Author: Thana
சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக்க ரத்னமலல நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் புதல்வரான ஜோஹான் பெர்ணான்டோ, சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனவரி 05ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும்
இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை நாட்டின் வானிலையில் தொடர்ந்தும் தாக்கம் செலுத்தி வருகின்றது. எனவே, ஜனவரி 05ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த…
நுவரெலியா மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசன முறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சிரமதானப் பணி
திட்வா சூறாவளியால் சேதமடைந்த நுவரெலியா மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசன முறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சிரமதானப் பணி ஜனவரி 10 முதல் 14 வரை நடைபெறும். டிட்வா பேரழிவால் சேதமடைந்த நுவரெலியா மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசன முறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சிரமதானப் பணி ஜனவரி 10 முதல் 14 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆராச்சி தெரிவித்தார். அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் சுமார் 3000 சகோதர சகோதரிகளின் பங்கேற்புடன் இந்த மாபெரும் சிரமதானப் பணி செயல்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
“Dream Destination” திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட தல்பே ரயில் நிலையம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது
“Dream Destination” திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட தல்பே ரயில் நிலையம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. Clean Sri Lanka திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் “Dream Destination” திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட முதல் ரயில் நிலையமான தல்பே ரயில் நிலையத்தின் பணிகள் நிறைவடைந்து பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (02) காலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் “Dream Destination”திட்டம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் Clean Sri Lanka திட்டத்தால் தனியார் துறையின் ஆதரவுடன் அரச – தனியார் கூட்டு திட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம், நாட்டில் விசேட தேவைகள் உள்ள சமூகம் உட்பட அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் ஒரு சுத்தமான, அழகான ரயில் நிலைய கட்டமைப்பை உருவாக்குவதாகும். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்…
2025ஆம் ஆண்டில் இலங்கையில் TikTok தளத்தில் அதிகம் தேடப்பட்ட சொற்களை TikTok நிறுவனம் வெளியிட்டது. இந்த ஆண்டு இலங்கையர்கள் எவற்றில் அதிக ஆர்வம் காட்டினர் என்பதை இத்தரவுகள் பிரதிபலிக்கின்றன. அவர்கள் பின்தொடரும் பிரபலங்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் (content creators), செவிமடுக்கும் இசை, நாடகத்தொடர்கள், சுற்றுலா செல்ல விரும்பும் இடங்கள் என இந்த ஆண்டு இலங்கையர்களின் கவனத்தை ஈர்த்தவற்றை இத்தரவுகள் வெளிப்படுத்துகின்றன. கிரிக்கெட் ஹைலைட்ஸ் முதல் பொழுதுபோக்கு செய்திகள், கண்டி எசல பெரஹர போன்ற பண்பாட்டு நிகழ்வுகள் வரை 2025 தேடல் பட்டியல் பரந்துபட்டதாக உள்ளது. TikTok தேடல் என்பது இன்று வெறுமனே காணொளிகளை பார்க்கும் தளமாக மட்டுமின்றி, அன்றாட முடிவுகளை எடுக்கவும், நிகழ்நேர தகவல்களை அறியவும் பயன்படும் ஒரு தேடல் கருவியாக மாறியுள்ளதை இது எடுத்துக்காட்டுகிறது. மக்கள் TikTok-ஐ வெறுமனே காணொளிகளைப் பார்க்க மட்டுமல்லாமல், Trending விடயங்களை அறிய, மறக்கமுடியாத தருணங்களை மீட்டுப்பார்க்க, சுற்றுலா இடங்களை ஆராய, தங்களுக்கு ஏற்ற…
இலங்கைக்கு கிழக்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகி வருவதால், கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என வளிமண்டலியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை,…
நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரியவத்தை 02 ஆம் பிரிவில் வசித்து வந்த 14 வயதான சிறுவனொருவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவல் ஒன்று தொடர்பில் நூரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சிறுவன் தாக்கப்படுவதாக நேற்று (02) இரவு நூரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதற்கமைய உடனடியாக செயற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, வீடொன்றுக்கு அருகில் குறித்த சிறுவன் விழுந்து கிடந்துள்ளார். இதனையடுத்து அந்தச் சிறுவனை நூரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையின் வைத்தியர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என்பதால், பிரேத பரிசோதனைக்காக சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறுவனின் தந்தை நூரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பத்தலையிலிருந்து தெஹிவளைக்கு நீர் விநியோகிக்கும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக இன்று (3) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதற்கமைய மொரட்டுவை, ராவத்தாவத்தை, சொய்சாபுர, ரத்மலானை, கல்கிஸ்ஸை, தெஹிவளை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா, கொலன்னாவ ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக பத்தரமுல்லைப் பிரதேசத்திற்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்தத் திடீர் வெடிப்பை சீர்செய்து இன்று (3) நள்ளிரவுக்கு முன்னர் நீர் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை எதிர்பார்க்கிறது.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில், நோர்வூட் வெஞ்சர் தோட்டப் பகுதியில் சுமார் 25 வருடங்களாக இயங்கிவரும் மதுபானசாலையை மூடுமாறும், அதற்கான அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யுமாறும் கோரி இன்று (03) காலை பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. “பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி”, “சிறுவர்களின் வாழ்வைச் சீர்குலைக்கும் மதுபோதை”, “பாடசாலை இடைவிலகலுக்குக் காரணமாகும் மதுபானசாலைகள்”, “வெஞ்சரின் எதிர்காலம் மதுபோதையில்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மதுபானசாலை குடியிருப்புப் பகுதியில் இயங்குவதால், அருகிலுள்ள ஆலயத்தில் இடம்பெறும் வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், தோட்டப் பகுதியில் இந்த மதுபானசாலை அமைந்துள்ளதால், பலர் மாதாந்த சம்பள அடிப்படையில் கடன் புத்தகத்தில் பதிவு செய்து மதுபானம் அருந்தி வருகின்றனர். இதனால் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் எனப் பலரும்…
2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அந்தத் திட்டங்களின் செயல்பாடுகளை ஒரே நிறுவனத்தின் கீழ் மேற்பார்வை செய்வதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் “தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை” தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத் திட்டங்கள் மற்றும் தற்போதைய செயல்பாடுகளை மீளாய்வு செய்வதற்காக தேசிய வீட்டமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுடன் (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 10,200 மில்லியன் ரூபா செலவில் செயல்படுத்தப்படும் வீட்டுத் திட்டம் மற்றும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்காக 5,000 மில்லியன் …