Author: Thana

திருச்சி மாவட்டம் திருமனூர் கிராமம் நல்லுடையான் கோத்திரத்தைச் சேர்ந்த மறைந்த துரைசாமிப்பிள்ளை, தெய்வானை அம்மாள் ஆகியோரின் மகனும், மறைந்த ஆலம்பட்டி சப்பானியாபிள்ளை குஞ்ஞம்மாள் ஆகியோரின் மருமகனும் ராஜேஸ்வரியின் அன்புக் கணவருமான திரு பாலசுந்தரம் (ஆனந்தன் 4ம் குருக்குத்தெரு) அவர்கள் 17.09.2026 வியாழக்கிழமை அதிகாலை 03.30 மணி அளவில் கொழும்பில் காலமானார். அன்னார், Dr அபிராமி (சென்னை), அபீசன் (Latvia), மதுர்சன் (Little Spaces கொழும்பு), ஆகியோரின் அன்புத்தந்தையும், Dr ஆனந்தின் (சென்னை), அன்பு மாமனாரும், சந்திரன் (ஹப்புத்தளை) ஜெயலெட்சுமி (ஹட்டன்) சுப்புலெட்சுமி, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், மறைந்த வீரையாபிள்ளை (ஐஸ்வர்யாஸ் கொழும்பு), ஜெகதீசன் (பண்டாரவளை) கமலாதேவி (பண்டாரவளை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், வையாபுரிபிள்ளையின் ( அரவிந் டிரேடர்ஸ் பண்டாரவளை) அன்புச் சகலையும் சரஸ்வதியின் கொழுந்தனாரும், கலா, நாகரானி ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும், மனோஜ், துஸ்யந்தி, ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், பவித்ராவின் அன்பு மாமாவும், அகீராவின் அன்புத் தாத்தாவும், திரு…

Read More

*இறக்குவானையில் மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா*  இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைமையில் விஷ்வ இந்து பரிஷத் நடத்தும் மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) இறக்குவானையில் நடைபெறவுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்படும் விநாயகர் சிலைகள் பக்திபூர்வமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளன. அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு இறக்குவானை சந்தைப் பகுதியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகும். இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெறும் விசேட பூஜைகளைத் தொடர்ந்து ஊர்வலம் தெனியாய வீதி, எலட்டன் ஸ்ரீ பிள்ளையார் ஆலயத்தை சென்றடையும். அங்கு சிறப்பு பூஜைகள், ஆன்மீக சொற்பொழிவுகள், பஜனை ஆகியன இடம்பெற்று சிலைகள் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆலயங்களின் நிர்வாக சபையினர், அறநெறிப் பாடசாலை மாணவர்கள், சமய, சமூக அமைப்புகளைச் சார்ந்தோர் பொதுமக்கள் என பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Read More

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா விளக்கமறியலில்! தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவரை வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் சந்தேகநபரின் தரப்புச் சட்டத்தரணிகளின் வாதங்களை அவதானித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரமக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Read More

தெமட்டகொட, “கருப்பு பாலம்” அருகில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு . குறித்த துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று (17) பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார். பாதிப்புக்குள்ளான 42 வயதுடைய குறித்த தொழிலாளி, உடனடியாக வகுவப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காகக் கம்பளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கலுகல்ல தோட்டத்தில் சில வாரங்களுக்கு முன்னரும் பாம்புக்கடிக்கு இலக்கான பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தோட்டப் பகுதிகள் காடடர்ந்து காணப்படுவதாகவும், அவற்றை முறையாகப் பராமரிப்பதற்குத் தோட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, தோட்டங்களை காடாக்க விடாமல் முறையாக பராமரிக்குமாறும், தமது தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர சாலை விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி, சம்பவம் நடந்த சந்தர்ப்பத்தில் கஞ்சா போதைப்பொருளை உட்கொண்டிருந்தது பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது. ​மட்டக்குளிப் பகுதியில் நேற்றிரவு அதிவேகமாக வந்த கார் ஒன்று, வீதியில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது மோதி விபத்துகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வீதியில் நின்றுகொண்டிருந்த 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் மீது இக்கார மோதியுள்ளதுடன், இந்த கோர விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ​விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் என்பதுடன், அவர்கள் கிராண்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ​விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாகச் செயற்பட்ட பிரதேச மக்கள், படுகாயமடைந்தவர்களை மீட்டு கொழும்பு…

