Author: Thana

பதுளையில் இருந்து பிபிலை நோக்கி சென்ற இ.போ.ச பேருந்து லுணுகல வீதி ஹொப்டன் 20 ஆம் கட்டைப்பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்த பசுவுடன் மோதுண்டதில் பசு ஸ்தலத்திலே பரிதாபகரமாக பலியாகிய சம்பவம் இன்று மாலை (28) ஏழு மணியளவில் பதிவாகியுள்ளது. நடராஜா மலர்வேந்தன்

Read More

பிபில கனுல்வெல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் சில காலமாக மேற்கொண்டு வந்த மோட்டார் சைக்கிள் திருட்டை மெதகம பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த நபர் போலி சாவியை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களை திருடி, மொனராகலை அதிமலே பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்துமிடம் ஒன்றில் வைத்து திருடிய மோட்டார் சைக்கிள் பகுதிகளை வேறு மோட்டார் சைக்கிள்களில் இணைத்து பணம் சம்பாதித்துள்ளார். அதிமலே பகுதியில் திருட்டு மோட்டார் சைக்கிள்களை பகுதிகளாக கழற்றிய இருவரையும், கனுல்வெல பிரதேச மோட்டார் சைக்கிள் திருட்டில் சம்பந்தப்பட்ட நபரையும் மெதகம பொலிஸார் கைது செய்துள்ளனர். பிபில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நடராஜா மலர்வேந்தன்

Read More

கல்வி வரலாற்றில் தெனியாய மறை/என்சல்வத்த தமிழ் வித்தியாலய பாடசாலை  (2021) க.பொ.த.பரீட்சையில் பாரிய வெற்றியை பெற்றுள்ளது. கணித பாடத்தில் 9 மாணவர்களும், A சித்தி உள்ளடங்களாக 16 மாணவர்கள் உயர் தர கல்விக்கான தகுதியினை பெற்றுள்ளதோடு நான்கு மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் சித்தியை பெற்றுள்ளனர்.

Read More

ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் பெறுமதியான மின் உபகரணங்களை திருடிய 54.49.45.47வயதுடைய நான்கு சந்தேக நபர்கள் பசறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மௌசாகலை பகுதியில் வீடொன்றின் பின்புறமாக நுழைந்து வீட்டில் உள்ள LED தொலைக்காட்சி, மின்அரைப்பான் , முற்கால சில்லறை நாணயங்கள் ஆகிய வற்றை திருடிய குற்றச்சாட்டில் மௌசாகலை பகுதியைச் சேர்ந்த இருவரும் மேலும் சீமெந்து கல் உற்பத்தி செய்யும் இயந்திரத்தில் உள்ள மின் இயந்திரங்கள் இரண்டையும் பித்தளை கம்பிகளையும் திருடிய குற்றச்சாட்டில் மேலும் இருவருமாக மொத்தமாக மௌசாகலை பகுதியைச் சேர்ந்த நால்வர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா

Read More

கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம் தென்னமரவடி அருள்மிகு வரசக்தி விநாயகர் திருக்கோயில் தானாகத் தோன்றி வந்தருளும் பிள்ளையாரே தருமத்தைக் காப்பதற்கு தவறாது எழுந்தருள்வாய் தொல்லை தருவோரைத் துரத்தி அடித்திடவே தென்னமரவடி கோயில் கொண்ட பிள்ளையாரே வந்திடைய்யா வரசக்தி விநாயகரென்ற பெயர் கொண்ட பிள்ளையாரே வருந்துன்பம் தடுத்தெம்மைக் காப்பதற்கு எழுந்தருள்வாய் விரைந்து வரும் துன்பங்களை விரட்டி துரத்திடவே தென்னமரவடி கோயில் கொண்ட பிள்ளையாரே வந்திடைய்யா கிழக்கிலங்கை தமிழர் மண்ணில் குடியமர்ந்த பிள்ளையாரே கிலேசமின்றி எமை வாழவைக்க எழுந்தருள்வாய் கொடுமனது கொண்டோரின் கொட்டம் அடக்கிடவே தென்னமரவடி கோயில் கொண்ட பிள்ளையாரே வந்திடைய்யா ஓங்கார ஒலியினிலே உறையும் எங்கள் பிள்ளையாரே ஒன்றுபட்டு எம்மை வாழ வைக்க எழுந்தருள்வாய் ஒற்றுமையைச் சிதைக்க முனைவோரின் செயலை முடக்கி அடக்கிடவே தென்னமரவடி கோயில் கொண்ட பிள்ளையாரே வந்திடைய்யா அமைதிதந்து ஆற்றல் தரும் வரசக்தி பிள்ளையாரே அச்சமின்றி நாம் வாழ வழியமைக்க எழுந்தருள்வாய் அமைதியைச் சிதைத்தெம்மை அவலப்படுத்துவோரை அடக்கிடவே தென்னமரவடி கோயில்…

