Author: Thana

அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான்  சவுதி அரேபியாவில் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சவுதி அரேபிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எந்தவொரு மதத்தையும், மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் உரிமை எவருக்கும் கிடையாது. அனைத்து மதங்களையும் மதிப்பதும், பிறரது மத உணர்வுகளைப் புண்படுத்தாமல் இருப்பது தான் மனிதனுக்கு அழகு. இறை தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளை அனைத்து மதத்தினரும் மத்திக்கும் நிலையில்,சிவராசா அனோஜன் நபிகள் நாயகத்தை சமூக வலைத்தளத்தில் இழிவுபடுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம். இருப்பினும், அல் குரானில் குறிப்பிட்டுள்ள படி, நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “ஒரு அடியான் மன்னிக்கும்போது, அல்லாஹ் அவனுடைய கண்ணியத்தை அதிகரிக்கிறான்.” ஆகிய குறிப்பிற்கேற்ப, சிவராசா…

Read More

நானுஓயா சுரங்கப் பாதைக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில், தங்கக்கலை தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ​லிந்துலை தங்கக்கலை தோட்டத்தில் இருந்து மோட்டார் வண்டியில் நுவரலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த இளம் தாய் மீது, எதிரே வந்த வேன் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நுவரலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தொடர்ந்து அதிகரித்து வரும் இத்தகைய வீதி விபத்துகளைத் தவிர்க்க, வாகனச் சாரதிகள் அதிவேகத்தைக் குறைத்து அதிக அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும் எனப் பொலிஸாரும் சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாக எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சந்தரு

Read More

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழைவீழ்ச்சி இன்று (19) முதல் அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சபரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணம் மற்றும் முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

நாட்டின் பொக்கிஷமான சிறுவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. நாம் அந்தக் கடமையை நிறைவேற்றுவோம் “வாழ்விற்கு பலம்” வீட்டு உதவித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி தெரிவிப்பு சிறுவர்கள் நாட்டின் பொக்கிஷம் என்பதால் அவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். வாழ்விற்கு பலம் வீட்டு உதவித் திட்டத்தின் மூலம் சிறுவர் பராபரிப்பு நிலையங்களில் வளரும் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் நோக்கில், பாதுகாப்பான இல்லத்திற்காக கடந்த வருடம் ஒரு மில்லியன் ரூபா வழங்கப்பட்டது என்றும், இவ்வாண்டு அத்தொகை இரண்டு மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், அத்தொகை போதுமானதாக இல்லாவிட்டால் மேலதிக நிதி ஒதுக்கீடுகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் செயல்படுத்தப்படும் வாழ்விற்கு பலம் வீட்டு உதவித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் இன்று பிற்பகல் (17) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்ட போதே, ​​ஜனாதிபதி அநுர…

Read More

அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 10 மெகாவொட் / 40 மெகாவொட் மின்கல சேமிப்பு கட்டமைப்பு தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு  தேசிய வலுசக்தி உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி, தன்னிறைவான பசுமைப் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் – துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 10 மெகாவொட் / 40 மெகாவொட் மணிநேர மின்கல வலுசக்தி சேமிப்பு கட்டமைப்பு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (18) முற்பகல் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது. இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திறனையும் மின் வலையமைப்பின் ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்தும் நோக்கத்துடன், ஸ்டோர்எக்ஸ்(Storex) தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இந்த வலுசக்தி சேமிப்பு கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது. வலு சக்தியை சேமிக்கும் மின்கல கட்டமைப்புத் தொழில்நுட்பமானது, தற்போதைய வலுசக்தித்துறையில் உள்ள மிக முக்கிய மற்றும் மிகவும் வினைத்திறனான தொழில்நுட்பமாகும். பகல் வேளையில் உற்பத்தி செய்யப்படும் மேலதிக சூரிய சக்தியைச்…

Read More

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின் ஓயா தோட்டத்தில் இன்று பிற்பகல் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி, வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை மலையிலிருந்த மரமொன்றிலிருந்த குளவிக்கூடு திடீரென கலைந்து வந்து தாக்கியதிலேயே இவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த தொழிலாளர்களுக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அதேவேளை, சம்பவம் குறித்து வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தபோது, 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான நாமல் ராஜபக்‌ஷ, இன்று முற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Read More

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக உயர்மட்ட நடவடிக்கை தேவை: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளார் சாணக்கியன்.. சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சவுதி அரேபியாவின் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றத்தினால் பேஸ்புக் கருத்தொன்றுடன் தொடர்புடைய வழக்கில் அனோஜனுக்கு முன்னர் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இத்தீர்ப்புக்கு எதிராக 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய முடியும் என வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு அறிவித்திருந்த போதிலும், ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் பெற்ற சட்ட…

Read More

செ. திவாகரன் சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கை முறியடிப்பு – சந்தேகநபர்கள் தப்பியோட்டம். நோர்வூட் வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் பொலிஸாரால் தீவிரமாக முறியடிக்கப்பட்டு வருகின்றன. குறித்த நடவடிக்கை (16.09.2026) அதிகாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹட்டன் மூத்த காவல் கண்காணிப்பாளர் மற்றும் மண்டல ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று நோர்வூட் மற்றும் NC தேயிலைத் தோட்டப் பகுதிகள் மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பிரதான நீர் ஆதாரமான கெசல்கமு ஓயாவை அண்மித்த போர்ட்ரீ (Portree) தோட்டப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் தேயிலைச் செடிகளை அழித்து இந்த அகழ்வுகள் நடத்தப்பட்டு வந்தன. குறித்த சந்தேக நபர்கள் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு பெரும் சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது எனினும்…

Read More

நாட்டின் பல பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ​குறிப்பாக, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ​மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். ​வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ​இதனிடையே, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. ​ இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களாலும் ஆபத்துக்கள் ஏற்படலாம். எனவே, பொதுமக்கள்  ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read More