Author: Thana

ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன்! கண்டி: மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட இந்த இராஜினாமா கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்று பேராசிரியர் சரத் அபேகோன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் பதவியிலிருந்து விலகுவதற்கு எடுத்த முடிவு முற்றிலும் தனிப்பட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டது என பேராசிரியர் சரத் அபேகோன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இவர் இதற்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் (Vice Chancellor) சில காலம் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையில் காளான் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும், எதிர்பாராத நட்டங்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் புதிய காப்புறுதித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபையினால் இப்புதிய காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு: தவணைக்கட்டணம் (Premium): 250 காளான் வளர்ப்பு பைகளைக் கொண்ட காளான் வளர்ப்பு கூடம் ஒன்றினை, 3 மாத காலப்பகுதிக்கு காப்புறுதி செய்வதற்கான தவணைக்கட்டணமாக சுமார் 2,025 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காப்புறுதி இழப்பீடு (Claim): காளான் பயிர்ச்செய்கையின் போது நோய்கள் அல்லது பூச்சித் தாக்கங்கள் காரணமாக சேதங்கள் ஏற்பட்டால், 22,500 ரூபா காப்புறுதி இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். தகுதி: விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக காளான் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் இக்காப்புறுதிப் பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்களாவர். பயிர்களுக்கு ஏற்படக்கூடிய எதிர்பாராத இயற்கை மற்றும் நோய் சார் நட்டங்களில் இருந்து…

Read More

500 ட்ரோன்கள், முன்னணி கலைஞர்களின் இசை நிகழ்ச்சியுடன் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது 2026 எல்பிஎல் தொடர் கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) 2026 தொடரின் தொடக்க விழா எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. கிரிக்கெட், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம் மற்றும் தேசியப் பெருமிதம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, ரசிகர்களுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் சர்வதேச தரம் வாய்ந்த இந்த உள்நாட்டு டி20 தொடரின் ஆறாவது அத்தியாயம் இந்த பிரம்மாண்டான தொடக்க விழாவுடன் ஆரம்பமாகிறது. ஏல்பிஎல் வரலாற்றிலேயே மிகவும் மறக்கமுடியாத ஒரு தொடக்கமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரடி இசை நிகழ்ச்சிகள், உத்தியோகபூர்வ மரபுவழி நிகழ்வுகள், அணிகளின் அறிமுகம், எல்பிஎல் சம்பியன் கிண்ணம் அறிமுகம் மற்றும் வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையிலான 500 ட்ரோன்களின் வான்வெளி ஒளிக்காட்சி (Drone Show) என கிரிக்கெட் ரசிகர்கள் தவறவிடக்கூடாத பல சுவாரஸ்யங்களை இந்தத் தொடக்க விழா உள்ளடக்கியுள்ளது. இந்த மாபெரும் மாலைப் பொழுதை மேலும் சிறப்பிக்கும் வகையில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற யொஹானி, சங்க தினேத் மற்றும் செண்டிகிரேட்ஸ் ஆகிய இலங்கையின் முன்னணி கலைஞர்கள் வழங்குகின்ற இசை நிகழ்ச்சிகள் அரங்கேறவுள்ளன. இதில் குறிப்பாக, சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகி யொஹானி, தனது உலகளாவிய ஹிட் பாடலான ‘மெனிகே மகே ஹித்தே’ பாடல் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தவுள்ளார். அவருடன் இணைந்து பிரபல பாடகர் சங்க தினேத் மற்றும் ‘செண்டிகிரேட்ஸ்’ இசைக் குழுவினரும் உள்ளூர் மற்றும் சர்வதேச ரசிகர்களைக் கவரும் வகையில் தங்களது அதிரடி இசை நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர். இந்த விழாவின் முக்கிய அங்கமாக, லங்கா பிரீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் சமந்த தொடங்வெல 2026 எல்பிஎல் தொடரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான எல்பிஎல் சம்பியன் கிண்ணம் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் அறிமுகப்படுத்தப்படும். இந்தத் தருணம் மைதானத்தில் உள்ள ரசிகர்களுக்கும், தொலைக்காட்சிகள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் வாயிலாகப் பார்க்கும் கோடிக்கணக்கான பார்வையாளர்களுக்கும் ஒரு சிறந்த காட்சி விருந்தாக அமையும். மேலும், இம்முறை களமிறங்கும் ஐந்து அணிகளும் ரசிகர்களுக்கு முறைப்படி அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளன. இது தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாக, ரசிகர்கள் மத்தியில் தத்தமது அணிகள் மீதான ஆதரவையும், உற்சாகத்தையும், அரவணைப்பையும் வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். இந்த விழாவிற்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில், 500 ட்ரோன்கள் கொழும்பு வானத்தை அலங்கரிக்கவுள்ளன. எல்பிஎல் பிராண்டிங் முத்திரைகள், கிரிக்கெட் சார்ந்த காட்சிகள், தேசத்தின் பெருமையை பறைசாற்றும் வடிவங்கள் மற்றும் அணிகளின் சின்னங்கள் ஆகியவற்றை இந்த ட்ரோன்கள் வானில் ஒளி வடிவில் சித்தரிக்கவுள்ளன. ரசிகர்களைப் பரவசப்படுத்தி, என்றும் நினைவில் நிற்கக்கூடிய ஒரு காட்சி விருந்தாக அமையவிருக்கும் இந்த ட்ரோன் காட்சி, 2026 எல்பிஎல் தொடரை ஒரு சர்வதேச அளவிலான விளையாட்டுக் திருவிழாவிற்குரிய தரத்திற்கு உயர்த்துமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடக்க விழா குறித்து ஐபிஜி நிறுவனத்தின் ஸ்தாபகரும், தலைவருமான அனில் மோகன் கருத்துத் தெரிவிக்கையில், “2026 எல்பிஎல் என்பது வெறும் கிரிக்கெட் தொடர் மட்டுமல்ல. அது ரசிகர்களுக்கான ஒரு முழுமையான கொண்டாட்டமாகும். ஜூலை 17 ஆம் திகதி நடைபெறும் தொடக்க விழா விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்பத்தை ஒன்றிணைத்து இலங்கையைக் கொண்டாடுவதாக அமையும். இந்த முதல் நாளில் ரசிகர்கள் பங்கெடுப்பதற்கான வலுவான காரணியாக இது இருக்கும். இந்தத் தொடக்க விழா, இந்த அத்தியாயம் முழுவதும் ஆற்றல், உற்சாகம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட்டுக்கான அடித்தளமாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார். இந்த நிலையில், லங்கா பிறீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் சமந்த தொடங்வெல கருத்து தெரிவிக்கையில், “ஒவ்வொரு எல்பிஎல் அத்தியாயத்திலும் தொடக்க விழா என்பது மிக முக்கியமான ஒரு தருணமாகும். ஏனெனில், இது கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு வீரர்கள், அணிகள் மற்றும் ரசிகர்களை ஒன்றிணைக்கிறது. இந்த ஆண்டு தொடக்க விழா, தொடரின் வளர்ந்து வரும் பெருமையை பறைசாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 2020 எல்பிஎல் இன் மறக்கமுடியாத தொடக்கத்திற்காக ரசிகர்களை கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்றார். எனவே, இந்த ஆண்டு எல்பிஎல் தொடரின் தொடக்க விழாவும், முதல் போட்டியும் கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெறவுள்ளதால், கொழும்பு நகரின் மையப்பகுதியில் கிரிக்கெட் திருவிழா களைகட்டவுள்ளது. கிரிக்கெட் ஆர்வலர்கள், குடும்பங்கள் மற்றும் அணிகளின் ஆதரவாளர்கள் தங்களது நுழைவுச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு, டி20 கிரிக்கெட்டின் விறுவிறுப்பும், உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கும் இணையும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இரவின் ஒரு பகுதியாக மாறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடக்க நாளன்று மாலை 5:00 மணிக்கு மைதானத்தின் வாயில்கள் ரசிகர்களுக்காகத் திறக்கப்படும். மாலை 6:15 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகவுள்ளதோடு, இரவு 7:45 மணிக்கு இந்த அத்தியாயத்தின் முதல் போட்டி தொடங்கவுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்க விழாவைக் காண ரசிகர்கள் தங்களின் நுழைவுச்சீட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். லங்கா பிறீமியர் லீக் 2026 தொடரானது ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளதுடன், இதில் ஐந்து முன்னணி அணிகள்,…

