Author: Thana
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதிகள் இன்று (24) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்புக்கு பிறகு அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணைக்குழு சந்திப்பது இதுவே முதல் முறையாகும். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எவ்வாறு நடத்தப்படும் என்பது குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு விரிவாக அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கையும் நேற்று (23) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி இந்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
துபாயில் தலைமறைவாகி போதைப்பொருள் வலைப்பின்னலை முன்னெடுக்கும் கொலன்னாவையை சேர்ந்த தனுஷ்க என்பவரின் இந்நாட்டின் போதை பொருள் வலையமைப்பை செயல்படுத்தும் தெசான் தரேந்தர அல்லது யக்கட தரிந்து என்பவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படை ,கொத்தட்டுவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் (22) மேற்கொண்டு நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது இவரிடமிருந்து 11 கிராமுக்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட 5 இலட்சத்துக்கு 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரூபாவும் கைப்பற்றப்பட்டது. மேலதிக விசாரணைக்காக இவர் கொத்தட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதேவேளை ஹொரண விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைவாக இங்கிரிய குறுன மடக்கட என்ற காட்டு பகுதியில் முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 157 லீட்டர் போதைப்பொருள் மற்றும் அவற்றை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், அராலி, செட்டியார்மடம் மண்டையன்திடல் அருள்மிகு வீரகத்தி விநாயகர் திருக்கோயில் வேதனைகள் களைந்து, உடல் நலமும், உளநலமும் காத்தருளும் விநாயகரே உற்றதுணை நீயிருந்து எமைக்காக்க வேண்டுமப்பா நம்பித் தொழும் எங்களுக்கு நலமளிக்க வந்திடுவாய் செட்டியார்மடம் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே நம்பிக்கை தந்தருளும் தும்பிக்கை உடன் கொண்டு காத்தருளும் விநாயகரே என்றும் உடன் நீயிருந்து எமைக்காக்க வேண்டுமப்பா நம்பித் தொழும் எங்களுக்கு நலமளிக்க வந்திடுவாய் செட்டியார்மடம் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே வழித்துணையாய் இருந்தெமக்கு வழிகாட்டிக் காத்தருளும் விநாயகரே வளங்கள் தந்து அருகிருந்து எமைக்காக்க வேண்டுமப்பா நம்பித் தொழும் எங்களுக்கு நலமளிக்க வந்திடுவாய் செட்டியார்மடம் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே நிம்மதியைத் தந்தெமக்கு ஆறுதலைத் தந்தருளும் விநாயகரே துணையாக அருகிருந்து எமைக்காக்க வேண்டுமப்பா நம்பித் தொழும் எங்களுக்கு நலமளிக்க வந்திடுவாய் செட்டியார்மடம் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே கேட்ட வரம் தந்தெமக்கு நலன் வழங்கும் விநாயகரே தொல்லையில்லா வாழ்வு…
நானுஓயா நிருபர் இன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தலைமையில்நுவரெலியா மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டமொன்று நடத்தப்பட்டது. இக்கூட்டமானது ரதெல்ல குறுக்கு வீதியை கனரக வாகனங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நிலைமைத் தொடர்பில் ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் தீர்மானங்களை எட்டுவதற்காக இந்த கூட்டம் இடம்பெற்றது. இதன் போது விபத்து இடம்பெற்ற நானுஓயா ரதல்ல வீதியை மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே ஞாயிற்றுக்கிழமை (22) அவதானித்ததாக குறிப்பிட்ட நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தற்போது நடைமுறையில் இருக்கும் நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும், குறித்த வீதி மிகவும் செங்குத்தாக இருப்பதால் அதிக விபத்துக்கள் இடம்பெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , இதேவேளை கடந்த (வெள்ளிக்கிழமை) குறித்த வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 சிறுவர்கள்…
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான நியமனத்தை (21.01.2023) நுவரெலியா மாவட்ட ஆசன அமைப்பாளர் சதானந்தன் திருமுருகன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்தவர்கள் உள்ளடங்கிய குழு பதிவு செய்தது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நுவரெலியா மாநகர சபை மற்றும் நுவரெலியா பிரதேச சபை உள்ளிட்ட 11 சபைகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தில் போட்டியிடவுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட ஆசன அமைப்பாளர் சதானந்தன் திருமுருகன் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைவாக இந்தத் தர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பிக்க முடியும். 29 மாநகர சபைகள், 36 நகர சபைகள் உட்பட 275 பிரதேச சபைகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமுனுக்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை கடந்த 21 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது..
