Author: Thana

பல்வேறு துறைகளில் அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகளின் ஓய்வு பெறும் கால எல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார். தாதியர், விசேட வைத்தியர்கள், ரயில் சாரதிகள் உள்ளிட்ட துறைகள் இதில் அடங்குகின்றன. கடந்த 31 ஆம் திகதி 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றனர். புத்தாண்டில் அரச ஊழியர்கள் மிகுந்த பொறுப்புடன் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். நாடு மிகவும் நெருக்கடியான நிலையில் காணப்படுவதாகவும், அரச ஊழியர்கள் செயல் திறன் மிக்கவர்களாக செயல்படுவது அவசியமாகும். எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்காகவும் அவர்களின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

Read More

வடமேல் மாகாணம் – புத்தளம் மாவட்டம், புத்தளம் – அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் புத்தளம் நகரமர்ந்து வழித்துணையாய் இருப்பவரே புதிய வழிகாட்டி யெம்மை மீட்சிபெறச் செய்யுமைய்யா புத்துணர்வு பெற்று நாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு ஏற்ற துணையிருப்பாய் எங்கள் சித்திவிநாயகரே அருள் வழங்க வீற்றிருந்து வழித்துணையாய் இருப்பவரே ஆற்றலுடன் செயற்பட்டு முன்னேறச் செய்யுமைய்யா ஆதரவைப் பெற்று நாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு ஏற்ற துணையிருப்பாய் எங்கள் சித்திவிநாயகரே மேற்கிலங்கை கோயில் கொண்டு வழித் துணையாய் இருப்பவரே மேன்மை நிறை வாழ்வு பெற்று மகிழ்வு பெறச் செய்யுமைய்யா முன்னேறும் வழிபெற்று நாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு ஏற்ற துணையிருப்பாய் எங்கள் சித்திவிநாயகரே எங்கும் வந்தமர்ந்து வழித்துணையாயிருப்பவரே ஏற்றம் நிறை அறிவு பெற்று உயர்வு பெறச் செய்யுமைய்யா உயர்ந்த நிலை பெற்று நாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு ஏற்ற துணையிருப்பாய் எங்கள் சித்திவிநாயகரே செல்லும் வழியெங்கும் வழித்துணையாய் இருப்பவரே சூழ்நிலைகள் யாவையுமே…

Read More

பாடசாலைகளில் 2ம் தரம் முதல் 11ம் தரம் வரையிலான மாணவர்களை உள்வாங்குவதற்கான புதிய முறையொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தினால் நேற்று (02) அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட இது தொடர்பான பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தரம் 6க்கு உரிய முறைமை பொருந்தாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, தற்போதைய சுற்றறிக்கை ஏற்பாடுகளை மேலும் சீரமைப்பதன் மூலம், இடைநிலை தரங்களுக்கு மாற்றப்பட வேண்டிய மாணவர்கள் கண்டறியப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் நியாயமான மற்றும் சமமான அணுகல் வாய்ப்புகளை வழங்கும் வகையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும். அதன்படி, புதிய முறையின்படி, 1-5 வகுப்புகளில் ஒரு வகுப்பில் அதிகபட்ச மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆகவும், 6-11 வகுப்புகளில் அதிகபட்ச மாணவர்களின் எண்ணிக்கை 45 ஆகவும் உள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்தள்ளது. இந்த விலைத்திருத்தம் நேற்று(02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதற்கமைவாக லங்கா டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 405 ரூபாவாகும். மண்ணெண்ணை ஒரு லீற்றரின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 355 ரூபாவாகும். ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லையென பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் அறிவித்துள்ளது.

Read More

வடமாகாணம் – மன்னார் மாவட்டம் – மடுபிரதேசம், பெரிய பண்டிவிரிச்சான் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் சமாதான திருக்கோயில் மதிதந்து மாண்புடனே வாழச் செய்யும் விநாயகரே மாநிலத்தில் நிம்மதியை நிறுவிடுவாய் அருள்மதியே தலைதாழா நிலைதந்து முன்செல்ல வழியமைப்பாய் பெரிய பண்டிவிரிச்சான் உறை எங்கள் சித்தி விநாயகரே துணிவுதந்து துடிப்புடனே வாழச் செய்யும் விநாயகரே துன்பமின்றி நிம்மதியை அருளிடுவாய் அருள்மதியே தொல்லையில்லா நிலைதந்து முன்செல்ல வழியமைப்பாய் பெரிய பண்டிவிரிச்சான் உறை எங்கள் சித்தி விநாயகரே ஆற்றல் தந்து அச்சமின்றி வாழச்செய்யும் விநாயகரே மகிழ்ச்சி தந்து நிம்மதியை நிறுவிடுவாய் அருள்மதியே கவலையற்ற நிலைதந்து முன்செல்ல வழியமைப்பாய் பெரிய பண்டிவிரிச்சான் உறை எங்கள் சித்தி விநாயகரே இன்பநிலை தந்தெம்மை வாழச்செய்யும் விநாயகரே இயல்பு நிலை தந்து நிம்மதியை நிறுவிடுவாய் அருள்மதியே இறுக்கமற்ற மனநிலை தந்து முன்செல்ல வழியமைப்பாய் பெரிய பண்டிவிரிச்சான் உறை எங்கள் சித்தி விநாயகரே வெற்றிகள் அருளியென்றும் வாழச்செய்யும் விநாயகரே வேதனைகள் அகற்றி நிம்மதியை நிறுவிடுவாய்…

Read More

பத்தனை – ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக திருமதி பவானி லோகேஸ்வரன் பொறுப்பேற்றுள்ளார். நேற்று வருடத்தின் முதல்நாள் (1/1/2023) தன்னுடைய கல்லூரியின் காரியாலயத்தில் ஆரம்பித்தார்.

