Author: Thana
நுவரெலியா பிரதேச செயலகத்தில் 2023.01.31. இன்று “தமிழர் திருநாளாம் தைப்பொங்கள் விழா” கொண்டாடப்பட்டது. விழாவில் நுவரெலியா பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர்,திட்டமிடல் நிருவாக பணிப்பாளர், கணக்காளர் அதிகாரி ,சமூர்த்தி நிருவாக அதிகாரி , அபிவிருத்தி உத்தியோகத்திர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள்.,ஏனைய பணியாளர்களும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
Galle sacred heart convent சிறுவர் விளையாட்டு பூங்காவில் அருட்சகோதரிகள் ஆசிரியர், பெற்றோர் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசியபொங்கல் விழா பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. போகிபொங்கல் ,தைப்பொங்கல் பட்டிப்பொங்கல் , காணும் பொங்கல் என கொண்டாடப்படும் விழாவாகவும் சூரியனுக்கு பெறுமதியான நன்றி தெரிவிக்கும் உழவர்களின் திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டது. விவசாயின் மனிதநேயத்தையும் இயற்கை நேயத்தையும் உலகிற்கு பறைசாற்றும் ஒரு பண்பாட்டின் அடையாளமாகவும் விளங்குகின்ற தைப்பொங்கல் விழா மூவின மக்கள் கல்வி கற்கும் Sacred Heart Convent Preschool மாணவ செல்வங்களின் அழகிய மழலை மொழியின் பொங்கலோ பொங்கல் என்ற இனிமையோடு தொடக்கப்புள்ளி இடப்பட்டது. பால்பொங்கி சூரியன் மலர நவதானியங்கள் படையல் வைத்து ஆராதனை காட்டப்பட்டதோடு பல்வேறு கலை கலாசார அடையாளங்கள் பிரதிபலிக்க தமிழர் பண்பாட்டு பாரம்பரியங்கள் இளஞ் சந்ததியினரும் கடைப்பிடிக்கும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட இவ்விழாவில் யாவரும் இன்புற்றிருந்ததோடு பிரமாண்டமான பொங்கல் நவரசங்களோடு பரிமாறப்பட்டு உண்டு மகிழ்கின்ற விருந்தோம்பலின் உயர்வையும் எடுத்துக்காட்டியது .…
புறக்கோட்டை பகுதியில் வறுமையில் வாடும் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கான உளர் உணவு பொதிகள்
கொழும்பு புறக்கோட்டை பிரஜை போலீஸ் அமைப்பும் கொழும்பு மல்வத்த வீதி மக்கள் வங்கி கிளையும் இணைந்து கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வறுமையில் வாடும் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கான உளர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கொழும்பு ஐந்துலாமச்சந்தி பழைய நகர மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. நிகழ்வுக்கு கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட மக்கள் வங்கி உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பசளை கொள்வனவு இம்முறை முழுமையாக மாவட்ட மட்டத்தில் இடம்பெறுகிறது. இதற்காக மாவட்ட செயலாளர்கள் முன்னின்று செயற்படுகின்றனர் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பசளையை பகிர்ந்தளிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ள ,அதேவேளை, விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அதில் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர். மிகவும் வெளிப்படையாக இந்த நடவடிக்கைகயை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கூறினார். பசளை கொள்வனவுக்கு தேவையான நிதி வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் , ஒரு ஹெக்டெயருக்காக பத்தாயிரம் ரூபாவும் இரண்டு ஹெக்டெயர்களுக்காக 20 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும். வங்கிகளில் சிறு தாமதம் ஏற்பட்டாலும் எதிர்வரும் சில தினங்களில் இந்நிலைமை சீராகும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
இணைய வழி Online முறை மூலம் இலங்கை மின்சார சபைக்கு பணம் செலுத்துவது நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோலாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் ஒன்லைன் முறையில் பணம் செலுத்தும் முறை இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி உதவி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை சமகால அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (31) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. அதன்போது கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதில் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் திரு.தினித் சிந்தக கருணாரத்னவும் கலந்துகொண்டார். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்ளை அடையாளம் கண்டு இந்த நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தோட்டத்தொழிலாளர்களுக்கு மட்டும் அன்றி நாட்டில் நிவாரணம் தேவைப்படுகின்ற அனைவரையும் அடையாளம் கண்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்றும் அவர்; மேலும் குறிப்பட்டார்.
பொரளை “ஓவல் வியூ ரெசிடன்சீஸ்” அரச ஊழியர் வீடமைப்புத் திட்டத்திற்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்….
பொரளை “ஓவல் வியூ ரெசிடன்சீஸ்” என்ற அரச ஊழியர் வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீட்டுப் பயனாளிகளுக்கு வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. நேற்று (30) நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு.நிமேஷ் ஹேரத் தலைமையில் பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள அதிகார சபையில் ஆரம்பிக்கப்பட்டது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில் வசிப்பவர்களுக்கு உரிமைப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விஞ்ஞாபனத்தில் அரச அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக வீட்டு உரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பொரளை “ஓவல் வியூ ரெசிடன்சீஸ்” அரச ஊழியர் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 10 வீட்டுப் பயனாளிகளுக்கு வீட்டுரிமைப்; பத்திரம் வழங்கப்பட்டதோடு, ஏனைய வீட்டுப் பயனாளிகளுக்கு உடனடியாகப் உரிமைப் பத்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்…
தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (30) மரக்கறி வகைகளின் மொத்த விலை பாரியளவு வீழ்சியடைந்துள்ளது. கோவா ஒரு கிலோவின் மொத்த விலை ரூபாய். 25 முதல் 35 வரை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வெள்ளரிக்காய் ஒரு கிலோ ரூபாய் 50 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போஞ்சி ஒரு கிலோ மொத்த விலை ரூபாய் 300 முதல் 350 வரை குறைவடைந்துள்ளதுடன், லீக்ஸ் மற்றும் கெரட் ஆகியவற்றின் மொத்த விலை ரூபாய் 90 முதல் 150 வரை குறைந்துள்ளது.
கட்டுப்பாட்டு விலைக்கும் அதிகமான விலையில் முட்டைகளை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் முட்டைகளை பதுக்கி வைத்துள்ள இடங்கள் குறித்து தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இவ்வாறுஇ கடந்த ஜனவரி 21 ஆம் திகதி முதல் இதுவரையிலும் 83 இடங்கள் சோதனையிடப்பட்டுள்ளதாகவும் இவற்றுக்கெதிராக அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி ஷாந்த கிரிஎல்ல தெரிவித்துள்ளார்.
பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அவர்களில் இருபத்தாறாயிரம் பேர் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2018, 2019, 2020ஆம் ஆண்டுகளில் அரசாங்க சேவையில் இணைந்து கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பட்டதாரிகளுக்கு இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது. 40 வயதுக்குட்பட்ட அரச பணியில் பணிபுரியும் எந்தப் பட்டதாரியும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஒன்லைன் முறை மூலம் விண்ணப்பங்களை அனுப்ப இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.