Author: Thana

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – மானிப்பாய் – தாவடி அருள்மிகு அம்பலவாணப் பிள்ளையார் திருக்கோயில் அம்பலத்தில் ஆடுகின்ற சிவனாரின் திருமகனே அல்லல் களைந்துலகைக் காத்தருள வேண்டுமைய்யா ஆதரித்து அரவணைத்துக் காத்திடவே வாருமைய்யா தாவடியில் கோயில் கொண்ட அம்பலவாணப் பிள்ளையாரே சரணமைய்யா உயிரினுள் உயிராக உள்ளுறையும் சிவனாரின் திருமகனே பஞ்சம் அகற்றியுலகைக் காத்தருள வேண்டுமைய்யா பசியகற்றி அரவணைத்துக் காத்திடவே வாருமைய்யா தாவடியில் கோயில் கொண்ட அம்பலவாணப் பிள்ளையாரே சரணமைய்யா எங்கும் எதிலும் உறைகின்ற சிவனாரின் திருமகனே எல்லாக் கவலைகளும் களைந்துலகைக் காத்தருள வேண்டுமைய்யா ஆறுதலைத் தந்தென்றும் காத்திடவே வாருமைய்யா தாவடியில் கோயில் கொண்ட அம்பலவாணப் பிள்ளையாரே சரணமைய்யா அண்டத்தை ஆட்டுகின்ற சிவனாரின் திருமகனே அச்சம் அகற்றியுலகைக் காத்தருள வேண்டுமைய்யா அதர்ம வழி தவிர்த் தென்றும் காத்திடவே வாருமைய்யா தாவடியில் கோயில் கொண்ட அம்பலவாணப் பிள்ளையாரே சரணமைய்யா முக்கண்ணைக் கொண்டருளும் சிவனாரின் திருமகனே மூர்க்க குணம் அடக்கியுலகைக் காத்தருள வேண்டுமைய்யா முத்தமிழுக்கு வளம்…

Read More

இந்திய அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரிஷப் பந்த் விபத்துக்குள்ளாகியுள்ளார். இந்திய அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரிஷப் பந்த், பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக ஒருநாள், டி20 தொடரில் ரிஷப் பந்த் சேர்க்கப்படவில்லை. இவர் டெஸ்டில் விளையாடுவதைப் போல ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவது கிடையாது. இதனால்தான், இலங்கை தொடருக்கான இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். இலங்கை தொடரில் நீக்கப்பட்டதால், ஓய்வுக்காக ரிஷப் பந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை அவர் வீதி விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விரைந்து குணமடைய வேண்டும் கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Read More

உலகின் தலைசிறந்த கால்பந்து நட்சத்திரமான பீலே காலமானார். பீலே இறக்கும் போது அவருக்கு 82 வயது. நவம்பர் 29 ஆம் திகதி, பீலே சுவாசக் கோளாறு காரணமாக சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பீலேவும் வயிற்றுப் புற்றுநோயால் அவதிப்பட்டார். சமீப நாட்களாக, பீலேவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரது சிறுநீரகங்கள் செயல்படவில்லை என்றும், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். பீலே பிரேசிலுக்காக மூன்று முறை உலகக் கிண்ணத்தினை வென்றார்.

Read More

இராணுவ ஆட்சி இடம்பெற்றுவரும் மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த டிசம்பரில் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், பிறகு பல்வேறு வழக்குகளில் 17 ஆண்டுகள் வரை தண்டனையை நீட்டித்தது. தொடர்ந்து, தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சூகிக்கு இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், இன்னொரு ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை மியான்மர் ராணுவ நீதிமன்றம் விதித்துள்ளது. இதன் மூலம் தற்போது அவரது சிறைத் தண்டனை காலம் 26 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு மீதான 18 மாத விசாரணையில் மீதமுள்ள ஐந்து குற்றச்சாட்டுகள் மீதான…

