Author: Thana
காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதுவதைத் தடுப்பதற்கு தொழில்நுட்பத் தீர்வை வழங்குவதற்கான திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதுவதைத் தடுப்பதற்கு தொழில்நுட்பத் தீர்வை வழங்குவதற்கான திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதுவதைத் தடுப்பதற்கு தொழில்நுட்பத் தீர்வை வழங்குவதற்கான திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) பிற்பகல் நடைபெற்றது. Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைப்பில், புகையிரதத் திணைக்களம், வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து, மக்கள் வங்கியின் முழுமையான நிதியுதவியுடன் அரச – தனியார் கூட்டுப் பங்களிப்புத் திட்டமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 3 Beam detection, Passive infrared ( PIR ), உணரிகள், தானியங்கி வெப்பநிலை உணரிகள் மற்றும் 20 கிலோகிராமிற்கு மேற்பட்ட விலங்குகள் புகையிரதங்களில் மோதுவதை அடையாளம் காணல் மற்றும் அபாய எச்சரிக்கை (Temper alarm) கட்டமைப்பை இது கொண்டுள்ளது. புகையிரதப் பாதையின் இருபுறமும் பொருத்தப்படும்…
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நாளை இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் நாளை இரவு 8.00 மணி முதல் வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதற்கமைய, நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடவுயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் முழுமையாக நீர் விநியோகம் தடைப்படும். அத்துடன், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளிலும் இந்நீர்வெட்டு அமுலில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நீர் விநியோகம் தடைப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருத்தம்…
நேபாள வெள்ள அனர்த்தம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்! இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கையில் உள்ள நேபாள தூதரகத்திற்கு நேரில் சென்று, நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து, இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார். மேலும், நேபாள பிரதமர் பாலேந்திர ஷா அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள செந்தில் தொண்டமான், வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவனை பிரார்த்திப்பதாகவும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் நேபாள மக்களுடன் தனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நேபாளம் எதிர்கொண்டுள்ள இந்த கடினமான சூழ்நிலையை விரைவில் கடந்து, பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்ப வேண்டும் எனவும் அவர் தனது பிரார்த்தனைகளைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து, மேல்மாகாண உப தலைவர் திருக்கேஸ் செல்லசாமி மற்றும் தொழிற்சங்க உப தலைவர் ராஜமணி…
பொகவந்தலாவையில் 71 வயது முதியவரின் அஸ்வெசும பணம் அபகரிப்பு: பிரதேச செயலக அதிகாரியின் உறவினர் பெயரில் அரங்கேறிய மாபெரும் மோசடி!
பொகவந்தலாவை – கிள்ளார்னி தோட்டத்தைச் சேர்ந்த 71 வயது முதியவரான நாராயணசாமி ராமையாவுக்குக் கிடைக்க வேண்டிய ‘அஸ்வெசும’ நலன்புரி நலஉதவிக் கொடுப்பனவு மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வயோதிபக் காலம் மற்றும் கடுமையான பார்வைக் குறைபாட்டால் அவதிப்பட்டு வரும் முதியவரின் உரிமையைப் பறித்து, அதிகாரியின் உறவினர் ஒருவருக்குப் பணம் திசைதிருப்பப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட முதியவர் நாராயணசாமி ராமையா கூறுகையில், 2023ஆம் ஆண்டில் இரண்டே மாதங்கள் மட்டுமே தனக்கான அஸ்வெசும பணம் கிடைத்ததாகவும், அதன் பின்னர் எந்தவித முன்னறிவிப்புமின்றி அது திடீரென நிறுத்தப்பட்டதாகவும் வேதனை தெரிவிக்கிறார். இது தொடர்பான ஊடகச் செய்திகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, அவர் நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். அங்குள்ள அரச உத்தியோகஸ்தர் ஒருவர், முதியவர் நாராயணசாமியின் அஸ்வெசும பணம், நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய உதவி இளைஞர் சேவை அதிகாரியின் மாமனாரின் வங்கிக் கணக்கிற்கே மாதாந்தம் செலுத்தப்பட்டு வந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ளார். ஆய்வில்…
பலாங்கொடையில் காணமால் போனதாக கூறப்பட்ட 3 மாணவிகளும் திருகோணமலையில் கண்டுபிடிப்பு.! பலாங்கொடை – பின்னவல எல்லராவ, பிரதேசத்தில் மூன்று மாணவிகளை காணவில்லை என கூறப்பட்டிருந்தது. நேற்றைய முன் தினம் (30) தனியார் வகுப்புக்கு சென்ற வேளையில் காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் கூறி இருந்தனர். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 17 வயதுகளுடைய பலாங்கொடையில் பிரபல பாடசாலை மாணவிகள் ஆவார். எனினும் இவர்கள் திருகோணமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்!
அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் தலைவரும் உலகின் முன்னணி நட்சத்திர ஆட்டக்காரருமான லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது ஒரு “வேதனையான” முடிவு என்றாலும், “அதற்கான நேரம் வந்துவிட்டது” என்பதைத் தான் உணர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், தேசிய அணிக்காகத் தனது முழு உழைப்பையும் வழங்கிவிட்டதாகவும், இனி “வழங்குவதற்கு எதுவும் இல்லை” என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணிக்குத் தலைமை தாங்கி சாம்பியன் பட்டத்தைப் பெற்றுக்கொடுத்த 39 வயதான மெஸ்ஸி, தனது நாட்டுக்காக 207 சர்வதேச போட்டிகளில் விளையாடி 125 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் அர்ஜென்டினா கால்பந்து வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் மற்றும் அதிக கோல்களைப் பதிவு செய்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் லியோனல் மெஸ்ஸி தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
களுத்துறை, பயாக்கல பகுதியில் நேற்று (31)இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 28 வயதுடைய நபரே, நாகொட வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பிலான பின்னணி மற்றும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்களைக் கண்டறியும் நோக்கில் பயாக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேபோன்று, ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சூரியனின் உச்ச நிலை…
800 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மேலும் மூவர் கைது
கொழும்பு துறைமுகத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின்போது, கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 463 கிலோகிராம் எடையுடைய கிரிஸ்டல் மெதம்பேட்டமைன் எனப்படும் ‘ஐஸ்’ போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான தொடர் விசாரணைகளின் அடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் இன்று அதிகாலை கொழும்பிலுள்ள விடுதியொன்றில் வைத்து விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இரு பாகிஸ்தான் நாட்டவர்கள் உட்பட மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துறைமுகத்திற்கு வருகை தந்த கொள்கலன்களில் துண்டுகளுக்கு நடுவே மறைத்து வைத்து இந்நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற இந்த போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் இலங்கைச் சுங்கப் திணைக்களம் ஆகியவை இணைந்து இச்சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதோடு, இந்த சர்வதேச கடத்தல் பின்னணியில் தொடர்புடைய ஏனைய நபர்களைக் கண்டறியும் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
காணமல் போன பாடசாலை மாணவர்களை தேடும் பணி தீவிரம்…. பவாங்கொடையில் சம்பவம்…..பலாங்கொடை பின்னவல எல்லராவ, பிரதேசத்தில் மூன்று மாணவிகளை காணவில்லை நேற்றைய தினம் தனியார் வகுப்புக்கு சென்ற வேளையில் காணாமல் போய் உள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் பலாங்கொடையில் பிரபல பாடசாலை மாணவிகள் ஆவார். இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் பலாங்கொடை பொலிஸ் நிலையம் 0452287222 அல்லது பெற்றோர்கள் 0767070913 பலாங்கொடை காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்….