Author: Thana
உலகின் தலைசிறந்த உணவுகள் என்ற பட்டியலில் இந்திய உணவுகளுக்கு 5 ஆம் இடம் இடம் கிடைத்துள்ளது. Taste atlas என்ற அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பொதுமக்களிடம் சுவை மிகுந்த உணவுகள் குறித்து கருத்துகளை கேட்டு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 4.72 புள்ளிகளுடன் இத்தாலிய உணவுகளுக்கு முதலிடமும், கிரீஸ், ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. 4.54 புள்ளிகளுடன் இந்தியாவுக்கு 5ஆவது இடம் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இந்திய உணவுகளில் பட்டர் கார்லிக் நான், கீமா, மலாய் மற்றும் கரம் மசாலா கலந்த உணவுகள் சிறந்தவை என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
வடமாகாணம் – வவுனியா மாவட்டம் – வவுனியா, வைரவப்புளியங்குளம் – அருள்மிகு ஆதிவிநாயகர் திருக்கோயில் வன்னிப் பெருநிலத்தில் கோயில் கொண்ட விநாயகரே வருந்தீமை தடுத்தெம்மை வாழவைப்பாய் பெருநிதியே துன்பம் துடைத்தெறிந்து நலம் வழங்கும் விநாயகரே தூயவள வாழ்வருள்வாய் வைரவப் புளியங்குளம் உறை ஆதிவிநாயகரே வளங்கொண்ட தமிழ் மண்ணில் இருந்தருளும் விநாயகரே வற்றாத கருணையினைத் தந்தெம்மை வாழவைப்பாய் பெருநிதியே வலிந்து வரும் தீமைகளைத் துடைத்தெறிந்து நலம் வழங்கும் விநாயகரே தூயவள வாழ்வருள்வாய் வைரவப் புளியங்குளம் உறை ஆதிவிநாயகரே துதித்து நிற்கும் பக்தர்களின் துயர் போக்கும் விநாயகரே துணையிருந்து அருகிருந்து வாழவைப்பாய் பெருநிதியே வேதனைகள் அகற்றி நலம் வழங்கும் விநாயகரே தூயவள வாழ்வருள்வாய் வைரவப் புளியங்குளம் உறை ஆதிவிநாயகரே கேட்ட வரம் தந்து அருள் வழங்கும் விநாயகரே கேடுகள் அண்டா நிலை தந்தெம்மை வாழவைப்பாய் பெருநிதியே கவலைகள் களைந்து நலம் வழங்கும் விநாயகரே தூயவள வாழ்வருள்வாய் வைரவப் புளியங்குளம் உறை ஆதிவிநாயகரே…
ஹல்தும்முல்லை , ப/விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா
Lanka help foundation நிறுவனத்தின் அனுசரனையில் ஹல்தும்முல்லை , ப/விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா, கடந்த 2022,12,20 ம் திகதி அதிபர் K சுந்தரராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விழாவில் Lanka Help Foundation முகாமையாளர் R. ராஜதுரை அவர்கள், மாகாண கல்வி செயலாளர், வலய கல்வி பணிப்பாளர், கோட்ட கல்வி பணிப்பாளர், இ. வ. அ அமைப்பு உறுப்பினர்கள்,வர்த்தகர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். தனது சேவைக் காலத்தில் மாணவர் கல்வி நலன் கருதி இவ்வாறான உதவி செய்த lhf நிறுவனத்துக்கு நன்றி கூறுவதோடு, இவ்வாறான செயற்பாடுகள் மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது என்றும் அங்கு உரையாற்றிய அதிபர் K. சுந்தரராஜ் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி பேருந்து விபத்தில் 7 வயது சிறுமி பலி. பதுளை கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பிட்டிய மல் சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்றும் பதுளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 7 வயது சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமியின் தாய் உட்பட மூவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கஹட்டரூப்பயில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் அம்பிட்டியவில் இருந்து முத்துமாலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் அம்பிடியமல் சந்தியில் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த முச்சக்கர வண்டியை ஓட்டி சென்ற பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிழ் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் மரணித்த சிறுமியின் தாயே முச்சக்கர வண்டியை செலுத்தி சென்றுள்ளார். மரணித்த சிறுமியின்…