Read More

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – காங்கேசன் துறை – குரும்பசிட்டி அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில் தாயாக கருணைசெய்து காத்தருளும் அன்னை தயவுடனே இருந்தெமக்கு வாழ வழியமைத்துத் தருவாள் தீமைகள் நெருங்காது காத்து அருள் செய்வாள் குரும்பசிட்டி கோயில் கொண்ட எங்கள் முத்துமாரி அரவணைத்து அருளளித்து காத்தருளும் அன்னை அச்சமின்றி நிம்மதியாய் வாழ வழியமைத்துத் தருவாள் அதர்மநிலை அகற்றி காத்து அருள் செய்வாள் குரும்பசிட்டி கோயில் கொண்ட எங்கள் முத்துமாரி நோய் நொடிகள் அண்டாது காத்தருளும் அன்னை நேர்மையாய் வாழ வழியமைத்துத் தருவாள் நெருங்கி வரும் பகைகொடுமை போக்கி காத்து அருள் செய்வாள் குரும்பசிட்டி கோயில் கொண்ட எங்கள் முத்துமாரி வாழ நல்ல வழிகாட்டி காத்தருளும் அன்னை வற்றா கருணை தந்து வாழ வழியமைத்துத் தருவாள் வேதனைகள் நெருங்காது காத்து அருள் செய்வாள் குரும்பசிட்டி கோயில் கொண்ட எங்கள் முத்துமாரி எம் நிலைமை நன்குணர்ந்து காத்தருளும் அன்னை என்றும் உடனிருந்து…

Read More

பசறை குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது போதை மாத்திரைகள் 11 னை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவரையும் கஞ்சா போதைப்பொருள் கைவசம் வைத்திருந்த 3 நபர்களுமாக 28,19,18,18 வயதுகளையுடைய மொத்தமாக 4 சந்தேக நபர்களை பசறை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீரியபெத்த தொளும்புவத்தை, பசறை 10ம் கட்டை, வரதொல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பசறை பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை நாளை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா

Read More

அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூன்று பசு மாடுகளை லொறி ஒன்றில் ஏற்றி மறைத்து கொண்டு சென்ற சாரதி உட்பட மூவர் கைது. கந்தகெடிய பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கந்தகெடிய பொலிஸார் லொறி ஒன்றை நிறுத்தி லொறியை சோதனைக்கு உட்படுத்திய போது லொறியினுள் கால்கள் கட்டப்பட்டு மறைத்து கொண்டு சென்ற மூன்று பசு மாடுகளை கைப்பற்றினர். இதன்போது பசறை மற்றும் நமுனுகுலை பகுதிகளைச் சேர்ந்த 22,27,29 வயதுகளையுடைய சாரதி உட்பட மூவரை கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கந்தகெடியவில் இருந்து பதுளைக்கு பசு மாடுகளை கொண்டு செல்வதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதோடு மேலதிக விசாரணைகளை கந்தகெடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா

Read More

கிழக்கு மாகாணம்- அம்பாறை மாவட்டம், திருக்கோயில், கள்ளியந்தீவு அருள்மிகு ஸ்ரீசகலகலையம்மன் திருக்கோயில் ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் அருளுகின்ற தாயே ஆதரித்து அறிவளித்து அருள் தரவே கருணையை நீ செய்வாய் உன்னருளால் இவ்வுலகம் உய்திபெற வேண்டும் கள்ளியந்தீவு கோயில் கொண்ட சகலகலை அம்மா உன்தாள் போற்றி கிழக்கிலங்கை கோயில் உறை கலைத் தாயே கிட்டிவந்து அருகிருந்து அருள் தரவே கருணையை நீ செய்வாய் உன் கருணை இவ்வுலகைக் காத்தருள வேண்டும் கள்ளியந்தீவு கோயில் கொண்ட சகலகலை அம்மா உன்தாள் போற்றி அறிவுதந்து வழிநடத்தி வாழவைக்கும் தாயே அச்சமின்றி வாழ்வதற்கு அருள் தரவே கருணையை நீ செய்வாய் உன்காவல் இவ்வுலகைக் காத்தருள வேண்டும் கள்ளியந்தீவு கோயில் கொண்ட சகலகலை அம்மா உன்தாள் போற்றி தாயாகக் கருணை செய்து காத்தருளும் தாயே தவறில்லா வாழ்வுதர கருணையை நீ செய்வாய் உன் பார்வை உலகினையே காவல் செய்ய வேண்டும் கள்ளியந்தீவு கோயில் கொண்ட சகலகலை அம்மா உன்தாள்…

Read More