Author: Thana

எதிர்வரும் 10ம் திகதி மலையக தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு. மலையக தியாகிகள் தினமானது எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை (10.01.2023) பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு கொட்டக்கலை கொமர்சல் லேக்கில் பிற்பகல் 03.00 மணிக்கு இடம்பெறும் என மலையக சிவில் அமைப்புகள் அறிவித்துள்ளன. மலையகத் தமிழர்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வின் ஏனைய அம்சங்கள் நடைபெறும். 1930 இற்கு பிற்பட்ட காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க அரசியல் உரிமைப் போராட்டங்களில் பங்குபற்றி உயிர்நீத்த அனைத்து தோட்டத்தொழிலாளர்களையும் மலையக தியாகிகள் என அடையாளம் காண்கின்றோம். குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டு எமக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்தவர்களை நினைவு கூர அனைவரும் வருகை தர வேண்டும் என்று பிடிதளராதே அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர். ரா.கவிஷான்.

Read More

நானுஓயா நிருபர் நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த பஸ் விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கொழும்பு -ஹொரணையில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில் கொழும்பு ஹொரண பகுதியிலிருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றவர்கள் மூன்று நாட்கள் பின்னர் மீண்டும் கொழும்பு – ஹொரணையை நோக்கி சென்று கொண்டிருந்த போது, ரதல்ல குறுக்கு வீதியில் அபாயகரமான வளைவில் பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பேருந்து சாரதிக்கு வேக கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் சுமார் 30 அடிஇழுத்துச் சென்று மரத்தில் மோதுண்டே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்து முன் பகுதியானது பலத்த சேதமடைந்துள்ளதாகவும் மற்றபடி பேருந்தில் இருந்த 47 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து…

Read More

கிழக்கு மாகாணம்- அம்பாறை மாவட்டம்- கல்முனை, கல்முனை வடக்கு, ஆதார வைத்தியசாலை அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோயில் சித்திகள் வழங்குமெங்கள் சித்தி விநாயகரே சத்தியத் திருவுருவே சங்கடம் தீர்ப்பவரே நத்தி அடி பணிவோர் நலன்களின் காவலனே கல்முனை வடக்கிருந்து காத்து அருளிடைய்யா ஆதார வைத்தியசாலை அருகிலே கோயில் கொண்ட சித்தி விநாயகரே ஆதரவு தந்தெமது குறைகளைத் தீர்ப்பவரே நம்பி அடி பணிவோர் நலன்களின் காவலனே கல்முனை வடக்கிருந்து காத்து அருளிடைய்யா கிழக்கிலங்கை கரையிருந்து காட்சிதரும் சித்திவிநாயகரே கிலேசமில்லா வாழ்வு தந்து அச்சங்கள் தீர்ப்பவரே காலமெல்லாம் அடி பணிவோர் நலன்களின் காவலனே கல்முனை வடக்கிருந்து காத்து அருளிடைய்யா துன்பங்கள் களைந்து துயர்போக்கும் சித்திவிநாயகரே துணையிருந்து துணிவுதந்து குறைகளைத் தீர்ப்பவரே போற்றி அடி பணிவோர் நலன்களின் காவலனே கல்முனை வடக்கிருந்து காத்து அருளிடைய்யா இன்னல் தடுத் தென்றும் ஆதரிக்கும் சித்தி விநாயகரே அல்லல் அணுகாமல் கவலைகள் தீர்ப்பவரே நித்தம் அடி பணிவோர் நலன்களின் காவலனே கல்முனை…

Read More

“கல்வி புரட்சி மூலம் மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன். அதற்கான ஓர் பாலமாக அரசியலையும் பயன்படுத்துவேன். எதிர்வரும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் எனது பிரதிநிதிகளை நிறுத்துவேன்.” என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளரும், விஷ்ணு ஆரோஹனம் அமைப்பின் தலைவருமான ச. திருமுருகன் தெரிவித்தார். நுவரெலியாவில் (06.01.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, 2017ஆம் ஆண்டில் விஷ்ணு ஆரோஹனம் எனும் அமைப்பை ஆரம்பித்தேன். அதன் ஊடாக மலையகத்தில் கல்வி திட்டங்கள் மற்றும் சத்துணவு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எனது சேவையை பாராட்டி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எனக்கு சுதந்திரக்கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பதவியை வழங்கினார். தற்போது தொகுதி அமைப்பாளராக செயற்பட்டு வருகின்றேன். மலையக மக்களுக்கான எனது சேவைகளை, வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசியலும் ஒரு பாலமாக அமையும்…

