Author: Thana
கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம் – திருகோணமலை நகர் அருள்மிகு சனீஸ்வரப் பெருமான் திருக்கோயில் நம்பித் தொழும் அடியவர்கள் நலன் காக்கும் ஈஸ்வரனே நாடிவரும் எங்களது நலன் காத்துவிட்டிடைய்யா நிம்மதியை நாடியுந்தன் அடி பணியும் எங்களுக்கு அருளளித்து அரவணைப்பாய் சனீஸ்வரப் பெருமானே திருகோணமலை நகரினிலே கோயில் கொண்ட ஈஸ்வரனே திறமைகளைத் தந்தெமது நலன் காத்து விட்டிடைய்யா நம்பிக்கை கொண்டுனது அடி பணியும் எங்களுக்கு அருளளித்து அரவணைப்பாய் சனீஸ்வரப் பெருமானே நவக்கிரக நாயகரில் ஒருவராய் வீற்றிருக்கும் ஈஸ்வரனே நிலைகுலையா நிம்மதிதந்தெமது நலன் காத்து விட்டிடைய்யா மனவலிமை நாடியுந்தன் அடி பணியும் எங்களுக்கு அருளளித்து அரவணைப்பாய் சனீஸ்வரப் பெருமானே நீதி நெறி நின்றருளும் நாயகனே ஈஸ்வரனே நித்தம் உன்னருள் தந்து எம் வாழ்வைக் காத்து விட்டிடைய்யா நிறைவான மகிழ்வு நாடியுந்தன் அடி பணியும் எங்களுக்கு அருளளித்து அரவணைப்பாய் சனீஸ்வரப் பெருமானே காகத்தை வாகனமாய்க் கொண்டருளும் ஈஸ்வரனே கலக்கமில்லா மனம் தந்தெமது நலன் காத்து…
80ஆவது வருடத்தில் கால்பதிக்கும் இ /எம்பி /எக்பர்த் தமிழ் மகா வித்தியாலய மாணவன் 09 A சித்திகளைப்பெற்று சாதனை
1942ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இ /எம்பி /எக்பர்த் தமிழ் மகா வித்தியாலயம் இந்த வருடம்(2022) அமுத விழாவினை கொண்டாடி கொண்டு இருக்கும் காலகட்டத்தில் மாபெரும் வரலாற்று சாதனையாகவும், இந்த 80 வருடத்தில் இன்னொரு மைல் கல்லாக வும் க.பொ.த சா/தரத்தில், பெருமாள் பத்மநாதன்ரஜீவ் 9 A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். குறித்த மாணவனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதோடு, பாடசாலையின் அதிபர், வகுப்பாசிரியர்கள்,தரம் 1 முதல் சாதாரண தரம் வரை கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கிராண்ட்பாஸ், சமகிபுர அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டதினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றரை வயதான ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழந்தையின் மாமா முறையான தாயின் சகோதரரே குழந்தையை கீழே வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தற்போது குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு வீட்டையும் இலக்காகக் கொண்டு,அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்கின்றதா என்பது குறித்த தரவுகளை சேகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகமும் சுகாதார அமைச்சும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் தலைவர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார். உணவுப் பற்றாக்குறை மற்றும் உணவை எவ்வாறு பெற்றுக்கொள்வது குறித்த தகவல்களை வீடுகளில் இருந்து சேகரிப்பதற்காக, ஜனாதிபதி அலுவலகத்தால் ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், போஷாக்கு குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளன. இதன்மூலம், உணவுப் பற்றாக்குறை உள்ள வீடுககள் தொடர்பாக சேகரிக்கப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்து, எதிர்காலத்தில் அந்த வீடுகளுக்குத் தேவையான உணவு வகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்;. இந்த தரவுகள் பிரதேச செயலக அலுவலகங்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு ஜனாதிபதி செயலக அதிகாரிகளால் கண்காணிக்கப்படும். அவர்களின் கண்காணிப்பின்படி பிரதேச செயலகங்கள் ஊடாக அந்தந்த வீடுகளுக்கு உணவுப்…
