Author: Thana
ரூ.6 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான மூக்குக்கண்ணாடிகள் இலவசம்: வினோத்காந்தின் முயற்சி. (மின்மினி மின்ஹா) சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதி தவிசாளரும், வாய்ஸ் ஒப் ஃபியூச்சர் ஸ்ரீலங்கா அமைப்பின் தவிசாளருமான வெள்ளையன் வினோத்காந்த் தலைமையில் நான்காவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு நேற்று (14) புதிய வளத்தாப்பிட்டி ஸ்ரீ நாவலர் சனசமூக நிலையக் கட்டிடத் தொகுதியில் சிறப்பாக நடைபெற்றது. வாய்ஸ் ஒப் ஃபியூச்சர் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் அழகிரி ஆனந்தராஜ் (கண்ணன்) அவர்களின் வழிகாட்டலில், அம்பாறை பண்டாரநாயக்க ஞாபகார்த்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். சோமசிறி அவர்களின் ஆலோசனையுடனும், AFRON ஹோல்டிங் நிறுவனத்தின் உரிமையாளர்களின் அனுசரணையுடனும் இம்மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அம்பாறை பண்டாரநாயக்க ஞாபகார்த்த ஆயுர்வேத வைத்தியசாலையின் மருத்துவ சேவை மற்றும் ஆலோசனைகளுடன், விசேட வைத்திய நிபுணர்களின் பங்குபற்றுதலோடு நடைபெற்ற இம்முகாமில் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள், மருத்துவ…
தெஹிவளை – கவுதானை, சிறிசங்கபோ வீதியிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில், 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். அவர்களின் தந்தையும் படுகாயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், தாக்குதலை நேரடியாக நடத்திய பிரதான சந்தேகநபரும், அவருக்கு முச்சக்கரவண்டியில் போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுத்து உதவிய மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் பின்னணியிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், கைதான சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி அளவில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது, நாளை காலை 10 மணி வரை, அதாவது அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டம்: சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள். களுத்துறை மாவட்டம்: தொடங்கொட, புளத்சிங்ஹல, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகள். கேகாலை மாவட்டம்: வரகாப்பொல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள். தொடர் மழைக் காரணமாக இந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மண்சரிவு அபாயம் குறித்து அவதானமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிட…
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு முறைகேடு: நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான பணச்சலவை விசாரணைகளில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த விமானக் கொள்வனவு முறைகேடு தொடர்பில், பணச்சலவைச் சட்டத்தின் கீழ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சட்டமா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இதற்கமைய, கடந்த வெள்ளிக்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இது தொடர்பான விபரங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிக்கையாகச் சமர்ப்பித்துள்ளது. இந்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், கடந்த செப்டெம்பர் 04 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம்…
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளுக்குள் போதைப்பொருட்களை ஒளித்து வைத்துக் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் ஒருவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய, வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான வாயிலில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் வெலிக்கடை சிறைச்சாலையிலேயே பணிபுரியும் சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தேகநபரான அதிகாரி அணிந்திருந்த காலணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 96 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 16.7 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குற்றத் தடுப்புப் பிரிவினர் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு, சந்தேகநபரையும் போதைப்பொருள் தொகுதியையும் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர். பொரளை பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
உடல் ரீதியிலான சவால்களைத் தமது கல்விக்கனவுகளுக்குத் தடையாகக் கொள்ளாது, இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘பல்கலைக்கழக சாதனையாளர்களின் பெருமை’ விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் மூன்றாவது கட்டம் நிகழ்ச்சி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் (12) நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ், தற்போது இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் கௌரவிக்கப்படுவதுடன், மாணவர் ஒருவருக்கு ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபா உதவித்தொகையாக வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் முதலாவது வேலைத்திட்டம் கொழும்பிலும், இரண்டாவது வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்ற நிலையில், இதன் மூன்றாவது மற்றும் இறுதி வேலைத்திட்டம் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கமைய கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் 50 மாற்றுத்திறனாளி மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், முழுமையான வேலைத்திட்டத்தின் மூலம்…
உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்’ தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்
உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்’ (World Athletics Ultimate Championship) தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். உலகச் சிறந்த தடகள வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டி ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இன்று (13) நடைபெற்றது. இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 9.40 மணிக்கு ஆரம்பமானது. உலகின் முதன்மை ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க இந்தப் போட்டியில் 91.09 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்தார். அவர் இந்த ஆண்டில் 92.62 மீற்றர் தூரம் எறிந்து உலகச் சாதனையை நிலை நாட்டியிருந்தார். சமீபத்தில் ‘டைமண்ட் லீக்’ ஈட்டி எறிதல் சாம்பியன் பட்டத்தை வென்ற ருமேஷிற்கு, ஜெர்மனியின் ஜூலியன் வெபர் முக்கிய சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப்பில் 90.4 மீற்றர் தூரம் எறிந்து புதிய போட்டிச் சாதனையைப் படைத்திருந்தார். எவ்வாறாயினும் இன்றைய…
பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக முன் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவித்தல் இன்று (14) மு.ப. 10.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இன்றிரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் தாக்கங்களினால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். எனவே மின்னல் மற்றும் காற்றினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ம.மா/ஹ.வ/ஆல்டி தமிழ்வித்தியாலயம், பொகவந்தலாவ வரலாற்றில் பெருமை சேர்க்கும் மற்றுமொரு புலமை பரிசில் பரீட்சையில் சாதனை!
ம.மா/ஹ.வ/ஆல்டி தமிழ்வித்தியாலயம், பொகவந்தலாவ வரலாற்றில் பெருமை சேர்க்கும் மற்றுமொரு புலமை பரிசில் பரீட்சையில் சாதனை! 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலை மாணவர்கள் திறம்படத் தோற்றி சித்தியடைந்து பாடசாலைக்கும் எமது பொகவந்தலாவ மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். J. திவ்யதர்சினி – 146 புள்ளிகள்,N. அக்சயவித்தீஸ் – 134 புள்ளிகள் (சிறப்பான சித்தி!) எமது பிஞ்சுகளின் இந்த வெற்றிக்குப் பின்னால் அயராது உழைத்து, அவர்களின் திறமைகளை மெருகூட்டி வழிநடத்திய பயிற்றுவித்த ஆசிரியர் L. மைக்கல்ராஜா அவர்களுக்கும், மாணவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி அரவணைத்த அதிபர் J. சந்திரதாஸ் அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக! சாதனை படைத்த மாணவச் செல்வங்களுக்கு எமது உன்னத எதிர்கால நல்வாழ்த்துகள்! தொடர்ந்து பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறோம்.
நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது
நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த பல்நோக்கு சிறுவர் அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (13) காலை நடைபெற்றது. நுவரெலியா மாவட்டத்தில் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் கீழ் ஒருங்கிணைந்த பல்நோக்கு சிறுவர் அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு நிலையம் அமைக்கப்படுவதுடன், அலுவலகத்தின் பிரதான கேட்போர் கூடமும் அபிவிருத்தி செய்து விரிவாக்கப்படவுள்ளது. காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, குறித்த நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸ, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சருமான வைத்தியர் மதுர தஹம் பண்டார…