Author: Thana
மத்திய மாகாணம் – நுவரேலியா மாவட்டம் அட்டன்- பன்மூர் அருள்மிகு ஓம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோயில் மலை சூழ்ந்த திருவிடத்தில் வந்துறையும் திருமகளே மகிழ்ச்சி பொங்க வாழும் வழி எமக்கருள வேண்டுமம்மா முயற்சியுடன் என்றும் நாம் முன்னேறிச் செல்வதற்கு நித்தம் உடனிருப்பாய் பன்மூர் கோயில் கொண்ட கருமாரியம்மா உன்பாதம் சரணடைந்தோம் தாயாக இருந்தெம்மைக் காக்கின்ற திருமகளே தளர்வில்லா மனவலிமை எமக்களிக்க வேண்டுமம்மா திறமையை வெளிப்படுத்தி முன்னேறிச் செல்வதற்கு நித்தம் உடனிருப்பாய் பன்மூர் கோயில் கொண்ட கருமாரியம்மா உன்பாதம் சரணடைந்தோம் ஓம் தேவி கருமாரி என்ற பெயர் கொண்டவளே திருமகளே ஒற்றுமையுடன் வாழும்வழி எமக்கருள வேண்டுமம்மா உரிமைகளுடன் நாம் முன்னேறிச் செல்வதற்கு நித்தம் உடனிருப்பாய் பன்மூர் கோயில் கொண்ட கருமாரியம்மா உன்பாதம் சரணடைந்தோம் சூலத்தைக் கையிலேந்தி தீமைகளையழிக்கும் திருமகளே சோர்வின்றி வாழும் வழி எமக்கருள வேண்டுமம்மா சோதனைகள் கடந்து நாம் முன்னேறிச் செல்வதற்கு நித்தம் உடனிருப்பாய் பன்மூர் கோயில் கொண்ட கருமாரியம்மா…
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரின் IQ அளவைத் தாண்டிய இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி!
உலகில் இதுவரை பிறந்த இரு சிறந்த விஞ்ஞானிகளாகக் கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரின் IQ அளவைத் தாண்டிய இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் குறித்து இங்கிலாந்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அரியானா ஹிமால் தர்மசேனா, 10 வயது பள்ளி மாணவி, பிரபல விஞ்ஞானியாக வருவதே அவரது எதிர்கால லட்சியம். அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழின் படி, அவர் “மேதை” நிலை என்று அழைக்கப்படும் மென்சா நுண்ணறிவுத் தேர்வில் 162 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இந்த திறமையால் அவருக்கு மென்சா உயர் புலனாய்வு கிளப்பின் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் பிபிசி செய்தி சேவை குறிப்பிட்டிருந்தது. பிரிட்டிஷ் ஊடக அறிக்கைகளின்படி, அவரது நுண்ணறிவு நிலை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் உளவுத்துறை அளவை 160 என மதிப்பிடப்பட்டுள்ளது. அரியானாவின் பெற்றோர், ஜானக தம்பர ஹவேகே மற்றும் மேகலா பெரேரா, இங்கிலாந்தின் ஹடர்ஸ்ஃபீல்டில் வசிப்பவர்கள். 2012 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் பிறந்த…
லிந்துலை ,நாகசேனை டில்குல்ற்றி வழியாக பசுமலை நகருக்கு சொல்லும் பாதை கடந்தகாலத்தில் போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லாதிருந்த நிலையில் இவ்வருட ஆரம்ப காலப்பகுதியில் காப்பட் இடப்பட்டு சீர்த்திருத்தம் செய்யப்பட்டதுடன், டயகம முதல் தலவாக்கலைக்கு செல்லும் பயணிகளுக்கு மிகவும் உகந்த நிலையில் காணப்பட்டது. இதே நேரம் இப்பாதையூடாக அட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அரச பேரூந்தும் இரண்டு மாதத்திற்கு முன்பு இயக்கப்பட்டது. எனினும் கடந்த காலத்தில் ஏற்ப்பட்ட சீரற்ற மழைக்காரணமாக குறித்த பாதையில் உள்ள பாலம் ஒன்று பகுதியளவில் உடைந்து போக்குவரத்துக்கு தடையேற்ப்பட்டுள்ளதுடன், குறித்த பேரூந்து சேவையும் கடந்த சில காலமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதையை புணரமைக்க இலங்கை மின்சார சபையில் அகற்றப்பட்ட மின்சார தூண்கள் வழங்ப்பட்டுள்ளதுடன் கிறன்லி தோட்ட நிர்வாகம் பாலத்தின் சீர்த்திருத்த பணிகளை முன்னேடுத்தப் போதும் , வீதி அபிவிருத்தி அதிகார சபையூடாக பாதையை புணரமைக்க வேண்டாமென குறிப்பிட்டதன் அடிப்படையில் தோட்ட நிர்வாகம் பணிகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் பிரதேசவாசி ஒருவர்…
