Author: Thana

வடமத்திய மாகாணம் – அனுராதபுர மாவட்டம், அனுராதபுரம் புனித நகரம், பசவக்குளம் அருள்மிகு சிவன் திருக்கோயில் உயிரினுள் உயிராக உறைகின்ற சிவனே உலகிற்கு கருணையொளி பரப்பிடவே வருவாய் உன்னருளால் உயிரினங்கள் உய்ய வேண்டும் ஐயா ஆதரிப்பாய், அரவணைப்பாய் அனுராதபுரம் உறையும் சிவனே பசவக்குளம் அருகினிலே கோயில் கொண்ட சிவனே பாவங்கள் போக்கி அருள் வழங்கிடவே வருவாய் உன்னருளால் நிம்மதியெங்கும் நிறைய வேண்டும் ஐயா ஆதரிப்பாய், அரவணைப்பாய் அனுராதபுரம் உறையும் சிவனே காளியம்மன் திருக்கோயில் அருகுறையும் சிவனே காலமெல்லாம் உடனிருந்து காத்திடவே வருவாய் உன்னருளால் தொல்லைகள் எல்லாம் விலக வேண்டும் ஐயா ஆதரிப்பாய், அரவணைப்பாய் அனுராதபுரம் உறையும் சிவனே தமிழரசர் ஆட்சியிலே சிறப்படைந்த சிவனே திட்டமிட்டு எம்முரிமை அழிப்போரை அழித்திடவே வருவாய் உன்னருளால் செந்தமிழர் வாழ்வு எழுச்சிகாண வேண்டும் ஐயா ஆதரிப்பாய், அரவணைப்பாய் அனுராதபுரம் உறையும் சிவனே தக்கனின் கொட்டமதை அடக்கி அருளியவனே சிவனே சிதைந்தவுன் திருக்கோயில் எழுப்பிடவே வருவாய் உன்னருளால் எம்…

Read More

2022 க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின்படி கே/தெஹி/தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலய மாணவி ஜெயசீலன் உபெக்ஸா அபிலாஷினி 9A சித்தி பெற்று சாதனைப்படைத்துள்ளார். பாடசாலையின் வரலாற்றில் 9A சித்தி கிடைக்கப்பெற்ற இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். சாதனைப்படைத்த மாணவி கேகாலை மாவட்ட தேவாலகந்த தோட்டம் தெஹியோவிற்றயை சேர்ந்த ஜெயசீலன் – ரஞ்சனி தம்பதிகளின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது. இவரை பாடசாலை சமூகம் வாழ்த்துகின்றது.

Read More

கண்டி ,வத்தேகம பன்வில கல்வி கோட்டத்தில் எட்டமுடியாதிருந்த இலக்கை எட்டிப்பிடித்திருக்கிறது பரமேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி ஆ.மேனுஜாவும் 9A சித்திகளுடன் ,ஞா.பவிகரன் 8A , B சித்தியையும் பெற்றிருப்பதோடு அசத்தலான சாதனையில் 6A 2B S 6A B C S 5A 4C 4A 3B 2C 4A 3B C S என்ற ஒழுங்கிலும் மிக சிறந்த பெறுபேறுகளை பன்வில கோட்டத்தில் குறித்த பாடசாலை பெற்றுள்ளது.

Read More

லிந்துலை மெராயா தேசிய பாடசாலையில் 2022ம் ஆண்டு சாதரண தர பரீட்சைக்கு தோற்றியுள்ள தொண்ணூற்றி ஒரு மாணவர்களில் எழுபத்தொரு மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கான தகுதிகளைப் பெற்றுள்ளார்கள். இவர்களில் நான்கு மாணவர்கள் 09 A சித்தியினையும் ஒரு மாணவன் 08A 1 C சித்தியினையும் பெற்றுள்ளதுடன் ஏனையோர் தரமான பெறுபேறுகளையும் பெற்றுள்ளனர். முதன்மை மாணவர்கள் 01. பழனியாண்டி ரொஷான் 09A 02. பாலகிருஸ்ணன் அபிஷான் 09A 03. பத்மநாதன் தர்ஷன் 09A 04. முரளீதரன் டிலக்ஷனா 09A 05. புpரபாகரன் டில்ஷான் 08A, 01C தொடர்ச்சியாக 2017 ஆம் வருடம் முதல் ஐந்தாவது வருடமாகவும் 09A சித்திகளை தக்கவைத்துக்கொண்டு ஹோல்புறூக் கோட்டத்தில் முதன்மை பாடசாலையாக எமது கல்யியகம் பெருமை பெறுகிறது என்று பாடசாலையின் அதிபர் நல்லதம்பி முத்துக்குமார் தெரிவித்ததோடு வெற்றிகளுக்காக உழைத்திருக்கின்ற ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களுக்கும் தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அதேவேளை பாடசாலைக்கு பக்கபலமாக இருந்துள்ள வலய மற்றும் , கோட்டக்…

