Author: Thana

பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய, கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலையை 17 ரூபாவால் உயர்த்த அந்நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, உயர்த்தப்பட்டுள்ள கோதுமை மாவின் விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு வரும் திங்கள்கிழமை (31) கூடுவதெனத் தீர்மானித்துள்ளது. அன்று கூடி, பாண் உள்ளிட்ட ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்துவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Read More

சின்னப் பையன் புத்தகப் பையை தோளில் மாட்டியபடி வெளியில் இறங்கியதும், கதவை ஒருக்கணித்து சாய்த்து வைத்தவாறு சட்டென்று கீழே இறங்கினாள் மீனாட்சி . எட்டு மணி ஆவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்ததனால் அவசர அவசரமாய் சின்ன பயலின் கையைப் பிடித்து இழுத்தவாறு வேக நடை போட்டாள். எதிரே கொழுந்து கூடைகளை தலையில் மாட்டியவாறு அன்னலட்சுமியும் இராணியும் வருவது தெரிந்தது.”ஏ ராணி பாத்தியா டி, நேத்து காவக்காரன் வீட்டுல நடந்த கான் சண்டையை யாரோ எடுத்து டிக் டொக்குல போட்டாங்கடி பாத்தியா? ” என்று அன்னலட்சுமி கேட்க அதற்கு ராணி, “ஆமாடி அவனுக்கெல்லாம் அதுதான் சரி அப்படி டிக் டாக் ல போட்டு தான் அவன் மானத்தை எல்லாம் வாங்கணும். ” என்றாள். இதை கேட்டதும் அவர்கள் இருவருமே பலமாக சிரித்துக் கொண்டார்கள். எதிரே மீனாட்சியை கண்டவுடன் சிரிப்பை நிறுத்திவிட்டு “என்ன மேடம் இன்னைக்கு வேலைக்கு வல்லியோ?” என்று ரெண்டு பேரும்…

Read More

பூனாகலை, கபரகலை மண்சரிவினால் வீடுகளை இழந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாபுரம்” வீட்டுத் திட்டம் ஜனாதிபதியினால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு இந்நாட்டில் பிறந்து, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்து, இப்பூமிக்கே மண்ணாகும் ஒவ்வொரு மனிதனுக்கும் சிறந்த வாழ்க்கையை உரித்தாக்கும் பொறுப்பு நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி 4000 இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 163 பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் இந்நாட்டில் பிறந்து, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்து, இப்பூமிக்கே மண்ணாகும் ஒவ்வொரு மனிதனுக்கும் சிறந்த வாழ்க்கையை உரித்தாக்கும் பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகளை இழந்து, சுமார் மூன்றரை ஆண்டு காலம் கடினமான மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்த பூனாகலை, கபரகலை பகுதியினைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாபுரம்” வீட்டுத் திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் இன்று (28) முற்பகல் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக்…

Read More

**மலையக மக்களின் 200 ஆண்டுகால துயரத்திற்கு தீர்வு: சொந்தக் காணியில் வீடுகள் வழங்கி புதிய வரலாறு!* மலையக மக்களின் பல தசாப்த கால போராட்டங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவர்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி புதிய வரலாற்றைப் படைத்து வருவதாகத் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டு கபரகல பகுதியில் இடம்பெற்ற மண்சரிவால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு உறுதிப்பத்திரத்துடனான வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று (28) ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.இதில்கலந்துக்கொண்ட போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கத்தின் முழுமையான நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 50 புதிய வீடுகள் இன்று பாதிக்கப்பட்ட மலையகக் குடும்பங்களின் உடைமையாக்கப்பட்டுள்ளன. இது ஒரு ஆரம்பம் மட்டுமே. மலையகத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் எதிர்காலத்தில் காணி உரிமையுடன்…

Read More

‘யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு. (மின்மினி மின்ஹா – சம்மாந்துறை செய்தியாளர்) சம்மாந்துறையில் ‘யாவருக்கும் உறையுள்’ எனும் தொனிப்பொருளில் OCD அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட 16ஆவது வீடு பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை வீரமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளருமான அல் ஹாஜ் ஜ.எல்.எம். மாஹிர் மற்றும் OCD அமைப்பின் தலைவரும் விஞ்ஞான முதுமானியும் சமூக சேவையாளருமான அஸ்மி யாசின் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர். இதன்போது உரையாற்றிய அஸ்மி யாசின், பின்தங்கிய மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு சமூக ஒற்றுமையும் கூட்டு முயற்சியும் அவசியம் எனத் தெரிவித்தார். தனிநபர் முயற்சிகளைக் காட்டிலும் சமூகத்தின் கூட்டு பங்களிப்பும், பரஸ்பர ஒத்துழைப்பும் தொடர்ச்சியான…

