Author: Thana
குறைந்தளவான மழை பெய்தாலும், மண்சரிவு தொடர்பாக எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ; ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார். மலைப்பாங்கான பிரதேசங்களில், புதிதாக கட்டடங்களை அமைக்கும் போது, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வழங்கப்படும் முன்கூட்டிய எச்சரிக்கையை கருத்திற் கொள்வது அவசியமாகும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். அனர்த்த ஒத்திகைகளில் பொதுமக்களின் பங்களிப்பு அவசியமாகும் அனர்த்தங்கள் தொடர்பாக அறிவிப்பதற்கு 117 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ள முடியும். அனர்த்தம் குறித்த அறிவிப்புகளை கவனத்திற் கொள்ளத் தவறினால், பாதிப்புக்கள் அதிகரிக்கலாம். கரையோரப் பிரதேசங்களில் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதில் முறையான வழிமுறையைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்…
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழ முக்கம் வலுவிழந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக இலங்கை மீது தாக்கம் செலுத்திய தாழமுக்க தற்போது நாட்டை விட்டு மேற்கு கரையோரமாக நகர்ந்து வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மழையுடன் கூடிய காலநிலை குறையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மெரல் மென்டிஸ் கூறினார். மத்திய மலைநாட்டின் நீரேந்து பிரதேசங்களிலும் தாழ்வார பிரதேசங்களிலும் மழைவீழ்ச்சி குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையோரப் பிரதேசங்களிலும் காலநிலை சீராக இருக்கும் என்றும் வளிமண்டவியல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
ஊவாமாகாணம் – பதுளை மாவட்டம் அப்புத்தளை – ஹல்துமுல்லை, பெரகலை களுபான – அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில் தொல்லைகள் போக்கி காத்தருளும் பெருந்தேவி துயரநிலை அகற்றிடவே வந்தமர்ந்தாள், வாழவைப்பாள் எதிர்காலம் ஏற்றமுற என்றும் துணையிருப்பாள் பெரகலையில் வீற்றிருக்கும் எங்கள் அம்மா கருமாரி மலை சூழ்ந்த பெருநிலத்தில் வந்துறையும் பெருந்தேவி மனமகிழ்வு தந்திடவே வந்தமர்ந்தாள், வாழவைப்பாள் எதிர்காலம் எழுச்சிபெற என்றும் துணையிருப்பாள் பெரகலையில் வீற்றிருக்கும் எங்கள் அம்மா கருமாரி நாடிவரும் நல்லவர்கள் நலன் பேணும் பெருந்தேவி நினைத்தவை நிறைவேற்ற வந்தமர்ந்தாள், வாழவைப்பாள் எதிர்காலம் மேன்மையுற என்றும் துணையிருப்பாள் பெரகலையில் வீற்றிருக்கும் எங்கள் அம்மா கருமாரி கேட்கும் வரம் தந்தெமது குலம் காக்கும் பெருந்தேவி கேடுகள் அண்டா நிலை தந்திடவே வந்தமர்ந்தாள், வாழவைப்பாள் எதிர்காலம் ஒளிபெறவே என்றும் துணையிருப்பாள் பெரகலையில் வீற்றிருக்கும் எங்கள் அம்மா கருமாரி துணிவு தந்து ஆற்றல் தந்து ஆதரிக்கும் பெருந்தேவி துன்பங்கள் தொடராமல் தடுத்திடவே வந்தமர்ந்தாள், வாழவைப்பாள் எதிர்காலம் வளம்தரவே…
விஷ்ணு ஆரோஹணம் நிறுவனத்தின் மற்றுமொரு போஷாக்கு வேலைத்திட்டம் 24.12.2022 மேஃபீல்ட் தோட்ட பிரிவை சேர்ந்த ரொக்கில் பிரிவில் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும். அதே போல மேஃபீல்ட் சார்ம்ஸ் பிரிவில் உள்ள சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட முதியவர்களுக்கான மதிய உணவுக்காக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், விஷ்ணு அரோகணம் நிறுவனத்தின் தலைவருமான கௌரவ கலாநிதி சதானந்தன் திருமுருகன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன். நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர்களும் கலந்துக்கொண்ட வேளையில் தோட்டத் தொழிலாளர்களிடம் அவர்களின் குழந்தைகளின் கல்வி வசதிகள் மற்றும் தேவைகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான கல்விசார் உதவிகளை எதிர்காலத்தில் வழங்க முன்வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கினிகத்தேன களுகல பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சத்துணவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளரும், நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், விஷ்ணு ஆரோஹணம் நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி சதானந்தன் திருமுருகன் அவர்களால் சத்துணவு போஷாக்கு வேலைத்திட்டத்தின் கீழ் கினிகத்தேன களுகல பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் 100 குடும்பங்களுக்கு அரிசி பொதிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் அரசியல் துறை பொறுப்பாளர்கள் மற்றும் கினிக்கத்தேன பிரதேச சபை உறுப்பினர் J.T. ஈபர்ட் பெரேரா உட்பட பலரும், பிரதேச மக்களும் கலந்துக்கொண்டனர். நிகழ்வில் மக்களின் குறைநிறைகள் பற்றியும் கேட்டறியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சரத்
தேசிய கல்வி நிறுவக பட்டமேற் கல்வி டிப்ளோமா கற்கை நெறியின் கொட்டகலை பிராந்திய கல்வி நிலைய ஆசிரிய மாணவர்களின் கலைவிழாவும் ” படி” மலர் வெளியீடும் கொட்டகலை அரசினர் ஆசிரிய கலாசாலையில் இன்று நடைபெற்றது.
