Author: Thana
இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 414 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும். அத்துடன் 495 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 475 ரூபாவாகும். ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் கோவிந்தராஜ் நேசமலர் அவர்கள் மற்றும் உறுப்பினர் சுந்தரராஜா சுரேஷ் அவர்களின் கோரிக்கைக்கு இணங்க கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களின் வேலைத்திட்ட முன்மொழிவின் படி ரூபாய் 10 இலட்சம் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்ட தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்கள், உறுப்பினர் கோவிந்தராஜ் நேசமலர் அவர்கள், உறுப்பினர் சுந்தரராஜா சுரேஷ் அவர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் என்போர் கலந்துகொண்டனர்.
அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…*
*”அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்” – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்…* தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக “எமது தலைமுறை கட்சியின்” தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். (29) கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மலையகத்திற்கு விஜயம் செய்து மக்களுக்குத் தேவையான வீடுகளைக் கட்டித் திறந்து வைத்து, அன்பாக உரையாடி மேலதிக வீடுகளையும் கட்டித் தருவதாக உறுதியளித்துள்ளார். இவரைப் போன்ற ஒரு சிங்களக் தலைவரும் ஜனாதிபதியும் மலையகத்திற்குள் நுழைந்து வீடுகளைக் கட்டித் தருவது ஒரு அதிசயமான மற்றும் அற்புதமான செயலாகும் என்றும் அவர் பாராட்டினார். அதேவேளை, கடந்த காலங்களில் மலையகப் பகுதிகளிலிருந்து பாராளுமன்றத்திற்குச் சென்ற தமிழ் பிரதிநிதிகள், ஆரம்பத்தில் தோட்டத் தொழிலாளர்களாக இருந்து பின்னர் எம்பிக்களான பின் ‘ராஜபோக’ வாழ்க்கை வாழ்ந்தார்களே தவிர மக்களைப்…
செ. திவாகரன். கணவனால் தாக்குதலுக்கு உள்ளான மனைவி பலி – கணவன் பொலிஸில் சரண். கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவர் நேற்று (29) பிற்பகல் நுவரெலியா பொலிஸில் சரணடைந்துள்ளார். நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலாந்த விநாயகபுரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற குடும்பத் தகராறைத் தொடர்ந்து, 43 வயதுடைய சித்ரா தேவி என்ற பெண், அவரது கணவரால் கோடரியால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் அவரை மீட்டு சிகிச்சை பெறுவதற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தையடுத்து, குறித்த பெண்ணின் 32 வயதுடைய கணவர், தான் மனைவியை கூரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்து நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தானாகவே சரணடைந்துள்ளார். தனிப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ்…
பெருந்தோட்ட மக்கள் மற்றும் சாதாரண பாமர மக்களின் பிரதான உணவான கோதுமை மாவின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளமை, நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினால் நசுங்கிப் போயிருக்கும் எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளதாக மஸ்கெலியா நிருபர் தெரிவிக்கின்றார். பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களால் கோதுமை மா ஒரு கிலோகிராம் 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சாதாரண மக்கள் அன்றாடம் பசியாறும் ரொட்டி, பரோட்டா மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் 5 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளன. வெறும் ஐந்து ரூபாய்தானே என்று ஆட்சியாளர்கள் இதை அலட்சியமாகக் கருதினாலும், நாளாந்த கூலி வேலை செய்து சிறு உணவகங்களில் சாப்பிடும் ஏழை எளிய மக்களின் கழுத்தை நெரிக்கும் கொடிய பேரிடியாக இந்த விலையேற்றம் அமைந்துள்ளது. மக்களுக்குப் பெரிய விடிவைத் தருவோம் என்று வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கும் இந்த விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக மக்கள் மத்தியில் கடும்…
நுவரெலியா ஹட்டன் AC சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட அவலம் நிலை. சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்கும் சொகுசு AC பேருந்தில், நான்கு பேர் அமர வேண்டிய இருக்கையில் ஆறு பேர் அமர வைக்கப்படுவதாகவும், பேருந்து முழுவதும் பயணிகள் நெருக்கடியாக நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும் நிலையில், அதற்கேற்ற இருக்கை வசதி, பயணிகள் நெரிசல் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை எனவும் பயணிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நடத்துனரிடம் கேள்வி எழுப்பியபோது, பயணிகளுடன் முரண்படும் வகையில் நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சொகுசு AC பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் நிலை இதுதானா கவனத்திற்கு கொண்டு வந்தனர் பயணிகள். பயணிகளிடம் அதிக கட்டணம்…
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது!
‘மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது! 30.08.2026 ‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி பிறந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள், இலங்கை மலையக மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்த தேசியத் தலைவராவார். சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்த அவர், இலங்கை – இந்திய காங்கிரஸின் உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றியதுடன், அதன் தலைவராகவும் செயற்பட்டார். பின்னர் இலங்கை – இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என பெயர் மாற்றம் பெற்றதன் பின்னரும் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று, மலையக மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டார். …
நுவரெலியாவில் குடும்பத் தகராறில் மனைவி கொலை – கணவர் கைது நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில், இன்று மாலை இடம்பெற்ற குடும்பத் தகராறைத் தொடர்ந்து, 43 வயதுடைய சித்ரா தேவி என்ற பெண், அவரது கணவரால் கோடரியால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தையடுத்து, குறித்த பெண்ணின் 32 வயதுடைய கணவர், தான் தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கஜரூபன் திவ்யா நுவரெலியா
கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹரா வெற்றிகரமாக நிறைவுபெற்றமை பற்றி தெரிவிக்கும் ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹரா வெற்றிகரமாக நிறைவுபெற்றமை பற்றி தெரிவிக்கும் ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு புதிய சமூக மதிப்பு கட்டமைப்பு முறையைக் கொண்ட தேசிய மறுமலர்ச்சி யுகத்திற்காக ஒன்றிணைவோம் -ஜனாதிபதி கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் நான்கு மகா தேவாலயங்களின் வருடாந்த எசல பெரஹரா, பண்டைய சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து பூரணமாகவும் மிகவும் கோலாகலமாகவும் நடத்தி முடிக்கப்பட்டமை குறித்து தெரிவிக்கும் ஆவணம், தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் இன்று (28) பிற்பகல் கண்டி, ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாக வருகை தந்த ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, நான்கு மகா தேவாலயங்கள் மற்றும் ஏனைய தேவாலயங்களின் நிலமேமார்கள் சம்பிரதாயபூர்வமான முறையில் ஜனாதிபதியிடம் ஆவணத்தை கையளித்தனர். அதனைத் தொடர்ந்து, சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி மற்றும் நிலமேமார்கள் இணைந்து குழுப் புகைப்படம்…
நேபாள வெள்ளப் பெருக்கில் பலி எண்ணிக்கை 579 ஆக உயர்வு! காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸார் தீவிர ஈடுபாடு!”
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவாகோட், ரசுவா, தாடிங், சித்வான் மற்றும் கோர்க்கா ஆகிய மாவட்டங்களிலிருந்து இதுவரை 579 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வெள்ள அனர்த்தத்தில் 1,473 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சை முடிந்து 94 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன நூற்றுக்கணக்கானோரைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளில் 4,473 பொலிஸார் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நேபாள பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.