண்டனர்.

Read More

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானை, பைடன் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக அடுத்த மாதம் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இஸ்ரேல், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை பகுதி மற்றும் சவூதி அரேபியா ஆகிய இடங்கள் அவரது பயணத்திட்டத்தில் காணப்படுகின்றன. ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கமைய ஜுலை மாதம் 13ம் திகதிக்கும் 16ம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஜோ பைடனின் மத்திய கிழக்கு விஜயம் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் சவூதி அரேபியாவுடன் காணப்படும் முரண்பாடுகளையடுத்து அங்கு விஜயம் மேற்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் உறுதியாக அறிவிக்கப்படாத நிலையில், தற்போது வெள்ளை மாளிகை அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

Read More

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான மறுசீரமைக்கப்பட்ட புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் மறுசீரமைக்கப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கை, அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும். அதன்படி, அடுத்த வருடத்திலிருந்து பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது இந்த சுற்று நிருபத்திற்கு அமைய இடம்பெறும். பாடசாலைகளுக்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்காக இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்ட பிரச்சினைகளை குறைப்பதற்காகவே புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராய்ந்து புதிய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 01. பாடசாலைககளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளல் – 2023 பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும் போது மேலெழுந்த பிரச்சினைகள் தொடர்பாக அதிபர்கள், சுற்றறிக்கை திருத்தக் குழு, அமைச்சின் விசாரணைப் பிரிவு, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு…

Read More