Author: Thana
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த பகுதிகளின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் (40-50) கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் (30-40) கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக்…
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த ‘கூத்தாடி’ குரல்! இலங்கைத் திரைப்படத்தைப் பாராட்டித் தள்ளிய ஆஸ்திரேலிய அமைச்சர்!
*ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த ‘கூத்தாடி’ குரல்! இலங்கைத் திரைப்படத்தைப் பாராட்டித் தள்ளிய ஆஸ்திரேலிய அமைச்சர்!* (சாந்தன்) இலங்கைத் திரைத்துறையின் அசாத்தியப் படைப்பான ‘கூத்தாடி’ திரைப்படம், சர்வதேச எல்லையைத் தாண்டி ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் வரை ஒட்டுமொத்தப் பார்வையாளர்களையும் கட்டிப்போட்டுள்ளது. ஆஸ்திரேலியப் பிரதமரின் அமைச்சரவைச் செயலாளரும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான உதவி அமைச்சருமான மாண்புமிகு Dr. ஆண்ட்ரூ சார்ல்டன் (Hon Dr Andrew Charlton MP – Member for Parramatta, Australian Labour Party) அவர்கள் இத்திரைப்படத்தைப் பார்த்து, படக்குழுவினரை மனதாரப் பாராட்டி கௌரவித்துள்ளார். ஆஸ்திரேலியத் தொழிலாளர் கட்சியின் முக்கியப் புள்ளியாக விளங்கும் அமைச்சர் Dr. ஆண்ட்ரூ சார்ல்டன், கலை மற்றும் கலாச்சார விழுமியங்களுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுப்பவர். அந்த வகையில், தயாரிப்பாளர் செல்வின் தாஸ் அவர்களின் அசாத்திய தயாரிப்பில், முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவான ‘கூத்தாடி’ திரைப்படத்தை அவர் பிரத்யேகமாகப் பார்வையிட்டார். திரைப்படம்…
ஈரான் மீதான தாக்குதல் ரத்து: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு! ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் விலைகள் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளன. கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த கச்சா எண்ணெய் விலை, இந்த புதிய சூழலால் இன்று 90 டொலர் என்ற எல்லைக்குக் கீழ் சரிந்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக, உலக எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய மையமான ‘ஹோர்முஸ் நீரிணையை’ ஈரான் மூடியது. இந்த புவிசார் அரசியல் நெருக்கடியால், கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வந்தது. குறிப்பாக நேற்று ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 95.40 டொலர் வரையிலும், WTI கச்சா எண்ணெய் 92.63 டொலர் வரையிலும் உச்சத்தைத் தொட்டிருந்தது. இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்…
ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை ரத்து செய்தார் டொனால்ட் டிரம்ப்: அமைதி ஒப்பந்தத்திற்கு வாய்ப்பு!
ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை ரத்து செய்தார் டொனால்ட் டிரம்ப்: அமைதி ஒப்பந்தத்திற்கு வாய்ப்பு! ஈரான் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதல்களைத் தற்காலிகமாக ரத்து செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். ஈரான் தலைமை மற்றும் பிராந்தியத்தின் பல நாடுகளும் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்தே இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி டிரம்ப், “அனைத்து தரப்பினராலும் அமைதி ஒப்பந்தத்திற்கான இறுதிப் புள்ளிகள் மற்றும் முக்கிய அம்சங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் ரத்து: ஈரான் மீதான திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்படை முற்றுகை தொடரும்: ஒப்பந்தம் கையெழுத்தாகி முழுமையாக இறுதி செய்யப்படும் வரை, ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகை தொடர்ந்து நீடிக்கும் என்று டிரம்ப் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஒப்பந்தம் எப்போது?: இரு நாடுகளுக்கும்…
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று இரவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கிய ஸ்ரீலங்கன் விமானம் கட்டுநாயக்காவில் தரை இறங்கியது; பயணிகள் அனைவரும் பத்திரமான பயணம்மின்னல் தாக்கியதன் காரணமாகவே இந்த விமானம் இவ்வாறு அவசரத் தரையிறக்கத்தை மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. யு.எல். 606 (UL 606) ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தின் ஒரு எஞ்சின் மீது மின்னல் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், ஒரு பாதுகாப்புப் படியாக விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், மாற்று விமானம் ஒன்றின் மூலம் குறிப்பிட்ட பயணிகள் குழுவினர் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவத்தின் காரணமாக விமானப் பயணம் 5 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் தாமதமாகியுள்ளது. இச்சம்பவத்தினால் பயணிகள் எவருக்கும் அல்லது விமானத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஸ்ரீலங்கன்…
”Clean Sri Lanka” வேலைத்திட்டம் நகரங்களுக்கு மாத்திரமல்ல; தோட்டப்புறங்களிலும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை தேவை: ராஜ் அசோக் கோரிக்கை
