Author: Thana

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயாவில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக லிந்துலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல் போயுள்ளவர் லிந்துலை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன சிறுவன் மேலும் சில நண்பர்களுடன் இணைந்து, மீன் தொட்டிக்குத் தேவையான கற்களை சேகரிப்பதற்காகச் சென்றிருந்த போதே ஆக்ரா ஓயாவில் விழுந்து இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸ் கடற்படை பிரிவின் நுவரெலியா பிரிவினரும் பிரதேசவாசிகளும் இணைந்து காணாமல் போன சிறுவனைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

ஜனாதிபதி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் ஆராய்வு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுக்கு, 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன் மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் ஒவ்வொரு பிரிவினாலும் மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களினாலும் 2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்து இங்கு தனித்தனியாக ஆராயப்பட்டது. தம்புள்ளை, இங்கிரிய, வாழைச்சேனை, மில்லனிய மற்றும் கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்களில் கைத்தொழில் வலயங்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்ததுடன், காணிகளை ஒதுக்குதல், மின்சாரம், நீர், வீதிகள்…

Read More

கம்பளை பகுதியில் 12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் நீண்டகாலமாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்த அதிர்ச்சித் தகவல் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து வௌிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுநீரகத் தொற்று காரணமாக குறித்த சிறுமி கம்பளை போதனா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிறுமியைப் பரிசோதித்த வைத்தியர்கள், அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பதை கண்டறிந்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த இரண்டு வருடங்களாகச் சிறுமி தொடர்ச்சியாக இக்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் 54 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைக் கம்பளைப் பொலிஸார் கைது செய்து, கம்பளை நீதவான் சரசி ஸ்ரீ பரணமன முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி…

Read More

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று (13) மற்றும் இன்று (14) அதிகாலை வேளையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இப்புதிய மரணங்களுடன், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த வன்முறை மோதல்களின் போது 21 சிறைக்கைதிகள் உயிரிழந்திருந்ததாகப் பொலிஸார் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தனர். இதற்கமைய, இந்தச் சம்பவத்தில் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த மரணங்களின் எண்ணிக்கை தற்போது 31 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, குறித்த மோதல்களின் போது படுகாயமடைந்த மேலும் சில சிறைக்கைதிகளும், அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும்,…

Read More

வெளியேற்றப்பட்ட ராகலை நடுக்கணக்கு மக்களுக்கு மீண்டும் அதே வீடுகளை வழங்குவதில் எந்த சட்டச்சிக்கலும் இல்லை இரா.ஜீவன் இராஜேந்திரன் இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கிய மலையக சமூகத்தின் உறவுகளான இராகலை நடுக்கணக்கு தோட்டத்தை சேர்ந்த 06குடும்பங்கள் குறித்த தோட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு சொந்த பணத்தில் வீடமைத்து சுமார் 30 வருடங்களாக வாழ்ந்து வாழ்விடத்திலிருந்து இலங்கை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு நீதிமன்ற வழக்கொன்றை தாக்கல் செய்து தீர்ப்பின் அடிப்படையில் எவ்வித முன்னறிவித்தலும் இல்லாமல் வெளியேற்றியுள்ளமையானது மலையக பெருந்தோட்டத் துறையில் 200 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியிலும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது ஆகவே பாதிக்கப்பட்ட இம் மக்களுக்கு காணி அமைச்சரும் அரசாங்கமும் மனிதாபிமான அடிப்படையில் நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டுமென நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்தார் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் அரச காணிகளில்…

Read More

*இலங்கை தேயிலை கிராமங்கள் 500ஐ மேம்படுத்த அரசாங்கம் தீர்மானம்; 2030க்குள் 2.5 பில்லியன் டொலர் இலாபமே இலக்கு வைப்பதாக பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிப்பு!* (சாந்தன்) நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக ‘சிலோன் டீ’ (Ceylon Tea) கிராமங்கள் 500ஐ உருவாக்கி, அவற்றை நுகர்வோர் மற்றும் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டியிலுள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் 500 தேயிலை கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கமே நேரடியாக வழங்கவுள்ளதுடன், முதற்கட்டமாக இவற்றில் இருந்து 50 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு, அங்குள்ள தேயிலை தொழிற்சாலைகளை நவீனமயமாக்குவதற்கும் புனரமைப்பதற்கும் எதிர்பார்ப்பதாக பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார். இத்திட்டத்தின் தேசிய உத்தியோகபூர்வ…

