Author: Thana
நுவரெலியா ரதல்ல வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆகக்கூடிய இழப்பீட்டை வழங்குவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம் பெறாத வகையில் ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதுடன் இதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த விபத்து தொடர்பில் தேர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக குறிப்பிட்ட அமைச்சர், விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்த தரப்பினர் தம்மிடம் தெரிவித்ததாக கூறினார்.
இனம் மதம் பேதம் மற்றும் ஆண், பெண் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் அச்சுறுத்தல் பீதியின்றி தமது விருப்பத்திற்கு அமைவான இடத்தில் வாழ்வதற்கும் ,வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொள்வதற்கும் சகல பிரஜைகளுக்கு உரிமை இருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் இசந்திப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
வடமேல் மாகாணம், புத்தளம் மாவட்டம் – புத்தளம் மணற்குன்று – அருள்மிகு ஸ்ரீகருமாரியம்மன் (பொம்மக்க) திருக்கோயில் காலமெல்லாம் உடனிருந்து காவல் செய்யும் தாயே கவலைகள் அண்டாத மனத்தினையே தா என்றும் உடனிருந்து எமைக்காக்க வேண்டும் மணற்குன்றில் கோயில் கொண்ட எங்கள் தாயே கருமாரி அம்மா புத்தளம் நன்னகரில் உறைந்து எம்மைக் காவல் செய்யும் தாயே புத்துணர்வு கொண்ட மனத்தினையே தா என்றும் உடனிருந்து எமைக்காக்க வேண்டும் மணற்குன்றில் கோயில் கொண்ட எங்கள் தாயே கருமாரி அம்மா சூலத்தைக் கையிலேந்தி காவல் செய்யும் தாயே சூதுகள் அண்டாத மனத்தினையே தா என்றும் உடனிருந்து எமைக்காக்க வேண்டும் மணற்குன்றில் கோயில் கொண்ட எங்கள் தாயே கருமாரி அம்மா வந்தவினை போக்கி வரும் வினைகள் தடுத்து காவல் செய்யும் தாயே வெறுமை நிலையில்லாத மனத்தினையே தா என்றும் உடனிருந்து எமைக்காக்க வேண்டும் மணற்குன்றில் கோயில் கொண்ட எங்கள் தாயே கருமாரி அம்மா ஆற்றல் தந்து ஆதரித்து…
மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். பஸ் ஒன்றும், வேன் ஒன்றும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 80 வயதான முதியவர் ஒருவரும், குழந்தை ஒன்றுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
கொழும்பு கண்டி பிரதான வீதியில் வரக்காபொலயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான வாகன போக்குவரத்து இன்று (24) முதல் ஒரு நிரலுக்கு (ஒரு வழி போக்குவரத்து)வரையறுக்கப்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த பிரிவு வீதி காபட் இடப்பட்டு சீர்செய்யப்படவுள்ளதால் இன்று (24) தொடக்கம் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி வரையில் வாகன போக்குவரத்தை ஒரு நிரலுக்கு வரையறுக்கப்பட்டிருப்பதாக அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதினால் வரக்காபொலயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான பாதை ஊடாக பயணிப்பதற்கு எதிர்பார்க்கும் வாகன சாரதிகள் மற்றும் பொது மக்கள் முடிந்த வரையில் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிசார் அறிவித்துள்ளனர். இதேபோன்று கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி வரும் வாகனங்கள் ,மாவனல்லை ரம்புக்கணை வீதியின் ஊடாக குருநாகல் வரையில் பயணித்து அதிவேக நெடுஞ்சாலை அல்லது பொதுவான வீதியூடாக மீரிகம ஊடாக பஸ்யால சந்தியில் பிரவேசித்து அல்லது கேகாலைக்கு…
கோழி,முட்டை உற்பத்திக் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரும் கூட்டு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது
கோழி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரும் கூட்டு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்,நேற்று (23) முற்பகல் உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொடவின் தலைமையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்றது.இதன் போது இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில் கோழிப்பண்ணை மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில் கால்நடை தீவனத் தட்டுப்பாடு, மூலப்பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்துப் பிரச்சினைகள், இறக்குமதி செய்யப்படும் கால்நடைத் தீவனங்களுக்கான அந்நியச் செலாவணி பிரச்சினைகள், முதலியன மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. இக்கைத்தொழிலிலுடன் தொடர்புள்ள சகல தரப்பினரும் கூட்டு இணக்கப்பாட்டுக்கு வருவதன் மூலம் தொழில்துறையில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என சுட்டிக்காட்டிய…
