Author: Thana
கொழும்பு 09 பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து கீழே விழுந்து 12 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 14 மாடிகளைக் கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் (Rooftop) அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், குறித்த சிறுவன் ஏனைய சில சிறுவர்களுடன் இணைந்து சுற்றியுள்ள காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே தவறி கீழே விழுந்துள்ளான். உயிரிழந்த சிறுவன் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்தவர் என உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மருதானை காவல்துறையினர் (Maradana Police) மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இன்று (17) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் புளோரஸ் (Flores) பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை. இந்தோனேசியாவில் கடந்த 15ஆம் திகதி ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகளும் ஏற்பட்டன. இதனால் 53 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த பலரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் 9,200 இற்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். நிலநடுக்கத்தின் பின்னர் அந்நாட்டின் சுற்றுலாப் பகுதிகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், இந்தோனேசிய துறைமுக அதிகாரசபையினால் கடல்வழிப் போக்குவரத்துச் சேவைகளை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், நிலநடுக்கம் காரணமாக குறித்த மாகாணங்களில் மின்தடை…
மிக நீண்ட காத்திருப்போர் பட்டியலைக் கொண்ட கண்டி தேசிய வைத்தியசாலையில் 8,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாட்டின் இலவச சுகாதார சேவைக் கட்டமைப்பில் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை வினைத்திறனானதாகவும் முறையானதாகவும் மாற்றுவதற்காக, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டலின் கீழ், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் தற்போது விசேட வேலைத்திட்டமொன்று செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அவ்வேலைத்திட்டத்தின் கீழ், கண்டி தேசிய வைத்தியசாலையில் 570 மில்லியன் ரூபாய் (ரூபா 570,000,000.00) பெறுமதியைக் கொண்ட மூன்று அதிநவீன மருத்துவ உபகரணத் தொகுதிகள் உத்தியோகபூர்வமாக நோயாளர் சிகிச்சை சேவைகளுக்காக அர்ப்பணிக்கும் நிகழ்வு, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி அவர்களின் பங்கேற்புடன் இன்று (15) முற்பகல்…
எல்ல பிரதேச அபிவிருத்திக்காக 1000 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பிரம்மாண்ட திட்டங்கள்
எல்ல (Ella) பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1000 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியிலான பல்வேறு பிரம்மாண்ட அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். சுமார் 26 வருடங்களாக எவ்வித புனரமைப்புப் பணிகளும் இன்றி காணப்பட்டதும், அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளால் பயன்படுத்தப்படுவதுமான எல்ல வாட்டர்போல் வீதி (Waterfall Road) கொங்கிரீட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, பின்வரும் வீதி அபிவிருத்திப் பணிகள் தற்போது அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன: துன்ஹிந்த – பல்லகெடுவ – தெமோதரை வீதி – 500 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படுகிறது. எல்ல – பஸ்சர வீதி – 370 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படுகிறது. கந்தேகும்புக வீதி – 270 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படுகிறது. பியரபந்தொவ…
சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’ – பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு!*
*சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’ – பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு!* ஒவ்வொருவரினதும் ஊர்களிலும் அறநெறி பாடசாலைகள் ஆரம்பிக்கின்ற பொழுது, சிறைக்கூடத்திற்கு செல்கின்ற கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், நமது பிள்ளைகள் நல்ல ஒழுக்கமுள்ள மனிதனாக உருவாகுவதற்கு அறநெறி பாடசாலைகளின் பங்களிப்பு அளப்பறியது என்றார். இந்து சமய அறநெறி மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் நிகழ்வு- 2025 நிகழ்வு இன்று (2026.08.16) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இதில்பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், “உண்மையிலேயே மனிதன் மனிதனாகவும், விழுமிய பண்புகளுடனும், சமூகத்திலே அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பிரஜையாகவும் வளர்வதற்கு இந்த அறநெறி கல்வி…
நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு – ஜனாதிபதியின் மேற்பார்வையில் விசேட கணக்காய்வுக் குழு நியமனம்!
நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் விசேட கணக்காய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்திலுள்ள 10 பிரதேச செயலக அலுவலகங்களிலும், 2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியதாக இந்தத் கணக்காய்வுக்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குறிப்பாக, நோர்வுட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களில் ‘அஸ்வெசும’ நலன்புரிப் பயனாளர் கொடுப்பனவுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. மேலும், ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அனர்த்த நிவாரணக் கொடுப்பனவுகள் உரிய முறையில் விநியோகிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்தும், கோவிட்-19 தொற்றுநோய்க் காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்குச் சமுர்த்தி திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு குறித்தும்…
கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இரு தனியார் பேருந்துகள், கினிகத்தேனைப் பகுதியில் வைத்து ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. நேற்று இடம்பெற்ற (15)இந்தச் சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் எவருக்கும் காயங்களோ அல்லது பாதிப்புகளோ ஏற்படவில்லை என கினிகத்தேனைப் பொலிஸார் தெரிவித்தனர். இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக வந்தமையினால், முன்னால் சென்ற பேருந்தின் பின்புறத்தில் மற்றைய பேருந்து மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக அதில் பயணித்த பயணியொருவர் தெரிவித்தார். குறித்த பேருந்துகளில் உயர்தரப் பரீட்சை மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் பயணத்துள்ளனர். எனவே, பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுபவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அந்தப் பயணி கோரிக்கை விடுத்துள்ளார். தெய்வாதீனமாக இரு பேருந்துகளில் பயணம் செய்த அனைத்துப் பயணிகளுக்கும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவித்த கினிகத்தேனைப் பொலிஸார், விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!
8 இலட்சம் ரூபாய் பாடநூல்கள் 47,000 ரூபாய்க்கு பழைய காகிடக் கடைக்கு விற்பனை: 5 பேர் விளக்கமறியலில்! கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்குச் சொந்தமான 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடநூல்களை, வெறும் 47,000 ரூபாய்க்கு வெளிநபர் ஒருவருக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இந்த ஐந்து சந்தேகநபர்களும் இன்று கடுவலை நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முதலாம் ஆண்டிற்கான தமிழ் செயல்பாடு மற்றும் பாடநூல்கள் 19,892 காணாமல் போனமை குறித்து கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உயர் பெண் அதிகாரி ஒருவர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த புத்தகத் தொகுதியை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி, அவற்றை பழைய காகித…
அங்குலான கடற்பரப்பில் கடற்படைப் படகு விபத்து: 11 பேர் மீட்பு – ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுப்பு!
அங்குலான கடற்பரப்பில் வழக்கமான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘டோரா’ (Dora) ரகப் படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. தகவல் கிடைத்த உடனடியாக, கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டு மீட்பு நடவடிக்கையில் இறங்கின. கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக விமானப்படையின் Mi-17 மற்றும் Bell 412 ஹெலிகொப்டர்கள் உடனடியாகப் பயன்படுத்தப்பட்டன. விபத்தில் சிக்கிய கடற்படையைச் சேர்ந்த 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, காணாமற்போயுள்ள மேலும் ஒருவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் உள்ள இந்தியா ஹவுஸில் இன்று (15) காலை சிறப்பான நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய தேசியக் கொடியான திரங்காவை ஏற்றி சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னெடுத்தார். இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய சமூகத்தினரும் நிகழ்வில் கலந்துகொண்டு, இந்தியாவின் மீதான தங்களது பெருமையையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்தினர். #IndiaIndependenceDay #IndependenceDay #80thIndependenceDay #Tiranga #India #Colombo #Thinakaran #SriLanka #LKA #SL