Read More

வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு குறைப் புள்ளி வழங்கும் முறை அடுத்த வருடம் (2023) மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்கமைய 24 சாரதிகள் பெறுமதியான 24 புள்ளிகளை பெற்றால் அவரின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இன்று (30) தெரிவித்துள்ளார். அவ்வாறு இரத்துச் செய்யப்பட்டதன் பின்னர் குறித்த சாரதி ஒரு வருட காலத்திற்கு அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்க முடியாது எனவும், ஒரு வருடத்தின் பின்னர் புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டுமெனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Read More

தமது முச்சக்கரவண்டியில் மோதுண்டு உயிரிழந்த சிறுமியை வீதியில் கிடத்தி வேறொரு வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்ததாக நாடகமாடிய நபரொருவரும் அவரது மகளும் நான்கு வருடங்களின் பின் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பதுளை மாவட்டம் கஹட்டரூப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துமால கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில தெரிய வருகையில் குறித்த பகுதியை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளியான தாயொருவர் தனது 2 வயது பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு (2018.05. 11)முத்துமால கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிக்க சென்றுள்ளார் குறித்த தேயிலை தோட்டத்தின் உரிமையாளர் அந்த 2 வயது குழந்தையை தமது வீட்டில் வைத்துக்கொண்டு குழந்தையின் தாயை தேயிலை தோட்டத்திற்கு கொழுந்து பறிக்க அனுப்பியுள்ளார். இந்நிலையில் விளையாடிக்கொணடிருந்த குழந்தை வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்து விட்டதாக குழந்தையின் தாயிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை குறித்த தோட்டத்தில் தேயிலை கொழுந்து ஏற்றிவரும் லொறியில் குறித்த 2 வயது பெண்குழந்தை அடிபட்டு உயிரிழந்து விட்டதாகவும் தோட்ட உரிமையாளரால்…

Read More

நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிற்ப்பிக்கப்பட்ட நபரை கைது செய்த போது அவரிடம் இருந்து 5610 மில்லி கிராம் ஹொரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கமேவெல 4 ம் கட்டை பகுதியில் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த 22 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்த பசறை பொலிஸார் அவரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் இருந்து 5610 மில்லி கிராம் ஹொரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப் பட உள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா

Read More

சப்ரகமுவ மாகாணம்- இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி நகர் – அருள்மிகு இரத்தினேஸ்வரம் சிவன் திருக்கோயில் ஆழி சூழ் உலகினையே ஆட்டுவிக்கும் பெருமானே ஆறுதலைத் தந்துலகை வாழவைக்க வாருமைய்யா அச்சம் அற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய் மலைசூழ்ந்த பெருநகரின் மத்தியிலே அமர்ந்துள்ள பெருமானே மானமுடன் மனிதகுலம் வாழ வைக்க வாருமைய்யா மனச்சோர்வு அற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய் நஞ்சுண்டு நலமளித்த நாயகனே பெருமானே நல்லமனம் தந்துலகை வாழவைக்க வாருமைய்யா நஞ்சு மனம் அற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய் திரிபுர சுந்தரி அன்னையை அருகு கொண்ட பெருமானே தெளிவான மனம் தந்துலகை வாழவைக்க வாருமைய்யா தொல்லையற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய் உலகத்தின் மையத்தைக்…

Read More

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாத்துவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டி சாரதி ஒருவரிடம் 5000 ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வுபெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இவ்வளவு பேர் ஓய்வு பெற்றாலும் அரச சேவையில் வீழ்ச்சி ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அதன்படி டிசம்பர் 31-ம் திகதி முதல் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களில் பாதுகாப்பு பிரிவு, கூட்டுத்தாபனங்கள், சபைகள் என அனைத்து நிறுவன ஊழியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அரச சேவையை கொண்டு செல்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரச சேவையை கொண்டு செல்வதுடன் அரச சேவை மீள் மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அத்தியாவசிய விடயங்கள் இருப்பின் நிதி அமைச்சு மற்றும் முகாமைத்துவ திணைக்களம் ஊடாக அவ்வாறான பதவிகளுக்கான வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதில் எந்த தடையும் இல்லை எனவும் அமைச்சர் கூறினார். இதேவேளை, ஓய்வு பெறும் 30,000 பேரின்…

Read More