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் , திறைசேரிக்கு 03 பில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை அன்பளிப்புச்செய்துள்ளது. இதற்கான காசோலையை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, மருந்து கொள்வனவு, அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல், நெல் கொள்வனவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கடந்த வருடம் ஈட்டிய செயற்பாட்டு வருமானத்தில் இருந்து மேலதிக தொகை இவ்வாறு வழங்கப்பட்டது. இவ்வாறு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் திறைசேரிக்கு வழங்கிய மொத்தத் தொகை 3382 மில்லியன் ரூபாவாகும். மூன்று பில்லியன் ரூபா ஒரேயடியாக வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் திறைசேரிக்கு இதுவரை வழங்கிய மொத்தத் தொகை 3382 மில்லியன் ரூபாவாகும். மூன்று பில்லியன் ரூபா ஒரேயடியாக வழங்கப்படுவது…
கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தனது தந்தையுடன் சென்ற மாணவி மீது அசிட் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவி பயணித்த முச்சக்கர வண்டியை வழிமறித்த இளைஞன் ஒருவரால் அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் அந்த மாணவியின் காதலன் என பொலிசார் தெரிவிக்கின்றனர். அசிட் வீசிய போது ஏற்பட்ட குழப்ப நிலையால், மாணவியின் தந்தை, மாணவி மற்றும் குறித்த இளைஞனும் காயமுற்று தற்போது கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொகமட் அலி
நானுஓயா நிருபர் (நுவரெலியா மாநகரசபை அசமந்தம்) நுவரெலியா பதுளை பிரதான வீதியில் இன்று காலைநடந்த மோட்டார்சைக்கிள் விபத்தில் இரு இளைஞர் படுகாயமடைந்துள்ளனர். இரு இளைஞர்களும் ஒரு மோட்டார் சைக்கிளில் மார்காஸ்தோட்ட பகுதியில் இருந்து நுவரெலியா பிரதான நகரை நோக்கி பயணிக்கும் போது மட்டக்குதிரை ஒன்று மோட்டார்சைக்கிளில் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறிப்பாக நுவரெலியா-கண்டி , நுவரெலியா – உடப்புசல்லாவ,நுவரெலியா – பதுளை போன்ற வீதிகள் பிரதான போக்குவரத்து வீதியாக இருந்து வருகிறது. குறித்த வீதிகளில் பகல் நேரம் மட்டுமன்றி, இரவு நேரங்களிலும் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அரசு மற்றும் தனியார் பேருந்துக்கள், பாடசாலை வாகனங்கள், அரசுத்துறை சார்ந்த வாகனங்கள், கனரக வாகனங்கள் முதல் சிறிய ரக வாகனங்கள் வரை இந்த சாலையில் செல்கின்றன போக்குவரத்து மிகுந்த இந்த வீதியில் 30-க்கும் மேற்பட்ட மட்டக்குதிரைகள் தினமும் சுற்றித்திரிகின்றன இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக வீதியில் ஆங்காங்கே படுத்து ஓய்வெடுக்கின்றன இதனால்…
இந்திய வம்சாவழி மக்கள் தொழிலாளர்களாக ஆங்கிலேயரால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு இவ்வருடத்துடன் 200 வருடங்கள் பூர்த்தியாகின்றன. மலையகத்தில் இம்மக்களில் பெரும்பாலானோர் குடியமர்த்தப்பட்டதுடன் கணிசமானோர் மலையகத்திற்கு வெளியிலும் குடியமர்த்தப்பட்டார்கள். அந்த வகையில் களுத்துறை மாவட்டத்தில் வாழும் இந்திய வம்சாவழி மக்களின் அரசியல் பிரவேசித்திற்கு வித்திட்ட களுத்துறை தமிழர் அரசியலின் தந்தையான அமரர் தங்கவேலு நடசேன் அவர்களின் 100ஆவது பிறந்த தினம் 26.01.2023 திகதி வியாழக்கிழமை அவர் வசித்த புலத்சிங்கள, கிறிஸ்தொம்பு பாம் தோட்டத்தில் கொண்டாடப்படவுள்ளது. காலஞ் சென்ற நடேசன் ஐயா ஐம்பது வருடங்களுக்கும் அதிகமாக தொழிற் சங்கப் பணிகளில் ஈடுபட்டு தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னின்று செயற்பட்டதுடன் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசியல் அநாதைகளாக இருந்த மக்களின் வழிகாட்டியாகவும் விளங்கினார். பொது வெளியில் அதிகம் பேசப்படாத களுத்துறை தமிழர்களின் அரசியலை நாடறியச் செய்யும் வகையில் தன்னால் இயலுமான வரை இறுதி வரையிலும் போராடினார். அதற்குரிய மக்கள் அங்கீகாரமாக புலத்சிங்கள பிரதேச சபையின் உப…