Author: Thana

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி முதல் பின்வரும் சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் : 075 092 2595

Read More

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை : காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய…

Read More

டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவற்கு கல்வி சீர்திருத்தங்கள் அவசியமாகும் என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக உயர் பிரிவில் கற்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். ஒரு இலட்சம் அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம்  (02) ஆரம்பித்துள்ளது. இதன் கீழ் கேகாலை மாவட்ட செயலகத்தில் . அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்கும் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் அரசாங்க அதிகாரிகள் பலர் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்ட வாய்ப்புள்ளது. இந்தத் துறையின் மூலம் கடந்த ஆண்டில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை இலங்கைக்கு ஈட்ட முடிந்தது. 2024ஆம் ஆண்டுக்குள் அதனை மூன்று பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே தொழில்நுட்ப அமைச்சின் இலக்காகும்…

Read More

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த செயலியின் ஊடாக சுற்றுலாப் பயணிகள் தங்கள் இருப்பிடத்தை அறிந்துகொள்வதற்கு அவர்கள் விரும்பினால் அனுமதிக்கலாம்.கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களில் ,இவர்களின் பாதுகாப்புக்காக சுற்றுலா பயணி பொலிஸ் குழு கடமையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். சுற்றுலா தொழில்துறையினை அபிவிருத்தி செய்வது இதன் நோக்கமாகும். 15 இலட்சம் சுற்றுலா பயணிகளை அடுத்த வருடம் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறினார்.

Read More

மலையகத்தின் ஆக்கப்பூர்வமான சேவைகளுடன் வளர்ந்து வரும் இளையோர் அமைப்பான நுவரெலியா SMART YOUTHS அமைப்பின் மற்றுமொரு சமூக வேலைத்திட்டம் அமைப்பின் தலைவர் சுந்தரம் வினோத் சுந்தர் தலைமையில் நேற்று 04/12/2022 அக்கரப்பத்தனை பிரதேசத்தில் இடம்பெற்றது, குறித்த நிகழ்வில் கஷ்ட பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை பைகள் மற்றும் அப்பியாச கொப்பிகள் சுமார் 100 பேருக்கு வழங்கிவைக்கப்பட்டது, இதற்கான முழு அணுசரணையையும் வடமாகாணத்தில் இயங்கிவரும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது,அத்துடன் பல பிரதேசங்களிலிருந்து வருகைத்தந்திருந்த பெற்றோர்கள்,மாணவர்களுக்கான போதைப்பொருள் மற்றும் சமூக சீர்கேடுகள் தொடர்பான சமூக விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. சரத்

Read More

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்புத்தளை தம்பேதன லிப்டன் சிட் சுற்றுலாப் பகுதிக்கு சுற்றுலா வந்த மட்டக்களப்பு மற்றும் இரத்தினப்புரி பகுதிகளைச் சேர்ந்த 20 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஹப்புத்தளை பங்கட்டி வைத்தியச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்றுக்காலை சுமார் 11.30 மணியளவில் இடம்பெற்றதோடு குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களை தம்பேதன முச்சக்கர வண்டி சாரதிகளால் பங்கட்டி வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களுள் 8 பெண்களும் 10 ஆண்களும் இரண்டு சிறுவர்களுமாக மொத்தம் 20 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ராமு தனராஜா

Read More

பதுளை ஸ்பிரிங்வெலி கனிஷ்ட தமிழ் வித்தியாலய மாணவர்வர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது. மலையக மக்கள் முன்னணியின் தலைவர் ராதாகிருஸ்ணனின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் குறித்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

