Author: Thana
டிபர் ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளகியுள்ளது. பதுளை மஹியங்கனை வீதியில் புஸ்ஸல்லாவ பகுதியில் ஆறாவது மைல் கல்லுக்கு அருகே டொலமைட் ஏற்றி வந்த டிபர் ரக லொறி ஒன்று முன்னால் சென்ற வேன் ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட வேளை மின்கம்பத்தில் மோதுண்டு வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த லொறி கண்டி திகன பகுதியில் இருந்து டொலமைட் ஏற்றி கொண்டு பதுளை நோக்கி வந்த வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. தெல்தெனிய ரங்கல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய லொறியின் சாரதி பலத்த காயமடைந்து நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா
கண்டி மாவட்டம் மடவளை மதீனா தேசிய பாடசாலையின் பாடசாலை ஊடகப் பிரிவின் அங்குரார்பண நிகழ்வு நேற்று (19) நடைபெற்றது. கல்லூரி அதிபர் அ. ரஹீம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு இன்று நண்பகல் 12 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. ஊடகத்துறையில் சாதிக்க கூடிய மாணவர்களை உருவாக்கும் நோக்கில் மடவளை மதீனா தேசிய பாடசாலையானது ஊடகப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அஷ்ரஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் அமான் அஷ்ரப் மற்றும் ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் யு டிவியின் முன்னாள் பிரதி செய்தி முகாமையாளரும், ஊடகவியலாளருமான ராஷீட் மல்ஹர்டீன் ஆகியோர் இந்த நிகழ்வில் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் பாடசாலை செய்திகளை ஏந்திய சஞ்சிகையொன்று வெளியிடப்பட்டதுடன் பாடசாலையின் ஊடகப்பிரிவின் மாணவர்களால் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த நிகழ்ச்சிகள் அதிதிகளின் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்லாமல் கலந்துகொண்ட அதிதிகளால் அவர்கள் பாராட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை : ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும். திருகோணமலையில் இருந்து காங்கேசந்துறை, மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மட்டக்களப்பில் இருந்து பொத்துவில், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஊடாக காலி வரையான…
வடமேற்கு மாகாணம் – புத்தளம் மாவட்டம் – புத்தளம் பாலாவி அருள்மிகு ஆலடி ஸ்ரீ வரசக்தி விநாயகர் திருக்கோயில் பாலாவி நகரினிலே கோயில் கொண்ட விநாயகர் பாழ்படா நிலை தந்து காத்தருள உடனிருப்பார் பரிதவிக்கும் நிலையகற்றி என்றும் துணையிருப்பார் ஐயனின் அடியினையே பற்றிப் பிடித்திடுவோம் நம்பிக்கை உறுதி செய்து நலன் காக்கும் விநாயகர் நிம்மதியைத் தந்தெம்மைக் காத்தருள உடனிருப்பார் துன்ப நிலையகற்றி என்றும் துணையிருப்பார் ஐயனின் அடியினையே பற்றிப் பிடித்திடுவோம் ஆற்றல் தந்து ஆதரித்து அரவணைக்கும் விநாயகர் அச்சமில்லா வாழ்வு தந்து காத்தருள உடனிருப்பார் அஞ்சும் நிலையகற்றி என்றும் துணையிருப்பார் ஐயனின் அடியினையே பற்றிப் பிடித்திடுவோம் நெஞ்சில் நிறைந்துறைந்து நிலை காக்கும் விநாயகர் நல்ல வள வாழ்வு தந்து காத்தருள உடனிருப்பார் அவல நிலையகற்றி என்றும் துணையிருப்பார் ஐயனின் அடியினையே பற்றிப் பிடித்திடுவோம் நல்லவரம் தந்தெம்மை வழிநடத்தும் விநாயகர் இன்னலில்லா வாழ்வுதந்து காத்தருள உடனிருப்பார் தேக்க நிலையகற்றி என்றும் துணையிருப்பார் ஐயனின்…
மரண அறிவித்தல் அக்கரப்பத்தனை மன்றாசி தோட்டத்தை சேர்ந்த சிதம்பரம் நாகஸ்வரி 18.01.2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் செல்வராஜ் அவர்களின் மனைவியும், எஸ். சிவரட்ணராஜா, எஸ். சிவயோகராணி, எஸ்.சண்முகராஜா, எஸ். நித்தியானந்தன் ஆகியோரின் தாயாருமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 21.01.2023 சனிக்கிழமை அன்று மன்றாசி தோட்ட பொதுமயானத்தில் காலை 10 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றார்கள். இவ்வறித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என சகலரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். தகவல் – குடும்த்தினர்.
