Author: Thana

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகப் பெருமளவு பணத்தைச் சம்பாதித்து, சொத்துக்களைக் கொள்முதல் செய்த சந்தேகத்தின் பேரில் 53 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 14, ஃபெர்குசன் வீதிப் பகுதியைச் சேர்ந்த பெண்ணே, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தொடர்பாகக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், பொலிஸ் மா அதிபரினால் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி பெறப்பட்ட முறைப்பாடு, மேலதிக விசாரணைக்காகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபருக்குச் சொந்தமான சட்டவிரோத சொத்துக்கள் குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அத்துடன், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த சொத்துக்களை முடக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜா-எல பகுதி: 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8.66 பேர்ச்சஸ் காணிவங்கி வைப்புகள்: 06 வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டிருந்த 59…

Read More

*பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை* “வினாத்தாள் அடங்கிய பொதியானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திறக்கப்படவோ அல்லது ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து வெளியாகவோ இல்லை. அத்துடன், எந்தவொரு வினாத்தாளும் எந்த வகையிலும் முன்கூட்டியே வெளியாகவில்லை என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன். பொய்யான தகவல்களால் பதற்றமடையாமல், நாளை (14) நடைபெறும் பரீட்சைக்கு முகங்கொடுக்குமாறு அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் அன்புடன் அறிவிக்கிறேன். நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைப்படி அனைத்து பரீட்சை மையங்களிலும் பரீட்சைகள் இடம்பெறும் என்பதால், அனைத்து பரீட்சார்த்திகளும் தமக்குரிய அட்டவணைப்படி குறித்த பரீட்சை மையங்களுக்கு சமுகமளித்து பரீட்சைக்கு முகங்கொடுக்குமாறு மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” *ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அவர்கள்* *பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்*

Read More

பதுளை மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டப் பகுதிகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்கும் எந்தவொரு முயற்சியையும் மலையக மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிப்பதாக, அதன் உப தலைவரும் பதுளை மாவட்ட அமைப்பாளருமான பகி பாலசந்திரன் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தின் பலாங்கொட ப்ளான்டேஷனுக்கு உட்பட்ட இறப்பர் உற்பத்தி பெருந்தோட்டங்களின் சில பிரிவுகளான, இங்குருகமுவ மற்றும் பசறை ஆக்கரத்தன்னை தோட்டங்களை தனியாருக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கவோ அல்லது தனியார்மயப்படுத்தவோ மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவே அவர் இந்த ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவ்வாறான தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகள், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்புப் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சமூக-பொருளாதார உரிமைகளுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதோடு, தொழில் பாதுகாப்பற்ற நிலையையும் உருவாக்கும் என்று பகி பாலசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இவ்விடயம் தொடர்பாக மலையக தொழிலாளர் முன்னணி சார்பில், பதுளை தொழில் திணைக்களத்தின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டு, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் வலியுறுத்தப்படும் என்றும்…

Read More

மஸ்கெலியா,ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு. இச் சம்பவம் நேற்று (12)மதியம் 2 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமி மலை பகுதியில் ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உரித்தான ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் உள்ள வனப் பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்ததை கண்ட அந்த பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளருக்கு அறிவித்தனர். தோட்ட முகாமையாளர் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரி கவனத்திற்கு கொண்டு வந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரிகள் இறந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தையை மீட்டு உடற் கூற்று பரிசோதனைக்காக ரந்தெனிகல மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இறந்த நிலையில்…

Read More

“Clean Sri Lanka” ஜனாதிபதி செயலணியின் தலைவராகச் செயற்படும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் அந்த செயலணியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. “Clean Sri Lanka” வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நாட்டின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் மையமாகக் கொண்டு, முன்னெடுக்கப்படும் கழிவு முகாமைத்துவ புதிய வேலைத்திட்டம் குறித்து உறுப்பினர்களைத் தெளிவுபடுத்துவதும், அதற்காக திட்ட முகாமைத்துவப் பிரிவு ஒன்றை ஜனாதிபதி அலுவலகத்தில் ஸ்தாபிப்பது குறித்தும் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது. தெரிவுசெய்யப்பட்ட சில நகரங்களை முன்மாதிரியான நகரங்களாக மாற்றுதல் மற்றும் கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் கழிவு முகாமைத்துவம், நகர அழகுபடுத்தல், கால்வாய்களைத் துப்புரவு செய்தல், கழிவுநீர்க் கட்டமைப்புகளை நவீனமயமாக்கல், பூங்காக்களை உரிய முறையில் புனரமைத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அதற்காக திட்ட முகாமைத்துவ அலகு ஒன்றை…

