Author: Thana
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.29.05.2023. சென்.ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கல்வி குழுவின் ஏட்பாட்டில் மஸ்கெலியா பொது நூலகம் மற்றும் Srilanka Unites நிறுவனம் இணைந்து சென். ஜோசப் கல்லூரியின் மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி முகாம் ஒன்றை 29ஆம் திகதியன்று காலை 9 முதல் 1.00 மணி வரை மஸ்கெலியா பொது மைதானத்தில் நடைபெற்றது. இதன் போது தற்போது இந்நிகழ்ச்சியின் முக்கியதுவம் பற்றியும் தற்போது சமூகத்தில் காணப்படும் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் மஸ்கெலியா பிரதேச சபை செயலாளரும் சென்.ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கல்வி குழுவின் தலைவருமான ராஜவீரன் தனது கருத்தை கூறினார். அத்துடன் இந்நிகழ்வில் Srilanka unites நிறுவன அதிகாரிகள் பழைய மாணவர் சங்கத்தின் கல்வி குழுவின் சிரேஸ்ட உறுப்பினர் S. உதயயகுமர் பாடசாலை ஆசிரியர்கள், பொது நூலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையை தொடர்ந்து அதற்கு இணையாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் உரிய வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதனை ஆராய்ந்து பாரக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவும் அந்நிய செலாவணியை சீராக பேணுவதற்காகவும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. விவசாயம், கடற்றொழில் மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட பல்வேறு துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய தற்போது சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பொருளாதாரம் முன்னேற்றப்பாதையை நோக்கி நகர்வதால் அந்நிய செலாவணி கையிருப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மேலும் சில இறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அவதானம் செலுத்தப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வாகனங்களை அடகு வைத்து மோசடி செய்த இரு இராணுவச் சிப்பாய்கள் தொடர்பில் பதுளை பொலீஸார் விசாரணை.
பலரிடமிருந்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைத்து பணம் பெற்று மோசடி செய்த இரண்டு இராணுவ சிப்பாய்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இரு இராணுவ வீரர்களில் ஒருவர் தற்போது சேவையில் உள்ளவர் எனவும் மற்றையவர் சேவையில் இருந்து தப்பியோடியவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பசறை பிபிலேகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபர்கள் இருவரும், பசறை எல்ல, வெலிமடை போன்ற பகுதிகளில் பலரிடமிருந்து மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் வான்களை வாடகைக்கு எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாகன உரிமையாளர்களின் நம்பிக்கையை பெறும் வகையில், வாகனங்களுக்கான வாடகையை முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு தவறாது நேர்மையாக செலுத்தி வந்துள்ளனர். அதன் பின் இரண்டு மூன்று மாதங்களுக்கு பிறகு குறித்த நபர்களிடமிருந்து வாடகை பணம் கிடைப்பதில்லை எனவும் அது தொடர்பில் விசாரிக்க அவர்களது கைபேசிக்கு அழைப்பை மேற்கொண்ட போது அவர்களது கைபேசி இலக்கங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும்…
சிறார்களுக்கு இலத்திரனியல் திரைகளைப் பார்வையிட அனுமதிக்க வேண்டாம் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை
சிறார்களுக்குஇலத்திரனியல் திரைகளைப் பார்வையிட அனுமதிக்க வேண்டாம் இரண்டு வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு எவ்விதத்திலும் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் திரைகளுடன் பொழுதைக் கழிப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் என, உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளதாக சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவரும் ஆலோசகருமான உள, நலன் தொடர்பான விசேட வைத்தியர் தர்சனி ஹெட்டிஆராச்சி தெரிவித்தார். கொழும்பு மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இரண்டு வயதுக்கு குறைவான சிறுவர்கள் இலத்திரனியல் திரைகளைப் பயன்படுத்துவதால் அவர்களின் மூளை வளர்ச்சிக்கு பாரிய அழுத்தம் ஏற்படுவதாகவும் இதன் தாக்கம் அவர்கள் வளர்ந்து பத்து தொடக்கம் 12 வயதை அடையும் போது வெளிப்படுவதாகவும் தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய 2 தொடக்கம் 5 வயதுக்கு இடைப்பட்ட சிறார்கள் இலத்திரனியல் திரைகளை அரை மணித்தியாலம் தொடக்கம் 1 மணித்தியாலயம் வரையான காலப்பகுதிக்குள் மாத்திரமே அனுமதிக்க வேண்டும் என்பதுடன், பெரியவர்களின்…
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.29.05.2023. மஸ்கெலியா புனித சென் ஜோசப் தேவாலய வருடாந்த திருவிழா நேற்று 28.05.2023 அன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வில் கண்டி மாவட்டத்தில் உள்ள ஆயர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். காலை முதல் வெகு சிறப்பாக பூஜை ஆராதனைகள் நடைபெறுகின்றன தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேவாலயத்தில் இருந்து வாகனத்தில் புறப்பட்ட திருவுருவச் சிலை பேருந்து தரிப்பிடம் வழியாக அஞ்சலக வீதியூடாக 7வீதிக்கு வந்து அங்கு இருந்து 2ம் வீதி வழியாக மஸ்கெலியா பொலிஸ் நிலையம் வரை சென்று மீண்டும் 2ம் வீதி வழியாக வந்து பிரதான வீதியில் நுழைந்து ஆலய வீதியில் சென்று மீண்டும் தேவாலயத்தை சென்றடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ திரு உருவம் கொண்டு செல்லப்பட்டது. கடுமையான வெப்பம் நிலவும் நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் எவ்விதமான சிரமமும் இல்லாமல் தேவாலயத்தை சென்றனர்.