Read More

நுவரெலியா சந்தை நிலவரம்: இன்றைய காய்கறி விலை விபரம் இதோ! ​நுவரெலியா நிருபர் | 2026 ஜூலை 13 ​நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (13.07.2026) விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைப்பட்டியல் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, சில முக்கிய காய்கறிகளின் விலைகள் பின்வருமாறு பதிவாகியுள்ளன. கோவா ஒரு கிலோகிராம் மொத்த விலையாக ரூ. 80 இற்கும், சில்லறை விலையாக ரூ. 110 இற்கும் விற்பனை செய்யப்படுகிறது. கரட் மொத்த விலையாக ரூ. 240 இற்கும், சில்லறை விலையாக ரூ. 270 இற்கும் விற்பனையாகிறது. ​கிழங்கு வகைகள்: சாதாரண உருளைக்கிழங்கு மொத்த விலையாக ரூ. 270 இற்கும், சில்லறை விலையாக ரூ. 290 இற்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சிவப்பு உருளைக்கிழங்கு மொத்த விலையாக ரூ. 230 இற்கும், சில்லறை விலையாக ரூ. 250 இற்கும் சந்தையில் உள்ளது. ​அதிக விலை கொண்டவை: குடைமிளகாய் (சிவப்பு)…

Read More

கம்பொல: கம்பொல பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் வளாகத்தில், கழிவுநீர் குழாய் பதிப்பதற்காக நிலத்தைத் தோண்டியபோது, நிலத்திற்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான அறை ஒன்று கண்டெடுக்கப்பட்ட விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பாடசாலையின் அதிபர் கம்பொல பொலிஸாரிடமும், வலயக் கல்வி அலுவலகத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். தற்போது நாடளாவிய ரீதியில் வேகமாக பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இரண்டரை ஏக்கர் பரப்பளவு கொண்ட பாடசாலை மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் அண்மையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன்போது, பாடசாலை சிற்றுண்டிசாலையின் (Canteen) கழிவுநீரை வெளியேற்றுவதற்காக மைதானத்தின் ஒரு பகுதியில் நிலத்தை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. சுமார் ஒன்றரை முதல் இரண்டு அடி ஆழம் வரை தோண்டியபோது, நிலத்தடியில் கான்கிரீட் சிலாப் (Concrete slab) ஒன்று தென்பட்டுள்ளது. இதனை ஒரு பழைய கழிவுநீர் வெளியேற்றும் கட்டமைப்பின் ஒரு பகுதி எனத் தவறாகக் கருதிய…

Read More

சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை (Civil Security Force) வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்குள் உள்வாங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் இன்று (13) சுகயீன விடுமுறைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு இணையாக, பத்தரமுல்லையில் அமைந்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக பாரிய கண்டனப் போராட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணிப்பாளர் நாயகம் தன்னிச்சையாகச் செயற்படுகிறார்: தொழிற்சங்கம் குற்றச்சாட்டு இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை வனஜீவராசிகள் கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக பீரிஸ் தெரிவித்ததாவது: “வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மிகவும் தன்னிச்சையான முறையில் இந்த நியமனங்களை மேற்கொள்ள முயற்சிக்கிறார். இந்த நியமனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால், இதில் உள்ள குறைபாடுகள் மற்றும் தற்போது கடமையாற்றும் அதிகாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எங்களுடன் கலந்துரையாட ஒரு சந்தர்ப்பத்தை…

Read More

பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களின் ஓய்வுபெறும் வயதை திருத்துவது அல்லது அதிகரிப்பது தொடர்பாகக் கிடைத்துள்ள கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மீரிகம வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுநீரகக் கற்களை அகற்றும் சிகிச்சை பிரிவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (12) கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், தங்களால் மேலும் சில காலம் திறம்பட சேவை ஆற்ற முடியும் எனத் தெரிவித்து, பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் அரச அதிகாரிகள் இந்த ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான யோசனைகளை அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ளனர் என்றார். இவ்விடயம் குறித்து விரிவாக விளக்கிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “ஏற்கனவே பலதரப்பட்ட தொழில் வல்லுநர்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் நீதித்துறை அதிகாரிகள் மட்டுமன்றி,…

Read More