Read More

இலங்கை – ஜப்பான் நட்புறவுச் சங்கத்தின் தலைவர் Inoue Naoki உட்பட அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவிற்கும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (12) முற்பகல் இடம்பெற்றது. ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அண்மையில் வடமேல் மாகாண சபைக்கு மூன்று ஆம்புலன்ஸ்களை, சங்கத்தின் தலையீட்டுடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய இலங்கை – ஜப்பானிய நட்புறவுச் சங்கத்தின் தலைவர், எதிர்காலத்திலும் இலங்கைக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையே நிலவும் நீண்டகால நட்புறவை உறுதிப்படுத்தும் வகையில் வழங்கப்படும் ஆதரவை பாராட்டுவதாகத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், அதற்காக இதன்போது தனது நன்றியைத் தெரிவித்தார். ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கலாநிதி ஆர். டி. ஆர். பெரேரா, ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் ஆர். ஏ.…

Read More

களுத்துறை மாவட்டத்தில் தேயிலை பயிர்ச்செய்கையின் விரிவாக்கம் மற்றும் பயிர்ச்செய்கையை முன்னேற்றுவதற்காக அமுல்படுத்தப்பட வேண்டிய புதிய வழிமுறைகள் மற்றும் பயிர்ச்செய்கை தொடர்பான பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்  (12.08.2026), களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கௌரவத் தலைவரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் களுத்துறை மாவட்டச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் ஆகியோரின் தலைமையில் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது. . மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, மாவட்டத்தின் தேயிலைத் தொழில்துறை தொடர்பான சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேயிலை தோட்ட உரிமையாளர்களுடன் இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. . இதன்படி, களுத்துறை மாவட்டத்தில் தற்போது சுமார் 25 தேயிலை உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும், அவற்றின் ஊடாக நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் 10% உற்பத்தி செய்யப்படுவதாகவும் இங்கு தெரியவந்துள்ளது. . மாவட்டத்தின் தேயிலை தொழிற்சாலைகளின் ඵලදායිතාවய (உற்பத்தித்திறனை)…

Read More

52 பேச்சு சிகிச்சையாளர்களுக்கு (Speech Therapists) இன்று (13) கொழும்பில் நியமனம் வழங்கப்படவுள்ளது . இலவச சுகாதார சேவையின் மனித வளத்தை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், 52 பேச்சு சிகிச்சையாளர்களுக்கு (Speech Therapists) நியமனக் கடிதங்களை வழங்குதல் மற்றும் கதிரியக்க நிபுணர் (Radiographer) அறிமுக மற்றும் ஒருங்கிணைப்புப் பயிற்சிக்காக 64 பேரை ஆட்சேர்ப்பு செய்யும் நிகழ்வு, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ  தலைமையில் இன்று (13) நடைபெறவுள்ளது . அதன்படி, இந்த நியமனம் வழங்கும் மற்றும் விழிப்புணர்வுத் திட்டம் இன்று முற்பகல் 11.00 மணிக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் உயிரியல் மருத்துவ பொறியியல் பிரிவின் (Biomedical Engineering Division) புதிய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது . வைத்தியசாலைக் கட்டமைப்பில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையைக் குறைத்து, நோயாளி பராமரிப்புச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதும், பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மக்களுக்குத் திறமையான மற்றும் தரமான…

Read More

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Read More

*முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையது!**– கலாநிதி ஜனகன்* முஸ்லிம் சகோதரிகள் முன்வைத்துள்ள ஆடை தொடர்பான கோரிக்கைக்கு நான் முழுமையான ஆதரவை வழங்குகிறேன். அவர்கள் அணிந்திருப்பது முகத்தை மறைக்கும் புர்கா அல்ல. முகம் முழுமையாகத் தெரியும் வகையிலான ஹிஜாப் மட்டுமே. எனவே, நோயாளிகளின் பாதுகாப்பிற்கோ அல்லது வைத்தியர்களின் தொழில்சார் கடமைகளை நிறைவேற்றுவதற்கோ இதனால் எந்தவிதமான தடையும் ஏற்படாது என நான் கருதுகிறேன். எனவே, வைத்தியர்களும் வைத்தியசாலை நிர்வாகங்களும் இவ்விடயத்தை தேவையற்ற பிரச்சினையாகக் கருதாமல், சம்பந்தப்பட்ட சகோதரிகளின் மத நம்பிக்கைகளையும் அடிப்படை உரிமைகளையும் மதித்து செயற்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். ஒவ்வொரு தனிநபரினதும் மத நம்பிக்கைகளையும் கலாசார அடையாளங்களையும் மதிப்பது இலங்கையின் பன்மைத்துவமான சமூகத்தின் முக்கியமான பண்பாகும். எமது நாட்டில் அனைத்து மக்களும் தமது மதத்தையும் நம்பிக்கைகளையும் சட்டத்தின் வரம்புக்குள் சுதந்திரமாகப் பின்பற்றுவதற்கான உரிமையை அனுபவிக்க வேண்டும். பிறரின் நம்பிக்கைகளை மதித்து,…

Read More