Author: Thana

வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம்- புத்தளம் இந்து மத்திய கல்லூரி- அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் அழகுமுகம் கொண்டிருந்து அன்பு செய்யும் வேல்முருகா அனைத்துலகும் ஆட்சிசெய்யும் அருளுருவே கேட்டிடைய்யா நாடிவரும் பகை கொடுமை அண்டாமல் தடுத்துவிடு புத்தளம் கல்வியகம் கோயில் கொண்ட பாலமுருகா சரணம் ஐயா வெற்றி வேல் தாங்கி நின்று காப்பளிக்கும் வேல்முருகா வள்ளியம்மை அருகுகொண்டு ஆட்சிசெய்யும் அருளுருவே கேட்டிடைய்யா நாடிவரும் பகை கொடுமை அண்டாமல் தடுத்துவிடு புத்தளம் கல்வியகம் கோயில் கொண்ட பாலமுருகா சரணம் ஐயா அறிவுதந்து ஆற்றல் தந்து ஆதரிக்கும் வேல்முருகா அச்சம் அகற்றியெங்கும் ஆட்சிசெய்யும் அருளுருவே கேட்டிடைய்யா நாடிவரும் பகை கொடுமை அண்டாமல் தடுத்துவிடு புத்தளம் கல்வியகம் கோயில் கொண்ட பாலமுருகா சரணம் ஐயா மயிலேறி உலகளந்த மாமணியே வேல்முருகா மதிதவறா நெறிநின்று ஆட்சிசெய்யும் அருளுருவே கேட்டிடைய்யா நாடிவரும் பகை கொடுமை அண்டாமல் தடுத்துவிடு புத்தளம் கல்வியகம் கோயில் கொண்ட பாலமுருகா சரணம் ஐயா வளமளித்து நலமளித்துக்…

Read More

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக இன்றைய தினம் லுணுகலைப் பகுதியிலும் மழை பெய்து கொண்டிருந்த வேளை, இரவு 7 .00 மணியளவில் லுணுகலை சோலன்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன் எனும் 65 வயதுடைய நபர் லுணுகலை நகருக்குச் சென்று பங்களா தோட்டம் வழியாக தனது வீட்டுக்கு செல்லும் வேளையில் பங்களா தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஆற்றை கடக்க முற்பட்ட வேளை, ஆற்றில் தவறி விழுந்துள்ளார். குறித்த நபர் ஆற்றில் விழுந்து நீரில் அடித்துச் சென்று மர வேரை பிடித்த வண்ணம் இருந்துள்ளார். குறித்த நபர் ஆற்றில் விழுவதை கண்ட அயலவர் ஒருவர் லுணுகலை பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கூறியுள்ளார். இதனையடுத்து இரவு 119 விஷேட கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் P.S.69801 பிரதீப் , P.C.71843 உபுல் குமார ஆகிய இருவரும் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததோடு தன்னுயிரையும் துச்சமென நினைத்து உடன்…

Read More

75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு முத்திரை மற்றும் நினைவு நாணயம் ஜனாதிபதியிடம் கையளிப்பு • சுதந்திர தினத்தை முன்னிட்டு முத்திரை கண்காட்சி மற்றும் அருங்காட்சியக கண்காட்சி என்பன பெப்ரவரி 6 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை தபால் தலைமையக வளாகத்தில் நடைபெறும். 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம் என்பவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (02) முற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.  நினைவு முத்திரையை வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவும் நினைவு நாணயத்தை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளித்தனர். தபால் திணைக்களத்தின் பாரம்பரிய நடவடிக்கைகளுக்கு அமைவாக 50 ரூபா பெறுமதியுடன் வெளியிடப்பட்டுள்ள…

Read More

எதிர்வரும்சிறுபோகத்தின் போது, நெல் மற்றும் சோளம் செய்கைக்காக யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போது, உர மற்றும் வர்த்தக உர நிறுவனங்களுக்;கு சொந்தமான களஞ்சியசாலைகளில் 30ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் காணப்படுகிறது. அதனைத் தவிர, மேலும் 25 ஆயிரம்மெற்றிக் தொன் யூரியா உரம் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்கென பத்து பில்லியன்ரூபா ஒதுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஒருலட்சம் மெற்றிக் தொன் யூரியா உரத்தை கையிருப்பில் வைத்துக் கொண்டு, சிறுபோகத்தில்நெல், சோளம் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கான யூரியா உரம் பகிர்ந்தளிப்பது நோக்கமாகும். சிறுபோக நெற் செய்கைக்காக சேதனப் பசளை, பண்டி, யூரியா உர வகைகளை,தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்குவது விவசாய அமைச்சின் எதிர்பார்ப்பாகும். ஆரம்ப உரமான சேதனப் பசளை, சிறுபோகத்தின் ஆரம்பத்திலேயே விவசாயிகளின் தேவைக்கேற்ப,முழுமையாக இலவசமாக வழங்கப்படவுள்ளது. 36ஆயிரம் மெற்றிக் தொன்…

Read More

ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில்இ டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை, தமது கையடக்கத் தொலைபேசியின் ஊடாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த புதிய சாரதி அனுமதிப் பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ,இந்தப் பத்திரம் அனைத்து தரவுகளிலும் சேர்க்கப்படும்.

