Author: Thana

நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று (1) இரவு 10 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மூன்று ஆண்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏனைய இருவர் காயமடைந்தனர். அவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாடகைக்காக பெறப்பட்டிருந்த வீடொன்றில் தங்கியிருந்தவர்களை இலக்கு வைத்து, முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் பொரளை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதேநேரம் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் அம்பலாந்தோட்டை மற்றும் தெமட்டகொடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களில் ஒருவரின் உடலில் 4 துப்பாக்கி ரவைகளும், மற்றுமொருவரின் உடலில் ஒரு ரவையும் பாய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டுக்கான…

Read More

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக, 22 நாடுகள் மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) மூலம் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகள் கிடைத்துள்ளன. இந்த வெளிநாட்டு நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களிடையே முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, திறம்பட பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஜனாதிபதி அவர்களால் வெளிநாட்டு நிவாரண உதவி (பொருட்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்ட குழு (HL-FRAC) நிறுவப்பட்டது. செய்யத் உறுதி பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் செயல்படும் இந்தக் குழு பல தடவைகள் சந்தித்து, நிவாரண நடவடிக்கைகள் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் அதிகபட்ச செயல்திறனை ான தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக நாட்டிற்கு வரும் அனைத்து வெளிநாட்டு உதவிகளும் ஒருகொடவத்தை களஞ்சிய வளாகத்தில் பாதுகாப்பாகவும் முறையாகவும் களஞ்சியபப்டுத்தப்பட்டு வருகின்றன. இந்நிவாரணப் பொருட்களை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் திறம்பட வழங்கும் நடைமுறை, தேசிய அனர்த்த நிவாரண…

Read More

மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காலியிலிருந்து கொழும்பு, புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது. கடல் நிலை: காலியிலிருந்து கொழும்பு, புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட…

Read More

முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். அதேநேரம் சம்பளம் மற்றும் கொடுப்பனவு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

மண்சரிவு குறித்த முன்னெச்சரிக்கைகள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, நேற்று (29) முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது. அதற்கமைய, குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளிலும் நீரோடைகளின் இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் பரிசோதிக்கப்பட்டு, மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என அடையாளம் காணப்பட்டுள்ள வீடுகள் மற்றும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், இதுவரையில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதேபோன்று, மலைச்சரிவுகள், பாறைகள் சரிந்து விழக்கூடிய இடங்கள் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஏற்படக்கூடிய அபாயகரமான நிலைமைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு தேசிய…

Read More

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்தப் பிரதேசங்களின் சில இடங்களில் 50 மி.மீ-க்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும். கண்டி மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவுப் பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றினால்…

Read More

20 கோடியே 68 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியே கொண்டு செல்ல முயன்ற நான்கு இலங்கை பயணிகள் இன்று (29) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்த போதைப்பொருள் தொகையும் இதன்போது அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டது. சந்தேக நபர்கள் இந்தப் போதைப்பொருள் தொகையை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் கொள்வனவு செய்து, இந்தியாவின் மும்பை நகருக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பெண்கள் என்பதுடன், இவர்கள் பொரளை மற்றும் ஒருகொடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் கொண்டு வந்த பயணப் பைகளில் 20 பொதிகளாக வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கிராம் 684 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, பிரதி பொலிஸ் மா அதிபர்…

Read More

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டும் தங்களது வியாபாரங்களை பிரதேச செயலகங்களில் வியாபார பதிவின் கீழ் பதிவு செய்யாததன் விளைவாக அரசு வழங்கும் இரண்டு இலட்சம் ரூபா இழப்பீட்டு தொகையை பலருக்கு பெறமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேபோல விவசாயிகள் பிரதேச செயலகத்தில் முறையாகப் பதிவு செய்யப்படாத காரணத்தால், அவற்றுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கால்நடைப் வைத்திருப்போரும் : இதேபோல, பதிவு செய்யப்படாத கால்நடைகளின் இழப்புகளுக்கும் தங்களால் இழப்பீடு பெற முடியவில்லை எனப் கால்நடைகளை வைத்திருப்போர் கவலையடைந்துள்ளனர். நுவரெலியா உட்பட அதன் அண்டிய பகுதிகளில் உள்ள பல சிறு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், முறைப்படி ‘பிஆர்’ (Business Registration) வியாபார பதிவு செய்யாத காரணத்தால், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 2 லட்சம் ரூபாய் வரையிலான இழப்பீட்டுத் தொகையை வழங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது,இது குறித்து தெரிவதாவது பிரதேச செயலக அதிகாரிகள், அரசு விதிகளின்படி முறையான ஆவணங்கள்…

Read More

நாவலப்பிட்டி ராக்சாவ தோட்ட விவகாரம் – பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை மறுக்கும் தோட்ட நிர்வாகம். நாவலபிட்டி தொலஸ்பாக பகுதியில் உள்ள ராக்சாவ தோட்ட ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் தோட்ட நிர்வாகத்தைக் குறித்து அண்மைய நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் திட்டமிட்டு புனையப்பட்டவை என தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது. கடந்த மாதம் 27 ஆம் திகதி நிலவிய சீரற்ற காலநிலையின் போது இத்தோட்டத்தில் எவ்வித மண்சரிவு அபாயமும் ஏற்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டதாகவும்,தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த குடும்பங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள், வீட்டுத் தளபாடங்கள், உடைகள் மற்றும் மாணவர்களுக்கான உபகரணங்கள் என அடுத்த 5-6 மாதங்களுக்குத் தேவையான பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன எனவும் தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது ,இதற்கான ஆதாரங்கள் நிர்வாகத்தின் கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளிலும், பதிவேடுகளிலும்…

Read More

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் முன்னெடுத்த விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமைய முன்னாள் அமைச்சர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறித்த துப்பாக்கியின் இலக்கங்களைப் பரிசோதித்த போது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், அந்தத் துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து விளக்கம் அளிக்க அவர் தவறியுள்ளார். இதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read More