Author: Thana

மறைந்த எழுத்தாளர் சாகித்ய ரத்ன தெளிவத்தை ஜோசப் அவர்களின் ஆய்வு மற்றும் ஆவணவச் சேகரிப்பு பணிகளை கௌரவிக்கும் வகையிலும் அதனை ஊக்குவிக்கும் வகையிலும் பாக்யா பதிப்பகம் முன்னெடுக்கும் நிலைபேறான நினைவேந்தல் திட்டமாக ‘தெளிவத்தை ஜோசப் ஆய்வு மற்றும் ஆவணவகம்’ ( Theliwatte Joseph Reserch and Documentation Centre ) வத்தளையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தெளிவத்தை ஜோசப் அவர்களின் துணைவியார் திருமதி. பிலோமினாள் ருபெல்லா ஜோசப் அம்மையாரின் கரங்களினால் திறந்து வைக்கப்பட்ட நிலையத்தின் பணிகளை பாக்யா பதிப்பகம் முகாமைச் செய்யவுள்ளதாக அதன் நிறுவுனரும் எழுத்தாளருமான மல்லியப்புசந்தி திலகர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த அவர், “தெளிவத்தை ஜோசப் அவர்கள் தனியே எழுத்து, இலக்கியம் என்பதற்கு அப்பால் ஆய்வு மற்றும் ஆவணம்க்கல் பணிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர். அவர் வாழ்ந்த காலத்திலேயே பல ஆயிரக் கணக்கான நூல் சேகரிப்புகளை கொழும்புத் தமிழ்ச்சங்கத்துக்கு வழங்கி இருந்தார். அவர் இறக்கும் தறுவாயில் அவரது…

Read More

குருணாகலை மாவத்தகமை ,முவன் கந்தை சரஸ்வதி தமிழ் வித்தியாலய மாணவிகளான செல்வி நவரட்ணம் புஸ்பராணி ,ராமஜெயம் தினுஷா , துரைராசு காயத்திரி ஆகிய மூவரும் யாழ்ப்பாணம் இராமநாதன் கலை கல்லூரிக்கு தெரிவாகியுள்ளனர். குறித்த மாணவர்களை அதிபர் உட்பட ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Read More

ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுச் சபைக் கூட்டம் – 2022 இடம் : பாடசாலை பிரதான மண்டபம் காலம் : 2022.12.10 திகதி (சனிக்கிழமை) நேரம் : காலை 10 மணி அங்கத்தவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். பழைய மாணவர் சங்க பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்தல் தொடர்பான அறிவித்தல். சங்கத்தின் பின்வரும் பதவிகளுக்கு தகைமையுடைய அங்கத்தவர்கள் சங்கத்தின் அமைப்புவிதிகளுக்கு (யாப்பிற்கு) அமைய வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். பிரதித் தலைவர் செயலாளர் உப செயலாளர் பொருளாளர் உப பொருளாளர் சங்கத்தின் அமைப்பு விதிகளுக்கு (யாப்பிற்கு) அமைய பதவிகளுக்கு போட்டியிடும் அங்கத்தவர்களின் தகைமைகள். 🖇️ சங்கத்தின் அங்கத்துவத்தைப் பெற்று குறைந்தது ஒரு வருட காலத்தை பூர்த்தி செய்திருந்தல் வேண்டும். 👉🏿 2023 ஆண்டுக்கான அங்கத்துவப் பணத்தை வேட்பு மனுவோடு முழுமையாக செலுத்தல் வேண்டும். வேட்புமனு காலம் முடிவடையும் திகதியும் நேரமும். 👉🏿 2022.12.05 திகதி…

Read More

மேல் மாகாணம் – கம்பஹா மாவட்டம், பேலியகொடை, அருள்மிகு ஸ்ரீ பூபால விநாயகர் திருக்கோயில் வாழ்விற்கு ஒளியூட்டி வளமளிக்கும் விநாயகரே வற்றாத பெருங்கருணை எமக்களிக்க எழுந்திரைய்யா வாக்கு தவறாமல் நாமென்றும் வாழ்வதற்கு ஏற்றவழி செய்திடைய்யா பேலியகொடை கோயில் கொண்ட பூபால விநாயகரே மருள்போக்கி அருளளித்து வளம் அளிக்கும் விநாயகரே தழும்பலில்லா நல்வாழ்வை எமக்களிக்க எழுந்திரைய்யா நிதானம் தவறாமல் நாமென்றும் வாழ்வதற்கு ஏற்றவழி செய்திடைய்யா பேலியகொடை கோயில் கொண்ட பூபால விநாயகரே வழித்துணையா யிருந்தெம்மைக் காத்தருளும் விநாயகரே வெற்றியுடன் நாம்வாழ எமக்கருள எழுந்திரைய்யா வழிதவறிச் செல்லாமல் நாமென்றும் வாழ்வதற்கு ஏற்றவழி செய்திடைய்யா பேலியகொடை கோயில் கொண்ட பூபால விநாயகரே நல்லறிவு தந்தெம்மை வாழவைக்கும் விநாயகரே நல்ல நினைவுகளை எமக்கருள எழுந்திரைய்யா நிம்மதி இழக்காமல் நாமென்றும் வாழ்வதற்கு ஏற்றவழி செய்திடைய்யா பேலியகொடை கோயில் கொண்ட பூபால விநாயகரே நிம்மதி என்றும் தந்து நிலைப்படுத்தும் விநாயகரே நேர்மையாய் நாம் வாழ எமக்கருள எழுந்திரைய்யா நொந்து மனம்…