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காகொல்ல தோட்ட பகுதியில் தேயிலை செடிகளுக்குள் அமைந்துள்ள மின்கம்பத்தில் ஏறிய நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த பகுதிக்குள் மாட்டுக்கு புல் அறுக்க சென்ற நபர் ஒருவரே குறித்த நபர் பலியாகி கிடப்பதை அவதினித்துள்ளார். இதன்போது கூக்குரலிட்டு அயலவர்களை வரவழைத்த பின்னர் ஹப்புத்தளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. குறித்த சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதோடு உயிரிழந்த நபர் 68 வயதுடைய காகொல்லை பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை ஆவார். மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா
கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட நான்கு பிரதான தமிழ் பாடசாலைகளின் மாணவர்களுக்கிடையிலான வினாவிடைப்போட்டி – 2022 புசல்லாவை, சரஸ்வமதி மத்திய கல்லூரியின் கலையரங்கத்தில் இன்று ( 18.11.2022) மிகவும் அறிவுப்பூர்வமாக நடைபெற்றது. சரஸ்வதி மத்திய கல்லூரி அதிபர் ஆர்.எஸ். ரவிசந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் (கம்பளை கல்வி வலயம்) ஆர். உமேஸ்நாதன் அழைக்கப்பட்டிருந்தார். கௌரவ அதிதிகளாக கம்பளை சாஹிரா தேசிய கல்லூரி அதிபர் ஏ.எல். சிராஜ், புசல்லாவை இந்து தேசிய கல்லூரி அதிபர் எஸ். சந்திரமோகன், அயரி தமிழ் மகா வித்தியாலய அதிபர் சீலன் ஆகியோர் பங்கேற்றனர். கம்பளை கல்வி வலய உதவிப்பணிப்பாளர் ஜி. கிருஷ்ணபிள்ளை, கம்பளை இந்து கல்லூரி அதிபர் எஸ். ரகு ஆகியோரும் கௌரவ அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர். சிறப்பு அதிதிகளாக கம்பளை கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ஏ.எஸ். எழில்பிரியா, சரஸ்வதியன்ஸ் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான பா. திருஞானம்,…
(செய்தி – பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்) அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா புரன்வீக் ராணிதோட்டத்தை சேர்ந்த கிருஸ்ணகுமார் பாக்கியலெட்சுமி என்ற பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் இந்த மூன்று பெண் குழந்தைகளும் பிறந்துள்ளதாக வைத்தியசாலையிகன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 32 வயதுடைய கிருஸ்ணகுமார் பாக்கியலெட்சுமி என்ற இந்த பெண்ணுக்கு இதற்கு முன்பு பத்து மற்றும் எட்டு வயதினை கொண்ட இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளமை குறிப்பிடதக்கது. கிருஸ்ணகுமார் பாக்கியலெட்சுமி என்ற இந்த பெண்ணின் கணவர் மாத்திரம் தோட்ட தொழில் செய்து வருகின்ற நிலையில் தனது கணவரின் உழைப்பில் வரும் வருமானத்தை வைத்து கொண்டு தான் வாழ்ககை நடத்த வேண்டும் ஒரே தடவையில் மூன்று குழந்தைகளுக்கும் தாய்பால் ஊட்டுவது என்பது கஷ்டமான விடயம்.பொருளாதார நெருக்கடியால் உதவக்கூடியவர்களிடம் இந்த பெண் உதவி கோரிக்கையும் விடுத்துள்ளார்.
