Author: Thana
பெருந்தோட்ட கைத்தொழில்துறை வரலாற்றில், கடந்த வருடம் 3.8 பில்லியன் டொலர்கள் வருமானத்தை பெற்றுள்ளது. இது உண்மையானது. பொய் என்றால் தான் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன (16) பாராளுமன்றத்தில் தெரிவவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 27/2 இன் கீழ் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன் போது இன்று தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்பதை இல்லையென எவ்வாறு கூற முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர்… பெருந்தோட்டக் கைத்தொழில்துறையின் வரலாற்றில அதிகூடிய வருமானம் கடந்த வருடம் பெறப்பட்டுள்ளது. . இது 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கொவிட் காலத்தில் ஒரு தேயிலை தொழிற்சாலையை கூட நாங்கள் மூடவில்லை. 2022ஆம் ஆண்டு உலகப்போர் நிலைமை காரணத்தினால் சந்தையில் சில சிக்கல்கள்; வரலாம். சில தேவைகள் குறைந்துள்ளன. பெருந்தோட்டக் கைத்தொழில் அபிவிருத்திக்கு அரசாங்கம்…
சம்மாந்துறை – அல்மர் ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தரம் 7இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் வைரஸ் காய்ச்சலுக்குள்ளாகி நேற்று உயிரிழந்துள்ளார். இவர் நேற்று இரவு கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது ஜனாசா இன்று (16) சம்மாந்துறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. வைரஸ் காய்ச்சலின் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வடமாகாணம் – வவுனியா மாவட்டம் – வவுனியா, வாரிக்குட்டியூர் படிவம்-6 அருள்மிகு ஐயனார் திருக்கோயில் காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் ஐயனே காலமெல்லாம் உடனிருந்து காத்தருள வேண்டுமைய்யா துன்பங்கள் அண்டாது துடைத்தெறிய வந்திடைய்யா வாரிக்குட்டியூர் கோயில் கொண்ட ஐயனாரே சரணடைந்தோம் வன்னிப் பெருநிலத்தில் வந்தமர்ந்த ஐயனே வழிதவறா நேர்வழியைத் தந்தருள வேண்டுமைய்யா வழிகாட்டி நெறிப்படுத்தி வாழவைக்க வந்திடைய்யா வாரிக்குட்டியூர் கோயில் கொண்ட ஐயனாரே சரணடைந்தோம் தளராத மனவுறுதி தந்தருளும் ஐயனே தப்பில்லா நல்வழியை காட்டிடவே வேண்டுமைய்யா தீமைகள் நெருங்காது தடுத்தருள வந்திடைய்யா வாரிக்குட்டியூர் கோயில் கொண்ட ஐயனாரே சரணடைந்தோம் தீயபகை கொடுமைகளைத் துடைத்தெறியும் ஐயனே தொல்லையில்லா பெருவழியில் வழிநடத்த வேண்டுமைய்யா துயரங்கள் தரும் வலியைத் துடைத்தெறிய வந்திடைய்யா வாரிக்குட்டியூர் கோயில் கொண்ட ஐயனாரே சரணடைந்தோம் மருத நிலச் சூழலிலே வந்தமர்ந்த ஐயனே மாசில்லா மனங் கொண்டு வாழ வழி வேண்டுமைய்யா தீயமனம் கொண்டோரின் உறவறுக்க வந்திடைய்யா வாரிக்குட்டியூர் கோயில் கொண்ட ஐயனாரே சரணடைந்தோம்…
புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தினை [SPDC] இந்திய அரசாங்கம் 2006-07 ஆம் ஆண்டுகளிலிருந்து நடைமுறைப்படுத்திவருகிறது. இந்த திட்டத்தின்கீழ் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்(PIOs) மற்றும் இந்தியாவில் வதியாத இந்தியர்கள்(NRIs), இந்திய பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள உதவிகள் வழங்கப்படுகின்றன. தொழில்சார்ந்த மற்றும் தொழில்முறைசாராத (மருத்துவம்/துணைமருத்துவம் தவிர்ந்த) கற்கைநெறிகளுக்கான நிதி உதவியினை