Author: Thana
முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவுக்கு விசாரணையின் நிமித்தம், அழைக்கப்பட்டிருந்த அகிலவிராஜ் காரியவசம், கைதுசெய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, முன்னாள் கல்வி அமைச்சரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அமைச்சராக பதவி வகித்த காலப் பகுதியில் அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியாவில் 8 மாதங்களாக நிவாரண முகாமில் தங்கியிருந்த 35 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் கையளிப்பு
8 மாதங்களாக நிவாரண முகாமில் தங்கியிருந்த 35 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் கையளிப்பு டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து, மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக நுவரெலியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட யுனிக்விவ் கிராமத்தைச் சேர்ந்த 35 குடும்பங்கள் கடந்த எட்டு மாதங்களாக நுவரெலியா மாநகரசபையின் உள்ளக அரங்கில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ஜனாதிபதி, அவர்களுக்கு நிரந்தரத் தீர்வை வழங்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். அந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று நுவரெலியா மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வீடுகள் 35 குடும்பங்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. நிரந்தர வீடுகள் அமைக்கப்படும் வரை அவர்கள் இங்கு தங்குவதற்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தலைமையில் நடைபெற்றது. இதில் நுவரெலியா பிரதேச செயலாளர்,…
முன்னாள் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் இன்றைய தினம் வாக்குமூலம் அளிப்பதற்காக சமூகமளித்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!
2026-ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, அனைத்து விதமான மேலதிக பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் பட்டறைகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இத்தடை அமுலில் இருக்கும். இக்காலப்பகுதியில் மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல், அல்லது பரீட்சை வினாக்களை வழங்குவதாகக் கூறி துண்டுப் பிரசுரங்கள் அச்சிடுதல் மற்றும் ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்வதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இம்முறை புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 09-ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளது. இதனிடையே, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களப் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இங்கு இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், அதில் ஒன்று வெடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், இந்த வெடிப்புச் சம்பவத்தால் எவருக்கும் எவ்வித காயமும் அல்லது பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள CCTV கெமராவில் பதிவாகியுள்ளன.
கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் மேகமூட்டமான வானிலை நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்…
கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு: தாழ்நில மக்களுக்கு உடனடி வெள்ள அபாய எச்சரிக்கை
”கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மற்றும் சேறு போக்கும் மதகுகள் இன்று (05) காலை திறந்து விடப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிகப்படியான நீர், வினாடிக்கு 130 கன மீற்றர் வேகத்தில் கொத்மலை ஓயாவிற்குள் வெளியேற்றப்பட்டு வருவதாக இலங்கை மகாவலி அதிகார சபையின் பொறுப்புப் பொறியிலாளர் தெரிவித்துள்ளார். வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றின் இருமருங்கிலும் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ள அபாயம் காணப் படும் பகுதிகள்: கொத்மலை அணையின் கீழ் பகுதி: நுகவேல, ரிவர்சைட், மாவதுர. மகாவலி கங்கையை ஒட்டிய தாழ்நிலங்கள்: உலப்பனே முதல் கம்பளை, வெலிகல்ல, கெலியோயா, பேராதனை, கட்டுகஸ்தோட்டை மற்றும் பொல்கொல்ல வரை. எனவே, இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் செயல்பட்டு, தமது உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து,…
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட திம்புளை கீழ்ப்பிரிவு வெள்ளப் பாதிப்பு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் பிரதேச சபை தலைவர்!
மத்திய மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகக் கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட திம்புளை கீழ்ப்பிரிவு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளை இழந்து மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் வெளியேற்றப்பட்ட பொதுமக்கள், அப்பகுதியிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களைக் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவர்களது தற்போதைய அவசரத் தேவைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்த அவர், அவர்களுக்குத் தேவையான உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் வெள்ளத்தினால் சேதமடைந்த இடங்களையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
மலையகத் தபால் சேவைகளை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் தபால் சேவைகளில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பெருந்தோட்டங்களில் தபால் சேவையினை வலுப்படுத்தல், புதிய ஆட்சேர்ப்பு உள்ளிட்டவை தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் (04.08.2026) பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக கௌரவ பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன அவர்களின் பங்கேற்பில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது, மலையகத்தில் சீரான தபால் விநியோகம், புதிய தபால் ஊழியர்கள் நியமனம் மற்றும் தற்போது சேவையிலுள்ள தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர்களான அம்பிகா சாமுவேல், கிட்ணன் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
“மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”
பதுளையில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ தனியார் பேருந்தின் ஓட்டுநர், கடுமையான மதுபோதையில் இருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொணராகலையிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த குறித்த பேருந்து, வீதியில் ஆபத்தான முறையில் இயக்கப்படுவதாக பதுளை தலைமையகப் பொலிஸாருக்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பதுளை போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள், பதுளை – பசறை வீதியிலுள்ள உடவெல மகா வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து பேருந்தை வீதி மறிப்புச் செய்து பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, ஓட்டுநர் கடும் மதுபோதையில் பேருந்தை இயக்கியது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் உடனடிப்படக் கைது செய்யப்பட்டார். சம்பவத்தின் போது, பதுளை நகரிலுள்ள 4 முன்னணிப் பாடசாலைகளைச் சேர்ந்த 30 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 40 பேர் அப்பேருந்தில் பயணஞ்செய்துள்ளனர். பின்னர், பொலிஸாரின் தலையீட்டால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மாற்று வாகனங்கள் மூலம் பாதுகாப்பாகத் தத்தமது பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம்…