Author: Thana

பாதுகாப்புப் பெட்டகத்தின் இரகசியக் குறியீட்டை தவறாகப் பயன்படுத்தி வெளிநாட்டவர் ஒருவரின் 06 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தொகை களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் திருட்டு இடம்பெற்ற ஹோட்டலின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் கணக்காளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று (18) ஆரம்பமாகின்றது. வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணி எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

Read More

மஹதோவ லோவர் டிவிசன் தோட்டத்திற்கு செல்லுகின்ற பாதையைப் புனரமைத்து தருமாறு குறித்த பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மடுல்சீமை – பிட்டமாறுவ வீதியில் மஹதோவ பகுதியில் தோட்ட பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் வீதியை மறித்து தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக குறித்த வீதியில் வாகன போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தது. . நடராஜா மலர்வேந்தன்

Read More

கொழும்பு குதிரை பந்தய திடலில் இளம் பெண்ணை கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் யுவதியின் காதலனை பொலிஸார் நேற்று (17) பிற்பகல் கைது செய்துள்ளனர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் ஹோமாகம, கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சதுரி ஹன்சிகா மல்லிகாராச்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் சடலம் கொழும்பு குதிரை பந்தய திடலின் படிக்கட்டில் இன்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கூரிய ஆயுதத்தால் வெட்டி இளம் பெண் கொல்லப்பட்டுள்ளதாகவும், கழுத்தின் இருபுறங்களிலும் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பல்கலைக்கழகத்தில் விரிவுரைகளை முடித்துக் கொண்டு இன்று காலை 11 மணியளவில் தனது காதலனுடன் பேசுவதற்காக குதிரை பந்தய திடல் நோக்கி வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவரது காதலனும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது குறித்த…

Read More

கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு பிள்ளையாரடி அருள்மிகு விநாயகர் திருக்கோயில் வழித்துணையாயிருந் தெமக்கு வழிகாட்டும் உமையம்மை திருமகனே வரும் பகைமை, கொடுமைகளைத் தடுத்தருள வந்திடைய்யா நம்பியுந்தன் தாள் பணியும் எங்களுக்கு நலம் தந்து ஆதரிப்பாய் பிள்ளையாரடி உறையும் விநாயகப் பெருமானே பெருவீதி மருங்கினிலே கோயில் கொண்ட உமையம்மை திருமகனே பெருநன்மை வளங்கள் தந்தருள வந்திடைய்யா நம்பியுந்தன் தாள் பணியும் எங்களுக்கு நலம் தந்து ஆதரிப்பாய் பிள்ளையாரடி உறையும் விநாயகப் பெருமானே பயணங்களில் உடனிருந்து காப்பளிக்கும் உமையம்மை திருமகனே பங்கமில்லா நற்பயணம் தொடர வழி தந்திடவே வந்திடைய்யா நம்பியுந்தன் தாள் பணியும் எங்களுக்கு நலம் தந்து ஆதரிப்பாய் பிள்ளையாரடி உறையும் விநாயகப் பெருமானே நிம்மதியை தந்து காப்பளிக்கும் உமையம்மை திருமகனே நிதானமாய் நம்பயணம் தொடர வழி தந்திடவே வந்திடைய்யா நம்பியுந்தன் தாள் பணியும் எங்களுக்கு நலம் தந்து ஆதரிப்பாய் பிள்ளையாரடி உறையும் விநாயகப் பெருமானே துணையிருந்து வழிநடத்தும் உமையம்மை திருமகனே துன்பமின்றி…

Read More

பசறையில் இருந்து மடுல்சீமை செல்லும் பிரதான வீதியில் மூன்றாவது மைல் கல்லுக்கு அருகே வீதியின் நடுவில் பாரிய குழி ஒன்று ஏற்பட்டுள்ளமையினால் அவ்விடத்தில் வாகன போக்குவரத்து ஒற்றை வழியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பாரிய விபத்துகளை தடுக்கும் முகமாக அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகள் அவ்விடத்தில் மிகவும் அவதானமாக செல்லுமாறு  வாகன சாரதிகளுக்குபசறை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்‌. ராமு தனராஜா

Read More

கொழும்பு – குதிரை பந்தயத் திடலில் யுவதியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் வெல்லம்பிட்ய பகுதியில் வைத்தே இவ்வாறு கைதுசெய்யப்ட்டுள்ளதாக போலீசார் தெ விக்கின்றனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் பல்கலைக்கழக மாணவர் என்று பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Read More

இம்மாதம் ஆரம்பமாக உள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி ,பரீட்சை நடைபெறும் 14 நாட்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி நாடு பூராகவும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவத்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக் குறிப்பட்டார். மேலும், பரீட்சை எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நாளொன்றிற்கு 357 மில்லியன் ரூபா வீதம் தொடர்ச்சியாக 14 நாட்கள் மின்சாரம் வழங்குவதற்கு 5 பில்லியன் ரூபா செலவாகும் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

Read More

கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மாணவி ஒருவரின் சடலம்  கொழும்பு 7  குதிரை பந்தைய  திடலில் இன்று (ஜன 17)  கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில்  மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர் 23 வயதுடையவர் எனவும் அவர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட விஞ்ஞானபீட மாணவியான இவரின்  கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும்  பொலிஸார் கூறுகின்றனர்.

Read More

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், கடந்த 2022 ஆம் ஆண்டு பெறப்பட்ட தண்டப்பணம் ஊடாக 70 இலட்சம் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது என்று கமத்தொழில், வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பல்வேறு நபர்களால் வனங்களுக்கு மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படுத்திய சேதங்களுக்கு வழக்குத் தொடர்ந்து அதன் ஊடாக பெறப்பட்ட அபராதத் தொகைகளின் மூலம் இந்த வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மொத்தமாக 1,421 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளது. இவற்றில் அதிக வருமானம் அனுமதிப்பத்திர கட்டணங்களின் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது. இதேவேளை, இந்த வருடத்திற்குள், யால தேசிய சரணாலயம், வில்பத்து மற்றும் வஸ்கமுவ தேசிய தேசிய சரணாலயங்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பஙயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய அதிகாரகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்று கமத்தொழில், பாதுவனவிலங்கு காப்புத் மற்றும் வனப் பாதுகாப்பு…

Read More