அவர்கள் பெற்றுக்கொள்ளமுடியும். புதுமுக (முதலாம் வருடம்) மாணவர்கள் மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்க முடியும். மேலேகூறப்பட்ட வரையறைகளுக்கு அமைவாக இலங்கையில் உள்ள மாணவர்கள் இந்தபுலமைப்பரிசில் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த புலமைப்பரிசில் தொடர்பான விரிவான தகவல்களை http://www.spdcindia.gov.in/login/guideline.php. என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும். தகுதியுடைய விண்ணப்பதாரிகள் 2022 நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும். இந்திய உயர் ஸ்தானிகராலயம் கொழும்பு
சவால்களுக்கு மத்தியில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் இதுவாகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய
சவால்களுக்கு மத்தியில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் இதுவாகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று ஆரம்பமான 2023 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறினார். கட்சியின் சார்பில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை பெற்ற உறுப்பினர் ஒருவர் ,சவாலை ஏற்று நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து ,ஜனநாயகத்தை பலப்படுத்தி பொருளாதாரத்தை ஓரளவுக்கு பலப்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதியை பாராட்டினார். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி வரவு செலவுத்திட்டத்தின் மூலமும் தனது பொறுப்புவாய்ந்த தன்மையை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…. போராட்டத்துக்குப் பின்னர் முறைசாரா குழுவொன்று பாராளுமன்றத்தை கைப்பற்ற இருந்தது. அப்படி நடந்திருந்தால் இன்று இந்த வரவு செலவுத்திட்டம் இருந்திருக்காது. நாட்டின் சவாலை தனது கட்சியில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தைப்பெற்ற உறுப்பினர் ஒருவர் ஏற்றுக்கொண்டார். அவர்தான் திரு. ரணில் விக்கிரமசிங்க.…
பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 500 இளைஞர், யுவதிகள் வரவுசெலவுத்திட்ட உரை முன்வைப்பதைப் பார்வையிட வருகை
பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 500 இளைஞர், யுவதிகள் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான கௌரவ ரணில் விக்ரமசிங்க முன்வைத்த வரவுசெலவுத்திட்ட உரையை செவிமடுப்பதற்கு (14) பாராளுமன்றத்துக்கு வருகை தந்ததாக படைக்கல சேவிதர் நரேந்திர பர்னாந்து தெரிவித்தார். பாராளுமன்ற வரலாற்றில் வரவுசெலவுத்தித்திட்டம் சமர்ப்பிக்கும் போது இவ்வாறு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும் என படைக்கல சேவிதர் குறிப்பிட்டார். மேல்மாகாண பாடசாலைகள் சிலவற்றின் மாணவர் தலைவர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட மாணவ மாணவியர், தேசிய இளைஞர் பேரவையின் இளைஞர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 100 இளைஞர் யுவதிகள் இதில் அடங்குகின்றனர். அதற்கு மேலதிகமாக இளைஞர் படையணியை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் சிலரும் வரவுசெலவுத்திட்ட உரையை பார்வையிட வருகை தந்திருந்தனர். வரவுசெலவுத்திட்ட உரையைப் பார்வையிட்டதை அடுத்து அவர்கள் பாராளுமன்றத்தையும் பார்வையிட்டனர்.
