Author: Thana

’24வது மதுரை திரைப்பட விழா”வில் நம் நாட்டின் இயக்குனர் நடராஜா மணிவானனின் ” தொட்டி மீன்கள் ” குறும்படம் எதிர்வரும் 10ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு திரையிடப்படவுள்ளது. இவர் பல குறுந்திரைப்படங்களை இயக்கியதோடு முதற்கனவே என்ற வெப் தொடரையும் இயக்கியுள்ளார்,இவர் பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியின் பழையமாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – அராலி செட்டியார்மடம் அருள்மிகு மண்டையன் திடல் வீரகத்தி விநாயகர் திருக்கோயில் பழம் பெருமை கொண்ட இடம் உறைகின்ற விநாயகரே பண்பு நெறி பிறழாமல் வாழும் வரம் வேண்டுமப்பா துன்பங்கள் தடுத்தெம்மைக் காத்தருள வேண்டும் செட்டியார் மடம் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே வடஇலங்கைத் தமிழ் மண்ணில் உறைகின்ற விநாயகரே வளம் கொண்ட வாழ்வினையே தந்தருள வேண்டுமப்பா குறை கொண்ட வாழ்வை நாம் அடையாமல் காத்தருள வேண்டும் செட்டியார் மடம் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே மருத நிலச் சூழலிலே உறைகின்ற விநாயகரே மனமகிழ்வு குன்றாமல் வாழ வரம் வேண்டுமப்பா தடுமாறும் மனநிலையைத் தடுத்தருள வேண்டும் செட்டியார் மடம் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே வயல் வெளியில் தனித்திருந்து உறைகின்ற விநாயகரே பயணங்கள் பயமின்றி அமைய காப்பளிக்க வேண்டுமப்பா பிழையான சிந்தனைகள் உடைத்தெறிய வேண்டும் செட்டியார் மடம் கோயில் கொண்ட வீரகத்தி விநாயகரே துன்பங்கள் துடைத்தெறிந்து…

Read More

இங்கிரிய, றைகம், கீழ் பிரிவு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் கௌரி லலிதா ரூபினி என்ற மாணவி 2022 சாதாரணதர பரீட்சைகளின் பெறுபேறுகளில் 9A பெற்று களுத்துறை மாவட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு மத்தியில் வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். இவர், இங்கிரிய தோட்டத்தில் வசிக்கும் ரஞ்சித்குமார், அழகம்மா தம்பதிகளின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்விப் பயிலும் மற்றொரு மாணவியான. பிரகாஷினி 8A ,B 1B பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். இந்த மாணவி இங்கிரிய, சாந்த பீட்டர்ஸ் பகுதியில் வசிக்கும் பாலசுப்ரமணியம், தம்பதிகளின் மகளாவார். இந்த இரண்டு மாணவிகளின் பெறுபேறுகளால் விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம் பெருமையடையும் இதேவேளை, இந்த மாணவிகள் இருவரும் பிரத்தியேக தனியார் வகுப்புகளுக்குச் செல்லாமல் பாடசாலை கல்வியை மட்டுமே சிறப்பாக கற்று இந்த மகத்தான வெற்றியை சாத்தியமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. றைகம், கீழ் பிரிவு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலய வரலாற்றில் முதல் முறையாக இந்த…

Read More

கொழும்பை மையமாக கொண்டு இயங்கும் உதவும் கரங்கள் அமைப்பின் நிதி உதவியின் கீழ் அண்மையில் நாவலபிட்டிய பஹல கொரகொயா அல் அரபா முஸ்லீம் வித்யாலய தரம் ஒன்று இரண்டு மாணவர்களுக்கு இலவசமாக பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலை கேட்போர் கூடத்தில் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பெற்றோர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Read More

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (02) 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்றிரவு 10 மணி முதல் 15 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Read More

டயகம- நுவரெலியா வீதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. (ரா. கவிஷான் – மெராயா) டயகமவில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து இன்று காலை 06.40 மணியளவில் கௌலஹேனா பகுதியில் வாங்கியில் சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேரூந்தில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பேருந்து விபத்தின் காரணமாக பணிக்கு செல்லும் பயணிகள் பலரும் சிரமத்திற்க்கு உள்ளாகியுள்ளனர்.