முதலுதவி பொருட்கள் கையளிப்பு அக்கரப்பத்தனை நு/ ஆட்லோ தமிழ் வித்தியாலயம், நு /கிளாஸ்கோ தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு செல்வி எம். பவித்ரா (தாதி) அவர்களினால் வைத்தியசாலைக்கு மிகத்தொலைவில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு மாணவர்கள் தீடீர் விபத்தின் போது ஏற்படும் காயங்களுக்கு மருந்து கட்டுவதற்கான மருத்துவ பொருட்களையும், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை முதலுதவி தொடர்பான விளக்கமளிக்கப்பட்டு இன்றைய தினம் (19/01/23 )இரு பாடசாலைகளின் அதிபர்களிடமும் கையளிக்கப்பட்டது. இதே வேளை இவ்வுதவி இவரது தனிப்பட்ட நிதி மூலமாக இப் பருந்தோட்ட பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சரத்
(க.கிஷாந்தன்) நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் திரு. ஆர்.சிவலிங்கம் தலைமையில் புதன்கிழமை 18 ம் திகதி கொட்டகலை வூட்டன் ஹில்ஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாக நுவரெலியா வலய கல்வி பணிப்பாளர் டீ.எம்.பி.லசந்த அபேரட்ண மற்றும் சிறப்பு அதிதிகளாக மேலதிக மற்றும் கோட்ட கல்வி பணிப்பாளர்கள், விசேட அதிதிகளாக கல்வியற் கல்லூரியின் பீடாதிபதிகள், பிரதேச பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவ சங்கம், பெற்றோர்கள் சங்கம், உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். இதன் போது மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கடந்த ஆண்டுகளில் தேசிய ரீதியில் நடைபெற்ற பரீட்சைகளில் அதிசிறந்த சித்திகளை பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கும் பதக்கங்களும், சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது பிரதம அதிதியாக கலந்துகொண்ட நுவரெலியா வலய கல்வி பணிப்பாளர்…
(க.கிஷாந்தன்) பல கோரிக்கைகளை முன்வைத்து, டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் கனிஷ்ட பணியாளர்கள் இன்று (19) மதிய உணவு நேரத்தில் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் கடுமையாக மருந்து தட்டுப்பாடு, மனித வள குறைவு, வரிச்சுமை அதிகரிப்பு போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் நிலவும் மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலையின் பல பிரிவுகள் மூடப்பட்டுள்ளதாகவும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை தனியார் மருந்தகங்களில் வாங்கி, மருந்து சீட்டு கொடுத்தாலும், நோயாளிகள் அதிக பணம் செலவழித்து அந்த மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட வைத்தியர்கள் தெரிவித்தனர். வைத்தியர்கள், செவிலியர்களின் சம்பளத்தில் வரிப்பணம் வசூலிக்கப்படுவதால் இவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையால் வைத்தியர்கள், செவிலியர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வதால் வைத்தியசாலைகளை எதிர்காலத்தில் மூட வேண்டிய நிலை ஏற்படும். நாட்டை ஆளும் அரசியல்வாதிகளுக்கு வயது வரம்பு விதிக்கப்படாமையால் நாடு…
கலேவெல பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவி மற்றும் இளைஞன் ஒருவனின் சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். 14 வயதுடைய பாடசாலை மாணவி மற்றும் 17 வயதான இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவி கலேவெல அம்பன்பொல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததாகவும், இதற்கு முன் வீட்டை விட்டு ஓடி வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணையின் போது இருவரும் கண்டுபிடிக்கப்பட்டதுடன், குறித்த பாடசாலை மாணவியை அவரது தாயாரின் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர் அண்மையில் மீண்டும் இருவரும் வீட்டை விட்டு ஓடி, அந்த இளைஞனின் கிராமப் பகுதியான ஆண்தாவளயில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டில் தங்கியுள்ளனர். இதனை அறிந்த வீட்டார் அவர்களை தேடிச் சென்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை…
2022 ஆம் ஆண்டு பாடசாலை வருடத்தின் 3 ஆவது தவணையின் இரண்டாவது கட்டம் நாளையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சை நாளை ஆரம்மாகவுள்ளதால் , நாளை (20) முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது. 2022 ஆண்டில் 3 தவணையின் இரண்டாவது கட்ட கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.