Read More

 மட்டக்குளியில் இடம்பெற்ற கோர விபத்து; உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் அஞ்சப்படுகின்றன! கொழும்பு – மட்டக்குளிய பகுதியில் இன்று இரவு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வதிர்ச்சி விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகள் கூட ஏற்பட்டிருக்கலாம் என பலத்த சந்தேகங்கள் மற்றும் அச்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்த மட்டக்குளிப் பொலிஸார், விபத்துக்கான காரணம் மற்றும் நிலவரம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக விபரங்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.

Read More

இலங்கை போருக்குப் பிந்திய தமிழர் அரசியல்’ கொழும்பில் நூல் அறிமுக விழா மூத்த பத்திரிகையாளர் அமரர் பாரதி இராஜநாயகம் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பு நூலான ‘இலங்கை போருக்குப் பிந்திய தமிழர் அரசியல்’ எனும் நூலின் அறிமுக விழா, மூத்த பத்திரிகையாளர் வி.தனபாலசிங்கம் தலைமையில் எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை கொழும்புத் தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் பிற்பகல் 3.45 மணிக்கு இடம்பெறவுள்ளது. மங்கள விளக்கேற்றலுடன், ஆதவன் அக்ஷரனின் தமிழ்வாழ்த்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகும். நிகழ்வில் கி. பொன்னுத்துரை வரவேற்புரையை நிகழ்த்துவர். இதனையடுத்து ‘இலங்கை போருக்குப் பிந்திய தமிழர் அரசியல்’ எனும் நூலை முன்வைத்து உரைகள் இடம்பெறும். மூத்த ஊடகவியலாளர், ஆய்வாளர் நிக்ஸன் ‘போருக்குப் பிந்திய தமிழர் அரசியல் பாதையும் பயணங்களும்’ எனும் தலைப்பிலும் ஆய்வாளர் எழுத்தாளர் சிராஜ் மஸுர் ‘போருக்குப் பிந்திய முஸ்லிம் அரசியல் தெரிவுகளும் தீர்மானங்களும்’ எனும் தலைப்பிலும் மூத்த பத்திரிகையாளர், விரிவுரையாளர்…

Read More

வெதமுல்ல சந்தியில் 27 வயதுடைய இளைஞர் தாக்குதலில் உயிரிழப்பு கொத்மலை, வெதமுல்ல – வில்லீஸ் லேன்ட் தோட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளது. கண்டி – நுவரெலியா பிரதான வீதியில், வெதமுல்ல சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான நிலையில் காணப்பட்ட இளைஞரை அவதானித்த பொதுமக்கள், அவசர அம்புலன்ஸ் சேவையான 1990க்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து, அம்புலன்ஸ் மூலம் அவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வெதமுல்ல – வில்லீஸ் லேன்ட் தோட்டத்தைச் சேர்ந்த சிவலிங்கம் ஜெயகிருஷ்ணா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்பொட மற்றும் நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மேலும், தாக்குதலுக்குள்ளான நபரை அம்புலன்ஸ் வாகனத்தில்…

Read More

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ​இன்று (16) கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, சந்தேகநபருக்கு பிணை வழங்குவது குறித்த உத்தரவு செப்டம்பர் 23ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் நீதவான் தெரிவித்தார். ​இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் விடயங்களைச் சமர்ப்பித்த பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார, இச்சம்பவத்தில் நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், இது தொடர்பான சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதால், குற்றச்சாட்டுக்களை தாமதமின்றி தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். ​இந்த விசாரணைகளுக்காக எயார்பஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் பல தடவைகள் இலங்கைக்கு வந்து வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும் பிரதி மன்றாடியார்…

Read More