Author: Thana

நேற்று இரவு முதல் லுணுகலை, பசறை , நமுனுகுலை ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசுவதனால் அப்பிரதேசங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று காலை பசறை பண்டாரவளை வீதியில் காற்றின் காரணமாக பசறை நமுனுகுலை வீதியில் 12 ம் கட்டைப் பகுதியில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்தமையினாலும் அதே வீதியில் அம்பலம் பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்தமையினால் பசறை பண்டாரவளை க்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதோடு மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஹொப்டன் 19 ம் கட்டைப் பெருந்தோட்ட பகுதியில் வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்தமையினால் குறித்த வீட்டில் பெண்ணொருவர் காயமுற்ற நிலையில் லுணுகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அத்துடன் லுணுகலை பொலிஸ் சோதனை சாவடியின் மேல் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்தமையினால் குறித்த சோதனை சாவடி சேதமடைந்துள்ளது. லுணுகலையில்…

Read More

அதிக காற்று காரணமாக இராகலை புறுக்சைட்டில்  முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில்  ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (07/12/22) இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி ஓட்டிச் சென்ற ஒருவர் உயிர் தப்பிய அதேவேளை பின்னால் அமர்ந்து சென்ற ஒருவரே இவ்வாறு உயிரழந்துள்ளார். அதேவேளை கல்கடபத்தனவில் வீட்டில் மரம் விழுந்து ஒருவர் உயிரழந்துள்ளார். இவ்விரண்டு சம்பவங்களும் அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு மக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். மலையகம்.lk செய்திகளுக்காக ராகலையிலிருந்து சசி.

Read More

பசறை,லுனுகலை பகுதிகளில் பலத்த காற்று காரணமாக பொதுமக்கள் மக்கள் பாதிப்பு இவர்களுக்கான உடனடி மாற்று நடவடிக்கைகள் குறித்து செந்தில் தொண்டமான் மாவட்ட அதிபருக்கு பணிப்ப்புரை பசறை, லுணுகலை உட்பட்ட தோட்டப் பகுதிகளில் நேற்று இரவுமுதல் திடீரென வீசிவரும் பலத்த காற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்குமாறு மாவட்ட அதிபருக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மாற்று இடங்களில் தங்கவைப்பதுடன் அவர்களுக்கான உலர் உணவுகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு,சேதமடைந்த வீடுகளை சீர்திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார். அத்துடன் இப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பாடசாலையை சீர்திருத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊவா மாகாண செயலாளருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.

Read More

பதுளை பசறை பகுதிகளில் பலத்த காற்று    ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளில் கூரைத்தகடுகள் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. பசறை – நமுனுகுல பிரதான வீதிபி பிலகம – பசறை வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தமையால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. நடராஜா மலர்வேந்தன்

Read More

மத்திய மாகாணம்- கண்டிமாவட்டம்- கண்டிமாநகர், கட்டுக்கலை அருள்மிகு- செல்வவிநாயகர் திருக்கோயில் கண்டி மாநகர் தனிலே கோயில் கொண்ட விநாயகரே கண்ணின் மணியானவனே காத்தருள வந்திடைய்யா கட்டுக்கலை தனிலிருந்து திருவருளைத் தருபவனே கந்தனுக்கு மூத்தவனே உன்கருணை வேண்டுமைய்யா சக்தியம்மை திருமகனே சங்கரனின் மூத்தவனே சங்கடங்கள் வரும் வேளை தடை செய்துவிட்டிடைய்யா சண்முகனாம் உன்தம்பி வேல்கொண்டு வந்திருந்து சக்தியற்ற மக்களுக்குத் துணையிருக்கச் செய்திடைய்யா தந்தை தாய் பெரியரென்று தரணிக்குச் சொன்னவனே தறிகெட்டுத் திரிகின்ற மக்களை நீ திருத்திடைய்யா தண்மதியைத் தலையின்மேல் கொண்டவனாம் உன்தந்தை தரணிக்கு அன்னவனின் கருணையை நீ சேர்த்திடைய்யா வரும் வினைகள் போக்கிவிடும் வல்ல விநாயகரே வந்தவினை போக்கிடவே விரைந்து வந்திடைய்யா வலுவிழந்து நிற்கும் மக்கள் வளமுற்று வாழவுந்தன் வல்ல அருளினையே அடைய அருளிடைய்யா மத்திய மலையகத்தின் மத்தியிலே வந்துறையும் விநாயகரே மனமகிழ்வு தந்தெம்மை வாழவைக்க உடனிரைய்யா முயற்சியுடன் முன்னேறி வாழ்வில் உயர்வு பெற வல்லமை யெமக்களித்து காப்பினைத் தந்திடைய்யா மலைசூழ்ந்த திருவிடத்தில்…

