Author: Thana

உளவியல் மற்றும் ஆலோசனைத் துறையில் டிப்ளோமா கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தார் ஊடகவியலாளர் பாலேந்திரன் ஊடகவியலாளரும், சமாதான நீதிவானும், மலையோரம் செய்திகள் சேவையின் நிறுவனர் மற்றும் முகாமையாளருமான (Founder & CEO – Malaiyoram News) தேசபந்து பா.பாலேந்திரன் அவர்கள், Binzo Digital Campus ஊடாக முன்னெடுக்கப்பட்ட Diploma in Psychology and Counselling கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்து, தனது கல்விப் பயணத்தில் மேலும் ஒரு உயரிய மைல்கல்லை எட்டியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, இன்று செப்டம்பர் 12ஆம் திகதி, கொழும்பு BMICH வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், குறித்த கற்கைநெறிக்கான சான்றிதழை அவர் பெற்றுக்கொண்டார். ஊடகப் பணியையும் சமூகப் பணியையும் முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, கல்வியையும் தொடர்ந்து தனது பயணத்தின் முக்கிய அங்கமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பா.பாலேந்திரன் அவர்கள், அறிவைத் தேடி கற்றலைத் தொடர்வதன் மூலம் தனது அறிவாற்றலையும் தகைமையையும் மேலும் மேம்படுத்தி வருகிறார்.…

Read More

டி சந்ரு  சீதை அம்மன் ஆலயத்திற்கு முன் தொடர்கதையாகும் பாதசாரிகள் கடவையில் இடம் பெறும் விபத்துகள்.. மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் இராமாயணத்துடன் தொடர்புபட்ட வரலாற்று சிறப்புமிக்க சீதாஎலிய பிரதேசத்தில் சீதை அம்மன் ஆலயம் அமைந்துள்ள நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் வாகனங்களின் பாவனையும், போக்குவரத்து நெரிசலும் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது அதற்கு ஏற்றால்போல் ஆலயதிக்கு முன் காணப்படும் பாதசாரிகள் கடவையில் விதிமுறைகளை மீறுதலும், வாகன விபத்துக்களின் எண்ணிக்கையும் கூட அதிகரித்துக் கொண்டே செல்லுகிறது குறித்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மட்டும் விபத்துக்குள்ளாவதில்லை, மாறாக நடைபாதையை பயன்படுத்தும் பாதசாரிகளும், பாதசாரி கடவையை முறையாக பயன்படுத்தும் அப்பாவி மக்களும் கூட விபத்தில் சிக்குகிறார்கள், சில சமயங்களில் உயிரிழக்கவும் செய்கிறார்கள். தற்போதைய நிலையில், வீதிகளில் நாம் மட்டும் விதிகளை பின்பற்றி பயணிப்பதால் மாத்திரம் விபத்துக்களை தடுத்துவிட முடியாது என்கிற நிலை உருவாகிவிட்டது. இறுதியாக வெள்ளிக்கிழமை (11) மாலை வரலாற்று சிறப்புமிக்க…

Read More

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது! ​டுபாயில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. ​இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில், அதிகபட்சமாக அணித் தலைவி பாத்திமா சனா ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக சமரி அதபத்து மற்றும் சமுதி பிரபோதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர். ​131 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 18.4 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுக்களை இழந்து இலக்கை அடைந்து த்ரில் வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்ரம 36 ஓட்டங்களையும், கவிஷா தில்ஹாரி…

Read More

மக்களால் புறக்கணிக்கப்பட்ட மலையகத் தலைவர்கள் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர். என்கிறார் பிரதி அமைச்சர் பிரதீப் மலையக மக்களால் புறக்கணிக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட அரசியல் தலைவர்களும் இன்று ஊழல்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுடன் நாமலைப் பாதுகாக்க வேண்டும் என குரல் எழுப்புவதன் மூலம் இவர்களுக்கும் கடந்த அரசாங்கத்தின் ஊழல் செயற்பாடுகளில் பங்கு உள்ளது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருந்த சட்டரீதியான நிலுவைப் பணத்தை வழங்கும் நிகழ்வு நேற்று (10.09.2026) கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தொழிலாளர்களின் அரசாங்கத்தை நாம் உருவாக்கியிருக்கிறோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்பது பத்தோடு பதினொன்றாக இருக்கும் அரசாங்கம்…

Read More

டித்வா புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்த காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்கத்தின் இறங்குதுறையைப் புனரமைக்கும் பணிகள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் (10.09.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. சாவற்கட்டு கடற்றொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைவாக, அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்து, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களிடமிருந்து உரிய அனுமதிகள் பெறப்பட்டதையடுத்து, கடற்றொழில் அமைச்சினால் முதற்கட்டமாக 2.1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இறங்குதுறையில் தேங்கியுள்ள பாசிகளை அகற்றி தூய்மைப்படுத்துதல், மண் நிரப்பி இறங்குதுறையைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கடற்றொழிலாளர்கள் எவ்வித தடையுமின்றி தமது மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது. இறங்குதுறை புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ம. பிரதீபன், பிரதேச செயலாளர், கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திரு.…