உள்ளூராட்சி மன்றங்கள் நகர்புர தின்ம கழிவுகளை எடுக்கின்றதை போன்று தோட்டபுர தின்ம கழிவுகளையும் எடுக்க அரசாங்கம் உதவ வேண்டும் என்று அன்மையில் ஜனாதிபதியின் Clean Srilanka பிரத்தியேக செயலாளர் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் , உப தவிசாளகள், செயலாளர்கள் சுற்றுசூழல் உத்தியோகஸ்தர்களுக்கு ஒழுங்கு செய்த கூட்டத்தில் மஸ்கெலியா பிரதேசசபை உப தவிசாளர் ராஜ் அசோக் (ராஜ் குமார்) இந்த விடயங்களை முன் வைத்து பேசினார். எமது நாட்டில் “Clean Srilanka “வேலை திட்டதின் கீழ் அதிகமாக பணம் ஒதுக்கி செய்யபடுகின்ற.ஒரு சேவையாகும். இதன் பிரதான நோக்கம் எமது சுற்றுசூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதாகும், அதன் அடிப்படையில் பொது இடங்கள் மற்றும் நகர இடங்கள் மாத்திரம் சுத்தமாக இருந்தால் போதுமா.என்ற கேள்வி எழுப்புகிறது. நாம் வாழும் மலையக மக்கள் செறிந்து வாழும் தோட்டபுரபகுதிகளும் சுத்தமாக இருக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றங்கள் நகர் புரங்களில் மாத்திரம்…
பண்டாரவளை நகரில் பிரபல வர்த்தக நாமத்துடன் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றுக்கு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் நேற்று (ஜூன் 10) 400,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் பதுளை மாவட்ட அலுவலக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, குறித்த நிறுவனத்தில் பாரிய நுகர்வோர் சட்ட மீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட 04 முக்கிய குற்றச்சாட்டுகள் வழக்கு விசாரணையின் போது, பிரதிவாதி தரப்பு தாங்கள் புரிந்த நான்கு பிரதான குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டது. அவை வருமாறு: லேபில் விபரங்களின்மை: எந்தவித விபரங்களும் (விலை, நிறை, உற்பத்தி மற்றும் காலாவதி திகதி) குறிப்பிடப்படாத கேக் வகைகளை விற்பனை செய்தமை. லேபில் அற்ற பிஸ்கட் விற்பனை: உரிய விபரங்கள் மற்றும் லேபில்கள் இல்லாத பிஸ்கட் பொதிகளை விற்பனைக்காக வைத்திருந்தமை. காலாவதியான உணவு: நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, காலாவதியான பிஸ்கட் பொதிகளை விற்பனைக்கு…
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் நாளை காலை 10.30 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
ஊவா மாகாணத்தில் சிறுவர்களிடையே மந்த போசணை மற்றும் அதிபோசணை பாதிப்பு: விசேட வைத்தியர் எச்சரிக்கை
ஊவா மாகாணத்தில் சிறுவர்களிடையே மந்த போசணை மற்றும் அதிபோசணை பாதிப்பு: விசேட வைத்தியர் எச்சரிக்கை இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே மந்த போசணை அதிகளவில் காணப்படும் மாகாணமாக ஊவா மாகாணம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதுளை போதனா வைத்தியசாலையின் ஊட்டச்சத்து விசேட வைத்தியர் வாசனா மாரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (10) பதுளை போதனா வைத்தியசாலையில், போசணையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுப் பேரணிக்கு இணையாக நடைபெற்ற விழிப்புணர்வுத் திட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். இருமுனை சவால்: மந்த போசணை மற்றும் அதிபோசணை ஊவா மாகாணத்தில் நிலவும் ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்து விரிவாகப் பேசிய வைத்தியர் வாசனா மாரசிங்க, தற்போதைய சூழலில் மாகாணம் இரண்டு விதமான போசணைச் சவால்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்: மந்த போசணை (Undernutrition): போதிய சத்துணவின்மையால் பிள்ளைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் நிலை இங்கு மிக அதிகமாகக் காணப்படுகிறது. அதிபோசணை (Overnutrition): மந்த போசணை மட்டுமன்றி, பிள்ளைகளின்…
உடப்புஸ்சல்லாவ டலோஸ் தோட்டத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முறையான தபால் சேவைகள் இல்லாததால் மக்கள் பெரும் அவதி
நுவரெலியா மாவட்டம் உடப்புஸ்சல்லாவ வலப்பனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட டலோஸ் தோட்டத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முறையான தபால் சேவைகள் இல்லாததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகும் நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக உடப்புஸ்சல்லாவ நகரில் உள்ள தபால் நிலையத்திலிருந்து டலோஸ்,எனிக் தோட்டங்களுக்கு கடிதங்கள் விநியோகிப்பதற்காக டலோஸ் மற்றும் எனிக் தோட்ட காரியாலயங்களுக்கு சென்று அனைத்து கடிதங்களும் வழங்கப்படுகின்றன.. இந்த கடிதங்கள் குறித்த தோட்டத்தில் காணப்படுகின்ற கொழுந்து நிறுக்கும் இடத்தில் பொதுவாக பெட்டிகளில் போடப்பட்டு காணப்படுகிறது. இவ்வாறு அநேக கடிதங்கள் மற்றும் பதிவு தபால் மூலம் வருகை தரும் கடிதங்கள் என காணப்படுகிறது. இவை அனைத்தும் பொதுமக்களுக்கு நேரே வீடுகளுக்கு சென்று வழங்கப்படுவதில்லை இதனால் மக்களுக்கு தபால் சேவை சிறப்பான தரமான செய்திகள் வழங்கப்படுவதில்லை. இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாக்குவதோடு மக்களின் சிறப்பு உரிமைகள் கேள்விக்குறியானதாகவே காணப்படுகிறது. …