Read More

தெரணியகலை ஸ்ரீ கதிரேசன் தேசிய பாடசாலையின் மாணவி செ.மதிஷாலனி பாடசாலை வரலாற்றில் முதன் முதலாக 09 A சித்திகளைப் பெற்று சாதனைப்படைத்துள்ளார். இவர் தெரணியகலை மியனவிட தோட்டம் 90 ஏக்கர் பிரிவை சேர்ந்த செந்தில்குமார், சாந்தி ஆகியோரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த மாணவி உட்பட பாடசாலைக்கு நல்ல பெறுபேறுகளை பெற்ற அத்தனை மாணவர்களையும் ,அவர்களின் கற்றலுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் உட்பட அதிபருக்கு எமது வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் .

Read More

13 வயது சிறுமியை கடத்தி தப்பிச் செல்லும் நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரி பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சிறுமியின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் படி இங்கினியாகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிண்ணியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவலஹிந்த, அம்பாறை பிரதேசத்தில் வசிக்கும் தனது மகளின் சட்டத்திற்கு முரணாக அழைத்துச் சென்றுள்ளதாக சிறுமியின் தாயார் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதுடன், சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் இலக்கங்களுக்குத் தொடர்புகொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். சந்தேக நபரின் இரண்டு புகைப்படங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபரின் விபரம் வருமாறு…. பெயர் – சுமித் குணவர்தன வயது – 47 வயது அடையாள அட்டை – 752496657V விலாசம் – தம்பகல்ல இங்கினியாகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 0718 59 11 50 கிண்ணியாகலை பொலிஸ்…

Read More

அருட்பணி. ச. யேசுதாசன் J.P ( அகில இலங்கை) கடந்த 25/11/2022 அன்று மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில்  நீதிபதி ஏ.எஸ். ஹிபதுல்லா முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். மன்னார், வஞ்சியன்குளம் என்னும் இடத்தை சேர்ந்த இவர் ஓர் கிளரேசியன் சபை துறவி ஆவார். இவர் தெனியாய, என்சல்வத்த, மருத மடு அன்னை ஆலயத்தில் உதவிப் பங்குத் தந்தையாகவும், தெ.மா/மாறை/என்சல்வத்த தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளாராகவும் பணி புரிகிறார்.

Read More

கொட்டகலை தமிழ் மகாவித்தியாலயத்தில் இம்முறை பத்து மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் மிகச் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். மேலும் பல சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்காக வழிகாட்டிய நுவரெலியா வலயக் கல்வி பணிமணையின் கல்வி பணிப்பாளர், மேலதிக வலயக் கல்வி பணிப்பாளர், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், உதவி கல்வி பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் பல்வேறு வழிகளில் உதவிய பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது. மேலும் மாணவர்களின் கற்றலுக்கு தேவையான உதவிகளை வழங்கிய பெற்றோர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவிப்பதாகவும் பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read More

வெளிவந்த சாதாரண தர பெறுபேறுகளின் படி அக்கரபத்தனை டொரின்டன் தமிழ் வித்தியாலய மாணவர்கள் 100சதவீத பெறுபேறுகளைப் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளனர். முதல் தடவையாக சாதாரண தரம் வரை உயர்த்தப்பட்ட பாடசாலையில் முதல் தடவையில் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதப்பாடத்தில் 100 வீதமும் ,தமிழ் பாடத்தில் 100 வீதமும் ஆங்கில பாடத்தில் 96 வீதமும் ஏனைய பாடங்களிழும் 90க்கும் மேற்பட்ட வீதங்களையும் பெற்று மாணவர்கள் சாதனைப்படைத்துள்ளனர. குறித்த மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் ,கற்பித்த ஆசிரியர்களான  ஜோன்கென்னடி ,செல்வகுமார் ,நிரன்ஜன் மற்றும் ஏனைய ஆசிரியர்களையும், அதிபரையும் பழையமாணவர்கள் உட்பட அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவிதுவருகின்றனர் .மலையகம் .lk குழுமமும் வாழ்த்துக்களை பதிவுசெய்கிறது.

Read More

வெளிவந்த சாதாரண தர பெறுபேறுகளின் படி நு /ஹோல் புரூக் தேசிய பாடசாலை மாணவி சச்சினாதன் தினுஷியா 9A சித்திகளையும்,தயாபரன் நிதோர்சன் 8A,B சித்திகளையும் ,ஸ்ரீராம் வீனஸ் பிரவினன் 8A ,B சித்திகளையும் ,ஜெகநாதன் தாட்சாயணி 7A,B ,C பெறுபேறுகளையும் பெற்றுள்ளனர்.இது தவிர அதிகமான இம்முறை உயர்தரத்துக்கு தேர்வாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More