Author: Thana
இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்! இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இலங்கையின் நகரப் பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் திறம்பட முன்னெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோ பேருந்து சேவைக்கு வசதிகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மூன்றாவது டிப்போ முற்றம் ஜா-எல, ஏகலயில் நேற்று (09) முதல் தனது செயல்பாடுகளை ஆரம்பித்துள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன அவர்களின் தலைமையில், தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த அவர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது. மெட்ரோ பேருந்து திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாக சேவைகளை ஆரம்பித்துள்ள இந்த டிப்போவை மையமாகக் கொண்டு, 20 புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. கம்பஹா மாவட்டத்தின் ஏகலயிலிருந்து கொழும்பு மாவட்டத்தின் தலங்கம வரை செல்லும் இந்த மெட்ரோ பேருந்து பாதை 29.9 கிலோமீட்டர் நீளமுடையதாகும். இதில் 21 மெட்ரோ பேருந்து நிறுத்தங்கள் நிறுவப்பட்டுள்ளன.
பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாநகரசபையில் இடம்பெற்ற நிதி மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இணங்கவே இந்த கைது இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாகச் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சபையின் இரண்டு வருமான பரிசோதகர்கள் உள்ளிட்ட சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் மேயர் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகநபர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பேக்கரி நிறுவனத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 200,000 ரூபாய் அபராதம்
நுகர்வோரைத் திசைதிருப்பும் வகையில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பேக்கரி நிறுவனத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 200,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போதே இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்தில் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 2026/04/16 எனக் காலாவதித் திகதியிடப்பட்ட ஸ்ட்ராபெரி சுவையூட்டப்பட்ட கிரீம் பன்கள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தொடரப்பட்ட வழக்கு நேற்று (09) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனம் தம்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டது. இதனையடுத்தே பிரதான நீதவான் குறித்த நிறுவனத்திற்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். நுகர்வோருக்கான விசேட அறிவித்தல்: உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அதன் உற்பத்தித் திகதி மற்றும் காலாவதித் திகதிகளை முறையாகச் சரிபார்ப்பது நுகர்வோரின் பொறுப்பாகும் என…
அரசு பல்கலைக்கழக அனுமதி: 2ஆம் கட்ட தெரிவுப்பட்டியல் வெளியீடு – செப்டம்பர் 17 வரை பதிவு செய்யலாம்!
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாவது கட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களின் இளமானி பட்டப் படிப்புகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) குறித்த மாணவர்களின் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்தச் சுற்றின் கீழ் பல்கலைக்கழகப் படிப்புகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 2026 செப்டம்பர் 17 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட பெறுபேறுகள், பல்கலைக்கழக அனுமதி மற்றும் பதிவு செய்வதற்குத் தேவையான மேலதிக விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் www.ugc.ac.lk ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது மற்றும் செல்லுபடியற்றது உயர் நீதிமன்றம்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் இன்று (10) தீர்ப்பளித்துள்ளது. காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட மற்றும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் (CPA) உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. ஹோமகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், 2018 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஞானசார தேரருக்கு 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு மே மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார். முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இந்த பொதுமன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு முரணானது…
ஜனாதிபதியின் தலைமையில் அரச இலக்கிய விருது விழா 2026 இலங்கை இலக்கியத் துறையைத் தமது உன்னதமான இலக்கியப் படைப்புக்களால் வளப்படுத்திய இலக்கியவாதிகளை கௌரவிக்கும் அரச இலக்கிய விருது விழா 2026, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக் கழகம் மற்றும் அரச இலக்கிய குழு ஆகியவை இணைந்து 67 ஆவது முறையாக அரச இலக்கிய விருது விழாவை ஏற்பாடு செய்ததுடன், 2025 ஆம் ஆண்டில் இலங்கை இலக்கியத் துறைக்குத் தமது சிறந்த படைப்புகளினால் ஆற்றிய சேவையைப் பாராட்டி, 50க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பல எழுத்தாளர்கள் இந்நிகழ்வில் அரச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும், இலங்கை இலக்கியத் துறைக்கு உன்னதமான சேவையாற்றிய சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிமூல மூன்று இலக்கியப் படைப்பாளிகளுக்கு…
ஜனாதிபதிக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இந்து சமுத்திர பிராந்தியத்தின் ஊடாக நடைபெறும் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவின் முழுமையான ஆதரவை எதிர்பார்க்கிறோம் ஜனாதிபதி – இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் 03 புதிய ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன – இணையவழி ஊடாக 03 பெய்லி பாலங்கள் திறந்து வைக்கப்பட்டன இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் உத்தியோகபூர்வமாக இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளமை 38 ஆண்டுகளுக்குப் பின்னர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவும் பாதுகாப்பு, பொருளாதாரம், சமுத்திர மற்றும் பிராந்திய…
இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவிற்கும் இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மலையக இந்து குருக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மலையகப் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களின் நிர்வாக நடவடிக்கைகள், அறநெறிப் பாடசாலைகளை நடத்திச் செல்லல், குருமார்களின் தேவைகள், அத்துடன் ஆலய காணிகள் மற்றும் மதத் தலங்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மேலும், இலங்கை மலையக இந்து குருமார்கள் ஒன்றியத்தினால் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மலையக இந்து குருமார்கள் வாழும் பகுதிகளிலுள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர்…
பாடசாலை வரலாற்றில் ஐந்து வருடங்களின் பிறகு சாதனை.ஹங்குரன்கெத்த கல்வி வலயத்தில் காணப்படும் மிகவும் பின்தங்கிய பாடசாலையான ம. மா.ஹங். மெரிகோல்ட் தமிழ் வித்தியாலயம்.
பாடசாலை வரலாற்றில் ஐந்து வருடங்களின் பிறகு சாதனை.ஹங்குரன்கெத்த கல்வி வலயத்தில் காணப்படும் மிகவும் பின்தங்கிய பாடசாலையான ம. மா.ஹங். மெரிகோல்ட் தமிழ் வித்தியாலயம். தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் ஹங்குரன்கெத்த கல்வி வலயத்தில் தமிழ் மொழிப்பாடசாலைகளில் இரண்டு மாணவர்கள் ஒரே தடவையில் வெட்டுப்புள்ளிக்கு மேலான புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர். அத்தோடு பதினொரு மாணவர்கள் பரீட்சைக்கு தோன்றியதோடு வெட்டுப்புள்ளிக்கு மேல் இரண்டு மாணவர்களும்,100 புள்ளிகளுக்கு மேல் 07மாணவர்களும்,70- 100 புள்ளிகள் வரை 3 மாணவர்களும் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். அத்தோடு இவ்வாறான வரலாற்று சித்தியினை மாணவர்களை சிறப்பாக வழிப்படுத்திய வகுப்பாசிரியர் S. மனோஜ்குமார் அவர்களை மெரிகோல்ட் தமிழ் வித்தியாலய அதிபர் ,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் அனைவரும் இவர்களை வாழ்த்துவதில் பெருமைக்கொள்கிறது. பாடசாலை சமூகம்