Read More

மமா/ஹட்/எல்பட தமிழ் வித்தியாலயம் – பொகவந்தலாவை பெருமைமிகு சாதனை! ​2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலை மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். ​கல்விச் சுடரேற்றி எம்மை பெருமைப்படுத்திய அன்புச் செல்வங்களுக்கும், அர்ப்பணிப்புடன் வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய பெற்றோருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்! ​📊 சிறப்பம்சங்கள்: ​வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள்: 03 ​70 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள்: 29 ​70 புள்ளிகளுக்குக் கீழ் பெற்றவர்கள்: 04 ​மொத்த சராசரி: 88% ​🏆 சிறப்பிடம் பெற்ற விபரங்கள்: ​S. பவித்ரா – 152 புள்ளிகள் ​J. கிருனிக்கா – 146 புள்ளிகள் ​D. ஹகிஷாலனி – 137 புள்ளிகள் ​வகுப்பாசிரியர்: க. நவபிரியா நிறைவேற்று அதிபர்: N. சந்திரகுமார் ​மலையகக் கல்வியின் ஒளிவிளக்காய் மிளிரும் எமது மாணவர்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறோம்! 🎓✨ ​#Scholarship2026 #Bogawantalawa #Malaiyagam #StudentSuccess #ProudMoment

Read More

சாலமன் பாப்பையாவின் மறைவு மனவருத்தம் அளிக்கிறது!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் – தமிழின் சிறப்பையும், நகைச்சுவையின் நயத்தையும் பட்டிமன்றங்கள் வாயிலாக உலகத் தமிழர்களிடம் கொண்டு சென்ற தமிழறிஞரும், சிறந்த பேச்சாளருமான சாலமன் பாப்பையாவின் மறைவு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தனது தனித்துவமான பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வு மற்றும் தமிழ் மீதான ஆழ்ந்த பற்றின் மூலம் பல தலைமுறையினரையும் கவர்ந்தவர் சாலமன் பாப்பையா. அவரது மறைவு தமிழ் இலக்கியம் மற்றும் பட்டிமன்ற உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். தமிழை எளிமையாகவும் சுவையாகவும் மக்களிடம் கொண்டு சென்ற அவரது பணிகள் என்றும் நினைவுகூரப்படும். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும், அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Read More

செ. திவாகரன். நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்துத் காரியாலயம் 50 மில்லியன் ஒதுக்கீட்டில்  வேலைத்திட்டம் ஆரம்பம் நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தின் புனரமைப்புப் பணிகள் ரூ. 50 மில்லியன் ஒதுக்கீட்டில் மேம்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அலுவலகத்தில் உள்ள இடப்பற்றாக்குறையைச் சரிசெய்யவும், மின்சார அமைப்பைச் சீரமைக்கவும், பாதுகாப்புத் தடுப்பைச் சீரமைக்கவும், சேவை பெற வரும் பயனாளிகள் சேவை வழங்கப்படும் வரை காத்திருப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், மேலும் அலுவலகத்தின் சேவைகளைத் திறம்படச் செயல்படுத்தத் தேவையான மின்னணு உபகரணங்களைப் பெறவும் போக்குவரத்து அமைச்சு நிதி வழங்கி விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நுவரெலியா ஹாவஎலிய பொருளாதார மையத்திற்கு அருகில் அமைந்துள்ள பிரதேச செயலகத்திற்குச் சொந்தமான நிலமும், நுவரெலியா மோட்டார் வாகன அலுவலகத்தால் தற்போது ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருவதும், நுவரெலியா மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.…

Read More

கண்டி மாவட்டம் மடுல்கலை கலாபொக்க ரெலுகஸ் இல.02 அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் புதிதாக நிர்மானித்து வரும் ஆலய திருமண மண்டப கட்டுமானப் பணிகளுக்காக மணல் ஏற்றிச் சென்ற கனரக டிப்பர் வாகனமானது, பிரதான பாதையிலிருந்து ஆலயத்திற்குச் செல்லும் பாதையில் பயணித்த போது அங்குள்ள பாலம் சேதமடைந்து டிப்பர் வாகனத்தின் பின்புறம் பள்ளத்திற்குள் இறங்கி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக சாரதிக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. எனவே,பக்தர்களினதும் பாடசாலை மாணவர்களினதும் போக்குவரத்துச் சீராக அமையும் பொருட்டு, சேதமடைந்த இந்த பாலத்தை விரைவாகச் சீரமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ப.சிவராமகிருஷ்ணன்

Read More

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், வத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட கஷ்டப் பிரதேச பாடசாலையான பன்விலை மடுல்கலை க/வத்/சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி செந்தில்செல்வன் ஜனனி 140 புள்ளிகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார். சோலங்கந்தை தோட்டத்தைச் சேர்ந்த செந்தில்செல்வன் – மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வியான இவர், எமது மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார். கடினமான சூழலையும் தாண்டிச் சாதனை படைத்த மாணவி ஜனனிக்கும், கல்விப் பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட பாடசாலை அதிபர் எம். நவனீதன் மற்றும் வகுப்பாசிரியர் என். சுரேஷ்குமார் ஆகியோருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

Read More