Author: Thana
நானுஓயா நிருபர் நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சில்லு பேருந்து ஓடிக் கொண்டிருக்கம்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது. இன்றைய தினம் பிற்பகல் நுவரெலியா – பதுளை வீதியில் அமைந்துள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சில்லு அச்சில் இருந்து திடீரென விலகியது. இந்நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பேருந்து நிறுத்தப்பட்டது என தகவல்கள் தெரிவித்தனர் .
நுவரெலியாவில் புதிய வரி அறவீட்டுக்கு எதிராக அரச ,தனியார் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் .
டி.சந்ரு நுவரெலியாவில் புதிய வரி அறவீட்டுக்கு எதிராக அரச ,தனியார் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் . தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள வரிச் சீர்திருத்தங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத்தெரிவித்து நுவரெலியா பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக நுவரெலியாவில் இயங்கி வரும் அசர மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . குறிப்பாக அரச மற்றும் தனியார் ஊழியர்களிடம் மாதாந்தம் முறையற்ற வகையில் வரி அறவிடுவதினை எங்கலால் ஏற்க முடியாது என தெரிவித்து புதிய வரி அறவீட்டுக்கு எதிராக வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் பின்னர் உரிய தீர்வொன்று கிடைக்காவிடின் பாரிய போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் ஐந்து தொன்களுக்கும் குறைவான அனுமதிவாகனங்கள் பயணிப்பதற்கு அனும
டி சந்ரு ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் 5 தொன்களுக்கும் குறைவான எடையுள்ள வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார் . குறித்த நடவடிக்கை இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20ம் திகதி குறித்த பகுதியில் பஸ் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததோடு, 53 பேர் காயமடைந்தனர். இதன் காரணமாக கனரக வாகனங்கள் குறித்த வீதியில் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது . இவ்வீதி தொடர்பாக எதிர்வரும் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தின் போது முக்கிய கவனம் செலுத்தி நிரந்தர முடிவு எடுக்கப்படும் எனவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார்.
பல்கலைக்கழக கல்லூரி (University College) – கற்கை நெறிகளும் வாய்ப்புக்களும் தொடர்பிலான மதியுரை கருத்தமர்வு 10.02.2023 வெள்ளிக்கிழமை அன்று இரவு 7.30 மணிக்கு சிறகுகள் அமையம் – தமிழர் கல்வி மதியுரையகத்தின் ஏற்பாட்டில் இணையவழியில் இடம்பெறும். உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, பல்கலைக்கழக அனுமதி பெறாத மாணவர்கள் உயர்கல்வியினை பல்கலைக்கழக கல்லூரியில் தொடர முடியும். குறித்த வாய்ப்புக்கள் தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குறித்த கருத்தமர்வில் இணைந்துகொள்வர். பல்கலைக்கழக கல்லூரி கற்கை நெறிகளுக்கான விண்ணப்ப இறுதித் திகதி 2023.02.28 ஆகும்; கற்கை நெறிகள் தொடர்பிலான விபரங்களை www.ucj.ac.lk தளத்தில் பார்வையிட முடியும். கருத்தமர்வு நிகழ்வின் இணைப்பு Zoom Meeting Meeting ID: 823 4846 7118 | Passcode: 2023
Yஇந்த நாட்டில் 13வது அரசியலமைப்பு திருத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனவே, புதிதாக செயல்படுத்த எதுவும் இல்லை என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஏற்கனவே தாம் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்திருக்கின்றமையால் மேலும் அது பற்றிப் பேசிப் பேசி வார்த்தைகளை நிரப்பிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் கம்பஹா மாவட்ட பொதுஜன பெரமுன வழிநடத்தல் குழுவுடன் நேற்று (7) கொழும்பில் கலந்துரையாடலில் இணைந்து கொண்ட போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் கூறியதாவது: 13வது அரசியலமைப்பு திருத்தம் பற்றி தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மேலும் அது பற்றிப் பேசிப் பேசி வார்த்தைகளை நிரப்பிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்றார். நாங்கள் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தி அது முடிந்து விட்டது. புதிதாக நடைமுறைப்படுத்த எதுவும் இல்லை. நான் மாகாண முதலமைச்சர் ஆனதும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் இந்த நாட்டில் செய்படுத்தப்பட்டதானாலாகும். ஜனதா விமுக்தி பெரமுன நாட்டு மக்களை