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் வட்டுக்கோட்டை, சித்தன்கேணி அருள்மிகு சிவன் திருக்கோயில் சித்தமெல்லாம் நிறைந்து சீர்வாழ்வைத் தந்தருளும் சிவனே சிந்தனையை நேர்ப்படுத்தி செயற்படவே அருள்வாய் சாந்தமனம் கொண்டவராய் நாமென்றும் திகழ அருள் தருவாய் சித்தன்கேணி கோயில் கொண்ட எங்கள்பெருமானே உயிருனுள் உயிராக உறைந்திருக்கும் சிவனே உணர்வுகளை வழிப்படுத்தி செயற்படவே அருள்வாய் அன்பு மனம் கொண்டவராய் நாமென்றும் திகழ அருள் தருவாய் சித்தன்கேணி கோயில் கொண்ட எங்கள்பெருமானே அண்டத்தையே அசைத்தாட்டும் ஆண்டவனே சிவனே அச்சமின்றி வாழும் நிலை செயற்படவே அருள்வாய் அமைதி மனம் கொண்டவராய் நாமென்றும் திகழ அருள் தருவாய் சித்தன்கேணி கோயில் கொண்ட எங்கள்பெருமானே வேதத்தின் மூலவராய் விளக்குகின்ற சிவனே வெறுப்பு இன்றி வாழும் நிலை பெற்றிடவே அருள்வாய் நல்ல மனம் கொண்டவராய் நாமென்றும் திகழ அருள் தருவாய் சித்தன்கேணி கோயில் கொண்ட எங்கள்பெருமானே தென்திசையில் வீற்றிருந்துலகை ஆளுகின்ற சிவனே தெளிவான மனநிலையைப் பெற்றிடவே அருள்வாய் நேர்மை மனம் கொண்டவராய் நாமென்றும் திகழ…
அநுராதபுரத்தில் (27/12/22) நடைபெற்ற அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டியில் தனி வாத்திய இசை போட்டியில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களையும் தனி இசை போட்டி நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தினையும் பண்டாரவளை கல்வி வலயத்திற்குட்பட்ட கலபிட்டகந்த தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் தமதாக்கிக்கொண்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் நெறியாள்கை செய்து வழிப்படுத்திய ஆசிரியை திருமதி. சரிதா சிவக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் பண்டாரவளை வலய கல்வி பணிப்பாளர்கள் , பாடசாலை அதிபர், பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். செய்தி – நடராஜா மலர்வேந்தன்
கர்நாடக சங்கீத குழு இசை போட்டியில். மடுல்சீமை பது/ பட்டாவத்த தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் முதலாம் இடம்
அனுராதபுரத்தில் நடைபெற்ற அகில இலங்கை கர்நாடக சங்கீத குழு இசை போட்டியில். மடுல்சீமை பது/ பட்டாவத்த தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் முதலாம் இடத்தையும், நாட்டார் பாடல் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். நெளறியாள்கை செய்து வழிப்படுத்திய ஆசிரியை திருமதி. கோகிலம்பா உள்ளிட்ட ஆசிரியர் குழாமிற்கு அதிபர், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் இனிய வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். நடராஜா மலர்வேந்தன்
அகில இலங்கை கர்நாடக சங்கீத தேசிய மட்டப்போட்டியில் வாத்திய இசையில்(நாதஸ்வரம்) நு/லோவர்கிரன்லி தமிழ் வித்தியாலயம் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்கு சொந்தக்காரரான திருநாவுக்கரசு சதுர்ஷன் என்ற மாணவனையும் அவரை பயிற்றுவித்த பாடசாலையின் சங்கீத ஆசிரியர் ம.சிவயோகன் ஆசிரியரையும் ஆலோசனை வழங்கி ஊக்குவித்த பாடசாலை அதிபர் K.பாலகிருஸ்ணன் அவர்களையும் பிரதேசத்தின் சார்பில் வாழ்த்தி மகிழ்கின்றோம். (A.R.அருள்)
இன்றைய தினம் அநுராதபுரத்தில் நடைபெற்ற தேசிய மட்ட நாட்டார் பாடல்கள் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட பது/ கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவச் செல்வங்களுக்கும் அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியை திருமதி.T. பானுமதி அவர்களுக்கும் உதவி புரிந்த ஆசிரிய சொந்தங்களுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அதிபர் ச.ராஜேந்திரா அவர்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். ராமு. தனராஜா
இம்மாத இறுதியில் இருந்து 55 ரூபா விலையில் முட்டையை நுகர்வோருக்கு வழங்க கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கம் உடன்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப்பின்னர் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்குப்பின்னர் இத்தொழில் துறையைச்சேர்ந்தோர் கருத்து தெரிவிக்கையில் ,விற்பனையாளர்களுக்கு ரூபா 49/= க்கு முட்டை வழங்குவதாக குறிப்பிட்டனர். இடைத்தரகர்கள் அவற்றை களஞ்சியப்படுத்தி செயற்கையாக விலை அதிகரிப்பை ஏற்படுத்துவதாகவும் இவர்கள் தெரிவித்தனர். 55 ரூபாவுக்கு முட்டையை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையில் இம்மாத இறுதியில் இருந்து நாளாந்தம் 20 லொறிகளில் முட்டைகளை கொழும்புக்கு அனுப்பிவைப்பதாக கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கத்தினர் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கொழும்புக்கு கொண்டுவரப்படும் முட்டைகளை வாகனங்கள் மூலம் பொது மக்கள் கூடுதலாக வாழும் பகுதிகளில்…