Author: Thana
லிந்துலை மவுசா எல்ல தமிழ் வித்தியாலயம் கல்விச் வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது!
நுவரெலியா மாவட்டத்தில், நுவரெலிய கல்வி வலயத்திற்கு உட்பட்ட லிந்துலை மவுசா எல்ல தமிழ் வித்தியாலயம் கல்விச் வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது! அடிப்படையான வசதிகள், முறையான கட்டிடங்கள், வகுப்பறைகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் என எவ்வித முறையான வசதிகளுமமின்றி, பல சவால்களுக்கு மத்தியில் இயங்கும் இப்பாடசாலை, அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100% சித்தியைப் பெற்று (அனைத்து மாணவர்களும் சித்தி) மாபெரும் சாதனை படைத்துள்ளது. அதோடு, வெட்டுப்புள்ளிக்கு மேல் ஒருவர் பெற்று தமது சாதனைப் பயணத்தை கம்பீரமாகத் தொடங்கியுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஈட்டித் தந்ததில் முக்கிய பங்காற்றிய: * அதிபர் திருமதி N. நளினி அம்மையார் அவர்களுக்கு, * மாணவர்களை மிகச் சிறப்பாகத் தயாரித்த வகுப்பாசிரியர் திருமதி A. ஜெசிந்தா ஆசிரியர் அவர்களுக்கு, * மற்றும் இச்சாதனைக்குப் பின்பலமாக நின்று அனைத்து வகையிலும் உதவிய பாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும்…
இஸ்லாம் மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார். சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இஸ்லாம் மதம் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக ஞானசார தேரருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைகளைத் தொடர்ந்து, குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதன்மைப் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் இணைந்து பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அதிகாலை 1.10 மணியளவில் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான SQ-469 என்ற விமானத்தின் மூலம் இவர்கள் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகவுள்ள நிலையிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது.
தித்வா புயலினால் சேதமடைந்த ப்ளக்பூல் – ஹோட்டன் சமவெளி வீதியை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!
2025 நவம்பர் மாத இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட தித்வா புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ப்ளக்பூல் அம்பேவெல பட்டிபொல ஹோட்டன் சமவெளி (B512) (5+ 200 கிலோமீற்றர் தொடக்கம் 12 + 000 கிலோமீற்றர் வரை) வீதியை புனரமைப்பதற்காக தேசிய போட்டி விலைமுறிக் கோரல் முறையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்காக 04 விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர் உயர்மட்ட பெறுகைக் குழுவால் வழங்கப்பட்டுள்ள விதப்புரைகளின் அடிப்படையில் கணிசமானளவு பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான M/s Asset Engineering (Pvt) Limited இற்கு 791.68 மில்லியன் ரூபாய்களுக்கு (வரி இல்லாமல்) வழங்குவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபது20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 119 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 254 ஓட்டங்களைக் குவித்தது. இங்கிலாந்து அணி: 20 ஓவர்களில் 254/4 ஹரி புரூக் – 114* ஓட்டங்கள் (ஆட்டமிழக்காமல்) ஜோஸ் பட்லர் – 80 ஓட்டங்கள் இலங்கை அணி: 19 ஓவர்களில் 135/10 (அனைத்து விக்கெட்டுகளும் இழப்பு) துனித் வெல்லாலகே – 33 ஓட்டங்கள் தசுன் ஷானக – 24 ஓட்டங்கள் 255 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19 ஓவர்களில் 135 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை!
சவூதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் நிலவிவரும் சூழலைக் கருத்திற் கொண்டு, அங்கு வாழும் இலங்கையர்களுக்கு ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகக் காரியாலயம் விசேட பாதுகாப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. பொதுமக்கள் தமது கைபேசிகளுக்கு அவசர எச்சரிக்கைச் செய்தி (National Warning Alert) கிடைக்கப் பெற்றால், உடனடியாகத் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவசரத் தொடர்பு எண்கள்: மக்கா மற்றும் மதீனா பகுதிகள்: 911 ஏனைய பிராந்தியங்கள்: 998 இலங்கைத் துணைத் தூதரக அவசர எண்: 056 098 6671 அவசர நிலைகளின் போது பொதுமக்கள் இந்த எண்களை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு கூடியது
எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு கூடியது – மழை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை செயலமர்வுகள் எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழுவு மற்றும் அதிகாரிகள் குழு, ஐந்தாவது தடவையாகவும் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (14) பிற்பகல் ஒன்றுகூடியது. எல்-நினோ காலநிலைத் தாக்கமானது வறட்சியான நிலையிலிருந்து எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மழையுடன் கூடிய காலநிலைக்கு மாறவுள்ளதால், அதற்கு எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. மழையினால் ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன், அத்தகைய அனர்த்த நிலைமைகளின்போது பொதுமக்கள் எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது தொடர்பான அனர்த்த முன்னெச்சரிக்கை செயலமர்வுகளை நடத்துவதற்கும் குழு கவனம் செலுத்தியது. மண்சரிவு…
ஜனாதிபதி நிதிய சேவைகளை விஸ்தரிப்பதில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய கிழக்கு மாகாண பிரதேச செயலகங்கள் பாராட்டு
ஜனாதிபதி நிதிய சேவைகளை விஸ்தரிப்பதில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய கிழக்கு மாகாண பிரதேச செயலகங்கள் பாராட்டு பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் துரிதமான சேவைகளை வழங்கும் நோக்கில், ஜனாதிபதி நிதிய சேவைகளை பிரதேச செயலக மட்டத்தில் விஸ்தரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டில் உயரிய செயல்திறனை வெளிப்படுத்திய கிழக்கு மாகாணத்தின் பிரதேச செயலகங்களை பாராட்டும் “சேவை பாராட்டு” வேலைத்திட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தா அழகியற்கலை கற்கைகள் நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்றது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகங்களுக்கு இடையில், ஜனாதிபதி நிதிய விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்வது மற்றும் அவற்றுக்கு உடனடியாக பதிலளிக்கும் வினைத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 3 பிரதேச செயலகங்கள் வீதம், தெரிவு செய்யப்பட்ட 9 பிரதேச செயலகங்கள் இதன்போது பாராட்டப்பட்டன. அதற்கமைய, அம்பாறை மாவட்டத்தில் முதல் இடத்தை சம்மாந்துறை பிரதேச செயலகமும்,…
முஸ்லிம் காங்கிரஸின் 32வது பேராளர் மாநாடும் அஷ்ரஃபின் 26வது நினைவேந்தலும் : அடுத்த கட்ட நகர்வுகளும்! (எழுத்து : வை.அறபாத்) இலங்கைச் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் முகவரியாகவும் அவர்களின் அரசியல் தன்னாதிக்கத்தின் குரலாகவும் திகழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தனது வரலாற்றுச்சிறப்புமிக்க 32வது தேசிய பேராளர் மாநாட்டை இயக்கம் உதித்த காத்தான்குடி மண்ணில் எதிர்வரும் செப்டம்பர் 16ம் திகதி புதன்கிழமை நடாத்தவுள்ளது. 1981 செப்டம்பர் 21ல் காத்தான்குடியில் மர்ஹூம் அஹமத் லெப்பை சேர்மன் அவர்களின் தலைமையில் இயக்கமாகத்தோற்றுவிக்கப்பட்டு, பின்னர் 1986 நவம்பர் 26ல் கொழும்பு பாஷா விலா மண்டபத்தில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களால் அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்ட இக்கட்சி, இயக்கமாகி 45 ஆண்டுகளையும் அரசியல் கட்சியாகி 40 ஆண்டுகளையும் பூர்த்தி செய்யும் வரலாற்று மைல்க…
உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாளினை முன்னிட்டு கொட்டகலை ஈர நில பூமியில் சுத்தப்படுத்தல் வேலைத்திட்டம்
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் கொட்டகலை பிரதேச சபையினால் செயற்படுத்தப்படும் 2026 உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாளினை முன்னிட்டு கொட்டகலை ஈர நில பூமியில் சுத்தப்படுத்தல் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் , உறுப்பினர்களான சிவசாமி பத்மநாதன் அவர்கள், கணபதி கண்ணதாசன் , அமித்த ஆனந்த , கோவிந்தராஜ் நேசமலர் , ரசிக்கா ஜீவனி , விஜயசீலன் சுதர்சன் , செயலாளர் சிவராம் ராஜவீரன் அவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என்போர் கலந்துகொண்டனர்.