Author: Thana
காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் பொகவந்தலாவ பொகவான கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம்
(க.கிஷாந்தன்) காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் பொகவந்தலாவ பொகவான கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம் ஒன்று (29.01.2023) ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சடலமாக மீட்கப்பட்ட நபர் இன்று தீடீரென காணாமல் போயுள்ளார். குறித்த நபரை தேடும் நடவடிக்கையினை உறவினர் முன்னெடுக்கப்பட்டப்போதும் குறித்தப் பிரதேசத்தில் உள்ள ஒரு நபரினால் குறித்த நபர் சடலமாக கெசல்கமுவ ஓயாவில் மிதந்துக்கொண்டு இருந்ததை இனங்கண்டு பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்தில் உயிரிழந்த நபரின் பாதணிகள், குடை, மாதாந்த வைத்திய பரிசோதனை, புத்தகம் என்பன மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குறித்தப் புத்தகத்தில் தனக்கு வியாதி தாங்க முடியவில்லை என்றும் தனது முடிவுக்கு தானே பொறுப்பு என்றும் தனது மகன் மிகவும் நல்லவர் என்றும் தன்னை அன்பாக பார்த்துக்கொள்வார் எனவும் யாரையும் தண்டிக்க வேண்டாம் என்றும் இறந்தவரின் கையெழுத்தில் இறப்பதற்குமுன்பே எழுதி வைக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் பொகவந்தலாவ…
கொழும்பில் (29) காலை 6 மணித்தியாலங்கள் கொழும்பை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அண்மைய வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட தனித்துவமான நடவடிக்கை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். விமானப்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்த இந்த நடவடிக்கை சில வாரங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் பிரகாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பலர் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இன்றைய சோதனையில் 1 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 1 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டதாக நிஹால் தல்துவ தெரிவித்தார். இதேவேளை, தெற்கிலும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான அடிப்படைப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அச்சிடுதல் தொடர்பான ஆய்வுகள் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை முடிக்க எதிர்பார்த்துள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்தார். அச்சுப் பிழைகள், வாக்குச் சீட்டு திருத்தங்கள் உள்ளிட்ட அனைத்தும் மீண்டும் சரிபார்த்து, அதன் துல்லியத்தை தேர்தல் ஆணைக்குழு மறு ஆய்வு செய்து, அச்சிடுதல் தொடர்பான பணிகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் என்றார். பின்னர், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி அடுத்த வாரம் நடைபெற உள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான ஏனைய ஆவணங்களை அச்சடிக்கும் பணி ஏற்கனவே அரச அச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், நல்லூர் அருள்மிகு கயிலாசநாத சுவாமிகள் திருக்கோயில் தமிழர் தலைநகரில் நின்றருளும் கணபதியே தர்மநெறி நின்றெம்மை வாழவைப்பாய் யானைமுகா என்றும் உடனிருந்து நல்லருளைத் தந்தருள்வாய் யாழ்ப்பாண மாநகரில் கோயில் கொண்ட கயிலாசநாதா காவலாயிருந்துவிடு தீராத வினைகளைத் தீர்த்தருளும் கணபதியே திக்கின்றித் தவிக்கும் நிலை அண்டாது வாழவைப்பாய் யானைமுகா என்றும் உடனிருந்து நல்லருளைத் தந்தருள்வாய் யாழ்ப்பாண மாநகரில் கோயில் கொண்ட கயிலாசநாதா காவலாயிருந்துவிடு சிவனாரின் கருவறையை அருகு கொண்ட கணபதியே சினமில்லா மகிழ் வாழ்வைதந்து வாழவைப்பாய் யானைமுகா என்றும் உடனிருந்து நல்லருளைத் தந்தருள்வாய் யாழ்ப்பாண மாநகரில் கோயில் கொண்ட கயிலாசநாதா காவலாயிருந்துவிடு வழித்துணையாயிருந் தெம்மை வாழவைக்கும் கணபதியே வற்றாத கருணையினைத் தந்தெம்மை வாழவைப்பாய் யானைமுகா என்றும் உடனிருந்து நல்லருளைத் தந்தருள்வாய் யாழ்ப்பாண மாநகரில் கோயில் கொண்ட கயிலாசநாதா காவலாயிருந்துவிடு உமையம்மை திருமகனாய் உதித்தவரே கணபதியே உறவுநிலை குன்றாநிலை தந்தெம்மை வாழவைப்பாய் யானைமுகா என்றும் உடனிருந்து நல்லருளைத் தந்தருள்வாய் யாழ்ப்பாண மாநகரில்…