Read More

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் போதைப் பொருளுடன் இருவர் அதிரடியாக கைது. இச் சம்பவம் நேற்று 14 ம் திகதி மதியம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான சாலையில் புரவுன்லோ தோட்ட பால் சேகரிப்பு நிலைய பகுதியில் வைத்து அதிரடியாக இருவர் மஸ்கெலியா பொலிசார் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்ய பட்டவர்கள் முறையே 38 வயது 34 வயது உடைய மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஒருவரும் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர். அவர்களிடம் இருந்து முறையே 3290 மில்லிகிரேம் ஜஸ் 360 மில்லிகிரேம் ஹேஸ் எனப் படும் போதைப் பொருள் மீட்டு உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்ப்பகுமார தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் நெடுங்காலமாக சட்டவிரோதமாக முறையில் இப் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து மஸ்கெலியா…

Read More

மலையக பெருந்தோட்டங்களில் அறநெறி கல்வியை முறையாக கற்றுக்கொள்ள பல அசௌவ்கரியங்களுக்கு மாணவர்கள் முகங்கொடுக்கின்றனர். ஆகவே அறநெறி பாடசாலைகளை மேம்படுத்த பெருந்தோட்டங்களில் அறநெறி பாடசாலைகளை அமைப்பதற்கு 20 முதல் 30 பேர்ச்சஸ் காணி ஒதுக்கீடை தருமாறு.ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட தெஹியோவிற்ற பிரதேச சபை உறுப்பினர் செவனையா சற்குணராஜா 14.07.2026 இடம்பெற்ற பிரதேச சபை அமர்விலே அரங்சாங்கத்திற்கு வேண்டுக்கோல் விடுத்துள்ளார்.