Read More

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயற்கைச் சீற்றத்தினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகள் குறித்து ஜனாதிபதி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவூட்டிய அவர், இந்தச் சவாலான தருணத்தில் இலங்கை எப்போதும் நேபாள மக்களுடன் உறுதியாக நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சிஷிர் கனாலுடன் தொலைபேசியில் கலந்துரையாடி இலங்கையின் இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார். நேபாளத்தின் மறுசீரமைப்பு மற்றும்…

Read More

வட்டவளை பொலிஸாரின் அதிவிரைவு நடவடிக்கையால்,  அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில், வட்டவளை குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 7 மற்றும் 8 இல் கல்வி பயிலும் இரு மாணவர்களும், 35 வயதுடைய ஆண் ஒருவரும் விறகு சேகரிப்பதற்காக மரத்தில் ஏறியுள்ளனர். அப்போது அவர்கள் வெட்டிய கிளை, மரத்திற்கு மேலாகச் சென்ற 33,000 வோல்டேஜ் அதி உயர் மின்சாரக் கம்பியின் மீது வீழ்ந்ததில் மூவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்ட பொதுமக்கள், அப்பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கொன்ஸ்டபிள் சஞ்சீவ என்பவருக்கு உடனடியாகத் தகவல் வழங்கியுள்ளனர். அவர் உடனே செயற்பட்டு, வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சந்தன கமகே அவர்களுக்கு அறிவித்தார். சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, நோட்டன் பிரிட்ஜ்…

Read More

நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இயற்கைச் சீற்றத்தினால் இதுவரை 1,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். அண்டை நாடான திபெத்திலும் இதன் தாக்கத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இரு நாடுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 472 ஆக அதிகரித்துள்ளது. இமயமலைப் பகுதியில் பனிப்பாறை ஒன்று திடீரென உடைந்து விழுந்ததே இந்த அதிதீவிர வெள்ளப்பெருக்குக்கு முக்கியக் காரணமாகும். இதன் காரணமாக உருவான பெருவெள்ளமும் சேறும், எல்லைப் பகுதியில் உள்ள பல கிராமங்களையும் பாலங்களையும் முற்றிலுமாக அடித்துச் சென்று பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. திபெத்தின் சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் புதிதாகத் தற்காலிகத் தடுப்பு ஏரி ஒன்று உருவாகியுள்ளது. இதில் சுமார் 30 இலட்சம் கன மீட்டர் நீர் தேங்கும் அபாயம் உள்ளதால், கீழ்நிலைப் பகுதிகளுக்குச் சீனா ‘Level-IV’…

Read More

மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை எதிர்பார்க்கப்படுகிறது.ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2:00 மணிக்கு பிறகு இடிமின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை, மாத்தளை ஆகிய பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (28) நண்பகல் 12:11 மணிக்கு கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நாகர்கோவில் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும். இடிமின்னல் மற்றும் தற்காலிக பலத்த…

Read More

குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில். இன்று 27 ம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர். பி.கே பெருந்தோட்ட பொறுப்பில் உள்ள மஸ்கெலியா ஹப்புகஸ்தனை தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் ஆண்கள் 7 பேர் பெண்கள் 4 பேர் அடங்கிய பத்து பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்ற பிறகு வெளியேறி உள்ளனர் என வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி தெரிவித்தார். இவர்களில் 6 வயது உடைய சிறுவர் இருவரும் 12 வயதுடைய சிறுவன் ஒருவன் அடங்கலாக 11 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இச் சம்பவம் இன்று பௌர்ணமி தினத்தில் தாங்கள் பணிபுரியும் தேயிலை செடிகள் அடங்கிய தேயிலை மலைக்கு முனியாண்டி சுவாமி கும்பிட போன வேலையில் மரத்தின் கீழ் பகுதியில்…

Read More