சவூதி அரேபிய வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவினர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரியுடன் சந்திப்பு
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள அஜ்லான் குழுமத்தின் துணைத் தலைவரும், சவூதி அரேபியாவிலுள்ள சவூதி சீன வர்த்தக சபையின் தலைவருமான ஷேக் மொஹமட் அல்-அஜ்லான், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரியை 2022 நவம்பர் 13ஆந் திகதி அமைச்சில் வைத்து சந்தித்தார். இலங்கையின் பொருளாதார மீள்தன்மை மற்றும் துறைமுக நகரத்திலும் மற்றும் விருந்தோம்பல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளிலும் காணப்படுகின்ற சாத்தியமான முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து அமைச்சர் சப்ரி அவருக்கு விளக்கினார். ஷேக் மொஹமட் இலங்கையில் நம்பிக்கைக்குரிய துறைகளில் முதலீடு செய்வதில் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதுடன் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவையும் கோரினார். சவூதி அரேபியாவில் உள்ள சிறந்த மனை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான அஜ்லான் குழுமம், குடியிருப்பு, தொழில்துறை, வணிகம் மற்றும் சேமிப்புக் கிடங்கு இடங்களை அமைப்பதில் நிபுணத்துவம் பெற்றது. இந் நிறுவனம் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கணிசமான முதலீடுகளை செய்துள்ளது. வெளிநாட்டு அலுவல்கள்…
வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகும். எதிர்வரும் 22ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெற்று அன்றையதினம் மாலை ஐந்து மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறும். வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ஆம திகதி முதல் டிசம்பர் எட்டாம் திகதி வரை இடம்பெறும். இதன் வாக்கெடுப்பு டிசம்பர் எட்டாம் திகதி மாலை இடம்பெறும். இன்று முதல் டிசம்பர் எட்டாம் திகதி வரை ஞாயிறு மற்றும் போயா தினங்கள் தவிர்ந்த வாரத்தின் அனைத்து நாட்களிலும் பாராளுமன்றம் கூடும். வரவு செலவுத்திட்ட விவாதம் இடம்பெறும் காலப்பகுதியில் வாய்மொழிமூல பதில்களை எதிர்பார்க்கும் கேள்விகளை கேட்க முடியாது என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். டிசம்பர் ஒன்பதாம் திகதி பாராளுமன்றம் கூடும். அன்றையதினம் வாய்மொழிமூல பதில்களை எதிர்பார்க்கும் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மாத்தளை பகுதியிலுள்ள மகளிர் பாடசாலையொன்றில் 40 மாணவிகள் சுவாசக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சப்பரகமுவ மாகாணம் – கேகாலை மாவட்டம் எட்டியாந் தோட்டை பனாவத்தை 3 ஆம் பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்
அருள்தந்து ஆற்றல் தந்து ஆதரிக்கும் தாயே அரவணைத்து அன்பு செய்து காத்தருள வருவாய் துணையிருந்து எங்களை நீ வளமளிக்க வேண்டும் எட்டியாந் தோட்டை எழுந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய் பண்புடனே நாம்வாழ வழியமைக்கும் தாயே பரிதவிப்பு இல்லாமல் காத்தருள வருவாய் மனமகிழ்வு தந்தெம்மை வளமளிக்க வேண்டும் எட்டியாந் தோட்டை எழுந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய் உயிர்க் கெல்லாம் தாயாக இருப்பவளே தாயே உலகத்தில் எம் நிலையை உயர்த்திடவே வருவாய் உறுதுணையாயிருந் தெமக்கு வளமளிக்க வேண்டும் எட்டியாந் தோட்டை எழுந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய் மலை சூழ்ந்த திருவிடத்தில் அமர்ந்தருளும் தாயே மதி நிறைந்த மனத்தினராய் வாழச் செய்ய வருவாய் முயற்சிகளில் வெற்றிதந்து வளமளிக்க வேண்டும் எட்டியாந் தோட்டை எழுந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய் நம்பிச் சரணடைவோர் நலன் காக்கும் தாயே நிம்மதியைத் தந்து எம்மை வாழவைக்க வருவாய் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து வளமளிக்க வேண்டும் எட்டியாந் தோட்டை எழுந்தருளும் முத்துமாரியம்மா அருள்வாய் பனாவத்தை தோட்டமதில் பதி அமர்ந்த…