நானுஓயா நிருபர் நுவரெலியா மாவட்டத்தில் நிலவுகின்ற மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அத்துடன் மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது. நுவரெலியா – ஹற்றன் ,நுவரெலியா – கண்டி , நுவரெலியா -வெளிமடை போன்ற பிரதான வீதிகளிலும் ரதல்ல, நானுஓயா , டெஸ்போட் ,கந்தபளை உள்ளிட்ட பிரதேசங்களிலும் அதிக பனிமூட்டம் நிலவி வருகின்றது. அதிகளவான பனிமூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்திக்கின்றனர். எனவே பிரதான வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் எச்சரிக்கையாகவும் அவதானத்துடனும் தங்களுடைய வாகனங்களை செலுத்துமாறும் , பனிமூட்டம் நிலவும் வேளையில் தங்களுடைய வாகனத்தின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்து தமக்குரிய பக்கத்தில் வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையிலேயே நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை…
அவிஸ்ஸாவளை சேர்ந்த எழுத்தாளர் பிரதீபா சிவக்குமாரின் முதலாவது கவிதை தொகுப்பு கொழும்பில் வேளியிடப்பட்டது. குறித்த நிகழ்வானது கடந்த 2022/12/ 23 அன்று கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள ருஷா வரவேற்பு மண்டபத்தில் மாலை 5:30 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் காயத்ரி விக்கிரமசிங்க மற்றும் இளமை எப் எம் முகாமையாளர் மிருணன் ஆகியோர் கலந்துகொண்டனர். நூல் அறிமுக உரையினை எழுத்தாளர்,அதிபர் வி எம் ரமேஸ் வழங்கிவைக்க , நூல் மதிப்புரையினை எழுத்தாளர் ப.கனகேஸ்வரன் வழங்கினார். நிகழ்வில் இளம் எழுத்தாளர்கள் ,ஊடகவியாளர்கள் சமூகசெயல்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். நன்றியுரையினை குறித்த நூலின் நூலாசிரியர் பிரதீபா சிவகுமாரன் வழங்கிவைத்தார். குறித்த படைப்பு தொடர்பாகவும் நுலாசிரியரையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் 50-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கொட்டகலை இல. 01. புகையிரத நிலைய வீதியில் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் அலுவலகம்( 24/12/22 ) திறந்து வைக்கப்பட்டது. தேசிய கலை இலக்கிய பேரவை கடந்த 50 ஆண்டு காலத்தில் சகல விதமான ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக, உழைக்கும் மக்களின் குரலாக எந்தவித சமரசங்களுக்கும் அப்பாற்பட்டு கலை இலக்கிய பணிகளை ஆற்றி வருகிறது. அலுவலக திறப்பு விழா நிகழ்வில் மலையகத்தின் மூத்த கலை இலக்கியவாதிகளும் , இளையவர்களும் கலந்து கொண்டனர்.
வடமாகாணம்- முல்லைத்தீவு மாவட்டம்- முல்லைத்தீவு வற்றாப்பளை – அருள்மிகு கண்ணகி அம்மன் திருக்கோயில் வளம் சூழ்ந்த மருதநிலச் சூழலிலே வந்தமர்ந்த தாயே வற்றாத கருணையினைப் பொழிந் தருள்வாய் அம்மா வீரத்திருமகளே, வெற்றிகள் தந்திடம்மா வற்றாப்பளை இருந்தருளும் கண்ணகி அம்மா காப்பளிப்பாய் வன்னிப் பெருநிலத்தில் வந்தமர்ந்த தாயே வளம் பொழியும் வாழ்வினையே தந்தருள்வாய் அம்மா வெற்றித்திருமகளே வலிமை தந்திடம்மா வற்றாப்பளை இருந்தருளும் கண்ணகி அம்மா காப்பளிப்பாய் தமிழ் ஒலிக்கும் திருநாட்டில் காட்சி தரும் தாயே தவறில்லா நல்வாழ்வை வழங்கிடுவாய் அம்மா கற்பின் தீச்சுடரே கவலைகளைப் போக்கிடம்மா வற்றாப்பளை இருந்தருளும் கண்ணகி அம்மா காப்பளிப்பாய் வளம் நிறைந்த மாநிலத்தில் இருந்தருளும் தாயே மலைப்பில்லா நிலை வாழ்வை வழங்கிடுவாய் அம்மா தமிழ்க் குலத்தின் ஒளிவிளக்கே தவறுகளைத் தடுத்திடம்மா வற்றாப்பளை இருந்தருளும் கண்ணகி அம்மா காப்பளிப்பாய் கடல் நீரில் ஒளிகாட்டும் சிறப்பு கொண்ட தாயே செல்லும் வழி சிறப்படைய ஆற்றலைத் தந்திடுவாய் அம்மா சித்தத்திலுறைந்திருந்து சீர்வாழ்வை நிலைக்கச்…