Author: Thana
அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகளை நோக்கி ஈரான் தனது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் பல கட்டங்களாகத் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) வௌியிட்டுள்ள முக்கிய தகவல்கள்: ஜோர்தான் தளம் மீது தாக்குதல்: ஜோர்தானில் உள்ள ‘இளவரசர் ஹசன்’ (Prince Hassan) விமானப் படையணித் தளத்தைக் குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள அமெரிக்க இராணுவத்தின் எரிபொருள் சேமிப்புத் தாங்கிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது. பஹ்ரைனில் ஒலித்த அபாய எச்சரிக்கை: பழிவாங்கும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக பஹ்ரைனின் ‘ஷேக் ஈசா’ (Sheikh Isa) பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கத் தளம் தாக்கப்பட்டுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து பஹ்ரைனில் அவசரகால அபாய எச்சரிக்கை ஒலிகள் (Sirens) எழுப்பப்பட்டதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. இத்தளம் அமெரிக்காவின்…
டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி”: கல்முனையில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் விழிப்புணர்வு செயற்றிட்டம் ஆரம்பம்
டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி”: கல்முனையில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் விழிப்புணர்வு செயற்றிட்டம் ஆரம்பம் நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தலில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கான சமூக மட்டத்திலான விழிப்புணர்வு மற்றும் ஒழிப்புச் செயற்றிட்டம், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த மக்கள் நல செயற்றிட்டம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல், நேற்று (11) கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஆசாத் பிளாசா மண்டபத்தில், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இச்செயற்றிட்டத்தின் அவசியம் குறித்து விளக்கிய ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற சுகாதார அமைச்சுடன் இடம்பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் கூறுகையில்: “இன்று நாட்டில் அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்ற டெங்கு அபாயத்திலிருந்து மக்களை மீட்டெடுக்கின்ற பணியில், சமூக மட்ட…
இந்தியா டெல்லியில் நடக்கும் தலைமைத்துவ பயிற்சிக்காக தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி பொது செயலாளர் சுப்பையா கமலதாசன் டெல்லி பயணம்.
இந்தியா டெல்லியில் நடக்கும் தலைமைத்துவ பயிற்சிக்காக தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி பொது செயலாளர் சுப்பையா கமலதாசன் டெல்லி பயணம். இந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டு அமைச்சு மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 5 நாள் தலைமைத்துவ பயிற்சிநெறி 13 – 17 வரை டெல்லியில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி பொது செயலாளர் சுப்பையா கமலதாசன் டெல்லி சென்றுள்ளார். கெர்க்ஸ்வோல் இல 2 மற்றும் ஹைலண்ட்ஸ் கல்லூரிகளின் பழைய மாணவரான அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் டிப்ளொமாவினை நிறைவு செய்துள்ளார். தற்போது சென்மேரிஸ் கனிஸ்ட பாடசாலையின் பாடசாலை அபவிருத்திக்குழுவின் செயற்குழு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“மலையக காணி உரிமை” பற்றி தம் உண்மை கொள்கையை அனுர அரசு அறிவிக்க வேண்டும். <கொள்கை வரும்வரை பலவந்த வெளியேற்றம் இடைநிறுத்த பட வேண்டும்- மனோ கணேசன்> பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் காணி உரிமை தொடர்பில், பேசி, பேசியே, காலத்தை கடத்தியது போதும். இது தொடர்பில் தமது உண்மையான கொள்கை என்ன என்பதை அனுர அரசு இனியாவது உடனடியாக அறிவிக்க வேண்டும். இதை நான் திரும்ப, பலமுறை பாராளுமன்றத்திலும், வெளியேயும் கூறி விட்டேன். இப்போது மீண்டும் கூறுகிறேன். நீங்கள் உங்கள் “ஹட்டன் பிரகடனத்தில் கூறி, வாக்கு வாங்கிய, மலையக காணி உரிமை என்ற கொள்கை என்னாச்சு?”, எனவும் ஆளுகின்ற அனுர அரசை கேட்கிறேன், என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, நாம் கோருவது, களியாட்ட விடுதிகளை…
நாட்டில் டெங்கு நோய் பரவல் மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், நோய் பாதிப்பு அதிகம் உள்ள வலயங்களில் அமைந்துள்ள அரச, அரை அரச மற்றும் தனியார் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களை ஆகக்குறைந்தது இரு வாரங்களுக்கு உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகள் ஒன்றிணைந்து இந்த கல்வி நிறுவனங்களை மூடி, அவற்றின் வளாகங்களைச் சுத்தப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகளுக்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், தற்போது மேல் மாகாணம் உள்ளிட்ட பல மாகாணங்களில் சுமார் 70,000-க்கும் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், உத்தியோகபூர்வமாக பதிவாகாத நோயாளர்களின் எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார். நோயாளர்களின் எண்ணிக்கை…
இலங்கையில் தீவிரமடையும் டெங்கு பரவல்: மரணங்கள் 47 ஆக உயர்வு, வைத்தியசாலைகளில் கடும் இடநெருக்கடி!
நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் தற்போது மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 67,174 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் பாரியளவிலான அதிகரிப்பு பதிவாகி வருகிறது. குறிப்பாக, ஜூலை மாதத்தின் முதல் 09 நாட்களில் மாத்திரம் 10,685 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், நேற்று (10) ஒரே நாளில் மாத்திரம் சுமார் 1,110 புதிய டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார். டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதன் காரணமாக, நாட்டின் பல முக்கிய வைத்தியசாலைகளின் கொள்ளளவு தற்போது அதன் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் விளைவாக, வைத்தியசாலைகளில்…
மன்னாரைச் சேர்ந்த கத்தோலிக்க பக்தர்கள் குழுவொன்று, புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் பல தசாப்தங்களாக பயன்படுத்திவந்த வில்பத்து தேசியப் பூங்கா வழியாகச் செல்லும் பாரம்பரியப் பாதையை ஐந்து நாட்களுக்கு திறந்து விடுமாறு விடுத்த கோரிக்கைக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. ஜூலை மாதம் 6ஆம் திகதி முள்ளிக்குளம் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில் நடைபெற்ற ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தில், முள்ளிக்குளம், பள்ளங்கண்டல் மற்றும் காயாக்குளி கிராமங்களைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள் பங்கேற்றிருந்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளைக்கண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஜூலை மாதம் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறும் ஆண்டு திருவிழாவில் பங்கேற்கும் வகையில் வில்பத்து தேசிய பூங்கா ஊடான பாதையை மீண்டும் திறந்து விடுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மன்னார் மாவட்டச் செயலாளர் கே. கனகேஸ்வரனிடமும் அவர்கள் கையளித்தனர்.…
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மாகாணத்திலும் மற்றும் மொனராகலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சேவைக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும் கொரியத் தூதுவர் மியோன் லீ, ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்
இராஜதந்திர சேவைக்காலத்தை பூர்த்தி செய்து புறப்படவிருக்கும் இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீ (Miyon LEE), (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவைச் சந்தித்தார். இலங்கைக்கும் கொரியாவிற்கும் இடையே நிலவும் நீண்டகால நட்புறவு மற்றும் புதிய வேலைத்திட்டங்களுக்காக வழங்கிய பங்களிப்பை தாம் பாராட்டுவதாக கொரியத் தூதுவர் இதன்போது நினைவு கூர்ந்தார். புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டத்திற்கும் இலங்கையின் அபிவிருத்திக்காகவும் கொரிய அரசாங்கம் வழங்கிய பங்களிப்பு குறித்து ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இலங்கைக்கான கொரியக் குடியரசு தூதரகத்தின் பிரதி தூதுக்குழுத் தலைவர் Eunji Kang ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு
அக்கரப்பத்தனை -கிலைன்ளைன் பாடசாலையில் கல்வி முதுமாணிப் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா
கல்வி முதுமாணிப் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா: சிறப்பாகக் கௌரவித்த பாடசாலை சமூகம் அக்கரபத்தனை: ம.மா.நு/கிலைன்ளைன் த.ம.வி. பாடசாலையில் சேவையாற்றி வரும் ஆசிரியர்களான திரு. S. தயான் மற்றும் திருமதி. S. திலகமலர் ஆகியோர் கல்வி முதுமாணிப் பட்டத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களின் இந்த உயரிய கல்வி அடைவை முன்னிட்டு, பாடசாலையில் விசேட பாராட்டு நிகழ்வு ஒன்று அண்மையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உப அதிபர், பகுதித் தலைவர்கள், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பாடசாலை சமூகத்தினர் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டனர். இதன்போது, கல்வி முதுமாணிப் பட்டம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்கள் இருவருக்கும் பாடசாலை சமூகம் சார்பில் பொன்னாடை போர்த்தப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். தமது கல்வியை மேலும் மெருகேற்றிக்கொண்ட இவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துரைகளை வழங்கினர். மாணவர்களின்…