டி.சந்ரு செ.திவாகரன் நுவரெலியாவில் மாணவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கப்பட்டது. “எமது பிள்ளைகள் பொருமதியானவர்கள் ” என்ற தொனிப்பொருளின் கீழ் நுவரெலியா பிரதேசத்தின் தமிழ் ,சிங்கள பாடசாலைகளுக்கு தலைக்கவசம் இன்றி செல்லும் மாணவர்களின் பெயர் விபரங்களை திரட்டி மாணவர்களின் நலன் கருதியும் , வீதி விபத்தில் பாடசாலை மாணவர்களின் உயிர்காக்கும் நோக்குடன் அலியான்ஸ் காப்புறுதி நிறுவனம் மற்றும் பொலிஸாரின் ஆதரவுடன் தலைக்கவசத்தின் பயன்பாடு மற்றும் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வுகளையும் மாணவர்களுக்கு வழங்கி இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை 25) நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி இணைந்து மாணவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கினர். அலியான்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் நாடலாவிய ரீதியில் சமூக வேலைத்திட்டமாக தலைக்கவசம் விநியோகம் செய்துவருக்கிறமை குறிப்பிடத்தக்கது. https://youtu.be/kZRdL582zsg
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து தம்மை விடுவிக்குமாறு பானுக ராஜபக்ஷ இலங்கை கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்டுகின்றது. ஒருநாள் போட்டிகளில் இருந்து தனக்கு ஓய்வு தேவை என்று கூறி பானுக ராஜபக்ச இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதேவேளை, அபுதாபி லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாட பானுக ராஜபக்ஷவுக்கு அனுமதி வழங்குவதில்லை எனவும் இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் கடனை செலுத்துவதில் சிரமம் இருந்தால் வங்கிகளுடன் கலந்துரையாட முடியும்
மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் கடனை செலுத்துவதில் சிரமம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் கலந்துரையாடி கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி. எம். ஜே. வை. பி பெர்னாண்டோ இதனை குறிப்பிட்டார். வாடிக்கையாளர் ஒருவர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ளாவிட்டால், நிதி வாடிக்கையாளர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
அடுத்த மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நாளாந்தம் டுபாய் கொழும்புக்கிடையான நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு எமிரேட்ஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நேரடி விமான சேவையில் 2 சேவைகள் மற்றும் மாலைத்தீவின் தலைநகரில் இருந்து ஒரு விமான சேவையும் உள்ளடங்கும். டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் இந்த விமான சேவை இடம்பெறும் என்று எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இனிவரும் காலங்களில் பாடசாலை வகுப்புக்களுக்கு தேசிய கல்வி பல்கலைக்கழகத்தில் 4 வருட கால பட்டப்படிப்பை பூர்த்திசெய்த மற்றும் ஆசிரிய பயிற்சியை பெற்றவர்கள் மாத்திரமே அனுப்பப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் ஜெயந்த நேற்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நேற்று (24) பாராளுமன்ற அலுவல்கள் ஆரம்பமான போது விசேட அறிக்கை ஒன்றை விடுத்து அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். ஆசிரியர் சேவைக்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்கு 2 வழிமுறைகள் உண்டு. பின்தங்கிய பிரதேசங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக டிப்ளோமா பட்டங்களை பெற்றவர்கள் தொடர்பிலும் கவனத்தில் கொள்ளப்பட்டது. இதன்பின்னர் ஆசிரியர் தொழிலுக்கு ஆட்களை இணைத்துக்கொள்வது மாற்று முறையிலாகும். 19 கல்வியல் கல்லூரிகளை ஒன்றிணைத்து தேசிய கல்வி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். இதில் 4 வருட கால பட்டப்படிப்பு மற்றும் ஆசிரிய பயிற்சியை பெற்ற பின்னரே பாடசாலை வகுப்பறைகளுக்கு அனுப்பப்படுவர். செயல்திறன் மிக்க சிறப்பான ஆசிரியர்கள் உருவாக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.…