Author: Thana

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென் மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அநுராதபுரம், குருணாகல் மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Read More

கஹவத்தை சம்பவம் தொடர்பில் அமைச்சரின் அதிரடி நடவடிக்கை கஹவத்தை நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாகவும் வீடமைப்பு சம்பவம் தொடர்பிலும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (27/04/2026) திங்கட்கிழமை அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெருந்தோட்ட பகுதிகளில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் என்ற அடிப்படையில் அடியாட்களை வைத்திருப்பது சட்டத்திற்கு முரணானது என்றும் இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் படியும் அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆலோசனையும் வழங்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்திய பிரதி அமைச்சர் குறிப்பிட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் CEOவை அமைச்சின் அலுவலகத்திற்கு வரவழைத்து உடனடியாக இந்த பாதுகாப்பு குழுவினர் தொடர்பாக நிருவாகம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் பற்றி அறிக்கை சமர்ப்பிக்கும் படி அறிவுறுத்தியதுடன் இவ்வாறு மக்களுக்கு அச்சுறுத்தலாக…

Read More

கிரிந்திவெல மூதாட்டி கொலை: 38 நாட்களின் பின் 67 வயது சந்தேக நபர் கைது! கிரிந்திவெல: கிரிந்திவெல பகுதியில் 79 வயதுடைய மூதாட்டியை வன்புணர்ந்து, கழுத்தை நெரித்து கொலை செய்த பின், அவரது காதுகளை அறுத்து தங்கத் தோடுகளை கொள்ளையிட்ட பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18ஆம் திகதி கிரிந்திவெல, ஹிஸ்வெல்ல பகுதியில் வசித்து வந்த ஆர்.டி. திலகா மாலினி ஜயரத்ன எனும் வயது முதிர்ந்த பெண், தனது வீட்டில் தனியாக இருந்தபோது மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சம்பவம் தொடர்பில் கடந்த 38 நாட்களாக கிரிந்திவெல பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்ட இந்த நீண்ட விசாரணைகளின் பலனாக, ஞாயிற்றுக்கிழமை (26) அன்று 67 வயதுடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கொலையைச்…

Read More

கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள ‘Walk for Peace’ நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான விசேட போக்குவரத்துத் திட்டம் குறித்து பொலிஸார் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சித்திட்டம் நாளை (28) மாலை 04.00 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, கொழும்பு போக்குவரத்துப் பிரிவினரால் குறித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, நாளை காலை 11.00 மணி முதல் பின்வரும் வீதிகளில் நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவ்வப்போது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்: பண்டாரநாயக்க சுற்றுவட்டம் முதல் பேஸ்லைன் வீதி ஊடாக பொரளை சந்தி வரை, மருதானை வீதி, நந்ததாச கோதாகொட மாவத்தை, வோர்ட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, எஃப். ஆர். சேனாநாயக்க மாவத்தை, சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மாவத்தை, ஹோர்டன் சுற்றுவட்டம், நந்தா மோட்டார்ஸ், சுதந்திர மாவத்தை, பிரேமசிறி கேமதாச மாவத்தை, கேம்பிரிட்ஜ் பிளேஸ், கிளாஸ்…

Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளை வழிநடத்திய பிரதான சந்தேகநபரான பிக்குவை, எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் இன்று (27) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபாணி அபேசேகர இந்த உத்தரவைப் பிறப்பித்தார். கடவத்தை ரம்முத்துகல ஸ்ரீ புண்ய லங்காராம விகாரையைச் சேர்ந்த அகுணுகொலே அமிதானந்த என்ற இந்தச் சந்தேக நபர், தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொறுப்பேற்பதற்காகக் காத்திருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. போதைப்பொருளுடன் 22 பிக்குகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை அடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்ற இந்த பிரதான சந்தேக நபர் மிரிஸ்வத்தை பகுதியில் ஒளிந்திருந்துள்ளார். அங்கு வைத்து நேற்று (26) பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