Read More

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், திருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோயில் திருநெல்வேலி கோயில் கொண்டு திருவருளைத் தருபவளே திக்கெட்டும் நலன் பெறவே கருணையை நீ செய்யுமம்மா தெளிவான அறிவுதந்து எமையென்றும் வாழவைப்பாய் அருள் பொழியும் எங்கள் தாயே முத்துமாரியம்மா வளங் கொண்ட தமிழ் மண்ணில் வந்தமர்ந்து இருப்பவளே வளம் பெற்று நலன் பெறவே கருணையை நீ செய்யுமம்மா மென்மையுள்ளம் கொண்டவராய் எமையென்றும் வாழவைப்பாய் அருள் பொழியும் எங்கள் தாயே முத்துமாரியம்மா வடஇலங்கை கோயில் கொண்டு நலன்கள் அள்ளித் தருபவளே நேர்வழியைக் காட்டியென்றும் நலன் பெறவே கருணையை நீ செய்யுமம்மா நேர்மையாய் வாழவழிசெய்து எமையென்றும் வாழவைப்பாய் அருள் பொழியும் எங்கள் தாயே முத்துமாரியம்மா அன்பு கொண்டு ஆற்றல் தந்து நல்லருளைத் தருபவளே அறநெறியில் வாழும்வழி தந்தென்றும் நலன் பெறவே கருணையை நீ செய்யுமம்மா திறமையுடன் நிலை பெற்று எமையென்றும் வாழவைப்பாய் அருள் பொழியும் எங்கள் தாயே முத்துமாரியம்மா உடல்வலுவும், உளவலுவும் உறுதி…

Read More

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூகத்தில் சாதகமான கருத்தாடலை உருவாக்குவதற்குமான அறிவார்ந்த பட்டிமன்ற நிகழ்வொன்று புஸல்லாவை, பிளக்போரஸ்ட் தோட்டத்திலுள்ள சுவாமி விவேகானந்தா அறநெறி பாடசாலை மண்டபத்தில் இன்று (06) மதியம் நடைபெற்றது. மேற்படி பட்டிமன்றத்தை ஸ்டெலன்பேர்க் தமிழ் வித்தியாலய அதிபரும், சாகித்திய விருது வென்ற கவிஞருமான கணபதி (புஸல்லாவை கணபதி) மிகவும் நேர்த்தியான முறையில் நெறிப்படுத்தி, தலைமை வகித்தார். ‘பேசலாம் வாங்க’ என்ற மகுடவாசகத்தின்கீழ் பௌர்ணமி தினந்தோறும் நகரங்கள், கிராமங்கள் மற்றும் தோட்டப் பகுதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள குறித்த பட்டிமன்றத்தில் இம்முறை மத மாற்றத்திற்கான அடிப்படை காரணங்கள் குறித்து சில உப தலைப்புகளின்கீழ் அறிவார்ந்த விவாத – உரையாடல் இடம்பெற்றது. இதற்கமைய இந்துமத தார்ப்பரியம் பற்றிய அறிவின்மை என்ற தலைப்பின்கீழ் நிட்டம்புவ கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர் பி இளையராஜா காத்திரமான முறையில் கருத்துகளை முன்வைத்தார். பாரபட்சமும் ஏற்றத்தாழ்வும் என்ற தலைப்பின்கீழ் அயரி தமிழ் வித்தியாலய அதிபர் இரா. இராமசீலன் நகைச்சுவை பாணியில்…

Read More

ஆறாத வடுவாகி மாறாத வலி தந்து ஒன்பது பேரின் உயிர்களை பலியெடுத்த கோர விபத்து இடம்பெற்ற சோக கரைபடிந்த கறுப்பு தினம். பசறை நகரிலிருந்து எக்கிரிய நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் இருநூறு அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ஏற்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளன. உறவுகளை இழந்து தவிக்கும் உயிர் பலியானோரின் மூன்றாவது நினைவு நாள். விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பாதிப்புக்குள்ளாகியவர்களுக்கு அரசாங்க தரப்பில் இலங்கை போக்குவரத்து சபையினால் இழப்பீடு தொகையாக பத்தாயிரம் ரூபாய் மாத்திரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் உடல் ஊனமுற்றோராக தற்போதும் சிகிச்சை பெறுபவர்களாக இருக்கின்றார்கள் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. அன்றைய நாட்களில் அனுதாப செய்திகள், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என ஆயிரம் விடயங்கள் விபத்து தொடர்பான பேசு பொருளாகின. அண்மைய காலங்களில் இலங்கை போக்குவரத்து சபையினால் வழங்கப்பட்டுள்ள புதிய பேருந்துகள் குறித்த வீதியினூடான போக்குவரத்துக்கு…

