Author: Thana
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் உத்தியோகபூர்வ பதவியேற்பு கொழும்பில் தனது இராஜதந்திரப் பணிகளைத் தொடங்கும் விதமாக, இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார். அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் லாண்டோ தலைமையில் இந்த வாழ்த்து மற்றும் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் எரிக் மேயருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. எரிக் மேயர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் பரந்த அனுபவம் கொண்ட ஒரு மூத்த வெளியுறவுச் சேவை அதிகாரியாவார். தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் மூத்த அதிகாரியாகப் பணியாற்றினார். இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் எரிக் மேயரை வரவேற்றுள்ளது. அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பங்களிப்பை மேலும் வலுப்படுத்த அவரது தலைமையின் கீழ் பணியாற்றத் தூதரகக் குழு ஆவலுடன்…
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நேரில் கண்டறிந்து உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை! – பா.உ ஜீவன் தொண்டமான்.
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நேரில் கண்டறிந்து உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை! – பா.உ ஜீவன் தொண்டமான். மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நேரில் கண்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நேற்றைய(12) தினம் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு, வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்குவதற்கு அவசியமான வசதிகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இதன்போது, வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை மற்றும் முக்கிய தேவைகள் தொடர்பில் வைத்தியசாலையின் முன்னாள் மாவட்ட வைத்திய அதிகாரி (D.M.O) வைத்தியர் A.R.A. ரிஷான் அவர்களுடன் விரிவாக கலந்துரையாடியதுடன், வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார். வைத்தியசாலையின் சீரான செயற்பாட்டிற்கு 27 ஊழியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 14 ஊழியர்கள் மாத்திரமே கடமையில் உள்ளனர்.…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக நீடித்த இக்கலந்துரையாடலில், நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகளும் ஆலோசனைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன. சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை நீடிக்கும் தீர்ளானது எந்தவொரு நபரையும் அல்லது குழுவையும் இலக்காகக் கொண்டது அல்லவென்றும், இது நாட்டின் பொது நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானம் மாத்திரமே என்றும் வலியிறுத்தினார். நீதியை நிலைநாட்டும் செயற்பாடானது நீதிமன்றங்களால் மாத்திரம் நடைபெறுவதில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது விசாரணைகள், வழக்குத் தாக்கல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த செயற்பாடாகும் என்றார். அந்த செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் சட்டமா அதிபர் திணைக்களம்,…
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு
மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழந்தார். இன்று (15) மாலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து: இருவர் காயம் கம்பலையிலிருந்து டயகமை நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லொரி ஒன்று மன்ராசி நகருக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் லொரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்றிரவு( 11) இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அக்கிரபத்தனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி கைது! 20 இலட்சம் பெறுமதியான ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் மீட்பு..
கொழும்பு – பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்ததாகச் சந்தேகிக்கப்படும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர், கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது நடவடிக்கையின் போது, இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ‘ஐஸ்’ மற்றும் 20 கிராம் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். முன்னதாக, கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து தெஹிவளையைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் போதைப்பொருள் தொகுதியுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர், ‘வாட்ஸ்அப்’ (WhatsApp) அழைப்பு மூலம் வழங்கிய தகவலுக்கமையவே தான் போதைப்பொருளைச் சேகரித்ததாகவும், அதனை வனத்த வீதியில் உள்ள பிறிதொரு நபரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் கைது செய்யப்பட்ட அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ்…
சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்:விஷேட தேவையுடைய பிள்ளைகளுக்கு “வேர்ல்ட் விஷன்” பாடசாலை -கொட்டகலை பிரதேச சபை அமர்வில் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவிப்பு அண்மையில் மழை வெள்ளம் மற்றும் சீரற்ற கால நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிவாரணம் கிடைக்கவுள்ளதாகவும், கொட்டகலை பிரதேசத்தில் விஷேட தேவையுடைய பிள்ளைகளுக்கு “வேர்ல்ட் விஷன்” நிறுவனம் பாடசாலை ஒன்றை கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளதாகவும் பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் (11) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாதாந்த அமர்வில் தலைமை வகித்துப் பேசுகையில் தெரிவித்தார். சபை நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அண்மையில் மறைந்த கொட்டகலை பௌத்த விகாராதிபதிக்கு ஒருநிமிட மௌனாஞ்சலி செலுத்தபப்ட்டது. டெரிகிளையர் தமிழ் வித்தியாலய மாணவர்கள் சபை நிகழ்வுகளைக் காண ஆசிரியர்களுடன் வருகை தந்திருந்தார்கள். அவர் தொடர்ந்து பேசுகையில், கடந்த வாரம் கண்டி இந்திய உதவித் தூதுவர் சரண்யா அம்மையாரை எமது செயலாளர் விஜயசுந்தரம், உறுப்பினர்…
அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம். நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம்
அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம். நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிக்கு சுயாதீனமான விசாரணைகள் அவசியம் என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகத்தினூடாக வரிய குடும்பங்களுக்கு வழங்கிய அஸ்வெசும கொடுப்பனவில் பிரதேச செயலகத்தில் பணிபுரிந்த அரச உத்தியோகத்தர்கள் சிலர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் இன்னும் சில அரச உத்தியோகத்தர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற அஸ்வெசும, சமூர்த்தி போன்ற கொடுப்பனவுகள் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுகின்ற ஒரு மானிய கொடுப்பனவாக காணப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் தித்வா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால்…
”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி
”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ‘திட்வா’ புயல் நிலைமைகளால் 758 பௌத்த விகாரைகள், 272 இந்துக் கோயில்கள், 199 முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் 99 கிறிஸ்தவ தேவாலயங்களும் பல்வேறுபட்ட அனர்த்தங்களுக்கு உள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது. 2026.04.27 மற்றும் 2026.06.15 திகதிய அமைச்சரவைத் தீர்மானங்களுக்கமைய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 329.62 மில்லியன் ரூபாய்கள் உள்ளிட்ட புத்தசாசன நிதியம், மத்திய கலாச்சார நிதியம் மற்றும் அநகாரிக தர்மபால மன்றத்தால் ஒதுக்கப்பட்டுள்ள 929.69 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்தி தற்போது குறித்த வணக்கத்தலங்களில் 250 தலங்களில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேதமடைந்துள்ள எஞ்சிய வணக்கத்தலங்களில் மேலும் 144 தலங்களை 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்தி புனரமைப்புச் செய்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அயரபி தோட்டத்தில் இன்று மதியம் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவிகள் கலைந்து கொட்டியதில் 11 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று மதியம் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள அயரபி தோட்டத்தில் இடம் பெற்று உள்ளது என நோர்வூட் பொலிசார் தெரிவித்தனர். இது குறித்து மேலும் கூறுகையில் பெண் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில் களைந்து கொட்டியதில் 11 பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக கொண்டு செல்ல பட்ட வேளையில் 35 வயது முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட 3 பெண்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏனைய 8 பேர் வெளிநோயாளர் பகுதியில் சிகிச்சை பெற்று வெளியேறி உள்ளனர் என வைத்திய சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். …