Author: Thana

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் – 19 வைரஸ் தொற்றாளர்களாக 11 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

இலங்கையில் விவசாயிகள் பெற்ற சிறு, சிறு விவசாயக் கடன்கள் நூறு வீதம் தள்ளுபடி செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “சிறிய நிலங்களில் நெல் பயிரிடும் விவசாயக் குடும்பங்கள் மிகவும் நிலையில் இருப்பதை நாம் அறிவோம். இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகள் பெற்ற விவசாய கடன்கள் 100 வீதம் தள்ளுபடி செய்யப்படும் என” பிரதமர் கூறினார்.

Read More

இன்று (06) முதல் 12 ஆம் திகதி வரை மின்துண்டிப்பு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. நாட்டை 21 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இந்த மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்துண்டிப்புக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலதிக விவரங்களுக்கு https://www.scribd.com/document/577003700/Demand-Managmet-Schedule-06th-to-11th-June-2022#from_embed

Read More

எரிவாயு விலை மறுசீரமைப்பு தொடர்பான சமூக ஊடக செய்திகள் பொய்யானவை என LITRO Gas Lanka Limited தெரிவித்துள்ளது. மேலும் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இன்னும் தீர்மானிக்கவில்லை என நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் புதன்கிழமை (8) வரை விநியோகிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டார். போதிய கையிருப்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், எரிவாயு கொண்டு வரும் சரக்குக் கப்பல் விரைவில் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read More

அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றதனால் முதலாம் தவணையின் முதற்கட்டம் கடந்த மாதம் 19ஆம் திகதி நிறைவடைந்தது. இன்று ஆரம்பமாகும் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 8ஆம் திகதி நிறைவடையும். இரண்டாம் தவணை அடுத்த மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகும். கடந்த காலங்களில் குறைந்த எண்ணிக்கையிலான நாட்களே பாடசாலை நடைபெற்றது. இதனால் இந்த வருடம் டிசெம்பர் மாத நடுப்பகுதி வரை பாடசாலைகளை நடத்துவதற்கும் கல்வியமைச்சு எதிர்பார்த்துள்ளது.

Read More

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உணவுப் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில், அதிகளவான விலங்குகளை கொடூரமான விலங்குகள் நடமாடாத சரணாலயங்களில் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலக் பிரேமகாந்த அறிவித்துள்ளார். மிருகக்காட்சிசாலையில் ஒரு இனத்தைச் சேர்ந்த நான்கு விலங்குகளை மாத்திரம் மக்கள் பார்வைக்கு வைத்தல் போதுமானது. வனவிலங்கு திணைக்களத்தின் அனுமதியுடன் அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு மான் போன்ற விலங்குகள் விடுவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியால் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். டெண்டர் மூலம் விலங்குணவு வழங்கியவர்களுக்கு பணம் கொடுக்க மிருகக்காட்சிசாலையில் பணம் இல்லை. எனவே உணவு வழங்குபவர்கள் பணம் செலுத்தும் வரை உணவு வழங்குவதை தாமதப்படுத்துகின்றார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், உணவுப் பிரச்சினைக்குத் தீர்வாகவும், பணத்தை மிச்சப்படுத்தவும் நீண்ட காலமாக மிருகக்காட்சிசாலை மிருகங்களுக்கு வழங்கி வந்த விலையுயர்ந்த உணவு வகைகளுக்கு பதிலாக…

Read More

இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை ,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தியுள்ளது. இதற்கமைய, தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்ஜிஜன் கலங்கள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை தயார் நிலையில் இருக்கிறதா என மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணர் தற்போது புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அறிவிக்கையில், இந்தியாவில் கடந்த மே 27 ஆம் திகதியில் இருந்து ஒரு வாரத்திற்கு 15 ஆயிரத்து 708 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஜூன் 4 ஆம் திகதி 21 ஆயிரத்தித்து 55 பேருக்கு தொற்று அதிகரித்துள்ளதாகவும், அதே போல் தொற்று உறுதியாகும் வீதம் 0.52 ல் இருந்து 0.73 ஆகவும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மீண்டும் ஒரு கொரோனா பெருந்தொற்று ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…

Read More

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, இன்றிரவு 10 மணி முதல் நாளை காலை 5 மணிவரையான ஏழு மணித்தியால நீர் விநியோகத்தடை இடம்பெறவுள்ளது. எதுல்கோட்டே, பிட்டகோட்டே, பெத்தகான, மிரிஹான, மாதிவெல, தலப்பத்பிட்டிய, உடாஹமுல்ல, எம்புல்தெனிய மற்றும் நுகேகொடை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளது. இதேவேளை, கொழும்பு ஒன்று தொடக்கம் கொழும்பு 04 வரையும், கொழும்பு 07 தொடக்கம் கொழும்பு 11 வரையும், கடுவலை பகுதியிலும் இன்றிரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணிவரையான ஒன்பது மணித்தியாலத்திற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

19 வயதுக்குட்பட்ட வீரர்களை இலக்காகக் கொண்ட இளையோர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்றை ஏற்பாடு செய்ய இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி இன் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண போட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணியைத் தயார்படுத்தும் நோக்கில் இந்தப் போட்டித் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது. இப்போட்டித் தொடருக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை கிரிக்கெட் சபையினால் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளையோர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் அஸ்கிரிய கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடரில் கொழும்பு தெற்கு, கொழும்பு வடக்கு, காலி,…

Read More

2022 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில், 288,645 கடவுச்சீட்டுகளை விநியோகித்துள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு பிரதி கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள திணைக்கள அலுவலகத்துக்கு கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தினால், நாளாந்தம், ஒரு நாள் சேவையின் கீழ், வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Read More