Read More

(அந்துவன்) கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் (பூப்பனை மேல் பிரிவு) தோட்டத்தின் இலக்கம் 26 கங்காணி லயம் என அழைக்கப்படும் தொடர் லயக்குடியிருப்பில் மூத்த மகனால்  தந்தை பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவத்தில் மூன்று அண் பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் தியாகபிரகாஸ் (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் தனது தந்தையை தாக்கியதாக பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கிய மூத்த மகன் கந்தப்பளை பொலிஸாரால் கைதும்  செய்யப்பட்டுள்ளார். அத்தோடு, அயல் வீட்டார் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

(அந்துவன்) பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும், பொகவந்தலாவ மேல்பிரிவு தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்து அளவீடு செய்யும் டிஜிட்டல் தாராசு, அதிகாரிகளால் நேற்று (02.02.2023) பறிமுதல் செய்யப்பட்டது. நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் அதிகாரிகளால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கைப்பற்றப்பட்ட பச்சை தேயிலை கொழுந்து அளவீடு் செய்யப்படும் டிஜிட்டல் தாராசு, மூன்று ஆண்டுகளாக முத்திரை பதிக்கப்படாமல் காணப்பட்டுள்ளது. இதனால் பொகவந்தலாவ தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Read More

சப்ரகமுவ மாகாணம்- கேகாலை மாவட்டம்- எட்டியாந்தோட்டை அருள்மிகு ஸ்ரீ விநாயகப் பெருமான் திருக்கோயில் மலைசூழ்ந்த திருவிடத்தில் வந்தமர்ந்த விநாயகர் மலைப்பில்லா பெருவாழ்வை எமக்கென்றும் தந்தருள்வார் நம்பி அவர் அடி தொழுதால் நலன்கள் நமைச்சேர்ந்து விடும் எட்டியாந்தோட்டை இருந்தருளும் விநாயகரைத் தொழுதிடுவோம் அலைபோல வருந்துன்பம் தடுத்தருளும் விநாயகர் அச்சமில்லா மனவுறுதி எமக்கென்றும் தந்தருள்வார் நம்பி அவர் அடி தொழுதால் நலன்கள் நமைச்சேர்ந்து விடும் எட்டியாந்தோட்டை இருந்தருளும் விநாயகரைத் தொழுதிடுவோம் கலைகளின் காவலனாய் இருந்தருளும் விநாயகர் கலக்கமில்லா மனத்தினையே எமக்கென்றும் தந்தருள்வார் நம்பி அவர் அடி தொழுதால் நலன்கள் நமைச்சேர்ந்து விடும் எட்டியாந்தோட்டை இருந்தருளும் விநாயகரைத் தொழுதிடுவோம் நிலையில்லா இவ்வுலகில் நிலைத்து நிற்கும் விநாயகர் நிம்மதி நிறை மனத்தினையே எமக்கென்றும் தந்தருள்வார் நம்பி அவர் அடி தொழுதால் நலன்கள் நமைச்சேர்ந்து விடும் எட்டியாந்தோட்டை இருந்தருளும் விநாயகரைத் தொழுதிடுவோம் கவலையில்லா நல்லருளை வழங்குகின்ற விநாயகர் மகிழ்வுநிறை மனத்தினையே எமக்கென்றும் தந்தருள்வார் நம்பி அவர் அடி தொழுதால்…

Read More

தெய்வீகமான முறையில் உயிர் தப்பிய முச்சக்கர வண்டி சாரதி‌. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக பலாங்கொடை வேவல்வத்தை ஊவெல்ல பிரதேசத்தில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் தெய்வீகமான முறையில் உயிர் தப்பிய சாரதி காயங்களுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலை மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பலாங்கொடை வேவல்வத்தை வீதியில் பல மணிநேரம் வாகன போக்குவரத்து தடைப்பட்டது.இந்த சம்பவம் 2023.02.02 திகதி மாலை இடம்பெற்றுள்ளது.

Read More