அக்கரப்பத்தனை பிரதேசத்தில் பல வருடகாலமாக நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள், அரச விழாக்கள், மேதினம் விழாக்கள் , களியாட்டங்கள் என பல்வேறு வகையான நிகழ்வுகளின் அரங்கமாக மன்றாசி தோட்ட பிரதான மைதானம் காணப்பட்டது. எனினும் தற்போது குறித்த மைதானத்தை எந்தவொரு நிகழ்வுகளும் பயன் படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. கடந்த ஒருவருடத்திற்கு முன்னரான காலப்பகுதியில் அக்கரப்பத்தனை போடைஸ் அட்டன் பிரதான வீதி முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்மானின் பணிப்புரைக்கமைய சீர்செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதும் வெட்டப்பட்ட மண்ணின் பெரும்பகுதி மைதானத்தில் கொட்டப்பட்டது. எனினும் குவிக்கப்பட்ட மண் அப்படியே விடப்பட்டுள்ளதோடு மைதானம் பாவனைக்கு உகந்த முறையில் புணரமைக்கப்படவும் இல்லை. ஆரம்ப காலத்தில் நிகழ்வுகள் பல நடைபெற்ற மைதானம் இன்று விளையாட கூட பயனற்றதாகியுள்ளது. எனவே இந்த மைதானம் முன்பிருந்தது போல சீரமைத்து தரும்படி இங்குள்ள இளைஞர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். சரத்
லிந்துலை மராயா தேசிய பாடசாலையில் இன்று 11.30 மணிக்கு 2022 ம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவிருக்கின்றது. பாடசாலையின் அதிபர் தேர்தல் ஆணையாளராக செயற்படுவார் . தரம் 06 தொடக்கம் 09 வரையான 65 வேட்பாளர்களும் ,10 தொடக்கம் 13 வரை 80 வேட்பாளர்களும் குறித்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதேவேளை தரம் 6 தொடக்கம் 09 வரை 550 வாக்காளர்களும் ,10 தொடக்கம் 13 வரை 400 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர். முதல் தொகுதியான தரம் 06 தொடக்கம் 09 வரை – 35 வேட்பாளர்களுக்கான தேர்தலும் ,தொடர்ந்து இரண்டாம் தொகுதியான 10 தொடக்கம் 13 வரை 60 வேட்ப்பார்கள் தெரிவுக்குக்கான போட்டி இடம்பெறும் .
மாத்தறை மாவட்ட தெனியாய சென்மெத்தியூஸ் சிங்கள, தமிழ் கலவன் பாடசாலையின் தமிழ் பிரிவில் குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள 05 தமிழ் பாடசாலைகளில் கல்விபயிலும் தரம் 05 புலமை பரிசில் பரிட்சைக்கு தோற்றுவிக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு 15/11/2022 அன்று இடம்பெற்றது. குறித்த கருத்தரங்கை சிலோன் யூத் மூமன்ட் மற்றும் பிரதேச பிரஜாசக்தி நிலைய இணைப்பாளர் ராஜநாயகம் கஸ்தூரியும் ஒழுங்கு செய்திருந்தினர். மிகவும் பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கான இந்த கருத்தரங்கில் விரிவுரை வழங்க ஹம்பாந்தொட்டை கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர் டீ .எப் .ஷூஹுட் கலந்துகொண்டார்.
பிரபலமான பெயர்கள் மற்றும் விளையாட்டு அணிகள் விசேடமாக லிவர்பூல் அணி மிகவும் பலம் வாய்ந்த முன்னணி அணியாக 2022இல் அடையாளப்படுத்தப்பட்டது. அதன் கடவுச் சொல் தரமானது. ஆனால் இன்று பிரித்தானியாவில் நிகழ்நிலை கணக்குகளின் பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அத்துடன் அனைவரும் சிறந்த ‘கடவுச்சொல்’ வைத்திருப்பதில் அவதானம் செலுத்துமாறு துறை சார்ந்தவர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் ‘கடவுச் சொல்1’ மற்றும் ‘கடவுச்சொல் 123’ போன்ற சிறிய மாறுபாடுகள் பாதிப்பேற்படவில்லை. கடவுச்சொல் நிருவாக நிறுவனமான Nord Pass இன் வருடாந்த ஆராய்வுக்கு அமைவாக , இது கடந்த ஆண்டு ‘123456’ என்ற கடவுச்சொல்லை விட அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் ஏனைய பொதுவான முக்கிய கடவுச்சொற்களாக “qwerty” மற்றும் “abc123” ஆகியவை அதிமாகக் காணப்படுகின்றன. அத்துடன் ‘12345678’ என்ற கடவுச்சொல்லில் எடுத்துச் செல்வதற்கும், எப்போதும் பயன்படுத்த இலகு தன்மையுடையதாகவும் இலகுவான கடவுச்சொல் என பெரும்பாலான பயனர்கள் நம்புகின்றனர். பிரபல நபர்களின் பெயர்கள் மற்றும் விளையாட்டு அணிகளும் பெரும்பாலானவர்களால் கடவுசொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. அதில் லிவர்பூல்n என்ற கடவுச்சொல் 2022இல்…