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.29.05.2023. மஸ்கெலியா நகரில் இருந்து சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இனைந்து எதிர் வரும் ஜூன் மாதம் 3 ம் திகதி மஸ்கெலியா பேருந்து தரிப்பிடத்தில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்து உள்ளனர். அன்றைய தினம் பொசன் பௌர்ணமி தினம் என்பதால் இந்த அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்து உள்ளனர். இந்த நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பௌத்த விகாரை தேரர் மற்றும் மஸ்கெலியா சன்முக நாதர் ஆலய குருக்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் பேருந்து உரிமையாளர்கள் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் அனைவரையும் அன்றைய தினம் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பட்டு குழு.
கண்டி ,பன்விலை பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவையில் பிறப்பு சான்றிதழ்,அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வாய்ப்பு
பன்விலை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நாளை மருதினம்[30 05 2023] செவ்வாய்கிழமை காலை முதல் மாலை 4 மணி வரை மடுல்கலை பரமேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் நடைபெறவிருக்கின்றது. குறித்த நடமாடும் சேவையில் பிறப்பு ,இறப்பு ,திருமண சான்றிழ்களை இலவசமாக பெற்றுக்கொள்ளாம். மற்றும் அயைாள அட்டை ,கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள், தேவையான ஆவனங்கள் பற்றி தெளிவூட்டல்களையும் மக்கள் பெற்றுக்கொள்ளம். மடுல்கலை நிருபர்
டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை உடனடியாக வெளியிட தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் நடமாடும் சேவையில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொழிநுட்ப அமைச்சுடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
நாளை முதல் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நோர்வூட் பிரதேச செயலகத்தில் சகல சேவைகளும் முழுமையாக இடம் பெறும்.
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள் 28.05.2023. 29.ம் திகதி முதல் முழுமையாக நோர்வூட் பிரதேச செயலகத்தில் அனைத்து சேவைகளும் பெற்று கொள்ள முடியும் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட தெரிவித்தார். இதன் படி சாமிமலை, மஸ்கெலியா, பொகவந்தலாவ, நோர்வூட், டிக்கோயா, ஹட்டன் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் கினிகத்தேன அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் இடம் பெற்று கொண்ட சேவைகளை இங்கு பெற்று கொள்ள முடியும். இனி கினிகத்தேன அம்பகமுவ பிரதேச செயலக பணிகள் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பெற்று கொள்ள வேண்டும் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவர்கள் தெரிவித்தார்.
மாணவர்களின் கணித பாட அடைவு மட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இ/மாட்டுவாகலை தமிழ் வித்தியாலயத்தில் 2023.05.22 தினத்தன்று இலவசமாக நடைபெற்ற இறுதி கணித கருத்தரங்கு இடம்பெற்றது. குறித்த கருத்தரங்கில் கலத்துர வள்ளுவர் த.வி, மாட்டுவாகலை த.வி மாணவர்கள் மற்றும் மடபத்தர த.வி , மாணவர்களும் பங்குப்பற்றியது குறிப்பிடதக்கது. கருதரங்குக்கு நிதி அனுசரணையை செல்லய்யா மற்றும் பழையமாணவர்களும் வழங்கி இருந்தனர் . குறித்த கருத்தரங்குக்கு எல்லா வகையிலும் உதவி புரிந்த அதிபர் அ.தியாகராஜா அவர்களுக்கும் , சிறப்பான முறையில் கருத்தரங்கை முன்னெடுத்த ஆசிரிய ஆலோசகர் தயாளன் அவர்களளுக்கும் பாடசாலையின் பழையமாணவர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கருத்தரங்கை ஆசிரியர் வசந்த் ஒழுங்குசெய்திருந்தார்