Read More

புறக்கோட்டையின் நான்கு வெவ்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, சுமார் 20 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பாரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு பின்வருமாறு முறியடிக்கப்பட்டது: முதலாவது கைது: மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், ஓல்கோட் மாவத்தையிலுள்ள மருந்தகம் ஒன்றிற்கு அருகில் 6,000 போதை மாத்திரைகளுடன் முதலில் கைது செய்யப்பட்டார். இரண்டாவது கைது: அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாத்திரைகளை வழங்கிய மற்றுமொரு நபர் மெலிபன் வீதியில் வைத்து மேலும் 6,000 மாத்திரைகளுடன் சிக்கினார். முக்கிய நபர் கைது: இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளை அடுத்து, விநியோகஸ்தராக செயற்பட்ட வத்தளை – மாபோல பகுதியைச் சேர்ந்த நபர் முதலாம் குறுக்குத் தெருவில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1,80,000 போதை மாத்திரைகளும், 4…

Read More

வடபகுதியிலிருந்து சிவனொளிபாத மலைக்கான புனித யாத்திரை, இன்று (24) அதிகாலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பக்திபூர்வமாக ஆரம்பமானது. இன்று  அதிகாலை 5:00 மணியளவில் ஆரம்பமான இந்த யாத்திரையில், 60-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் கலந்துகொண்டுள்ளனர். சிவனது திருவுருவச் சிலையை அலங்கரிக்கப்பட்ட வாகன ஊர்தியில் எழுந்தருளச் செய்து, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பக்திப் பாடல்களைப் பாடியவாறு யாத்ரீகர்கள் தமது பயணத்தைத் தொடங்கினர். தொடர்ச்சியாகப் பத்தாவது ஆண்டாக இடம்பெறும் இந்தப் பாதயாத்திரைக்கு, ‘மலையக இந்து குருமார்களின் ஒன்றியம்’ தனது முழுமையான ஆதரவை வழங்குகின்றது. யாத்ரீகர்கள் பல இடங்களைக் கடந்து, இறுதியில் சிவனொளிபாத மலையைச் சென்றடைந்து அங்கு தரிசனத்தில் ஈடுபடவுள்ளனர்.

Read More

ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேறவேண்டும். இந்தியாவிலிருந்து யாரும் ஈரானுக்கு வரவேண்டாம் என்றும் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. ஈரான் அமெரிக்கா இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், இரு நாடுகளும் எப்போதும் வேண்டுமானாலும் மோதிக்கொள்ள வாய்ப்புள்ளது என்பதால் மீண்டும் போர்ச்சூழல் அச்சுறுத்தலிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் நோக்கில் தூதரகம் (23) இவ்வாறு அறிவிப்பு விடுத்துள்ளது. “இந்தியா – ஈரான் இடையே சில விமானங்கள் இயக்கப்படுவது குறித்து தகவல் கிடைத்துள்ளது. வான்வழிச் சேவைக்கான கட்டுப்பாடுகள் மற்றும் சீரான விமான சேவைக்கான நிச்சயமற்ற சூழல், ஈரானுக்கு செல்லும் சர்வதேச விமான சேவையை தொடர்ந்து பாதித்து வருகிறது. மேற்காசிய பகுதியில் பதற்றமான சூழல் தொடரும் நிலையில், இந்தியர்கள் ஈரானுக்கு பயணிப்பதை தவிர்க்கவேண்டும். ஈரானில் உள்ள இந்தியர்களும் விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேறவேண்டும்” என்று ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, இந்தியர்கள் தூதரகத்தை தொடர்புகொள்வதற்கு +989128109115 +989128109109 +989128109102 +989932179359 ஆகிய தொடர்பிலக்கங்களையும்…

Read More

கூரிய ஆயுதத்தால் தனது தந்தையை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் மகன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் பதிவாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் அதிரஹபிட்டிய பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதிலேயே இந்த கொலை சம்பவம் பதிவாகியுள்ளதாக ஆம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் 33 வயதுடைய மகனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், இனந்தெரியாத கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இங்கிரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த மூதாட்டி தனது வீட்டிலிருந்து ஆற்றுக்குக் குளிக்கச் சென்றபோது, வழியில் மறைந்திருந்த இனந்தெரியாத கும்பல் அவரை வழிமறித்துள்ளது. இதன்போது, அவர்கள் மூதாட்டியைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், அவரிடமிருந்த இரண்டு சவரன் தங்க நகைகளையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தோட்டப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More