Read More

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் (14) சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, இந்திய துணை ஜனாதிபதி C.P இராதாகிருஸ்ணன் இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் OCI வீசாவை வழங்குங்கவதற்கான நடைமுறையை இலகுப்படுத்திய போதிலும், OCI வீசா பெறுவதற்கான கட்டணம் இலங்கை ரூபா மதிப்பில் 90 ஆயிரம் என்பதால், அதனை பெற்றுக் கொள்வதில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். எனவே OCI வீசாவை பெறுவதற்கு விசேட சலுகை முறையில் குறைந்த கட்டணம் அறவிட வேண்டும் என செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார். தெலுங்கானா முதலமைச்சரை சந்தித்தது குறித்தும், அவருடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் குறித்தும் செந்தில் தொண்டமான் சந்தோஷ் ஜாவிடம் தெளிவுப்படுத்தினார். மேலும் இச்சந்திப்பின் போது சமகால அரசியல் நிலவரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Read More

பசறை, பிபிலை கல்வி வலயங்களுக்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நியமனம். பசறை, பிபிலை ஆகிய கல்வி வலயங்களுக்கான புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (14) ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்படி, பசறை கல்வி வலயத்தின் தற்போதைய கல்விப் பணிப்பாளராக பணியாற்றி வந்த இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான திருமதி எம். ஏ. ஸரீனா பேகம் அவர்கள், பிபிலை கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதேவேளை, வெளிமடை கல்வி வலயத்தின் பிரதி வலயக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றி வந்த இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர கல்வி அதிகாரியான ஆர். எம். நவாஸ் அவர்கள், பசறை கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனங்கள் மூலம் கல்வி…

Read More

நுவரேலியாவில் 6 குடும்பங்களுக்கு நேர்ந்த அவலம்: காணி சீர்திருத்த ஆணைக்குழு மனிதாபிமானத்துடன் செயல்பட கோரிக்கை நுவரேலியா – இராகலை சென்லியனாட்ஸ் என்கிற நடுக்கணக்கில் 6 குடும்பங்கள் 30 வருடமாக வாழ்ந்து வந்த காணிகள் வழக்கின் ஊடாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு (LRC) சொந்தமானது என உறுதியாகி உள்ளது. ஆறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தாம் சிறுகச் சிறுகச் உழைத்த பணத்தை கொண்டு வீடுகளை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி தமது வாழ்வை கட்டியெழுப்பி இருப்பர். இந்த #மனிதாபிமான நெருக்கடியை கருத்திற் கொண்டு இலங்கை அரசுக்கு சொந்தமான காணி சீர்திருத்த ஆணைக்குழு இந்த வீடுகளை அந்த மக்களுக்கே வழங்க உடனடியாக முன்வர வேண்டும். என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மலையகப் பிராந்திய செயலாளர் டேவிட் சுரேன் கோரிக்கை விடுத்துள்ளார். காணி சீர்திருத்த ஆணைக்குழு தலைவர் மற்றும் காணி அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று முடிவெடுக்க வேண்டும். காணிகளுக்கு சொந்தக்காரர்…

Read More

வி.தீபன்ராஜ் லிந்துலையில் நீரில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு. கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் காணாமல் போயிருந்த மாணவனை இன்றைய தினம் (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை (13) நண்பகல் சுமார் 12.30 மணியளவில், பாடசாலையில் நடைபெற்ற பரீட்சையை எழுதி முடித்த 10 மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறி, ஓல்ரிம் பகுதியின் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது, மாணவர்களில் ஒன்பது பேர் பாதுகாப்பாக கரை திரும்பிய நிலையில், ஒரே மாணவன் மட்டும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டு நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தீவிரமாகத் தேடியும் மாணவனின் உடலை நேற்று (13) கண்டறிய முடியவில்லை போதிய வெளிச்சம் இல்லாததால் இரவு தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது தொடர்ந்து இரண்டாவது நாளாக…

Read More

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது குளவிகள் தாக்குதல் நடத்தியதில், 20 பேர் காயமடைந்து மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று (13) மதியம் இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது: மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் (Brownswick) தோட்டத்தின் புரவுன்சீக் பிரிவில் பெண் தொழிலாளர்கள் வழக்கம்போல் தேயிலைக் கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, அப்பகுதியில் இருந்த மரமொன்றில் கட்டப்பட்டிருந்த பெரிய குளவிக்கூடு திடீரென களைந்து தொழிலாளர்களைத் தாக்கியுள்ளது. இதில் 20 பெண் தொழிலாளர்கள் கடுமையான குளவிக்கொட்டுக்கு இலக்காகி, உடனடியாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 பெண்கள் வெளிநோயாளர் பிரிவில் (OPD) சிகிச்சை பெற்றுத் தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். எனினும், அதிகளவில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உடம்பில் நச்சுத்தன்மை ஏற்பட்டுள்ள 8 பெண் தொழிலாளர்கள் தொடர்ந்தும் விடுதியில் தங்கி அவசர சிகிச்சை பெற்று…

Read More