வடமாகாணம் – வவுனியா மாவட்டம் வவுனியா – புதுக்குளம் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் சிந்தையிலே வீற்றிருந்து சீர்வழங்கும் சித்திவிநாயகரே சீரான நல்வாழ்வை அளித்தெம்மை வாழவைக்க வந்திடுவார் உள்ளத்தில் இருத்தியவர் நல்லருளைப் பெற்றிடுவோம் புதுக்குளம் கோயில் கொண்டுறையும் விநாயகர் அருளிடுவார் வழித்துணையாயிருந் தெமக்கு காப்பளிக்கும் சித்திவிநாயகர் வருந்தீமை தடுத் தெம்மை வாழவைக்க வந்திடுவார் உள்ளத்தில் இருத்தியவர் பேரருளைப் பெற்றிடுவோம் புதுக்குளம் கோயில் கொண்டுறையும் விநாயகர் அருளிடுவார் வந்ததுன்பம் போக்கிவிடும் வரும் துன்பம் தடுத்துவிடும் சித்திவிநாயகர் வாழ்வுக்கு வழிகாட்டி வல்லமையாய் வாழவைக்க வந்திடுவார் இதயத்தில் இருத்தியவர் நல்லியக்கம் பெற்றிடுவோம் புதுக்குளம் கோயில் கொண்டுறையும் விநாயகர் அருளிடுவார் புத்துணர்வு தந்து பொலிவுதரும் சித்திவிநாயகர் புத்துணர்ச்சி தந்து வழிகாட்டி வாழவைக்க வந்திடுவார் நெற்றியிலே இருத்தியவர் வழிகாட்டல் பெற்றிடுவோம் புதுக்குளம் கோயில் கொண்டுறையும் விநாயகர் அருளிடுவார் வன்னித் தமிழ் மண்ணில் வந்துறையும் விநாயகர் வறுமை நிலை போக்கும் வழிகாட்டி வாழவைக்க வந்திடுவார் சிந்தையிலே இருத்தி சீர்வாழ்வைப் பெற்றிடுவோம்…

Read More

மமா/கம்/தொலஸ்பாக தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு 02.12.2022 மற்றும் 03.12.2022 ஆகிய இரு தினங்களாக பாடசாலை பிரதான மண்டபத்தில் ACT Canada/Sri Lanka மற்றும் Lanaka Vision Action Foundation ஊடாக இணைத்து நடத்தப்பட்டன. முதல்நாள் (02.2.2022) அன்று தரம் 6-8 மற்றும் 9-11 இரண்டு பகுதியாக தொலைபேசி பாவனை, போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் தீமைகள், வாழ்க்கை முறை மற்றும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு குறித்த விளக்கங்கள் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன. இரண்டாவது நாள் (03.2.2022) தரம் 9-11 வரையிலான மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி அளிக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் மாணவர்கள் மிக ஆர்வமாக கருத்தரங்கில் பங்கேற்றமை மட்டுமல்லாது பெற்றார் சிலரும் பங்கேற்றமை சிறப்பம்சமாகும். இரண்டு நாட்களாக நடைப்பெற்ற குறித்த கருதரங்கினை இரா.சிவயோகன் உபதலைவர்/ ஆலோசகர் ACT Sri Lanka அவர்களின் மேற்பார்வையின் கீழ் வளவாளர்களாக எஸ் .சிவாPCCF அதிகாரி,(DS Office, NawalapitiyaDip in Psychology,Dipinhealth&hospitalmanagementLife skill…

Read More

2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில், வெளியாகியுள்ள பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி பிரகாரம் எட்டியாந்தோட்டை சென்மேரிஸ் தமிழ் பாடசாலையில் 08 மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி வாய்ப்பு கிடைத்துள்ளது. எஸ் .கிரிஷாந்தன் -பொறியியல் தொழில்நுட்பம்- சப்ரகமுவ பல்கலைக்கழகம் ,எம் .குமுதினி நடனம் ராமநாதன் கலைக்கூடம் யாழ்பாணம் ,ஆர்.மோனிஷா கலைப்பிரிவு கிழக்குப் பல்கலைக்கழகம்,எஸ் .ஜெனோமா சங்கீதம் ராமநாதன் கலைக்கூடம் யாழ்பாணம், எஸ் .பிரியங்கா கலைப்பிரிவு கிழக்குப் பல்கலைக்கழகம், வி .ரொபினா சங்கீதம் ராமநாதன் கலைக்கூடம் யாழ்பாணம், எஸ் .தனுஜன் கலை பிரிவு சுவாமி விபுலானந்தா நிருவகம் கிழக்கு பல்கலை ,ரூத்மெரின் ராமநாதன் கலைக்கூடம் யாழ்பாணம்.

Read More