Read More

மாத்தளை – ஹுன்னஸ்கிரிய பகுதியில் சிறுவர்கள் யாசகம் (பிச்சை) பெறுவது சடுதியாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஹுன்னஸ்கிரிய பகுதியானது, அதிகளவாக சுற்றுலா பயணிகள் வருகைத் தரும் பகுதியாக காணப்படுகின்றது. இங்கு வாகனங்களில் வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை பின்தொடர்ந்து, சிறுவர்கள் யாசகம் (பிச்சை) பெறுவதை அவதானிக்க முடிகின்றது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த சிறுவர்களே அதிகளவில் யாசகம் (பிச்சை) பெறுவதை அங்கு சென்ற செய்தியாளர் குழுவினால் அவதானிக்கப்பட்டுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளமை, சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளமை போன்றவற்றுக்கு மத்தியில், சிறுவர் யாசகர்கள் அதிகரித்துள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது. சிறுவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், எதிர்காலத்தில் நாடு பல்வேறு அசாதாரண சவால்களை எதிர்நோக்க நேரிடும் என்பதில் சந்தேகம் இல்லை. நன்றி-ட்ரூ சிலோன்

Read More

சர்வதேச பல்லுயிர் பன்முகத்தன்மை மாநாடு COP15 கனடாவில் நேற்று ஆரம்பமானது. ஐக்கிய நாடுகளின் செயலாளர் Antonio gutteres, கனடாவின் பிரதமர் Justin trudeau ஆகியோர் மாநாட்டை ஆரம்பித்து வைத்தனர். கனடாவின் Onondaga பிராந்தியத்தின் முதல்வரான பழங்குடியினத் தலைவர் Tadodaho sid hill வரலாற்றில் முதல்முறையாக ஆரம்பவுரையாற்றினார்.

Read More

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மௌசாகலை பகுதியில் பூட்டியிருந்த வீடொன்றை உடைத்து வீட்டினுள் இருந்த பல லட்சம் ரூபாய் பெறுமதியான பழைமையான பித்தளை பொருட்கள் மற்றும் பழைமையான வானொலி பெட்டி முட்கம்பி, இரண்டு சமையல் தாச்சிகள் ஆகியவை திருடப்பட்டுள்ளதாக பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டுக்கு அமைய பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E. M. பியரத்னவின் ஆலோசனையின் பேரில் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி S.I. ரத்னாயக்க தலைமையிலான 39315 சாஜன் நிரஞ்சன், P.S.63711 சமன் பாலித, P.C.68558 சமில் ஆகிய குழுவினர் மௌசாகலை பகுதிக்குச் சென்று குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது 49,54 வயதுடைய மௌசாகலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடம் இருந்து குறித்த பொருட்கள் கைப்பற்றப் பட்டதாகவும் குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் நாளைய தினம் (08/12) பசறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக…

Read More

சபரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள பலாங்கொடை சீ.சீ. தமிழ் மகாவித்தியாலயம் க.பொ.த (உ / த ) பெறுபேறுகளுக்கமைய தொடர்ந்து பல மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புவதில் சாதனைப்படைத்து வருகின்றது. அந்தவகையில் கடந்த வருட பெறுபேறுகளுக்கமைய வரலாற்றின் முதல் தடவையாக இரு மாணவிகளான செல்வி சப்னா மதுசி, செல்வி கோகுல தர்சினி ஆகியோர் எமது பாடசாலையிலிருந்து சட்டத்துறைக்கு தெரிவாகியுள்ள அதே வேளை 14 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு பல்வேறு புதிய கற்கை நெறிகளை தொடர்வதற்கு அனுமதிபெற்றுள்ளனர். 1.செல்வி.சப்னா மதுஷி- சட்டம் (யாழ்ப்பாண பல்கலைக்கழகம்) 2.செல்வி.கோகுல தர்ஷனி – சட்டம்(யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ) 3.செல்வி.சர்னிஜா – மனித வள மேம்பாடு (ஊவா பல்கலைக்கழகம் ) 4.செல்வி.ரஞ்சனி – MIT (தென்கிழக்கு பல்கலைக்கழகம் ) 5.செல்வி.ஸ்ரீ வித்யா – தொடர்பாடல் கற்கை (கிழக்கு பல்கலைக்கழகம் ) 6.செல்வி.துஷாரி – செயற்றிட்ட முகாமைத்துவம்(வவுனியா பல்கலைக்கழகம் ) 7.செல்வி.லக்ஷிகா- கலை (யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ) 8.செல்வி.சாலினி – கலை (கிழக்கு…

Read More

நீர் விநியோகிக்க பயன்படும் இயந்திரம், எரிவாயு அடுப்பு மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவற்றை திருடிய சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பசறை மீதம்பிட்டிய பகுதியில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் திருடப்பட்ட பொருட்களை ஒளித்து வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கமைய, குறித்த ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மீதம்பிட்டிய பகுதியை சேர்ந்த 28, 25, 21 ஆகிய வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியரட்னவின் ஆலோசனையின் பேரில், குற்றத்தடுப்பு பிரிவின் SI ரத்நாயக்கவின் வழிகாட்டலில், சமில் (PC68588), சமன் (PS 63811), நிரஞ்சன் (39315) ஆகியோர் அடங்கிய குழுவினால் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாகியுள்ள நபரை கண்டுபிடிக்கும் விசாரணைகளை பசறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். ராமு தனராஜா

Read More