Author: Thana
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் தொண்டமனாறு, அருள்மிகு செல்வச்சந்நிதி முருகன் திருக்கோயில் சிந்தையிலே இருந்தெமக்கு அருள்பொழியும் வேல்முருகன் சீரான வாழ்வினையே எமக்களிப்பான் உறுதி கொள்வோம் செல்வநிலை தந்தெமக்கு சுகவாழ்வு உறுதி செய்வான் செல்வச் சந்நிதியுறை உமையவளின் இளமகனார் வடஇலங்கை கோயில் கொண்டு வளமளிக்கும் வேல்முருகன் வற்றாத கருணையினை எமக்களிப்பான் உறுதி கொள்வோம் தொட்டதெல்லாம் துலங்கச் செய்து தூயநிலை உறுதி செய்வான் செல்வச் சந்நிதியுறை உமையவளின் இளமகனார் தீயபகை கொடுமைகளைத் துடைத் தெறிந்து காப்பளிக்கும் வேல்முருகன் திடமான மனவுறுதி எமக்களிப்பான் உறுதி கொள்வோம் தூயவள வாழ்வைத் தந்தெமக்கு உறுதி செய்வான் செல்வச் சந்நிதியுறை உமையவளின் இளமகனார் கேட்கும் நல்லவரம் தந்தெம்மை ஆற்றல் தரும் வேல்முருகன் காலமெல்லாம் உடனிருந்து வழிகாட்டி விட்டிடுவான் உறுதி கொள்வோம் கவலைகளைப் போக்கியென்றும் இதமளிப்பான் உறுதி கொள்வோம் செல்வச் சந்நிதியுறை உமையவளின் இளமகனார் வந்ததுன்பம் துடைத் தெறிந்து இன்பநிலை தரும் வேல்முருகன் வையகத்தில் தலைநிமிர்ந்து வாழவைப்பான் உறுதிகொள்வோம் வெற்றிகளைத் தந்தெம்மைத் தலைநிமிர…
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்டப் மேற்பிரிவில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் எல்டப் மேற்பிரிவிற்கு விரைந்து சந்தேகத்திற்கு இடமான வீட்டினை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது வீட்டினுள் கசிப்பு உற்பத்திக்கு ஆயத்தமான நிலையில் வைக்கப்பட்டிருந்த 156000 மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதோடு 44 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு குறித்த சந்தேக நபருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (08/12) பசறை நீதிவான் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ராமு தனராஜா
இந்திய தமிழ் சினிமாவில் கால்பதித்து நடிகராக ,உதவி இயக்குனராக ,ஒளிப் பதிவு (camera Man Assistant) இப்படி பல்துறை கலைஞராக வளர்ந்து வரும் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தை சேர்ந்த குணாவை (குணசேகரன்) மலையகம் .lk வாழ்த்துகின்றது. இவர் விஜய் நடித்து வெளிவரவுள்ள வாரிசு பட குழுவில் இணைந்து செயற்பட்டுள்ளதோடு ,விஜய் நடித்த கத்தி திரைப்படத்திலும் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கந்தலோயாவில் 13 பேர் A/L பரீட்சை எழுதி, 10 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு. வணிகப் பிரிவில் 02 மாணவர்களும் கலைப் பிரிவில் 08 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். முதன்முதலாக வர்த்தக பிரிவிலிருந்து, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு பொது முகமைத்துவ கற்கைநெறிக்காக ஒரு மாணவனும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முகாமைத்துவ கற்கைநெறிக்காக ஒரு மாணவனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, கலைப்பிரிவில் 04 மாணவர்கள் ஆங்கில மொழிமூல கற்கைநெறிகளுக்காகவும், 04 மாணவர்கள் தமிழ் மொழி மூல கற்கைநெறிகளுக்காகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களின் பெயர்களும், அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழகம் மற்றும் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள கற்கைநெறிகள், மொழிமூலம் என்பவற்றை கீழே காணலாம். B. Naveenkumar( 3A ) University of Sri Jayawardenapura Management (Public) Honours English Medium B. நவீன்குமார் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் பொது முகமைத்துவம் ஆங்கில மொழி மூலம் ****** S. Subeswaran ( 2A,1B…
இம்முறை பெரும் போகத்திற்குத் தேவையான மொத்த உரத்தொகையும் (MOP – Muriate of Potash) கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள உரத்தை விரைவில் விவசாயிகளுக்கு வழங்குவதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. பசளையை ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. இதற்கு முன்னர் நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து பசளையை தரையிறக்கும் பணி தற்போது இடம்பெற்று வருகிறது. அமெரிக்கா, இலங்கைக்கு ஒன்பதாயிரத்து 300 மெற்றிக் தொன் பசளையை வழங்கியுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் வழங்கியுள்ள இந்தப் பசளை அந்த நிறுவனம் நாட்டுக்கு வழங்கும் உதவியின் முதல் தொகுதியாகும். அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தப் பசளையை நேற்று (05)கொழும்பு துறைமுகத்தில் பொறுப்பேற்றார். அங்கு கருத்து வெளியிட்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், இலங்கையின் விவசாயிகளுக்கு உதவ தமது நாடு விருப்புத்துடன் இருப்பதாக குறிப்பிட்டார். உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் நாட்டுக்கு கிடைத்துள்ள யூரியா பசளையின் அளவு 85 ஆயிரம் மெற்றிக்…
டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை ,சமையல் எரிவாயுவின் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும். ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதேவேளை, லிற்றோ கேஸின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கேஸின் விலை அதிகரித்துள்ளதை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். 12.5 கிலோகிராம் எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அதன் புதிய விலை நான்காயிரத்து 610 ரூபாவாகும். ஐந்து கிலோகிராம் எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதோடு, அது ஆயிரத்து 850 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 2.3 கிலோகிராம் எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் புதிய…
கந்தகெடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கந்தகெடிய பகுதியில் பழைமையான புத்தர் சிலை ஒன்று விற்பனைக்காக வீடொன்றில் வைக்கப்பட்டிருப்பதாக கந்தகெடிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி புத்திகவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கந்தகெடிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் தசநாயகவின் ஆலோசனைக்கு அமைய கந்தகெடிய பொலிஸ் நிலையத்தில் இரண்டு அதிகாரிகள் சிலையை கொள்வனவு செய்யும் நபர்கள் போல் வேடத்துடன் குறித்த வீட்டுக்கு சென்று சிலையை பரிசோதிக்க வேண்டும் என கூறிய போது சந்தேக நபர்களினால் சிலை மாறுவேடம் பூண்ட பொலிஸாரிடம் கொடுக்கப்பட்டது. இதன்போது மேலும் சில பொலிஸ் குழுவினர்கள் குறித்த வீட்டினை சுற்றி வளைத்து சிலையை கைப்பற்றியதோடு 46,41,26 வயதுகளையுடைய மூவரை கைது செய்துள்ளனர். குறித்த சிலை மிகவும் பழைமை வாய்ந்தது எனவும் 80 லட்சம் ரூபாவுக்கு குறித்த சிலையை விற்பனை செய்வதற்காக பேரம் பேசியதாகவும் கந்தகெடிய பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த சந்தேக நபர்கள் மூவரையும்…
அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற உத்தரவுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இந்த உத்தரவு அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதை நிறைவு பெற்றவுடன் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று இந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அரசாங்க ஊழியரும் 55 வயதை எட்டிய பின்னரோ அல்லது அதற்குப் பின்னரோ அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெறலாம். மேலும், ஓய்வுபெறும் உத்தியோகத்தருக்கு மாற்றீடாக ஒருவர் இல்லாத சந்தர்ப்பங்களில் அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்று மேலும் ஒரு வருடத்திற்கு 60 வயதுக்கு மேற்பட்ட அதிகாரியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். ஓய்வூதியச் சட்டத்தின் 17ஆவது சரத்து முற்றாக…
இலங்கை வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு புதிய பொலிஸ் நடமாடும் சேவைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அடுத்த வருடத்தில் 15 இலட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை நவம்பர் மாதத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்தியின் மூலம் 107 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளன. இதற்கமைவாக, கடந்த 11 மாத காலங்களில் சுற்றுலாத் துறையின் மூலம் 1,100 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகை கிடைத்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில் பெறப்பட்ட வருமானம் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேலதிகமாகும். தற்போது தொழில் துறை வழமைக்குத் திரும்பியிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் தங்கியிருப்பதனை தவிர்க்கும் வகையில் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அவசியமான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிக்கும் நோக்கில் இந்திய தேசிய பால்பண்ணை மேம்பாட்டுச் சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், உள்நாட்டின் அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார். அது தொடர்பில், இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டுச் சபையும் (NDDB) இந்தியாவின் அமுல் பால் நிறுவனமும் இணைந்து இந்நாட்டில் திரவப் பால் உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் உள்ளுர் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், நீண்டகால திட்டத்தினூடாக இலங்கையை பாலில் தன்னிறைவடையச் செய்வதே இதன் நோக்கம் என்றும் இங்கு…