Author: Thana

பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாவை நிதியுதவியாக வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியிருந்தது. அதில் 50 வீதமான தொகையே வழங்கப்பட்டது. எஞ்சிய தொகை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு சில நிபந்தனைகளுடன் எஞ்சிய நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முதற்கட்டமாக 7 ஆயிரத்து 500 கோடி ரூபா வழங்கப்படவுள்ளது. இதேவேளை எரிபொருளுக்கான வரியை 5 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

Read More

நெல் சந்தைப்படுத்தும் சபையினால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் ‘PMB அரிசி’யை (PMB Rice) அடுத்த வாரம் கொழும்பு மக்களுக்கு விற்பனை செய்ய ,விவசாய மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அரிசி 5 மற்றும் 10 கிலோவாக பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் பல இடங்களில் அவற்றை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், கொழும்பில் 200,000 அரிசி பொதிகளை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Read More

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் ஒருசில பகுதிகளில் பாரிய நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் நிலஅதிர்வின் தாக்கம் பதிவாகியுள்ளதாக ஆப்கானிஸ்தானின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியின் ஒருசில பிரதேசங்களிலும், பாகிஸ்தானின் ஒருசில பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு கோஸ்ட் நகரத்திலிருந்து 44 கிலோ மீற்றர் தூரத்தில் 51 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளமை தொடர்பான காட்சிகளை ஒருசிலர் வீடியோ பதிவுகளாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Read More

அரச ஊழியர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்வது குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கையை கவனத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார். www.gov.lk என்ற இணையத்திற்குள் பிரவேசித்து இதுபற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அரச சேவையாளர்களின் ஓய்வூதியத்திற்கோ சேவைக்காலத்திற்கோ பாதிப்பு இல்லாத வகையில் 5 வருட காலம் வெளிநாட்டில் தொழில்புரிய இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

Read More

இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் வழங்கப்பட்ட அரிசி பொதிகளில் ஒரு தொகுதி இன்றைய தினம் பதுளை மாவட்டத்தின் பசறை, லுணுகல ,பதுளை ஹாலி எல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு பகுந்து அளிப்பதற்காக பதுளை புகையிரத நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன. இதில் பசறை பிரதேச செயலாளர் பிரிவுக்கு 1800 அரிசி மூட்டைகளும் ,லுணுகல பிரதேச செயலாளர் பிரிவுக்கு 900 அரிசி மூட்டைகளும் ,பதுளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு 900 அரிசியை மூட்டைகளும் ,ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவுக்கு 900 அரிசி மூட்டைகளும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளன. இந்த அரிசி பொதிகள் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்தார்.

Read More

சர்வதேச யோகா தினம் இன்றாகும். இதனையொட்டி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பிரதான நிகழ்வு இடம்பெற்றது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்மொழிவுக்கு அமைய, 2015ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச யோகா தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய யோகா நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டிருந்தார்.

Read More

காலாவதியாக இருக்கும் டின் மீன்களின் உற்பத்தித் திகதி மற்றும் விலை என்பவற்றை மாற்றி சந்தைக்கு வினியோகிக்கும் தொழிற்சாலை ஒன்றில் காணப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிக்கத்தக்க டின் மீன்கள் நேற்று (20) மாலை கைப்பற்றப்பட்டதாக குருநாகல் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. பன்னல மூக்கலான பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது விசாரணைகளில் இருந்து மோசடி கணடறியப்பட்டுள்ளது.

Read More

தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக இன்று (20) முதல் அரச ஊழியர்கள் சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. அலுவலக செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள குறைந்த அளவான பணிக்குழாமை சேவையில் ஈடுபடுத்துவதற்கான அதிகாரம் நிறுவனப் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என்றும் ,அத்தியாவசிய சேவைகளை வழமை போன்று முன்னெடுக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது.

Read More

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனின் கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில் அதன் முடிவுகளுக்கமைய மெக்ரோனின் கூட்டணி 245 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. எனினும் பெரும்பான்மையான 289 ஆசனங்கள் தேவைப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 2வது முறையாகவும் மென்ரோன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு குறுகிய காலத்திற்குள் பிரான்ஸ் மக்கள் தமது அரசியல் நிலைப்பாட்டில் மாறுப்பாட்டை கொண்டுள்ளமை தேர்தல் முடிவுகளின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையை இழந்தமையினால் ஜனாதிபதி முன்னெடுத்துச்செல்ல திட்டமிட்டுள்ள சீர்த்திருத்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுமென கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன. இடதுசாரி கட்சிகளின் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றியை பதிவு செய்துள்ளது. அத்தோடு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மாரின் லீப்பென்னின் கட்சி 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதோடு, பாராளுமன்றத்தில் 89 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 12ம் திகதி இடம்பெற்றிருந்தமை…

Read More

இலங்கை வெளிநாட்டுச் சேவையின் மூன்றாம் தரத்திற்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை திட்டமிட்டபடி இன்று (19) நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 60 மத்திய நிலையங்களில் இன்று காலை 9.00 மணிக்கு பரீட்சை நடைபெறும். எரிபொருள் நெருக்கடியினால் தாமதமாக வருகை தரும் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

Read More