ஊவா மாகாணம்- மொனராகலை மாவட்டம்- கதிர்காமம் கதிரமலை அருள்மிகு ஈஸ்வரன் திருக்கோயில் கதிரமலை உச்சியிலே காட்சி தரும் சிவனே கலக்கமில்லா நல்வாழ்வைத் தந்தருள்வாய் ஐயா என்றும் உடனிருந்து எமைக் காக்க வேண்டும் கதிரமலை கோயில் கொண்ட ஈஸ்வரனே அருள்வாய் கதிர்காமத் திருத்தலத்திலிருந்து எமைக்காக்கும் சிவனே கதிரவனின் நல்லொளியை தந்தருள்வாய் ஐயா என்றும் உடனிருந்து எமைக் காக்க வேண்டும் கதிரமலை கோயில் கொண்ட ஈஸ்வரனே அருள்வாய் வெற்றிவேல் முருகனையே தந்திட்ட சிவனே வெற்றி நிறை நல்வாழ்வைத் தந்தருள்வாய் ஐயா என்றும் உடனிருந்து எமைக் காக்க வேண்டும் கதிரமலை கோயில் கொண்ட ஈஸ்வரனே அருள்வாய் ஏழுமலை மத்தியிலே அமர்ந்திட்ட சிவனே ஏற்றமிகு நல்வாழ்வைத் தந்தருள்வாய் ஐயா என்றும் உடனிருந்து எமைக் காக்க வேண்டும் கதிரமலை கோயில் கொண்ட ஈஸ்வரனே அருள்வாய் கந்தனவன் திருக்கோயில் அருகமர்ந்த சிவனே காசினியில் நல்லுறவைத் தந்தருள்வாய் ஐயா என்றும் உடனிருந்து எமைக் காக்க வேண்டும் கதிரமலை கோயில் கொண்ட ஈஸ்வரனே…
சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகை நடவடிக்கை காரணமாக இன்று முதல் கொழும்பில் சில தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதன்படி, ஜனவரி 28, 29 ஆம் திகதிகளிலும் பெப்ரவரி மாதத்தில் 1, 2, 3 ஆம் திகதிகளிலும் இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மேல் மாகாண போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் விஜேசிங்க குறிப்பிட்டார். சுதந்திர தினத்தன்றும் நிகழ்வு நடைபெறும் பகுதியை உள்ளடக்கி விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார். குறித்த தினங்களில் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வீதிகள் மூடப்படவுள்ளதுடன், சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது. மின்வெட்டினை வழமைப்போலவே தொடரவிருப்பதாக இலங்கை மின்சார சபை, இதற்கான அனுமதியை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது. ஆனால் மின்சார சபையின் கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது இம்முறை உயர்தரப் பரீட்சையில் தோற்றும் 331,000 மாணவர்களின் உரிமைகளை மீறும் செயலாகவும் அவர்களுக்கு பாதிப்பாகவும் மின்வெட்டு அமைவதாக ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று முதல் எதிர்வரும் 3 ஆம் திகதிவரை நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க – இலங்கை நட்புறவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக அவரது இந்த விஜயம் அமையவுள்ளது. இதன்போது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவை உறுதி செய்வார்.
வடமாகாணம்- மன்னார் மாவட்டம் மன்னார் – எழுத்தூர் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோயில் அகிலமெங்கும் நிறைந்திருந்து அருள் வழங்கும் தாயே அன்பு நிறை மனம் கொண்டு அணைத்தருள வருவாய் நம்பியுன்னைச் சரணடைந்தோம் நாங்கள் எழுத்தூரில் கோயில் கொண்ட தாயே அகிலாண்டேஸ்வரி போற்றி தரணியெங்கும் அருள் பொழிந்து காத்தருளும் தாயே தவறணுகா மனம் தந்து அணைத்தருள வருவாய் நம்பியுன்னைச் சரணடைந்தோம் நாங்கள் எழுத்தூரில் கோயில் கொண்ட தாயே அகிலாண்டேஸ்வரி போற்றி மாசில்லா மனம் கொண்டு அன்பு செய்யும் தாயே ஆதரவு தந்தெம்மை அணைத்தருள வருவாய் நம்பியுன்னைச் சரணடைந்தோம் நாங்கள் எழுத்தூரில் கோயில் கொண்ட தாயே அகிலாண்டேஸ்வரி போற்றி பாசமுடன் அணைத்தருளும் அன்புநிறை தாயே பரிதவியா நிலை தந்து ஆறுதல் வழங்கிடவே வருவாய் நம்பியுன்னைச் சரணடைந்தோம் நாங்கள் எழுத்தூரில் கோயில் கொண்ட தாயே அகிலாண்டேஸ்வரி போற்றி நலமளித்து வளமளித்து ஆதரிக்கும் தாயே நன்மைகள் தந்தெம்மை வழிநடத்த வருவாய் நம்பியுன்னைச் சரணடைந்தோம் நாங்கள் எழுத்தூரில்…