Read More

வெளிவந்துள்ள 2021 (2022) க.பொ.தசாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய மிகச்சிறந்த பெறுபேறுகளை பலாங்கொடை சீ.சீ.தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் பெற்று கொடுத்துள்ளனர். விசேடமாக தமிழ்மொழி, கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் உட்பட பல பாடங்களில் எதிர்பார்த்த பெறுபேறுகளை விடஅதிசிறந்த பெறுபேறுகளைபெற்றுக்கொடுத்து பலாங்கொடை கல்விவலயத்தில் சிறந்ததொருபாடசாலையாக இப்பாடசாலையைஅடையாளப்படுத்தியுள்ளனர்.இப்பெறுபேறுகளுக்கு அமையபின்வரும் இரு மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்குப்பெருமை சேர்த்துள்ளனர். 1. T. விதுர்ஷன் 2. K. கிறிஷ்டீனா அத்தோடு 7A, 6A, 5A, 4A, 3A, 2A, 1A போன்ற பெறுபேறுகளைப் பெற்று 9 பாடங்களிலும் சித்தி அடைந்துள்ளனர்.மேலும் பரீட்சைக்குத் தோற்றிய 103 மாணவர்களில் 77 மாணவர்கள்உயர்தரம் கற்பதற்கு சித்திப்பெற்றுள்ளனர். இத்தகைய சிறந்த பெறுபேறுகளைபெற்றுக் கொடுப்பதற்காக கடுமையாக உழைத்த ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும் பல வழிகளில் உதவி புரிந்த பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும்தெரிவித்து மகிழ்கின்றோம் என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதோடு , இச்சாதனைகளை நிகழ்த்திய மாணவர்களை…

Read More

மலையக கலாசார ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமரர் தர்ஷன் தர்மராஜ் அவர்களின் ஞாபகார்த்த இலவச ஊடக செயலமர்வு கொழும்பு இராமகிருஷ்ணா தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. குறித்த கருத்தரங்கில் சிரேஷ்ட ஊடகவியலாளர் நிர்ஷன் ராமானுஜம், ஊடகவியலாளர் ரஞ்சன் அருண் பிரசாத் ஊடகவியலாளர் சு.அஜித் குமார் மற்றும் ஊடகவியலாளர் தனா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் குறித்த நிகழ்வுக்கு ட்ரூசிலோன், தமிழன் பத்திரிக்கை,மலையகம்.lk மற்றும் தமிழ் FM ஆகியவை ஊடக அனுசரனையை வழங்குகின்றன.

Read More

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையில் கடந்த 25/11/2022 நடத்தப்பட்ட செய்தி முன்வைப்பு போட்டியில் தமிழ் மொழிப் பிரிவில் பங்குப் பற்றிய பொகவந்தலாவையை சேர்ந்த ஸ்ரீதரன் பானுஜாஸ்ரீனி முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டார்.இவர் முன்னாள் பொகவந்தலாவை சென்மேரிஸ் பாடசாலை ,மற்றும் நாவலபிட்டிய இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவியும் ஆவார், தற்போது அவர் வயம்ப பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கற்று வருகின்றமை  குறிப்பிடத்தக்கது. அவரை மலையகம் .lk வாழ்த்துகின்றது.

Read More

இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாஒயா பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பிரதான பாதையில் இருந்து சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளகியுள்ளது. கொழும்பில் இருந்து வெலிமடை சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளகியுள்ளது .விபத்தின் போது இருவர் முச்சக்கர வண்டியில் இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் தற்போது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருவதால் வாகனங்களை அதிகமாக ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் பரிசோதனை,கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதை காணக்கூடியதாகவுள்ளது விபத்துக்கான காரணத்தை ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Read More

கிளனனோர் தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் குறித்த தோட்ட நிர்வாகத்துடன் இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலில் ஈடுபட்டார். கிளனனோர் தேயிலை தொழிற்சாலையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், 1.தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்ட அரை சம்பளம் – முழு சம்பளம் வழங்க நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது. 2.வலுக்கட்டாயமாக 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனை நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்டது – 20 கிலோ வலுக்கட்டாயமாக நிர்ணயிக்க முடியாது எனவும், தேயிலை மலைகளுக்கு ஏற்ற வகையிலே நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும், 20 கிலோவாக இருந்த அடிப்படை தொகை 16 கிலோவாக குறைக்கப்பட்டது. 3.ஒவ்வொரு நிலுவைக்கும் வலுக்கட்டாயமாக 3 கிலோ தேயிலை குறைப்பு – நாளை முதல் 1 கிலோவாக மாற்றி அமைக்கப்பட்டது. 4.ஞாயிறு மற்றும் போயா நாட்கள் 1 1/2 சம்பளம் வழங்கப்படவில்லை – தற்போது வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது 5.நிபந்தனை, ஓய்வூதியத் தொழிலாளர்களுக்கு கைகாசு அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது -இனிவரும்…

Read More

இன்று காலை பதுளை ஸ்பிரிங்வெளியில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று பதுளை இருந்து ஸ்பிரீங்வெளி செல்லும் வீதியில் தும்பிலியாவ பகுதியில் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாக இருந்த நிலையில் சாரதியின் சாதூர்யமான முயற்சியினால்  பாரிய விபத்து ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பேருந்தில் கிட்டத் தட்ட 50பேர் வரை பயணித்ததாகவும் இதில் அதிகளவானோர் பாடசாலை மாணவர்கள் எனவும் இவர்கள் அனைவரும் கருத்தரங்கு ஒன்றுக்கு குறித்த பேருந்தில் வருகைத்தந்ததாகவும் தெரிவிக்கப் படுகின்றது. பேருந்தில் பயணித்த எவருக்கும் எதுவித சேதங்களும் ஏற்படவில்லை. மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா

Read More