Read More

அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ தர சித்திகள். வெளியாகியுள்ள க.பொ. த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் படி, நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் கல்வி வலய பாடசாலையான அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ தர சித்திகளைப் பெற்றுள்ளனர். மேலும் 22 மாணவர்கள் எட்டு பாடங்களிலும் 16 பேர் ஏழு பாடங்களிலும் 18 பேர் ஆறு பாடங்களிலும் ஏ தர சித்திகளைப் பெற்றுள்ளனர். அனைத்துப் பாடங்களிலும் ஏ தர சித்திகளைப் பெற்ற மாணவர்களில் நான்கு பேர் ஆங்கில மொழி பிரிவை சேர்ந்தர்வகளாவர். மேலும் உயர்தரம் செய்வதற்கு தகுதி பெற்ற மாணவர்களின் சதவீதம் 98 ஆகும். இம்முறை பரீட்சைக்கு தோற்றியவர்களின் எண்ணிக்கை 192 ஆகும். இதில் ஆறு பாடங்களுக்கு மேல் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 191 ஆகும். கணிதம் மற்றும் தமிழ் மொழிகளுடன் ஆறு பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 188…

Read More

மஸ்கெலியா கார்ட்மோர் தமிழ் வித்தியாலய மாணவன்  கனகராஜ் சசிதரன்    9 A சித்திகளைப் பெற்றுள்ளார். இவ்வாறு பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவனை அதிபர் கே. மகேந்திரன் உட்பட, ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Read More

காணாமல் போன 13 வயதுச் சிறுமி 30 நாட்களுக்குப் பின் கண்டுபிடிப்பு. காணாமல் போன 13 வயதுச் சிறுமி 30 நாட்களுக்குப் பின் கண்டுபிடிப்பு. 30 நாட்களுக்கு மேலாக காணாமல் போயிருந்த 13 வயது சிறுமி மற்றும் சிறுமியுடன் இருந்ததாக கூறப்படும் சந்தேக நபர் இரத்தினபுரி – லெல்லோபிட்டிய பகுதியில் வாடகை வீட்டில் இருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். லெல்லொப்பிட்டிய பிரதேச கிராம மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபரும் சிறுமியும் இரத்தினபுரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக நேற்று கிண்ணியாகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதன்படி சந்தேகநபர் நேற்று பிற்பகல் அம்பாறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை – இகினியாகல தேவலஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது 13 வயது மகளை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். தனது பிரிந்த கணவரே மகளை அழைத்துச் சென்றதாக அவர் பொலிஸில் முறைப்பாடு…

Read More

ருஹுனு தேசிய கல்விக் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் குழுக்களையே இன்று காலை ஏற்பட்ட மோதலில் காயம்டைந்த 11 பேர் கராபிட்டிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இரண்டாம் வருட மற்றும் இறுதி வருட ஆசிரிய மாணவர் குழுக்களையே இம்மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

Read More

பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவெஸ்த்தை தோட்டம் வெவெஸ்த்தை பெருந்தோட்ட பகுதியில் 29 வயதுடைய வாய்பேசமுடியாத மகன் தனது 60 வயதுடைய தகப்பனை மரக்கட்டையால் தலையில் தாக்கியுள்ளார். தகப்பன் சம்பவ இடத்திலேயே பலியானதோடு இச்சம்பவம் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதோடு சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய வாய்பேசமுடியாத மகனை நேற்று இரவு பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தாக்கிய இளைஞரின் தாயார் இரண்டு திருமணங்கள் முடித்தவர் என்பதுடன் முதல் கணவர் அவரை விட்டு சென்றுள்ளதாகவும் தாயாரின் இரண்டாவது கணவரையே மகன் தாக்கி கொலை செய்துள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றர் . பிரேதம் நீதிவான் பார்வையிடுவதற்காக சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. ராமு தனராஜா

Read More