Author: Thana
லங்கா விசன் எக்சன் பவுன்டேசன் நிறுவனத்தின் அனுசரணையில் முதியோர் இல்லத்திற்கு சக்கர நாற்காலிகள்
லங்கா விசன் எக்சன் பவுன்டேசன் நிறுவனத்தின் அனுசரணையின் ஊடாக நேற்று (2022.01.04) அன்று காலை 9.00 மணியளவில் கண்டி-மஹியாவையில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திற்கு 50,000 இற்கும் மேல் பெறுமதியான சக்கர நாற்காலிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் லங்கா விசன் எக்சன் பவுன்டேசன் நிறுவனத்தின் தலைமை நிர்காக அதிகாரி திருமதி.கீர்த்தனா தர்சன் கலந்துகொண்டு சக்கர நாற்காலிகளை வழங்கிவைத்ததுடன் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றும்போது லங்கா விசன் எக்சன் பவுன்டேசன் நிறுவனத்தின் சேவைகள் இலங்கையில் பல்வேறுப்பட்ட பிரதேசங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் எமது இந்த சேவையின் ஊடாக பலரது வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருட மலையக பூர்த்தியை முன்னிட்டு மலையகத்தின் பல பாகங்களிலும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலையக வாழ் மக்களின் உரிமைகள் தொடர்பான நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெறுவதையும் மலையகம் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியையும் நாம் மீட்டி பார்ப்பது காலத்தின் கட்டாயம் ஆகும்” இந்த உலகத்தை மாற்றுவதற்கு எம்மால் பயன்படுத்த கூடிய ஆயுதம் கல்வி நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ச்சியாக போராடும் போராட்டமே பிற் காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது மனிதனாக பிறந்த எவரும் வீனாக அழித்துவிடக் கூடாது என்பதற்கேற்ப இன்று மலையகத்தில் கல்வியால் பலரும் சாதித்து வருவதுடன், உயர் பதவிகளையும் வகித்து வருகின்றமை மலையக மண்ணிற்கு கிடைத்த மகத்தான வெற்றி எனலாம். அந்த வகையில் ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியிலே உப பீடாதிபதியாக கடைமையாற்றி அன்மையில் கொட்டக்கலை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் புதிய அதிபராக கடைமை பொறுப்பினை ஏற்ற திரு ஆர். லோகேஸ்வரன் ஐயா…
உள்ளூராட்சி தேர்தலை தடுப்பதற்கு சில முயற்சிகள் நடக்க கூடும். அவ்வாறு முயற்சிகள் எடுக்கப்படுமிடத்து உடனடியாக நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் ஊடகங்களுக்கு நேற்று (04) கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், உள்ளுராட்சி தேர்தல் வேட்புமனுதாக்களுக்கான திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எமது கட்சியின் சார்பிலே தேர்தல்கள் பிற்போடகூடாது , அது ஜனநாயகத்தினை மீறுகின்ற செயல் என தொடர்ச்சியாக கூறி வந்திருக்கிறோம். அரசாங்கம் இந்த தேர்தலினை பிற்போடுவதற்கு எடுத்த முயற்சிகள் எங்களுக்கு தெரியும். எதுவும் கைகூடாத நிலைமையில் தேர்தல் ஆணைக்குழு சட்ட ரீதியாக அறிவித்துள்ளது. இந்த வேளையில் இதனை தடுப்பதற்கு சில முயற்சிகள் நடக்க கூடும். அவ்வாறு முயற்சிகள் எடுக்கப்படுமிடத்து உடனடியாக நாங்கள் நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம்.…
சகல அரசாங்க பாடசாலைகளிலும் பிரதி புதன்கிழமைகளில் காலை 10 நிமிடங்கள் மாணவர் விழிப்புணர்வு செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை தொடர்பான சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சு சகல மாகாண வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. முதல் 12 புதன்கிழமைகளில் காலை 7.30 மணிமுதல் 7.40 மணி வரை இப் புதிய விழிப்புணர்வு செயற்திட்டம் இடம்பெறும். பத்து நிமிடங்களைக் கொண்டதாக “நிலையான தன்மையில் அமர்த்தல்” என்ற தொனிப் பொருளில் இந்த வேலைத்திட்டம் 12 புதன்கிழமைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் விழுமியங்கள் மற்றும் பண்புசார் விருத்தி தொடர்பாக இப் புதிய விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிலையான தன்மையில் அமரச் செய்தல் என்ற இந் நிகழ்வில் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுள்ளது..
இலங்கை லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயு விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைவாக, லிட்ரோ எரிவாயுவின் மறுசீரமைப்பு செய்யப்பட்ட விலைகள் பின்வருமாறு, 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 201 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதன் புதிய விலை 4,409/= ரூபாவாகும். 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதன் புதிய விலை 1,770/= ரூபாவாகும். 2.3 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 38 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதன் புதிய விலை 822/= ரூபாவாகும்.
