Author: Thana

லங்கா சதொச நிறுவனம் 6 பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (26) முதல் அமுலுக்கு வருவதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு சலுகை வழங்கும் வகையில் சதொச நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக செத்தல் மிளகாய், சிவப்பு மற்றும் வெள்ளைப் பச்சையரிசி, வெள்ளை நாட்டரிசி, பருப்பு, கீரி சம்பா ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு கிலோ செத்தல் மிளகாயின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை ஆயிரத்து 700 ரூபா.  சிவப்பு பச்சை அரிசி 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 179 ரூபா.  வெள்ளைப் பச்சை அரிசி 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.  இதன் புதிய விலை 169 ரூபாவாகும்.  வெள்ளை நாட்டரிசி ஒரு கிலோ 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 184 ரூபா.  பருப்பு 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய…

Read More

100% பெறுபேறுகளுடன் மெராயா தேசிய பாடசாலையின் சாதனை. (ராசையா கவிஷான்) 2022 ம் ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டது. இதில் மெராயா தேசிய பாடசாலை இம்முறையும் 100% பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்திருக்கின்றது. குறித்த பாடசாலையில் இருந்து 51 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 40 மாணவர்கள் 100 க்கு அதிகமான புள்ளிகளை பெற்றுள்ளனர். மேலும் 6 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை கடந்து சாதனையை நிலைநாட்டியுள்ளனர். ☞Paramanathan Divesh – 174 ☞Chandramohan Divinesh – 172 ☞Sudhahar Vidhusaran – 163 ☞Anantharaj Anushika – 150 ☞Lankeshwaran Kirushika – 149 ☞Thilaganathan Yuwedhiks – 143 சிறந்த பெறுபேறுகளை பெற்ற அனைத்து மாணவர்களையும் பலரும் பாராட்டி வருகின்றனர். சிறப்பாக பாடசாலையின் அதிபர் ஆர்.கோவிந்தராஜ் தரம் 5 மாணவர்களின் பகுதி தலைவர் எஸ்.ஜெயந்தினி வகுப்பாசிரியர்களான கிருஸ்ணராஜா, அருணோதயம்…

Read More

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)

Read More

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் – யாழ்ப்பாணம் அருள்மிகு காமாட்சியம்மன் (நாச்சிமார்) திருக்கோயில் யாழ்ப்பாண நன்னகரில் கோயில் கொண்ட தாயே பாழ்படா நிலைதந்து வாழ்வளிக்க வருவாய் நாச்சிமார் கோயிலடி காட்சி தரும் தாயே எம் குறைகள் தீர்த்தருள விரைந்து நீ வருவாய் கேட்கும் வரம் தந்தெம்மை ஆட்சி செய்யும் தாயே குறையண்டா நிலைதந்து வாழ்வளிக்க வருவாய் நாச்சிமார் கோயிலடி காட்சி தரும் தாயே எம் குறைகள் தீர்த்தருள விரைந்து நீ வருவாய் தமிழ் முழங்கும் திருநகரில் கோயில் கொண்ட தாயே தவறில்லா வாழ்வு தந்து வாழ்வளிக்க வருவாய் நாச்சிமார் கோயிலடி காட்சி தரும் தாயே எம் குறைகள் தீர்த்தருள விரைந்து நீ வருவாய் துன்பங்கள் துடைத்தெறிய வந்தமர்ந்த தாயே துணிவு கொண்ட வாழ்வு தந்து வாழ்வளிக்க வருவாய் நாச்சிமார் கோயிலடி காட்சி தரும் தாயே எம் குறைகள் தீர்த்தருள விரைந்து நீ வருவாய் ஆறுதலைத் தந்து அரவணைக்கும் எங்கள் திருத்தாயே அச்சமில்லா வாழ்வு…

Read More

2022ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான WWW.DOENETS.LK ல் பார்வையிட முடியும்.

Read More

(க.கிஷாந்தன்) மனிதன் உயிர்வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானது. அதேபோல சுகாதார நலனுடன்வாழ நாளாந்தம் குறிப்பிட்டளவு சுத்தமான நீரை கட்டாயம் பருகியாக வேண்டும். எனினும், நீர்வளம்மிக்க மலையகத்தில் சில தோட்டப்பகுதிகளில் குடிநீரைப் பெறுவதற்கு மக்கள் போராட வேண்டியுள்ளது. ஒரு குடம் நீரை நிரப்பிக்கொள்வதற்கு அவர்கள் படும்பாடு ‘வலி சுமந்த கதையாகும். அந்தவகையில்  அக்கரப்பத்தனை பன்சல கொலனி  மக்கள்  ஒரு‌ குடம் நீருக்காக 200 படிகள் ஏறி இறங்கவேண்டியுள்ளது. சிலவேளைகளில் நீர் இல்லாமல் வெறுங்கையுடன் திரும்ப வேண்டிய அவலமும் ஏற்படுகின்றது. மேற்படி கொலனியில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 260 இற்கு அதிகமான மக்கள் தினந்தோறும் குடிநீர் பிரச்சனையை எதிர் கொண்டு வருவதுடன், அக்கரப்பத்தனை பிரதேச சபை ஊடாக வாரத்துக்கு ஒரு முறையே சிறிய நீர் தாங்கியில் நீர்  நிரப்பி வழங்கப்படுகின்றது என மக்கள் குறிப்பிடுகின்றனர். “நீர் வளம் மிக்க மலையகத்தில் எமக்கு நீர் குடிநீர் கிடைக்காமை வேதனையளிக்கின்றது. நீரை பெறுவதிலேயே பாதி நாள் போய்விடுகின்றது. எப்படிதான்…

Read More

(க.கிஷாந்தன்) கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரி நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நேற்று (24)  கையெழுத்துப் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியாவில்  “கோட்டா கோ கம” கிளை இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்  மற்றும் சில சிவில் அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கையொப்பம் இடும் நடவடிக்கையில்  ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் திணேஷ் கிருசாந்த நுவரெலியா மாநகரசபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்  கலந்துக்கொண்டு கையொப்பமிட்டனர்.

Read More

பரசங்கஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணித்த சிறுமி ஒருவர் முன்பக்க கதவில் இருந்து கீழே இறங்க முற்பட்ட போது கீழே விழுந்து பேருந்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அளுத்கம, தாருசலம் முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் கம்பிரிஸ்வெவ பிரதேசத்தில் வசித்து வந்த 6 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பரசங்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கம்பளை வங்கி கொள்ளை l வேனின் சாரதி கட்டப்பட்ட நிலையில் வேனுடன் மீட்பு. கம்பளை – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியிலுள்ள ATM இயந்திரமொன்று அடையாளம் தெரியாத நபர்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 12.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். வேனொன்றில் வருகைத் தந்த முகமூடி அணிந்த 4 பேர், ATM இயந்திரத்திலிருந்த காவலாளியை கட்டி வைத்துவிட்டு, பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வேன், பேராதனை பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. வேனின் சாரதி வேனுக்குள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

அரச சேவையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் வழமை போன்று இன்று (25) வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.

Read More