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான முறைப்பாடுகளை தொலைபேசி/ தொலைநகல்/ வைபர் மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும், மின்னஞ்சல் மற்றும் முகநூல் மூலமாகவும் தெரிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இராஜகிரிய தேர்தல் செயலகத்தின் இரண்டாவது மாடியில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்துடன் தொடர்புகொள்ள 011 2860056, 011 2860059, 011 2860069 தொலைபேசி இலக்கங்கள் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்த முடியும். அல்லது, பெக்ஸ் இலக்கங்கள் – 011 2860057, 011 2860062, வைபர்/ வாட்ஸ்அப் – 0719160000,இமெயில்– electionedr@gmail.com மற்றும் பேஸ்புக் – Election Commission of Sri Lanka, Tell Commission – Election Commission of Sri Lanka முதலானவற்றையும் பயன்படுத்த முடியும்.
2022 – 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (23) முதல் 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற உள்ளது. இவ்வருடம் 331,709 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு, பெப்ரவரி 17ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது. அத்துடன், பரீட்சை நிலையங்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
(க.கிஷாந்தன்) உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 சபைகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட 108 வேட்பு மனுக்களில் 17 நிராகரிக்கப்பட்டுள்ளன என்று நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான நந்தன கலபட தெரிவித்தார். இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் 85 வேட்புமனுக்கள், சுயேட்சைக்குழுக்களின் 6 வேட்பு மனுக்கள் உள்ளடங்கலாக 91 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார். நுவரெலியா மாநகர சபைக்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 10 வேட்பு மனுக்களில் சுயேட்சைக்குழுவொன்றின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொட்டகலை பிரதேச சபைக்காக முன்வைக்கப்பட்ட 11 வேட்பு மனுக்களில் சுயாதீன அணியொன்றினதும் (செந்தூரன்), அபிநவ நிதாஸ் பெரமுனவினதும், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, சுதந்திர மக்கள் கூட்டணி, தேசிய ஜனநாயக முன்னணி உள்ளடங்களாக 5 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நோர்வூட் பிரதேச சபைக்காக தாக்கல் செய்யப்பட்ட 10 வேட்பு மனுக்களில் மூன்றும், நுவரெலியா பிரதேச சபைக்கு முன்வைக்கப்பட்ட 10 வேட்பு மனுக்களில்…
மேல் மாகாணம்- கொழும்பு மாவட்டம், அவிசாவளை புலக்பிட்டிய- அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் திருக்கோயில் மேற்கிலங்கை எழுந்தருளி அருள் பொழியும் திருத்தாயே மேன்மைமிகு வளவாழ்வை அளித்திடவே வரவேண்டும், அருள்தர வேண்டும் புலக்பிட்டியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா அவிசாவளை பெருநிலத்தில் அமர்ந்தருளும் திருத்தாயே அச்சமில்லா பெருவாழ்வை அளித்திடவே வரவேண்டும், அருள்தர வேண்டும் புலக்பிட்டியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா காவல் தெய்வம் சூழ அமர்ந்தருளும் திருத்தாயே கவலையண்டா வளவாழ்வை அளித்திடவே வரவேண்டும், அருள்தர வேண்டும் புலக்பிட்டியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா சூலத்தைக் கையிலேந்தி அறம் பேணும் திருத்தாயே சூழ்நிலையை நலமாக்கி வளவாழ்வை அளித்திடவே வரவேண்டும், அருள்தர வேண்டும் புலக்பிட்டியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா தாயாக இருந்துலகைக் காக்கின்ற திருத்தாயே தவறில்லா வளவாழ்வை அளித்திடவே வரவேண்டும், அருள்தர வேண்டும் புலக்பிட்டியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா அருள் தந்து ஆற்றல் தந்து ஆதரிக்கும் திருத்தாயே அரவணைப்பைத் தந்து எமக்கு வளவாழ்வை அளித்திடவே…