கொன்று நாட்டையே அழித்த கட்சி. நாங்கள் வன்முறையற்ற கட்சி. நாங்கள் மக்களை கொன்ற கட்சி இல்லை. கொரோனா வைரஸிலிருந்து மக்களைக் காப்பாற்ற தடுப்பூசிகளைக் கொடுக்க நம் மக்கள் தலையிட்டனர். கிராமத்தில் வீதிகளை அமைத்துக் கொடுத்த மக்களுக்கு தொழில்களை ஏற்படுத்திக் கொடுத்த நமக்கு மக்களுக்கு மத்தியில் போக முடியாமல் இருப்பது ஏன்? நாங்கள் நாட்டில் வீதிகளை அமைக்கும் போது 10 வீதம் கமிஷன் எடுக்கப்படும் என்ற கருத்தை உருவாக்கினார்கள். அதற்கு பயந்து வீதி அமைப்பதை நிறுத்தினர். அது நாட்டின் வளர்ச்சியை நிறுத்தியது. நாங்கள் கட்டிய வீதிகளில் எங்கள் கட்அவுட் வைப்பதை நிறுத்தி விட்டோம், ஆனால் இப்போது ஜனதா விமுக்தி பெரமுன நாங்கள் அமைத்த வீதிகளில் கட்அவுட்கள் வைத்துள்ளன. இது குறித்து மக்களிடம் பேச வேண்டும். அப்போதுதான் கிராம மக்களுக்கு உண்மை நிலவரம் புரியும். உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு நாம் முதலில் கிராமசேவக தொகுதி மட்டத்தில் கூட்டங்களை நடத்த வேண்டும். மாவட்ட பாராளுமன்ற…
தொழிற்சங்கங்கள் சில முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பல பிரதான வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஓல்கோட் மாவத்தையின் ஒரு மருங்கு வீதி மூடப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதியையும் பொலிஸார் மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்
பாராளுமன்றத்துக்கு வெளியே பெரும் திரளான பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “இது எங்களுடைய நாடு காணியை யாருக்கும் கொடுக்கமாட்டோம்” என்று எழுதப்பட்ட பதாகையை தாங்கியவாறு இவர்கள் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, சுமார் ஐயாயிரம் பௌத்த பிக்குகள் இதில் கலந்துகொண்டுள்ளனர். இதேவேளை, 9ஆவது பாராளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் குறத்த போராட்டம் நடைபெறுகின்றமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநாகல் வெவ ரவும வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது மாத ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. பன்தம்பலாவ பகுதியில் இருந்து பமுனுகெதர நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் நான்கு பயணிகளும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் குறித்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. குருநாகல், பமுனுகெதர பிரதேசத்தை சேர்ந்த சிலரே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
களுத்துறை, தேக்கவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் சகோதரன் ஒருவரை தாக்கி கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 14 வயது இளைய சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (07) பிற்பகல் குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த மூத்த சகோதரர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தனது இளைய சகோதரருடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில், அவர்களின் தாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதை அடுத்து இளைய சகோதரன் மன்னா கத்தியால் மூத்த சகோதரனின் கழுத்தில் தாக்கியுள்ளார். 26 வயதுடைய அனுருத்த தனஞ்சய டி சில்வா என்றழைக்கப்படும் சந்துன் என் முச்சக்கர வண்டி சாரதியே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- கந்தரோடை அருள்மிகு அருளானந்தப் பிள்ளையார் திருக்கோயில் வளம் கொண்ட தமிழ் மண்ணில் கோயில் கொண்ட பிள்ளையாரே வளமான பெருவாழ்வை எமக்களிக்க வேண்டுமைய்யா நிம்மதியை நாமென்றும் நிரந்தரமாய் பெற்றுவிட துணையிருப்பாய் அருளானந்தப் பிள்ளையாரே கந்தரோடை பழம் நகரில் கோயில் கொண்ட பிள்ளையாரே கரவில்லா மனம் கொண்டு வாழ வழி வேண்டுமைய்யா நிம்மதியை நாமென்றும் நிரந்தரமாய் பெற்றுவிட துணையிருப்பாய் அருளானந்தப் பிள்ளையாரே வடஇலங்கை காட்சி தர கோயில் கொண்ட பிள்ளையாரே வற்றாத கருணையினை எமக்களிக்க வேண்டுமைய்யா நிம்மதியை நாமென்றும் நிரந்தரமாய் பெற்றுவிட துணையிருப்பாய் அருளானந்தப் பிள்ளையாரே கேட்கும் வரம் தந்தெமக்கு ஆசிதர கோயில் கொண்ட பிள்ளையாரே கேடில்லா நல்வாழ்வை எமக்களிக்க வேண்டுமைய்யா நிம்மதியை நாமென்றும் நிரந்தரமாய் பெற்றுவிட துணையிருப்பாய் அருளானந்தப் பிள்ளையாரே மருதநிலச் சூழலிலே கோயில் கொண்ட பிள்ளையாரே மதிதவறா நெறிநின்று வாழ வழி வேண்டுமைய்யா நிம்மதியை நாமென்றும் நிரந்தரமாய் பெற்றுவிட துணையிருப்பாய் அருளானந்தப் பிள்ளையாரே வனப்புமிகு திருக்கோயில்…