ஹென்பொல்ட், சென்றெகுலர்ஸ், மிளகுசேனை ஆகிய தோட்டங்களை சேர்ந்த மக்கள் பிரதானமாக பயன்படுத்தும் முக்கிய நடைபாதையே இது
ஹென்பொல்ட், சென்றெகுலர்ஸ், மிளகுசேனை ஆகிய தோட்டங்களை சேர்ந்த மக்கள் பிரதானமாக பயன்படுத்தும் முக்கிய நடைபாதையே இது. மெரயா நகருக்கும் வரும் மக்களும், 350 க்கும் மேற்ப்பட்ட மெரயா பாடசாலை மாணவர்கள் தினமும் இப்பாலத்தை பயன்படுத்துகிறார்கள். தோட்டத்தொழிலாளர்கள் செறிந்து வாழும் இப்பகுதியில் பல முக்கிய அரசியல் பிதிநிதிகள் இருப்பினும் இப்பாலத்தின் பாதுகாப்பு கம்பிகள் உடைந்து இதுவரை ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் பொதுமக்கள் மூலமாக மூங்கில் கொண்டு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தாலும் அது உறுதியற்றாதாக காணப்படுகிறது. ஆகவே இப்பாலத்தில் பயணிக்கும் யாருக்காவது ஏதாவது விபத்துக்கள் ஏற்படும் முன்பாக இப்பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வரவேண்டும். இப்பாலம் தொடர்பா விடயம் தீர்க்கும் வரை மலையகம். lk அவதானித்துக்கொண்டிருக்கும். சரத்
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், கீரிமலை அருள்மிகு நகுலேஸ்வரம் சிவன் திருக்கோயில் தில்லையிலே நின்றாடும் திருவருளே சிவனே எல்லையில்லா கருணையினைத் தந்தருள்வாய் ஐயா நல்லருளைத் தந்தெம்மைக் காத்தருள வருவாய் நகுலேசுவரப் பதியமர்ந்த எங்கள் பெருமானே கீரிமலை கோயில் கொண்ட திருவருளே சிவனே பார் ஒளிர கருணையினைத் தந்தருள்வாய் ஐயா வல்லமை தந்தெம்மைக் காத்தருள வருவாய் நகுலேசுவரப் பதியமர்ந்த எங்கள் பெருமானே வடஇலங்கைக் கரையினிலே வந்துறையும் திருவருளே சிவனே வருந்துன்பம் களைந்து விடும் கருணையினை தந்தருள்வாய் ஐயா அரவணைப்பைத் தந்தெம்மைக் காத்தருள வருவாய் நகுலேசுவரப் பதியமர்ந்த எங்கள் பெருமானே அறிவு தந்து ஆற்றல் தரும் திருவருளே சிவனே ஆறுதலை உறுதி செய்து கருணையினை தந்தருள்வாய் ஐயா நிம்மதியைத் தந்தெம்மைக் காத்தருள வருவாய் நகுலேசுவரப் பதியமர்ந்த எங்கள் பெருமானே மனவுறுதி தந்தெம்மை வாழச் செய்யும் திருவருளே சிவனே நோய்நொடிகள் போக்கியென்றும் கருணையை தந்தருள்வாய் ஐயா நேர்மைமிகு வாழ்வு தந்து காத்தருள வருவாய் நகுலேசுவரப் பதியமர்ந்த…
நானுஓயா நிருபர் நானுஓயா பொலிஸ் பிரிவில் உள்ள டெஸ்போட் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தை உடைத்து அம்மனின் தங்க நகைகள் ,உண்டிய பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினால் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அத்தோடு சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், விசாரணைகளை மேற்கொள்ளும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். ஆலயத்தின் பின் நுளைவாயில் உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்த இனந்தெரியாதவர்கள் இவ்வாலயத்தில் 30.000 ஆயிரம் பெறுமதியான அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலியையும், ஆலய முன்றலில் வைக்கப்ட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது. இதேவேளை, இதற்கு முன்னரும் கூட இவ் ஆலயத்தின் திருட்டு சம்பவம் இடம்பெற்று தங்க நகைகள், உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் திருட்டு போயிருந்தமை தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், இருப்பினும், அது தொடர்பில் பொலிஸார் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.…
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணங்களை செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். 340 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று (4) மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி, இடம், பத்திரங்கள், வேட்பாளர்கள், பெண் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உறுப்பினர்கள் எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதிக்குள் நியமிக்கப்பட வேண்டும், அதற்கான தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னதாக நடைபெற வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு…
மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பில் அடுத்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். இதன்படி, மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் மேலும் கலந்துரையாடப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்தவிடயங்களை குறிப்பிட்டார்.