Read More

நானுஓயா நிருபர் உழவு இயந்திர பெட்டி கழன்று விபத்து – நால்வர் வைத்தியசாலையில் நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் கிரிமிட்டி பிரதேசத்தில் உழவு இயந்திர கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. நானுஓயா கொல்சி தோட்டத்தில் இருந்து மட்டுக்கலை தோட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு கொழுந்து ஏற்றிச் சென்றவர்களே உழவு இயந்திரத்தின் கொக்கை கழன்று அதன் பெட்டி தலைகீழாக வீழ்ந்ததாகவும் இதனைத் தொடர்ந்து அதில் பயணித்த நால்வரும் அதிலிருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் , இதில் படுகாயம் அடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக வைத்தியசாலையில் தகவல்கள் தெரிவித்தன. இவ்விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம், சிலாபம் அருள்மிகு முன்னேஸ்வரம் சிவன் திருக்கோயில் சிதம்பரத்தில் ஆடுகின்ற பேரருளே சிவனே சித்தத்தில் உறைந்திருந்து அருள் தருவாய் ஐயா வல்வினைகள் போக்கியெம்மைக் காத்தருளும் சிவனே வரம் தந்து எங்களுக்கு வாழ்வளிப்பாய் ஐயா நாடிவந்து உன்பாதம் சரணடைந்தோம் சிவனே நல்லருளை வழங்கி எமைக் காத்தருள்வாய் ஐயா பாடித்துதித் துன்னை நாம் போற்றுகின்றோம் சிவனே பார்த்து அருள் வழங்கி எமை ஆதரிப்பாய் ஐயா பூவுலகில் எமக்குத்துணை நீயன்றோ சிவனே பூமகளின் மைந்தரெம்மை அரவணைத் தருள்வாய் ஐயா மூவுலகும் ஆளுகின்ற மூத்தவனே சிவனே மூண்டு வரும் துன்பங்களைத் துடைத்தெறிவாய் ஐயா வேதங்கள் போற்றுகின்ற முப்பொருளே சிவனே வேதனைகள் களைந்திடவே வந்திடுவாய் ஐயா பேதலித்து நிற்பவர்க்கு வழிகாட்டும் சிவனே பேதமைகள் போக்கியெம்மைக் காத்திடுவாய் ஐயா இராமபிரான் பூசையினால் பெருமை கொண்ட சிவனே இரவு பகல் துணையிருந்து பார்த்தருள்வாய் ஐயா அறம் காத்து மறம் அழித்து அருளுகின்ற சிவனே அச்சமில்லா நிம்மதியைத் தந்திடைவாய்…

Read More

மலையக இளைஞர் பொதுப்பணி குழுவின் மற்றுமொரு மகத்தான செயற்திட்டம் கண்டி மாவட்டம் கெலாபோக் அபிராமி த.ம.வி (தேசிய பாடசாலையில்) இடம்பெற்றது. 03.01.2023 அன்று 10.30 மணிக்கு ஆரம்பமான இவ்விழா மிக சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு பாடசாலையை சுற்றி பாதுகாப்பு கமெராக்கள் (CCTV) பொருத்தப்பட்டு பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது. மேலும் இவ்வேலைத்திட்டம் மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பின் கண்டி மாவட்ட இனைப்பாளர் திரு.திலிபன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இவ்வேலைத்திட்டம் நடைபெற்றது. மேலும் இவ் வேலைத்திட்டத்தில் கலந்து சிறப்பித்த மலையக இளைஞர் பொதுப்பணி குழுவின் தலைவர் மற்றும் பொருலாளர் வெளிநாட்டில் இருப்பதால் அவருடைய துனைவியார்கள் மற்றும் உபதலைவர்,உபசெயலாளர், மாவட்ட இனைப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் அங்கத்தவர்களின் உறவினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், சிறுவர்கள், பெற்றோர்கள், முன்னாள் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வுகளின் நிழற்படங்களை இங்கு காணலாம்.

Read More