Read More

பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் நேற்று (01) வருகை தந்ததாகப் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார். இதன்படி, நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 32 பாடசாலைகளைச் சேர்ந்த 5,000இற்கும் அதிகமான மாணவர்களுக்கு பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகை தந்திருந்தனர். உலகப் பாராளுமன்றங்களுடன் ஒப்பிடுகையில், ஒரே நாளில் இவ்வளவு பேர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தமை சாதனையாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார். கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பொது மக்கள் கலரியானது கடந்த செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்காகத் திறக்கப்பட்டதையடுத்து, தீவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 25,000இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாராளுமன்ற விவாதங்களை அவதானிக்க வந்துள்ளனர். எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாராளுமன்றத்திற்கு வருகை தரும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஒரு குவளை பால் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.…

Read More

இன்று முதல் நாடளாவிய ரீதியில் ,ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ காஸ் இலங்கை நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எதிர்காலத்தில் காஸ் தட்டுப்பாடு ஏற்பட எந்த வாய்ப்பும் இல்லையென லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். நான்காயிரம் மெற்றிக் தொன் காஸை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல் நாட்டை வந்தடையும். 34 ஆயிரம் மெற்றிக் தொன் காஸிற்கான கட்டளை முன்வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் முதலாவது கப்பலே இலங்கை கடற்பறப்பை நெருங்கியிருப்தாகவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் எவ்வித அசௌகரியமும் இன்றி ,நுகர்வோர் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இன்று ஆகக் குறைந்தது 117,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நிறுவனம் எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர்,, எதிர்வரும் நாட்களில் இந்த நடவடிக்கை தொடரும் .மற்றொரு வகை ரிவாயு சிலிண்ரையும் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பண்டிகை காலத்தை நெருங்குவதால்; சந்தையில் எரிவாயு சிலிண்டர்களுக்கு கூடுதலான கிராக்கி…

Read More

பாலினம், சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இந்த சட்டமூலத்தை உருவாக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் மட்டுமன்றி ஏனைய துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும், அரச மற்றும் தனியார் துறைகளும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார். புதிய சட்டமூலத்தின் ஊடாக தேசிய பெண்கள் ஆணைக்குழு என்ற பெயரில் சுயாதீன ஆணைக் குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இலங்கையின் முதலாவது அரச சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 2 வீதமாக இருந்ததாகவும், சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டு 91 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தற்போதைய பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5.3 வீதம் மட்டுமே எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  (01) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, ”இன்று…

Read More

ஊவா மாகாணம் – பதுளை மாவட்டம் – பண்டாரவளை அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆறுமுகங் கொண்டு ஆறுதலைத் தரும் முருகன் ஆக்கமுடன் வாழ நல்ல கருணையை அளித்திடுவான் கேட்கும் நலன் தந்து வாழ்வை உயர்த்திடுவான் பண்டாரவளை கோயில் கொண்ட சிவனார் இளமகனார் மலை சூழ்ந்த நன்னிலத்தில் வந்துறையும் திருமுருகன் மானமுடன் நாம் வாழ வழியமைத்துத் தந்திடுவான் முன்னேறும் வழிகாட்டி நம் வாழ்வை உயர்த்திடுவான் பண்டாரவளை கோயில் கொண்ட சிவனார் இளமகனார் வள்ளி தெய்வானையரை அருகு கொண்டு காட்சிதரும் வேல்முருகன் வழுவில்லா நல்வாழ்வைத் தவறாமல் எமக்காக்கிடுவான் வெற்றிகளைத் தந்து வாழ்வை உயர்த்திடுவான் பண்டாரவளை கோயில் கொண்ட சிவனார் இளமகனார் தமிழ்த் தெய்வம் என்ற புகழ் கொண்ட வனாம் எங்கள் மால்மருகன் தழும்பாத மனநிலையைத் தப்பாமல் தந்திடுவான் திறமைகளைத் தந்தெங்கள் வாழ்வை உயர்த்திடுவான் பண்டாரவளை கோயில் கொண்ட சிவனார் இளமகனார் சிவசுப்பிர சுவாமி யென்ற பெயர் பூண்ட எங்கள் குகன் சீர்மை…

Read More